Thursday, April 30, 2015

துணிவூட்டும் விளையாட்டு


'மனமே பயமேன்' என்றொரு புத்தகம் நான் G.C.E. படிக்கும் போது தகப்பனார் கொண்டுவந்து தந்தார். ஆசிரியர் தமிழ் நாட்டைச் சேர்ந்த முகம்மது மூஸா என்பவர். அதைப்படித்ததும் ஏற்கனவே இருந்த மனத்துணிவு இரு மடங்கானது. பாடசாலையில் புரட்சிகரமான சாதனைகளை நிலை நாட்டினோம். அவசியம் நீங்களும் வாங்கிப் படியுங்கள். அநியாயத்துக்கும் பாத்திலுக்கும் தலைவணங்காது எதிர்த்துப் போராடத் தேவையான துணிவினைத் தரக்கூடியது இன்ஷா அல்லாஹ்.

இக்காலத்தில் அப்படி மனத்துணிவைத் தரக்கூடிய சாதனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் Roller பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள துணிகரமான விளையாட்டுக்கள். மனப்பயத்தைப் போக்கி துணிவையும் வீரத்தையும் தரக்கூடியன அவை.

அப்படியான சில துணிச்சல் விளையாட்டுக்கள் இலங்கையிலும் இருந்தாலும் சீனா, ஐரோப்பா முதலிய நாடுகளில் அபாரமாக அவை அமைக்கப்பட்டுள்ளன.

Tuesday, April 28, 2015

தாஇஷ் தண்டனை

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக இராக்கியருக்கு தாஇஷ் (ISIS) கவாரிஜ்கள் கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றும் காட்சிகள்.


Sunday, April 26, 2015

புதுவிதமான தொழுகை !

ருகூஉ இல்லாத புதுவிதமான தொழுகை பார்க்க வேண்டுமா ?

எங்கிருந்தோ மதீனாவுக்கு வந்த சிலர் ருகூஉ இல்லாத, இரண்டு ஸலாமும் இல்லாத விதத்தில் புதுவிதமாக தொழுவதை ஈரான் பத்திரிகையான قناة العالم வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் இல்லை. தலைவர்களை கண்மூடிப் பின்பற்றுவதால் உலகில் என்னவெல்லாம் வேடிக்கைகள் நடக்கின்றன !


Tuesday, April 21, 2015

விண்வெளி நிலையம்

விஞ்ஞானத்தின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா?
சர்வதேச விண்வெளி நிலையம் :-

விண்வெளி வீரர்களும் பொருட்களும் பாரமற்ற நிலையில் மிதக்கும் காட்சிகள் :-

Sunday, April 19, 2015

ஈரான் - திரைக்குப் பின்னால் !


இது தான் இதுவரை நடக்கும் ஈரான் - இஸ்ரேல் உறவின் ரகசியம். இஸ்ரேலைப் பூண்டோடு அழிப்பதாகவும், இஸ்ரேலுக்கு மௌத்து என்றும் ஈரான் பல இலட்சம் தடவைகள் ஊடகங்களில் கூறி, எழுதி, கார்டூன்கள் வரைந்து இருக்கும். ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக ஒரு (தனிப்பட்ட) யுத்தமும் ஈரான் செய்ய வில்லை.

லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் போது ஈரான் லெபனானில் உள்ள சீஆ ஹிஸ்புல்லாஹ்வுக்கு தாராள உதவி செய்து இஸ்ரேலை தோற்கடித்ததை நாம் முன்பு எழுதியள்ளோம். ஆனால் அது லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடான லெபனானை சீஆ நாடாக மாற்றவுமே அப்போது ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானுக்கு உதவியது என்பதே அதன் பின்னணி. இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்க விடாமல் ஈரான் தடுத்ததால் அதனை நாம் ஆதரித்து எழுதினோம்.

அதே மாதிரி ஸிரியாவை அமெரிக்கா தாக்கி அதனை தற்போதைய லிபியா போன்று பல துண்டுகளாக உடைத்து, உள்நாட்டுப் போர் நடக்கும் நாடாக ஸிரியாவை மாற்ற ஒபாமா முயன்ற போது, அதனை எதிர்த்து நின்று ஸிரியாவைப் பாதுகாத்தது ஈரான். அதனையும் நாம் ஆதரித்து எழுதினோம்.

