Sunday, April 22, 2018

உலக முடிவு நெருங்குகிறது ?

ஸவூதி கிளர்ச்சி? உலக முடிவு நெருங்குகிறது ?

ஸவூதியில் தலைவர் இறந்த பின் அவரின் மூன்று வாரிசுகளுக்கிடையில் யுத்தம் நடந்து, குழப்ப நிலை உச்சத்தை அடையும் போது, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வெளியாவார்கள். அவர்களை எதிர்க்க சாம் இலிருந்து ஸுப்யானி என்ற கொடுங்கோலன் புறப்படுவான். அவனது படைகளை "பைதாஉ" என்ற இடத்தில் பூமி விழுங்கிவிடும் என்பன போன்ற ஏராளம் தகவல்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.

இச்சம்பவங்களின் காலத்தை நிச்சயமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் ஸவூதி அரச மாளிகை தாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை என்றால் இறுதி காலம் நெருங்கிவிட்டது என்பதை ஊகிக்கலாம்.

https://arabic.rt.com/middle_east/939744-%D8%A7%D9%84%D9%83%D8%B4%D9%81-%D8%B9%D9%86-%D9%85%D9%83%D8%A7%D9%86-%D8%A7%D9%84%D9%85%D9%84%D9%83-%D8%B3%D9%84%D9%85%D8%A7%D9%86-%D8%A5%D8%B7%D9%84%D8%A7%D9%82-%D8%A7%D9%84%D9%86%D8%A7%D8%B1-%D9%83%D8%AB%D9%8A%D9%81-%D9%8A%D8%B3%D8%AA%D9%87%D8%AF%D9%81-%D8%B7%D8%A7%D8%A6%D8%B1%D8%A9-%D9%85%D8%B3%D9%8A%D8%B1%D8%A9-%D9%82%D8%B1%D8%A8-%D8%A7%D9%84%D9%82%D8%B5%D9%88%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D9%84%D9%83%D9%8A%D8%A9-%D9%81%D9%8A-%D8%A8%D8%A7%D9%84%D8%B1%D9%8A%D8%A7%D8%B6/

21.4.2108


ஹரம் சரீபில் CCTV காட்சிகள்

மக்காவில் ஹரம் சரீபில் CCTV கமெரா காட்சிகள் :

கண் பார்வையற்ற எகிப்தியருக்கு பார்வை மீளல்
பொறுப்பற் விதத்தில் நடந்துகொள்ளும் இளைஞன்.

உறங்குபவரின் Hand phone ஐ திருடும் திருடனை பொலிஸ் பிடித்தல்

தொழுதுகொண்டே சிக்கரட் பற்றும் மன நோயாளியை பொலிஸ் பிடித்தல்.

அங்கவீனரான குட்டையானவர் தவாப் செய்யவும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடவும் பொலிஸ் உதவி செய்தல்.

https://www.youtube.com/watch?v=MS7xIQGu7t0


Saturday, April 14, 2018

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது.

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது !

இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !!

இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்),  அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள்.

இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களின் சகல சொத்துக்களையும் அழிக்கும் யூத இஸ்ரேல். அமெரிக்க ஸியோனிஸ்டுகளை ஆதரிக்கும்

கூலிப்படைகளே இந்த வஹாபிகள் என்பதை அறிய வேண்டுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வஹாபிகளும் செய்யும் அட்டூழியங்களின் சுருக்கத்தை அறிய வேண்டுமா?

வஹாபிகளால் ஆதரிக்கப்படும், ஸிரிய அரசாங்கத்துக்கெதிரான அமெரிக்க, இஸ்ரேல் யுத்தம் பற்றி பலஸ்தீனைச் சேர்ந்த உலகின் பிரபல மத்தியகிழக்கு விவகார ஆய்வாளர் அப்துல் பாரி அத்வானி அவர்கள், அரபுலகை அமெரிக்கா அழிப்பது பற்றி மிகக் கவலையோடு பேசுகிறார். இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேல், அமெரிக்க திட்டத்தைத் தான் இங்குள்ள வஹாபி தமிழ் ஊடகங்கள் ஆதரிக்கின்றன என்பதை இலகுவாக புரிந்து கொள்வீர்கள்.

