Thursday, July 27, 2017

அக்ஸாவில் பல்லாயிரம் பேர்

மஸ்ஜிதுல் அக்ஸாவில் முஸ்லிம்கள் தொழுவதை இஸ்ரேல் தடுத்ததை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக நடந்த பலஸ்தீனரின் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, இன்று (27.7.17) மஸ்ஜிதின் கதவுகள் திறக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான பலஸ்தீனர்கள் இன்று அஸ்ர் தொழுகைக்காக மஸ்ஜிதினுள் பிரவேசிக்கும் மகிழ்ச்சிகரமான காட்சி (வீடியோ)
https://arabic.rt.com/middle_east/890740-%D8%A2%D9%84%D8%A7%D9%81-%D8%A7%D9%84%D9%81%D9%84%D8%B3%D8%B7%D9%8A%D9%86%D9%8A%D9%8A%D9%86-%D9%8A%D8%AF%D8%AE%D9%84%D9%88%D9%86-%D8%A8%D9%88%D8%A7%D8%A8%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D8%A7%D9%84%D8%A3%D9%82%D8%B5%D9%89-%D9%84%D8%A3%D9%88%D9%84-%D9%85%D8%B1%D8%A9-%D9%85%D9%86%D8%B0-%D8%A3%D8%B3%D8%A8%D9%88%D8%B9%D9%8A%D9%86/
27.7.2017

Sunday, July 23, 2017

28 இக்வான் பயங்கரவாதி: மரண தண்டனை

28 இக்வான் கவாரிஜ் பயங்கரவாதிகளுக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை.
கடந்த வருடம் இக்வான் இயக்க பயங்கரவாதிகள் புனித ரமழான் மாதத்தில் மேற்கொண்ட படுகொலைச் சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இக்வான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 28 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
"இஸ்லாமிய இயக்கம்" என்று இங்கு சிலர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய கவாரிஜ் வஹாபி இயக்கமான இக்வான் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதற்கான சட்ட ரிதியான சான்றுகளை அறிய விரும்புபவர்கள் , குறிப்பாக மௌலவிமார்கள் இந்த (அரபு)க் கட்டுரையை தவறாமல் படிக்கவும்.
(மொழிபெயர்த்து தருவதற்கான வசதி வாய்ப்புகள் சிலரால் மறுக்கப்பட்டுள்ளமையை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )

23.7.2017

Wednesday, July 19, 2017

ட்ரம்பின் தந்திரமா (3)