எந்த ஒரு நாட்டினதும் நலவைப் பாராட்டியும் தீமையை எதிர்த்தும் பேசுவதே எமது குணம். குவைத்தில் நாம் படிக்கும் காலத்தில் 1980 களில் ஈரானை அழிக்க ஸதாம் மேற்கொண்ட எட்டு வருட யுத்தத்தில் ஒவ்வொரு நாளும் நான் ஈரானை ஆதரித்தும், ஸதாமுக்கு உதவிய குவைத்தை எதிர்த்தும் அங்கிருந்த எமது ஊர் நண்பர்களிடம் நான் (தொடர்ந்து எட்டு வருடங்களாக) பேசியதை எமது நண்பர்கள் அறிவர். நான் குவைத்தில் வசதியாக இருப்பதற்காக குவைத்தை ஆதரித்துப் பேசவில்லை. இது எமது குணம்.

ஆனால் இலங்கையில் இன்று உள்ள அனேக ஊடகங்களின் நிலை அப்படியல்ல. சிலது தரீக்காக்களின் தவறுகளை எல்லாம் மறைத்து புகழ்மாலை மட்டுமே பாடும். இன்னும் சிலது. உலக வஹாபி தலைவர்களினதும், வஹாபி நாடுகளினதும் புகழ்மாலை பாடும். தவறுகளை மறைக்கும். ஈரானின் எல்லா விடயங்களையும் எதிர்க்கும். ஆனால் "எப்போதும் உண்மையே பேச வேண்டும்" என்ற இஸ்லாமிய அறிவுரைக்கு ஏற்பவும், "எச்சொல் யார்யார் வாய்க் கேட்பினும் அச்சொல் மெயப்பொருள் காண்பது அறிவு" என்பதற்கேட்பவும், உண்மை எவரிடத்தில் இருந்தாலும் அதை ஆதரிப்பதும், தவறு யாரிடத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும் எமது பாரம்பரியமாகும்.

எனவே நாம் ஒரு நாட்டின் ஒரு செயலை ஆதரித்து எழுதினால் நாம் அந்நாட்டின் ஆதரவாளர் என்றோ, ஒரு நாட்டின் ஒரு தவறை எதிர்த்து எழுதினால் நாம் அந்நாட்டினை எதிர்க்கிறோம் என்பதோ அர்த்தமல்ல என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

மார்க்க விடயமாகட்டும், உலக (மத்திய கிழக்கு) அரசியல் விடயமாகட்டும், எமது வாசகர்கள் நேயர்களுக்கு ஹக்கை ஹக்காகவும், பாத்திலை பாத்திலாகவும் காட்டுவதன் மூலம் அவர்கள் சரியான பாதையில் செல்ல உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதே எமது நோக்கம்.

ஈரான் இஸ்ரேலை நேரடியாக தாக்காமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கில் இஸ்ரேல் தான் அமெரிக்கா, பிரிட்டனின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர ஸ்தானம். இஸ்ரேலை அழிக்க என்று நேரடி யுத்தம் ஈரான் செய்தால் அமெரிக்கா முழுப்பலத்தைப் பிரயோகித்து ஈரானை அழிக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். எனவே தான் தனது சீஆ மக்களை ஏமாற்றவும், உலக ஸுன்னி முஸ்லிம்களை "அடடா ! ஈரான் தான் இஸ்ரேலின் பிரதான எதிரி, இஸ்லாத்தின் பாதுகாவலன்" என்று கருத வைத்து Brain wash செய்து முஸ்லிம்களை சீஆவாக மாற்றவுமே ஈரான் "இஸ்ரேல் எதிர்ப்பு நாடகம்" ஆடுகின்றது. இந்த உண்மை பரஸ்பரம் ஈரான், இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகட்கும் தெரியும். எனவே ஈரானின் "இஸ்ரேல் எதிர்ப்பு" கோசத்துக்கு இஸ்ரேல் சற்றுமே அலட்டிக் கொள்வதில்லை. "அவங்கட தேவைக்கு சும்மா வெறும் கோசம் போடுகிறார்கள். கத்திவிட்டுப் போகட்டும்" என்று இஸ்ரேல் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.

தஜ்ஜால் வரும் போது ஈரானில் உள்ள இஸ்பஹான் என்ற மாகாணத்தில் இருந்து 70,000 யூதர்கள் புறப்பட்டு வந்து தஜ்ஜாலுடன் இணைந்துகொள்வார்கள் என்று ஒரு நபிமொழியும் இருக்கின்றது. இப்போது ஈரானின் இஸ்பஹான் மாநிலத்தில் 30 ஆயிரம் யூதர்கள் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. எனவே அத்தொகை 70,000 ஆயிரமாகும் போது தஜ்ஜால் வரும் காலம் நெருங்கிவிட்டது என்பதை ஊகிக்கலாம். தனது நாட்டில் உள்ள அந்த யூதர்களைப் பற்றி ஈரான் வெளி உலகுக்கு காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றது.