இந்த வீடியோவை முழுதும் கவனமாக கேளுங்கள்.

அரபு தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் மூலம் கேளுங்கள்.

சகல முஸ்லிம்களுக்கும் எத்தி வையுங்கள்.

https://www.raialyoum.com/index.php/%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83%D8%A7-%D8%AA%D8%B1%D8%B3%D9%84-%D8%A7%D9%83%D8%A8%D8%B1-%D9%85%D8%AF%D9%85%D8%B1%D8%A7%D8%AA%D9%87%D8%A7-%D8%A7%D9%84%D9%89-%D8%A7%D9%84%D8%B4%D9%88%D8%A7%D8%B7%D8%A6/

13.4.18


Wednesday, April 11, 2018

ஸிரியா தாக்கப்படுமா?


இஸ்ரேல் கூறுகிறது :

பஷ்ஷார் அல் அஸத் படுகொலை செய்யப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

http://www.alalam.ir/news/3488176/%D8%AA%D9%84-%D8%A7%D8%A8%D9%8A%D8%A8---%D8%AD%D8%A7%D9%86-%D9%88%D9%82%D8%AA-%D8%A7%D8%BA%D8%AA%D9%8A%D8%A7%D9%84-%D8%A8%D8%B4%D8%A7%D8%B1-%D8%A7%D9%84%D8%A3%D8%B3%D8%AF--

ட்ரம்ப் இரத்த வெறியில் கர்ச்சித்தல் :

தனது ஏவுகணைகள் ஸிரியாவை நோக்கி வரும். அதற்கு ரஷ்யா தயாராக இருக்கட்டும்.

https://arabic.rt.com/middle_east/937683-%D8%AA%D8%B1%D8%A7%D9%85%D8%A8-%D9%85%D8%BA%D8%B1%D8%AF%D8%A7-%D8%B5%D9%88%D8%A7%D8%B1%D9%8A%D8%AE%D9%86%D8%A7-%D9%82%D8%A7%D8%AF%D9%85%D8%A9-%D8%A5%D9%84%D9%89-%D8%B3%D9%88%D8%B1%D9%8A%D8%A7-%D9%88%D8%B9%D9%84%D9%89-%D8%B1%D9%88%D8%B3%D9%8A%D8%A7-%D8%A3%D9%86-%D8%AA%D8%B3%D8%AA%D8%B9%D8%AF/

ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள் :

ஸிரியாவைத் தாக்கும் எந்த ஏவுகணையும் சுட்டு வீழ்த்தப்படுவதுடன், அதனை ஏவிய தளங்களும் அழிக்கப்படும்.

http://www.alalam.ir/news/3487791/%D9%85%D8%B3%D8%A4%D9%88%D9%84-%D8%B1%D9%88%D8%B3%D9%8A--%D8%A3%D9%8A-%D8%B5%D9%88%D8%A7%D8%B1%D9%8A%D8%AE-%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83%D9%8A%D8%A9-%D8%AA%D8%B7%D9%84%D9%82-%D8%B9%D9%84%D9%89-%D8%B3%D9%88%D8%B1%D9%8A%D8%A7-%D8%B3%D9%8A%D8%AA%D9%85-%D8%A5%D8%B3%D9%82%D8%A7%D8%B7%D9%87%D8%A7-%D9%88%D9%85%D9%87%D8%A7%D8%AC%D9%85%D8%A9-%D9%85%D8%B5%D8%A7%D8%AF%D8%B1%D9%87%D8%A7

இந்த மூன்று செய்திகளும் இன்றைய பிரதான மத்திய கிழக்குச் செய்திகள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சொல்வது போல் நடந்தால் , லிபியா போன்று ஸிரியாவும் அழியும். அடுத்த இலக்கு ஈரானாக இருக்கும். இஸ்ரேல் மத்திய கிழக்கின் ஏகபோக அரசனாக உருவெடுக்கும். இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகளுக்கு மிக சந்தோசமான கொண்டாட்டமாக அமையும்.