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்க
ட்ரம்பின் தந்திரமா – 3
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் ட்ரம்ப் மிகப் பகிரங்கமாக கூறிய ஒன்று தான் America First என்பது. அதாவது , யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, உலகை ஆளும் சக்தியாக அமெரிக்காவை ஆக்குவேன் என்பது இதன் உள் நோக்கம். இது ட்ரம்பின் புதிய கண்டுபிடிப்பல்ல. அமெரிக்க தேசிய நலனை வடிவமைக்கும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (பெண்டகன்) நிரந்தர கொள்கையே இது தான். எவர் ஜனாதிபதியானாலும் இதை நிறைவேற்றுவதே முதல் கடமை. ஆனால் மற்ற ஜனாதிபதிகள் இதை வெளிப்படையாக கூறவில்லை, ட்ரம்ப் கூறினார். இவ்வளவுதான் வித்தியாசம்.
                எனவே , மத்திய கிழக்கு நாடுகளை மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிளவுபடுத்தி, உள்நாட்டுச் சண்டையை விரிவுபடுத்தி அதன் பொருளாதாரத்தை சூரையாடாமல் ட்ரம்பால் இந்த இலக்கை அடைய முடியாது. எனவே "முஸ்லிம்களை முஸ்லிம்களாலேயே அழிக்க வேண்டும்" என்ற ஒபாமா கையாண்ட அதே தந்திரத்தை கையாள ட்ரம்ப் தீர்மானித்தார்.
                பலமாகவும், அமைதியாகவும் இருந்த அரபு நாடுகளின் தலைவர்களை கொலை செய்து அந்நாடுகளை குட்டிச் சுவராக்க ,கட்டார், துருக்கி, ஸவூதி முதலிய நாடுகளைக் கொண்டு வஹாபி பயங்கரவாதத்தையும், ஈரானின் சீஆ தீரவாதத்தையும் அமெரிக்கா பயன்படு;ததிய விபரங்களை ஏற்கனவே 2011 முதல் எமது ஊடகங்களில் ஏராளமான கட்டுரைகள் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
                இலங்கையில் சீஆவை காரசாரமாக கண்டிக்கிறார்கள் வஹாபிகள். வஹாபிகளை திட்டுகிறார்கள் சீஆக்கள். ஆனால், வஹாபி இக்வான்களின் இராணுவ அமைப்பான ஹமாஸுடன் பலஸ்தீனில் ஈரான் சீஅக்கள் குதூகலிக்கிறார்கள். வஹாபி அரசியல் தலைவர் முர்ஸிக்கு சீஆ ஈரான் பெரும் ஆதரவு. எனவே இலங்கைப் பத்திரிகைகள் உங்களுக்கு தருவது பொய்யான செய்திகளே என்பதையும் ஏற்கனவே இங்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளோம்.
                ஒபாமாவின் காலத்தில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திட்டத்துக்கு ஆதரவளித்தும், கட்டார், துருக்கி, ஸவூதி மூலம் அரபு நாடுகளில் "அரபு வசந்தம்" என்ற முகமூடியில் வஹாபி பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டார் ஒபாமா. லிபியா, யெமன், ஸிரியா, இராக் போன்ற நாடுகளை அழித்தார். அப்துல் பத்தாஹ் ஸிஸி என்ற மாபெரும் தலைவரை அல்லாஹ் எகிப்துக்கு வழங்கியதால் எகிப்தை அழிக்க முடியவில்லை.
                ஆனால் ட்ரம்ப் பெரிதாக மார்தட்டிக் கொண்டு வந்து பார்த்தார். நீலைமை தனக்கு சாதகமாக இல்லை. எகிப்து, ஸிரியா, ஈரான், ஸவூதி ஆகிய நான்கு நாடுகளை "பிரித்துக் கூறுபோடும்" தனது திட்டத்தை ட்ரம்ப் செயல்படுத்த முனைந்ததை மத்திய கிழக்கு பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிய முடியும். எகிப்து ஜனாதிபதியை அழைத்து பயமுறுத்தி பேசிப் பார்த்தார். ஸிஸியின் மன உறுதியின் முன் ட்ரம்ப் தோழ்வியடைந்தார்.
                துருக்கி, கட்டாரின் உதவியுடன் ஸிரிய ஜனாதிபதியை வீழ்த்த முனைந்தார். பல முறை ஸிரிய இராணுவத் தளங்கள் மீது விமானத் தாக்குதல் நடாத்திப் பார்த்தார். அண்மையில் நடந்த ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பின் போது, "ஸிரியாவைப் பாதுகாப்பது ரஷ்யாவின் கடமை"  என்ற புட்டினின் உறுதியான ஸிரிய ஆதரவு நிலைப்பாட்டைக் கண்டு, ஸிரியாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டார்.