எப்படியோ, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் கோசங்கள் எல்லாம் வெறும் "முதலைக் கண்ணீர்" என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால் ஈரான் ஒரு வல்லரசாக வருவதை இஸ்ரேல் விரும்புவதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விடயம். இது வரை ஸுன்னத்து வல்ஜமாஅத்து மிஸ்ரு (எகிப்து) 1947 முதல் பல யுத்தங்களை இஸ்ரேலுக்கு எதிராக முன்நின்று நடாத்தியுள்ளது. அவற்றுள் 1973 யுத்தத்தில் இஸ்ரேலை படுதோழ்வியடையச் செய்தது.

ஒரு கேள்வி: இது வரை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக என்ன யுத்தம் செய்திருக்கிறது ? "சும்மா வெறும் கோசம் தான்"

ஈரான் சார்பு பத்திரிகைகளைப் புரட்டிப்பாருங்கள். உலக வல்லரசு அமெரிக்கா மாதிரி மத்திய கிழக்கு வல்லரசு ஈரான்தான் என்று உலகுக்கு காட்டுவதற்காக, முஸ்லிம் உலகைப் பயமுறுத்துவதற்காக, தாம் கண்டுபிடித்த நவீன ஆயுதங்களின் படங்களை அடிக்கடி போட்டுக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த ஆயுதங்களால் இஸ்ரேலை அடித்த நாள் தான் இல்லை !

Sunday, April 12, 2015

யெமன் யுத்த பின்னணிகள் - 02


தொடர் - 02

ஒன்பது அரபு நாடுகள் இணைந்து யெமனில் உள்ள இரண்டே இரண்டு வீதம் ஹோஸி சீஆ பயங்கரவாதிகளை எதிர்த்து நடாத்தும் "புயல் அணி" யுத்தம் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டவில்லை என்றே கூற வேண்டும்.

ஒன்பது நாடுகளின் சரமாரியான கடும் விமானத் தாக்குதலுக்கு மத்தியிலும் சப்வா (شبوة) என்ற பெற்றோல் வளம் மிக்க பிரதேசத்தை ஹோஸிகள் இவ்வாரம் கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு காலமும் ஸுன்னி அரபு நாடுகள் உலக ஆடம்பர போதையில் மயங்கி கிடக்கும் சந்தர்ப்பத்தை சீஆ ஈரான் நன்கு பயன்படுத்தி மிக அற்ப தொகையினரான ஹோஸிகளுக்கு கொடுத்த கனரக ஆயுதங்கள், பயங்கரவாத கெரில்லா யத்தப் பயிற்சிகளின் முன்னே ஒன்பது அரபு நாடுகளின் விமானத் தாக்குதல்கள் இன்று வரை ஈடுகொடுக்க முடியவில்லை என்றே தோன்றுகின்றது. எனினும் தரை மார்க்க யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் தான் வெற்றி தோழ்வியை துல்லியமாக கணிக்க முடியும்.

ஹோஸிகளின் தற்போதைய வெற்றியையும், ஈரான் தனது யுத்தக் கப்பல்களை 'பாபுல் மன்தப்' நீரிணையை நோக்கி அனுப்பியிருக்கும் செய்திகளே எகிப்தின் அல் அஹ்ராம் பத்திரிகை இவ்வாறு தருகிறது :-(அறிவின் எதிரிகளான பள்ளத்தக்கியா நாசகார சதிகாரரின் சதி நடந்தில்லாவிட்டால், இன்று வஹாபி இயக்கங்கள் செய்வது போன்று, ஒரு ஒபீஸ், மொழிபெயர்க்க உலமாக்கள், விசேட ஆற்றல் உள்ள ஊடகத்துறை மூலம் முழு நாட்டிலும் உலகச் செய்திகளை ஸுன்னத்து வல்ஜமாஅத்து கோணத்திலும், வேறு எந்த வழிகெட்ட கொள்கையாளரின் ஊடகங்களை விடவும் விறுவிறுப்பாகவும், மக்கள் அதிகம் விரும்பி வாசிக்கும் வகையிலும் நாம் இப்படியான பல்லாயிரம் விடயங்களை மொழி பெயர்த்து வாசகர்களுக்கு தந்திருக்கலாம். என்ன செய்ய, பள்ளத் தக்கியா சதிகாரர்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து அறிவுத்துறைக்கு தடை போட்டு விட்டனர். இலங்கையிலும் உலகிலும் மார்க்கத் துறையில் மாபெரும் சாதனைகள் நிலை நாட்ட வந்து, 1996, 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் அல்லாஹ்வின் கிருபையால் இலங்கை மட்ட, உலக மட்ட சாதனைகள் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் போது, இன்னும் ஏராளம் நிலைநாட்ட இருந்த போது எமது போராட்டத்தை சதிகாரர்கள் அழித்ததால் அடிக்கடி அந்த அநியாயத்தை நாம் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இதனை விரும்பாதவர்கள், டீவியில் செய்தியை விரும்பிக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தாம் விரும்பாத விளம்பரங்கள் குறுக்கீடு செய்வதை பொறுமை செய்வது போன்று பொறுமை செய்யும்படி பணிவுடன் வேண்டுகின்றோம்.)