அல்லாஹ் நாடியது நடக்கும்.  لا حول ولا قوة إلا بالله

11.4.2018


Tuesday, April 10, 2018

அஸ்ஸய்யிது யூஸுப் அல் ரிபாஈ (ரஹ்)

அஸ்ஸய்யிது யூஸுப் அல் ரிபாஈ (ரஹ்)

31.3.2018 வபாத்தான அஸ்ஸய்யிது யூஸுப் ஹாசிம் அர்ரிபாஈ ரஹிமஹுல்லாஹ் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அரபியில் (வீடியோ)

https://www.youtube.com/watch?v=p4i_084w4XE

10.4.2018


Monday, April 9, 2018

தூரதிருஷ்டி

தூரதிருஷ்டி !
நேற்றிரவு நாம் இங்கே எழுதினோம், அமெரிக்கா ஸிரியாவைத் தாக்குமா என்ற சந்தேகத்தை.
இரவு விடிய முன்னரே அமெரிக்க கட்டளையால் இஸ்ரேல் விமானங்கள் ஸிரியாவைத் தாக்கின.
9.4.2018
https://arabic.rt.com/middle_east/937191-%D9%82%D8%AA%D9%84%D9%89-%D9%88%D8%AC%D8%B1%D8%AD%D9%89-%D8%A8%D9%82%D8%B5%D9%81-%D8%B9%D9%84%D9%89-%D9%85%D8%B7%D8%A7%D8%B1-%D8%A7%D9%84%D8%AA%D9%8A%D9%81%D9%88%D8%B1-%D8%A7%D9%84%D8%B9%D8%B3%D9%83%D8%B1%D9%8A-%D9%81%D9%8A-%D9%88%D8%B3%D8%B7-%D8%B3%D9%88%D8%B1%D9%8A%D8%A7-%D8%A8%D8%B5%D9%88%D8%A7%D8%B1%D9%8A%D8%AE-%D9%85%D8%AC%D9%87%D9%88%D9%84%D8%A9/

ஸிரியா தாக்கப்படுமா?

அமெரிக்கா ஸிரியாவைத் தாக்குமா ?

ஸிரியாவில் அமெரிக்காவின் வஹாபி கவாரிஜ் கூலிப்படைகள் படு தோழ்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா இப்போது ஸிரியாவை நேரடியாகத் தாக்க ஆயத்தமாகிறது. கூத்தா  غُوطة தூமா دومة  நகரங்களில் ஸிரிய அரசு விசவாயுவை உபயோகித்ததாக (எந்த வித விசாரணையும் இல்லாமல்) குற்றம் சுமத்தி, ஸிரியாவை திடீர் என்று தாக்க ஸியோனிஸ ட்ரம்ப் திட்டமிட்டுளளார்.

சில கேள்விகள் :-

உண்மையிலேயே ஸிரியாவை கைப்பற்றும் திட்டமா?

ஸவூதி முதலிய பணக்கார நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்ய ஒரு நாடகமா?

இப்படி பயமுறுத்தி, ரஷ்யாவின் நிலைப்பாட்டை அறிய தந்திரமா?

இந்தப் பயமுறுத்தல், இப்போது யுத்தமாக வெடித்தாலும் இல்லாவிட்டாலும், இன்னும் ஒரு சில வருடங்களிலாவது அரபு நாடுகளில் மிகப் பெரிய யுத்தம் நடக்கத்தான் போகிறது. இது பற்றி ஏராளமான ஹதீஸுகள் முன்னெச்சரிக்கை செய்துள்ளன.  نسأل الله العافية

9.4.18


Tuesday, April 3, 2018

அமெரிக்க மார்க்கம் வஹாபியத்து

வஹாபியத்து :இஸ்லாமா அமெரிக்க மார்க்கமா

வஹாபிய மார்க்கத்தை உலக நாடுகளில் வளர்க்க அமெரிக்கா பணம் கொடுத்தது என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கூறிய வீடியோவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது இந்த நெட்டில் நாம் உங்களுக்கு தந்தோம்.