                ஈரானுடன் ஒபாமா செய்துகொண்ட அணு செறிவாக்கல் ஒப்பந்தத்தை முறித்துவிடுவதாக பல முறை பயமுறுத்தினார். ஈரானில் ISIS இன் தாக்குதல் ஒன்றை நடாத்திப் பார்த்தார். ஆனால், அரபு நாடுகளைப் போலன்றி, ஈரான் மக்கள் கொள்கைப்பற்றுள்ளவர்கள் என்பதால், ட்ரம்பின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதி சக்தி வாய்ந்த பலஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டு, ட்ரம்பின் எச்சரிக்கைகளை துச்சமாக மதிப்பதைக் கண்டு, இப்போது, அணு செறிவாக்கல் ஒப்பந்தத்தை முறிப்பதில்லை என்கிறார்.
                இறுதியாக எஞ்சியிருப்பது ஸவூதி. ஸவூதியைப் பயமுறுத்தி 400 கோடி டொலர்களுக்கு ஆயுத விற்பனையை செய்துகொண்டார். கட்டாரைப் பயன்படுத்தி கோஷ்டி மோதல்களையும் , ஆங்காங்கே சிறுசிறு ISIS தாக்குதல்களையும் ட்ரம்ப் ஸவூதியில் கட்டவிழ்த்து விட்டார் . ட்ரம்பின் பயங்கர திட்டத்தை உணர்ந்த ஸவூதி மன்னர் , தனது பதவியையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய அரபுலகத் தலைவர் ஸிஸியுடன் கூட்டிணைந்தார். அமெரிக்காவால் இயக்கப்படும் கட்டாரை மடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
                எகிப்து, ஸவூதி, எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளின் கட்டாருக்கெதிரான அதிரடி நடவடிக்கைகளைக் கண்ட ட்ரம்ப், உடனடியாக தனது வெளிவிவகார அமைச்சர் டிலர்ஸனை அனுப்பி கட்டாரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். முதலில் கட்டாருக்கு வந்த அவர், "கட்டாரின் நிலைப்பாடு நியாயமானதே" என்று அறிவித்துவிட்டு, ஸவூதிக்கு சென்றார். ஸவூதி மன்னர் கட்டாருக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை கூற, அதே நேரம் எகிப்தும் கட்டாரின் கடந்தகால பயங்கரவாத நடவடிக்கைகளை பட்டியல் போட்டு வெளியிட, டிலர்ஸன் திக்குமுக்காடிப் போனார். மீண்டும் கட்டார் போய், எந்த பத்திரிகையாளர் மாநாடும் நடத்தாமல் நாடு திரும்பினார்.
                "டிலர்ஸன் நல்ல முயற்சி தான் செய்தார். ஆனால் கருத்து வெளியிடுவதில் தவறிழைத்து விட்டார்" என்று ட்ரம்ப் கூறி, முகத்தில் அசடு வழிவதை மறைக்க முயன்றார்.
                ஆனால் எப்படியாவது நான்கு நாடுகளின் கோரிக்கைகளுக்கு கட்டார் அடிபணியாமல், கட்டாரைப் பாதுகாத்து, பயங்கரவாதத்தை கட்டவிழத்துவிட்டு, ஸவூதியை பிளவுபடுத்தும் உபாயங்களையே ட்ரம்ப் செய்துகொண்டிருக்கிறார்.
கட்டாரைப் பாதுகாக்க நிச்சயமாக ஈரான் வரமாட்டாது. ஈரான் மத்திய கிழக்கில் தலைவனாவதை அமெரிக்கா விரும்புவதில்லை. துருக்கியும் கட்டாரைப் பாதுகாக்க வர முடியாத விதத்தில் அங்கு உள்நாட்டுப் பூசல் விரிவடைந்துள்ளது. எனவே கட்டாரின் இன்றைய அடிபணியாத தலைக்கணம் முற்று முழுதாக அமெரிக்காவை நம்பியே இருக்கின்றது. என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரானைப் பயமுறுத்திப் பார்க்கும் ட்ரம்ப் :-
கட்டாரும் அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக டிலர்ஸனுடன் கட்டார் போலி ஒப்பந்தம் :
ட்ரம்ப் இரட்டை வேடம் : கட்டாரின் பயங்கரவாதத்துக்கு ஆதரவு :
ட்ரம்ப் இரட்டை வேடம் : கட்டாரிலிருந்து இராணுவத் தளத்தை அப்புறப்படுத்த தயாராம் :
ஸவூதி மன்னர் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த ட்ரம்ப் முயற்சி :