யெமனில் இந்த ஹோஸி இயக்கத்தை பத்ருத்தீன் ஹோஸி என்பவர் ஸ்தாபித்து, பின்னர் அவரின் மகன் ஹுஸைன் ஹோஸி என்பவர் ஈரானின் உதவியுடன் வளர்த்து, இப்போது அப்துல் மலிக் ஹோஸி என்பவர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, வம்புத்தனமாக யெமனைக் கைப்பற்றி ஈரானுக்கு கொடுக்க முனைகிறார்.

உலக ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களை வழிகெடுத்தி தம்பக்கம் ஈரத்தெடுக்க வஹ்ஹாபி தலைவர்கள் எவ்வாறு "குர்ஆன் ஹதீஸ்" என்ற கோசத்தை முழங்ககிறார்களோ, இன்னும் அதிகமானோரை தம்பக்கம் ஈர்த்தெடுக்க "இஸ்லாமிய அரசாங்கம் அமைப்போம்" என்று இக்வானுல் முஸ்லிமீன்களும் தாஇஷ் (ISIS) களும் கோசம் எழுப்பி முஸ்லிம்களை Brain wash செய்கிறார்களோ, அதே விதமாக சீஆக்களான ஈரானியரும் ஹோஸிகளும் பொதுமக்களை தம்பக்கம் திருப்ப கையாளும் கோசம் என்ன தெரியுமா ?

الله اكبر الموت لأميركا الموت لإسرائيل اللعنة على اليهود النصر للإسلام
அல்லாஹு அக்பர்! அமெரிக்காவுக்கு அழிவு! இஸ்ரேலுக்கு அழிவு! யூதர்களுக்கு சாபம்! இஸ்லாத்துக்கு வெற்றி!

ஆம், இந்த வீராவேசக் கோசங்களே ஈரானையும், லெபனான் ஹிஸ்புல்லாஹ்வையும், யெமன் ஹோஸிகளையும் நோக்கி அதிகமான மக்கள் விரைந்து செல்லக் காரணம். உண்மையில் அமெரிக்கா ஈரானை எதிர்ப்பதில்லை. ஈரான் அமெரிக்காவை எதிர்ப்பதுமில்லை. எல்லாம் வெளி வேசம்தான். ஈரான் அணுசக்தி செறிவூட்டலுக்க அமெரிக்கா தலைமையிலான ஸியோனிஸ நாடுகள் அனுமதி வழங்கியது இதற்கு போதிய சான்றாகும். பார்க்க (அரபு) :

"அமெரிக்காவுக்கு அழிவு" என்று கோசமிடும் ஹோஸிகள் யெமனில் முஸ்லிம்களைத்தான் அழித்தார்கள்.

சீஆக்களைப் பற்றி கூறும் போது "தக்யா" (تقية) என்ற ஒரு கொள்கையை முஸ்லிம்கள் மட்டுமல்ல மற்ற நாடுகளும் அறிந்திருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசல், (அல்லது) சீஆக் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக எந்தப் பொய்யையும் கூறலாம் என்பதே இந்த "தக்யா" என்ற கொள்கையின் அர்த்தம். இது சீஆ மத்ஹபில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்றும் ஒரு கொள்கை. சீஆக்களின் இந்த வலையில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பெரிய வல்லரசுகளும் சிக்கித்தான் இருக்கின்றன. பார்க்க (அரபு) :-


யெமனைச் சேர்ந்த உலகப் பிரசித்தி பெற்ற ஸுன்னத்து வல்ஜமாஅத்து அழைப்பாளர் அலி ஜிப்ரி அவர்கள். அவர் இலங்கைக்கு பல தடவைகள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து பிரச்சாரத்தில் வந்துள்ளார். அப்போது அவரின் சில பேச்சுக்களை மொழி பெயர்க்கும் பாக்கியமும் இந்த அடியேனுக்கு கிடைத்தது. வஹாபியத்து என்பது வழிகெட்ட பித்அத்து என்பதை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக எடுத்து விளக்குபவர். அவர் யெமன் பிரச்சினையின் அடித்தளம் பற்றி விளக்குகிறார்