இப்போது அதே கருத்தை ஸவூதி இளவரசர் (உண்மையில் ஸவூதியை இப்போது ஆளுவது அவரே) முகம்மது பின் ஸல்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியை பல உலக ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரித்திருப்பதை பாருங்கள்.

அமெரிக்கா – ரஷ்யாவுக்கடையில் முன்னர் இருந்து குளிர் யுத்த ( Cold war ) காலப்பகுதியில் , ரஷ்யாவின் அதிக்கத்தை முறியடிப்பதற்காக, வஹாபிக் கொள்கையைப் பரப்புமாறு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஸவூதி அரேபியாவுக்கு கட்டளையிட்டன என்பதை ஸவூதி இளவரசரே இப்போது ஏற்றுக் கொள்கிறார் !

                யூத, கிறிஸ்தவ நாடுகளின் கட்டளையால் பரப்பப்பட்ட "வஹாபி மார்க்கத்தை" , இலங்கையில் உள்ள முட்டாள்கள் "குர்ஆன் ஹதீஸ்" என்று நம்பி, அதனால் சுவர்க்கம் போகலாம் என்றும் நினைக்கிறார்களே ! இதைவிடப் பெரிய முட்டாள் தனம் உண்டா ?

1-

https://www.rt.com/news/422563-saudi-wahhabism-western-countries/

2-

https://bdnews24.com/world/2018/03/29/west-fuelled-spread-of-wahhabism-during-cold-war-saudi-crown-prince

3-

https://www.washingtonpost.com/news/global-opinions/wp/2018/03/19/saudi-arabia-embraces-change-and-the-united-states-can-help/?utm_term=.c09f59bb5167

4-

https://tribune.com.pk/story/1672777/3-wahhabism-spread-behest-west-cold-war-mohammed-bin-salman/

5-

https://www.outlookindia.com/website/story/western-countries-asked-us-to-spread-wahabism-to-counter-soviets-during-cold-war/310157

6-

https://www.dailysabah.com/mideast/2018/03/28/cold-war-era-wahhabism-used-as-tool-against-soviets-on-us-demand-saudi-crown-prince-salman-confesses

7-

https://sputniknews.com/middleeast/201803291063010004-saudi-wahhabism-west-cold-war/

8-

https://www.moroccoworldnews.com/2018/03/243388/spread-wahhabism-done-request-west-cold-war-saudi-crown-prince/

2.4.2018

Sunday, April 1, 2018

அஸ்ஸய்யிது யூஸுப் ஹாசிம் அர்ரிபாஈ

குவைத்தில் ரிபாஇய்யா தரீக்காவின் செய்கும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவரும், சடைவின்றி தினமும் பலரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையுள்ளவரும், ஏராளமான உலக நாடுகளில் இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபட்டவரும், குவைத்திலும் உலக நாடுகளிலும் வஹாபி , சீஆ வழிகேடுகளுக்கு எதிராக மும்முரமாக குரல் கொடுத்தவரும், எமக்கு 1976 முதல் ஏராளமான மார்க்க சமூக உதவிகள் செய்தவரும், இலங்கையில் பல மார்க்க சொற்பொழிவுகளில் பங்கு பற்றியவரும், பல நூல்களின் ஆசிரியரும், எமது வீட்டுக்கு இரண்டு தடவைகள் விஜயம் செய்தவருமான அஷ்ஷெய்கு அஸ்ஸய்யிது யூஸுப் ஹாசிம் அர்ரிபாஈ அவர்கள் தனது 86வது வயதில் நேற்று (31.3.2018) குவைத்தில் வபாத்தானார்கள்.
அவர்களுக்கும் எமக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் அவரின் சில சேவைகளைப் பற்றியும் இன்ஷா அல்லாஹ் பிறகு தருகிறோம்.
سائلين المولى عز وجل أن يتغمد الفقيد بواسع رحمته ويدخله فسيح جناته ويلهم أفراد الأسرة الكريمة الصبر والسلوان ، إنا لله وإنا اليه راجعون