Monday, July 10, 2017

ட்ரம்பின் தந்திரமா - 2

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்க
ட்ரம்பின் தந்திரமா - 2
இராக்கை ஆக்கிரமித்த இரண்டாவது புஷ், ருசி கண்ட பூனை போன்று, கோழி பிடித்து ருசி கண்ட நாய் போன்று, தொடர்ந்தும் மத்திய கிழக்கில் நாடு பிடிக்கும் திட்டங்களை வரைந்தார். அதனால் அதிகமான அமெரிக்க இராணுவத்தினரை இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா இழந்தது.
ஒபாமாவின் காலத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளுக்கு இழப்பு ஏற்படாமல் மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஒபாமா தனது மத்திய கிழக்கு கொள்கையில் இரண்டை வெற்றிகரமாக சாதித்தார். ஒன்று: பின்லாடனை அழித்து , செப்டம்பர் 11 அமெரிக்க கோபுர தாக்குதலின் சூத்திரதாரியை (?) அழித்து அமெரிக்க மக்களிடம் "ஹீரோ" வானார்.
இரண்டாவது: இக்வானுல் முஸ்லிமூன், ஸலபி, தவ்ஹீத் ஜமாஅத்து என்று ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டன், அமெரிக்காவால் முஸ்லிம் நாடுகளில் வளர்க்கப்பட்ட கவாரிஜ் வஹாபி இளைஞர்களை, இது வரை காலமும் முஸ்லிம் உம்மத்தை "சிர்க்கு, பித்அத்து" மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை, அந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளரையும், உலமாக்களையும், இராணுவத்தையும், ஏன், கப்ருகளில் உள்ள ஸஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்களையும் அழித்தொழித்து, அதன் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, அமெரிக்க ஆதிக்கத்தை அரபு இஸ்லாமிய நாடுகளில் நிலை நாட்டும் வேலையை இந்த வஹாபிகள் மூலமே நிறைவேற்றும் வேலையை ஒபாமா மேற்கொண்டார்.
இந்த போலி முஸ்லிம்களை பயன்படுத்தி, அவர்கட்கு தேவையான சகலவிதமான பண, ஆயுத உதவிகளும் வழங்கி, பிரிட்டன், பிரான்ஸுடன் சேர்ந்து கடாபியை அழித்து லிபியாவை அழித்தார் ஒபாமா. யெமனை அழித்தார், இராக்கை அழித்தார், ஸிரியாவை அழித்தார். இன்னும் ஏராளம் நாடுகளில் அழிவு வேலை நடைபெறுகிறது. அல்லாஹ்வின் உதவியால் எகிப்தில் மட்டும் வெற்றிபெற தவறி விட்டார்.
இப்படியாக விசேசமாக இக்வான் வஹாபி கவாரிஜ்களைக் கொண்டே அரபு நாடுகளை அழித்தார் ஒபாமா. இதனால் சகல அரபு நாடுகளும் வஹாபி பயங்கரவாதிகளுக் கெதிரான யுத்தத்தை ஆரம்பித்தன. வஹாபியத்து பிறந்த நாடான ஸவூதியும் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எகிப்துடன் இணைந்து வஹாபி தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்த ஆரம்பித்துள்ளது. பல அரபு நாடுகளின் தலைவர்களையும் உலமாக்களையும் இராணுவத்தையும் அழிக்கும்படி பகிரங்க கட்டளையிட்ட இக்வானின் வழிகெட்ட இமாமான கராழவியின் சகல கிதாபுகளையும் பூரணமாக தடை செய்துள்ளது ஸவூதி அரசு.
இப்படி சகல அரபு நாடுகளும் பயங்கரவாத வஹாபியத்தை அழிக்க ஒன்றிணையும் போது, கட்டார், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் மட்டும் "நாம் வஹாபியத்தை அழிக்க விடமாட்டோம். சகல முஸ்லிம் நாடுகளையும் ஆக்கிரமிப்பதே எமது திட்டம்" என்றாற்போல், தொடர்ந்தும் சகல அரபு நாடுகளிலும் உள்ள கவாரிஜ் வஹாபிகளுக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் எகிப்தில் இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல், இராக், ஸிரியாவில் தொடரான தாக்குதல்கள் என்பவற்றுக்கு கட்டார் உதவி செய்ததை ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒபாமாவின் காலத்தில் முஸ்லிம் நாடுகளில் கவாரிஜ் வஹாபிகளைத்தூண்டி , உள்நோக்கம் தெரியாத சில பொதுமக்களையும் தூண்டி, அரசுகளுக் கெதிராக புரட்சி செய்து தலைவர்களைக் கொலை செய்த – நாடுகளை அழித்ததன் சில தகவல்கள் இதோ :