யெமனில் உள்ள 25 % ஆன் ஸைதியாக் கொள்கையைப் பின்பற்றும் சீஆக்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மிகப் பெரும்பான்மையான ( 65 % ) சாபிஈ மத்ஹபினருடன் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனுமே வாழ்ந்து வந்தனர். ஆனால் ஈரானில் குமைனியின் புரட்சி வெற்றி பெற்றபின்னர், ஸுன்னி அரபு நாடுகள் அனைத்திலும் சீஆக் கொள்கையைப் பரப்பும் குமைனியின் திட்டத்தின் அடிப்படையில் யெமனிலும் தீவிர சீஆக் கொள்கை பரப்பப்பட்டு, இப்போது, ஹோஸிகள் என்ற வம்பர்களான பயங்கரவாதிகளை ஈரான் ஆயுத பலத்தால் உருவாக்கி, யெமனை சீஆ நாடாகவும், ஈரானின் காலணித்துவ நாடாகவும் மாற்றி, "பாபுல் மன்தப்" என்ற பொருளாதார, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கடல் நீரிணையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஈரான் செய்யும் முயற்சியின் விளைவே தற்போதைய யுத்தம் என்பதை அறிஞர் ஹபீப் அலி அல் ஜிப்ரி அவர்கள் வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றார். பார்க்க வீடியோ (அரபு)ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாமான யெமனில் கடும்போக்கு சீஆ நாடான ஈரான் தலையிட்டதாலேயே சமகால சகல பிரச்சினைகளும் தற்போதைய யுத்தமும் ஏற்பட்டுள்ளது என்பதை முழு உலகும் அறிந்திருக்கும் போது, அந்த ஊடுருவலை மூடி மறைக்க "அரபு நாடுகளின் யுத்தம் யெமனின் இறைமையை மீறுகின்றது" என்று ஈரான் தனது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. (யானையை விரலால் மறைக்கப் பார்க்கிறது). இவ்வாறு யெமனின் உள் விவகாரங்களில் ஈரான் தனது மூக்கை நுழைத்துக் கொண்டு அரபு நாடுகளைக் குற்றம் சுமத்தவதையே இந்தக் கார்ட்டூன் சித்தரிக்கின்றது :இன்ஷா அல்லாஹ் தொடரும்

Sunday, April 5, 2015

எமது புத்தக விசேசம்

நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி !

நீங்கள் ஏராளம் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு புத்தகமும் அதன் நோக்கத்தைப் பொறுத்து ஏதாவது விசேசத் தன்மைகள் உள்ளவையாக இருக்கலாம்.

ஆனால் எமது இந்த நூல் மற்ற சகல நூல்களிலும் நீங்கள் காணாத விசேச தன்மைகள் பல பொதிந்தவை என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா ?

இதோ இந்த நூலைப் பற்றிய சில விசேசங்கள் :-

 1. மற்றப் புத்தகங்கள் பெரும்பாலும் நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள் செய்யக்கூடிய, நம்பக்கூடிய ஏதாவது ஒரு அல்லது பல விடயங்களுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டக்கூடியதாக இருக்கும். (உதாரணமாக மௌலிது கொடுக்க ஆதாரம், தராவீஹ் 20க்கு ஆதாரம், . . . . .இப்படித் தொடரும்) .ஆனால் எமது இந்தப் புத்தகத்தில் அப்படியாக எமது அமல்களுக்கு ஆதாரம் கூறவில்லை.

  மாறாக , வஹாபிய்யத்து என்பது இஸ்லாம் அல்ல. அது கவாரிஜு கொள்கை. அதைப் பின்பற்றியோர் மறுமையில் நஷ்டவாளர்களாகி, அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்பதை உறுதியான ஆதாரங்கள் மூலம் எடுத்தக் காட்டுகின்றது.
 2. எமது புத்தகத்தில் ஏதாவது ஒரேயொரு பாடத்தை எடுங்கள். பல முறை நுணுக்கமாகப் படியுங்கள். பின்னர் வஹாபி நோய் தொற்றிய நாலைந்து பேருடன் நீங்கள் ஒரு வாரம் அளவு அந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசிப் பழகுங்கள். அப்புறம் எமது ஊரவர்களான எந்த வஹாபியுடனும் அந்த ஆதாரத்தை மட்டும் நீங்கள் பேசி அந்த வஹாபியை தோற்கடிக்கக் கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
 3. எமது புத்தகத்தில் உள்ள சில ஆதாரங்கள் ஒரு வேளை நீங்கள் எமது பயானிலோ அல்லது வேறு மௌலவிமாரின் பயானிலோ கேட்டதாக இருக்கலாம்.