தூனிஷியாவில் முஹம்மது பூ அஸீஸி என்ற இளைஞன் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, 17.10.2010 இல் வஹாபி புரட்சி கிளம்பியது. ஜனாதிபதி ஸைனுல் ஆபிதீன் நாட்டை விட்டு ஸவூதிக்கு தப்பியோடினார். (அரபு வசந்தம் என்ற வஹாபி புரட்சியின் ஆரம்பம் இஸ்லாம் தடை செய்த தற்கொலையில் தான் ஆரம்பமானது என்பதை அவதானிக்கவும்)
எகிப்தில் வஹாபிகள் 25.1.2011 இல் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்குக்கு எதிராக புரட்சி ஆரம்பித்து, அவரை பதவி நீக்கம் செய்து, சிறையில் அடைத்து, கவாரிஜ் இக்வான் முர்ஸி தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தார். முர்ஸியின் வஹாபி உருவத்தை அறிந் பொது மக்கள்  மூன்று கோடிக்கும் அதிகமானவர்கள் 30.6.2013 இல் முர்ஸிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் ஸிஸி எகிப்து மக்கள் பக்கம் நின்று 3.7.2013 இல் முர்ஸியைக் கைது செய்து, இடைக்கால அரசு அமைத்து, பின்னர் உலகம் போற்றும் நீதியான ஜனநாயக தேர்தல் மூலம் ஜனாதிபதியானார். ஏராளம் எகிப்து பொது மக்களை கொன்று குவித்த இக்வான் பயங்கரவாத கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தது உண்மை. ஆனால் வஹாபி இக்வான்கள்கள் தான் அதிகமானவர்கள் என்றால் சகல இக்வான்களும் ஸிஸிக்கு எதிராக வாக்களித்து ஸிஸியை தோற்கடித்திருக்கலாமே ? வாக்களிக்கும் உரிமை பூரண ஜனநாயக அடிப்படையில் நடந்ததாக ஆதரவு எதிர்ப்பு சகல உலக நாடுகளும் பாராட்டியதை வஹாபி பத்திரிகைகள் மூடி மறைப்பதேன் ?
லிபியாவில் வஹாபி புரட்சி 17.2.2011. தலைவர் கடாபி பயங்கரமான முறையில் படுகொலை.
யெமனில் வஹாபி புரட்சி 11.2.2011. ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியிழப்பு.
ஸிரியாவில் வஹாபி புரட்சி 18.3.2011. இன்று வரை ஜனாதிபதி நின்று பிடிக்கிறார். வஹாபிகளுக்கு பலத்த தோழ்வி.
பஹ்ரைனில் சீஆ புரட்சி 14.2.2011. இன்று வரை தொடர்கிறது.
அல்ஜீரியாவில் வஹாபி புரட்சி ஜனவரி 2011. வஹாபிகள் தோழ்வி.
ஜிபூட்டியில் வஹாபி புரட்சி 18.2.2011. வஹாபிகள் தோழ்வி.
இராக்கில் வஹாபி புரட்சி பெப்ரவரி 2011. தொடர்கிறது. வஹாபிகள் தோழ்வி.
பலஸ்தீனில் வஹாபி புரட்சி 13.2.2011. வஹாபிகள் தோழ்வி.
ஜோர்தானில் வஹாபி புரட்சி 14.1.2011. வஹாபிகள் தோழ்வி.
மொரோக்கோவில் வஹாபி புரட்சி 20.2.2011. வஹாபிகள் தோழ்வி. (இவ்வாரம் மீண்டும் வஹாபி ஆர்ப்பாட்டங்கள்).
ஓமானில் வஹாபி புரட்சி 18.1.2011. வஹாபிகள் தோழ்வி.
ஸவூதியில் சிறிதாக வஹாபி புரட்சி 3.3.2011. வஹாபிகள் தோழ்வி.
சூடானில் வஹாபி புரட்சி 30.1.2011. வஹாபிகள் தோழ்வி. புரட்சி தொடர்கிறது.
குவைத்தில் வஹாபி புரட்சி 2011 (பிரதமருக்கெதிராக ஆர்ப்பாட்டம். மன்னர் பாராளுமன்றத்தை கலைத்து நிலைமையை சமாளித்தார்.)
எமிரேட்ஸில் வஹாபிகளால் பதட்டம் 2011.
மொரிதானியாவில் வஹாபி புரட்சி 2011. தோழ்வி.
லெபனானில் வஹாபி ஆர்ப்பாட்டம் 27.2.2011
செச்னியாவில் வஹாபி புரட்சி 2011. வஹாபிகள் தோழ்வி.
இன்னும் பல முஸ்லிம் நாடுகளில் வஹாபிகளுக்கு கட்டார், துருக்கி, அமெரிக்க ஆயுதங்கள் கொடுத்து சிறுசிறு புரட்சிகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பயங்கரவாத கவாரிஜ் வஹாபிகளை அழித்து, முஸ்லிம் நாடுகளை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
இப்போது ஒபாமா நிர்வாகம் போய், ட்ரம்ப் நிர்வாகம் கட்டார் விசயத்தில் இரட்டை வேடம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
10.7.2017