  ஆனால் அந்த ஆதாரத்தை நாம் புதிய ஒரு கோணத்தில் அணுகியுள்ள முறையும், அந்த ஆதாரத்தை வஹாபியத்தை முறியடிக்க நாம் உபயோகித்துள்ள முறையும் உங்களுக்கு முற்றும் புதியதாக, பலம் வாய்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள்.

  உதாரணமாக "கல்வியைத் தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் பேரிலும் பர்ழான கடமையாகும்" ( طلب العلم فريضة على كل مسلم ) என்ற ஹதீஸ் பாலர் வகுப்பு மாணவர்களும் போட்டிகளில் பேசக்கூடிய ஹதீஸ். ஏராளம் மௌலவிமார்கள் பேசியதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் கேட்டிருப்பீர்கள்.

  ஆனால் வஹாபிகளை முறியடிக்க அந்த ஹதீஸை நாம் புதிய ஒரு கோணத்தில் உபயோகித்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
  (பொதுவாக நீங்கள் எல்லோரும் பல நூறு தடவைகள் மற்ற மௌலவிமாரின் பயான்கள் மூலம் கேட்ட ஆதாரங்களை நாம் எமது பயான்களிலும், புத்தகங்களிலும், சஞ்சிகைகளிலும் வஹாபிகளை முறியடிக்க பெரும் ஆயுதங்களாக புதிய கோணத்தில் பயன்படுத்துவதை சிந்திப்பவர்கள் அறிவர். 'வெற்றி' சஞ்சிகையின் ஆசிரியராக நான் கடமையாற்றிய போது நாம் வெளியிட்ட அத்தகைய புதிய ஆய்வுகள் அகில இலங்கை வஹாபித் தலைமையகங்களையே அதிர வைத்தன. அதனால் தான் எப்படியாவது எம்மை ஓரம் கட்டக்கூடிய மாபெரும் சதி வலையை விரித்தனர். அந்தச் சதிவலையில் பள்ளத்தக்கியா நிர்வாகம் சிக்கி நாமும் ஓரம் கட்டப்பட்டு, 'வெற்றி' சஞ்சிகையும் அழிந்து விட்டது.

  கத்தம் கொடுக்கக் கூடாது என்று எம்மை எதிர்க்க உலக வஹாபிகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஹதீஸையே (மனிதன் இறந்துவிட்டால் அவன் செய்யக்கூடிய அமல்கள் . . . . . . என்ற ஹதீஸ்), மௌலிது கொடுப்பது அவசியம் என்பதற்கான பலமான ஆதாரமாக நாம் ஆய்வு செய்து எழுதியிருப்பதை Muaskarur Rahman Ladies Arabic College - Convocation Souvenir - 2012 இல் 50ம்பக்கத்தில் நீங்கள் காணலாம்).
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

யெமன் யுத்த பின்னணிகள் - 01

யெமனில் அரபு நாடுகளின் புயல் அணி தாக்குதல் ( عاصفة الحزم )

இன்று 26.3.2015 வியாழன் அதிகாலை பத்து முஸ்லிம் நேச நாடுகளின் யுத்த விமானங்கள் யெமன் நாட்டில் பாரிய தாக்குதலில் ஈடுபட்டன. ஈரானின் ஆயுத மற்றும் சகலவிதமான உதவியுடன் யெமனில் உள்ள பயங்கரவாத ஹோஸி சீஆக்கள் அந்நாட்டை ஆக்கிரமித்து, ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டியடித்து, நாட்டில் ஈரான் சார்பு சீஆ அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சி செய்யும்போதே பத்து முஸ்லிம் நாடுகள் ஸவூதியின் தலைமையில் ஒன்று சேர்ந்து திடீரென்று சீஆ தளங்களைத் தாக்கின.

இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள பல சுவையான தகவல்களை சுருக்கமாகப் பார்ப்போம்

ஹிஜ்ரி 3 ஆம் நூற்றாண்டு முதல் யெமனில் சீஆக் கொள்கை பரவ ஆரம்பித்தது. ஸைதிய்யா சீஆப் பிரிவினரே இவ்வாறு வட யெமனில் அதிகமாகப் பரவி பல நூற்றாண்டுகளாக அப்பிரதேசத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டி வந்தனர். சீஆக்களில் மற்ற 12 வகுப்பாரை விட இந்த ஸைதியாக்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கைக்கு மிக நெருக்கமானவர்கள். ஸைதியாக்கள் ஸஹாபாக்களை தூற்றமாட்டார்கள். எமது இமாம்களை தூற்ற மாட்டார்கள். சீஆ இமாம்களுக்கு மறைவான அறிவு எல்லாம் உண்டு என்று கூறமாட்டார்கள்.

ஆனால் ஸவூதியின் தெற்கே அமைந்துள்ள யெமனின் வட பகுதியான ஸஃதா மாகாணத்தில் அதிகமாக வாழும் இந்த ஸைதியாக்களில் அண்மையில் ஹோஸிகள் என்ற ஒரு தீவிரப் பிரிவு உண்டாயிற்று. இந்த ஹோஸிகள் ஸைதியாக்கள் போலன்றி மிகத்தீவிரமாக ஸஹாபாக்களை தூற்றுகின்றவர்கள். ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களின் பிரதான எதிரிகளாக செயற்பட்டனர்.

மத்திய கிழக்கு பிரதேசத்தில் அரபு ஆதிக்கத்தையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கையையும் அழித்து பாரசீக, சீஆ ஆதிக்கத்தை ஏற்படுத்தவதே ஈரானின் பிரதான குறிக்கோள். ஸுன்னி அரபு நாடுகளான லெபனானையும், இராக்கையும், ஸிரியாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஈரான் , எப்படியாவது 60% க்கும் மேல் சாபிஈ மத்ஹபை பின்பற்றும் யெமனையும் சீஆ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத்திட்டமிட்டது.

அதற்கு ஈரான் தெரிவு செய்த ஆயுதக்குழுவே ஹோஸிகள் என்று அழைக்கப்படும் வம்பர்களான பயங்கரவாதிகள். பத்ருத்தீன் ஹோஸி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த தீவிரவாத இயக்கத்தை அவரின் மகன் ஹுஸைன் பத்ருத்தீன் ஹோஸி என்பவர் விரிவு படுத்தினார். இவர் ஈரானில் படித்து ஈரானின் ஆயுத உதவியுடன் யெமனில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்தார். 2004 இல் யெமன் இராணுவத்தை எதிர்த்து ஹுஸைன் பத்ருத்தீன் அல் ஹோஸி முதலாவது புரட்சியை மேற்கொண்டார். அதில் அவர் கொல்லப்பட்டார். இப்போது அவரின் மகன் தலைமை தாங்குகிறார்.

ஹோஸிகளின் சீஆக் கொள்கைக்கு தாம் கடும் எதிர்ப்பு என்பதாக ஸைதிய்யா சீஆ உலமாக்களே பகிரங்கமாக தெரிவித்தனர்.

யெமனை ஆக்கிரமிக்க முயன்ற அல்காஇதா இயக்கத்தினரை இந்த ஹோஸிகள் ஈரானின் உதவியுடன் மடக்கினர். இவ்வாறு வெற்றிக் களிப்பில் திளைத்த ஹோஸிகள் முழு யெமனையும் கைப்பற்ற ஈரானின் உதவியுடன் கடந்த வருட இறுதிப்பகுதி முதல் பல கெரில்லாத் தாக்குதல்களை நடாத்தினர்.

அல்காஇதாவுடன் யுத்தம், இக்வானுல் முஸ்லிமீனுடன் யுத்தம், தாஇஷுடன் யுத்தம் இப்படி மூன்று பக்கத்தாலும் யுத்தத்தில் மூழ்கியுள்ள யெமனின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி யெமனை சீஆ நாடாக மாற்றும் வியூகத்தை ஈரான் வரைந்தது. யுத்த விமானங்கள், கனரக ஆயுதங்கள், பண உதவி எல்லாம் கொடுத்து மிகச்சிறிய தொகையினரான ஹோஸிகளை தூண்டிவிட்டது ஈரான்.

யெமனின் கொள்கை ரீதியான மக்கட் பரம்பல் இது: சாபிஈ மத்ஹபினர் 65%, ஹம்பலி மத்ஹபினர் 5%, மிதவாத ஸுன்னி சார்பு சீஆ ஸைதியாக்கள் 25%, ஹோஸி சீஆக்கள் 2%, மற்ற கலப்பு பிரிவினர்கள் 3%. இதிலிருந்து ஈரானின் ஆயுத உதவியுடன் யெமனைக் கைப்பற்ற யுத்தம் செய்யும் ஹோஸிகள் வெறும் 2% ஆன மிக அற்பத் தொகையினரே என்பது புரிகிறது அல்லவா? ஸுன்னி சார்பு மிதவாத ஸைதியாக்களையும் சேர்த்தால் 95% ஸுன்னி முஸ்லிம்களும் வெறும் 2% ஹோஸிகளும் என்பது புலப்படுகின்றது.
(பார்க்க:  http://www.almouazeen.com/showthread.php?t=20974 )

இவ்வாறு பெரும்பான்மையாக உள்ள ஸுன்னிகளையும் ஹோஸிகள் தாக்கியதால் ஸுன்னிகளும் ஹோஸிகளுக்கு எதிராக கிளம்பினர். பல ஸுன்னி மஸ்ஜித்களை ஹோஸிகள் கைப்பற்றி அவற்றில் கடமையில் இருந்த கதீப்மார்களை விரட்டிவிட்டு, சீஆ கதீப்மார்களை நியமித்தனர்.
Saturday, April 4, 2015

இஸ்ரேல் + வஹாபி கூட்டு

ஸியோனிஸ யூதர்களால் வளர்க்கப்பட்டதே புதிய தவ்ஹீத் பேசும் வஹாபி மார்க்கம் என்பதை 15 வருடங்களுக்கு முன்னரே பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பல பயான்களில் வரலாற்று ஆதாரங்களுடன் நாம் எடுத்துக் காட்டினோம். அதை நிரூபிக்கும் ஏராளம் ஹதீஸுகளையும் காட்டினோம்.

வஹாபியத்தை வளர்த்தது அமெரிக்க ஸியோனிஸமே என்பது பற்றி ஹிலரி கிளிண்டன் கூறும் விடியோவை எமது நெட்டில் நீங்கள் சென்ற வருடம் பார்த்தீர்கள்.

முன்னர் எகிப்தில் ஜனாதிபதியாக வந்த இக்வானுல் முஸ்லிமீன் அரசியல் தலைவர் முர்ஸி யூத ஸியோனிஸ சார்பாளர் என்பதையும், முர்ஸியை மக்கள் புரட்சி மூலம் வீழ்த்திய தற்போதைய ஜனாதிபதி ஸிஸிக்கு அமெரிக்கா ஆயுதம் தர முடியாது என்று ஆயுதத்தடை போட்டதையும், எனவே இக்வானுல் முஸ்லிமீனைப் பாதுகாப்பது யூத ஸியோனிஸ அடிமரிக்காவே என்பதையும் எமது நெட்டில் ஏற்கனவே பல வீடியோக்கள், கட்டுரைகள் மூலம் நீங்கள் அறிந்தது நினைவிருக்கலாம்.

இப்போது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இக்வானுல் முஸ்லிமீனை வளர்க்கும் துர்க்கியின் உதவிப் பிரதமர் கூறியுள்ளார்: "இஸ்ரேலின் நம்பிக்கையான நண்பனே துருக்கி. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு துருக்கி உத்தரவாதமளிக்கும்" என்பதாக. துருக்கியில் இருப்பது இக்வானுல் முஸ்லிமீன் சார்பு அரசாங்கம் என்பது உலகறிந்த விடயம்.

எனவே இக்வானுல் முஸ்லிமீன் வஹாபி இயக்கம் யூதர்களின் நண்பன் என்பது மீண்டும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது அல்லவா !

ஆனால் ...... ! தலைவர்களை கண்மூடிப் பின்பற்றுபவர்களுக்கு இது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமல்ல. அது தான் வேடிக்கை.

துருக்கி உதவிப் பிரதமர் இஸ்ரேலை ஆதரித்துப் பேசும் வீடியோவையும் அது பற்றிய பத்திரிகை செய்தியையும் பார்க்கவும்

 


أنقرة (العالم) 2015.04.04 ـ نددت أحزاب المعارضة التركية باعتبار نائب رئيس الوزراء بولنت أرينتش أن تركيا شريك جيد في توفير الأمن الاسرائيلي، معتبرة ذلك تطبيعا.. وات... 


Preview by Yahoo Thursday, April 2, 2015

தாஇஷ் ஓட்டம்

தாஇஷ் (ISIS) வஹாபிகளின் பிடியில் இருந்த பிரதான இராக் நகரங்களில் ஒன்று ஸதாம் ஹுஸைனின் சொந்த ஊரான திக்ரீத் என்ற நகரம்.

அதனை இராக் படைகள் கைப்பற்றிய செய்தியை அண்மையில் இங்கே வாசித்தீர்கள்.

ஏராளமான தாஇஷ்களை அழித்தும், மற்ற தாஇஷ்களை விரட்டியடித்த பின்னர், ஈராக் ஜனாதிபதியும் இராணுவமும் ஈராக் கொடியை ஏந்தி திக்ரீத் வீதிகளில் வெற்றிக் களிப்புடன் உலாவரும் காட்சியை சித்தரிக்கும் படங்கள்


ஆனால் ஸிரியாவில் இன்னும் தாஇஷ்களின் அட்டகாசம் விரிவடைந்துகொண்டிருப்பதை அறிய முடிகிறது.
حسبنا الله ونعم الوكيل