Tuesday, July 4, 2017

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமா?

மத்திய கிழக்கை ஆக்கிரமிக்க
ட்ரம்பின் தந்திரமா - 1
ஸதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமிக்க முன்னர், மத்திய கிழக்கு அரபு நாடுகளில் அமைதி நிலவியது. மத்திய கிழக்கில் "அமெரிக்க ஆட்சி" இருக்கவில்லை. அமெரிக்கா நினைத்ததை செய்யலாம் என்ற நிலை இருக்கவில்லை. (விதிவிலக்காக, கட்டாரில் மட்டும் அமெரிக்க இராணுவத் தளம் இருந்தது). சுருக்கமாகச் சொல்வாதானால், அரபு நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்தன.
இந்நிலையை மாற்றி, அரபு நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றும் திட்டத்தை புஷ் நிர்வாகம் தீட்டியது. ஈரானுக் கெதிராக அமெரிக்காவால் ஆயுதம் கொடுத்து வளர்க்கப்பட்டு, எட்டு வருடங்கள் ஈரானை அழிக்க யுத்தம் செய்து அனுபவமுள்ள (ஆனால் தோழ்வி கண்ட) , "கெட்டிக்கார அநியாயக் காரன்" (அல்லது : "கெட்டிக்கார முரடன்" , "கெட்டிக்கார பயங்கரவாதி" , "கெட்டிக்கார மடயன்" , "கெட்டிக்கார முட்டாள்" ,"கெட்டிக்கார வெறியன்" ……இக்கருத்துப்பட எப்படி வேண்டுமென்றாலும் கூறலாம்), அப்படியான ஸதாம் ஹுஸைனை குவைத்தை ஆக்கிரமிக்கும்படி வேறு ஆட்கள் மூலம் பின்கதவால் தூண்டினார் அமெரிக்க புஷ். (இது எந்த பத்திரிகையிலோ ஊடகத்திலோ வந்த செய்தியல்ல. எனது சொந்த ஆய்வு. என்றோ ஒரு நாள் இந்த உண்மை வெளி வரும். ஆக்கிரமிப்பு நாடுகள் "மறைமுகமாக" (தண்ணிக்கடியால்) செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் 25 – 50 வருடங்களின் பின்னர் வெளியான சம்பவங்கள் ஏராளம் உண்டு).
குவைத்தை ஸதாம் ஆக்கிரமிக்க வேண்டும். தன்னை ஆக்கிமிப்பாளன் ஸதாமிலிருந்து பாதுகாக்க குவைத் அமெரிக்காவை கெஞ்ச வேண்டும். இறைமையுள்ள ஒரு தந்திர நாட்டை ஆக்கிரமித்தால் அவ்வாக்கிமிப்பை முறியடிக்க மற்ற நாடுகள் உதவலாம் என்ற ஐ.நா. சபையின் சட்டங்களின் அடிப்படையில் , சகல நாடுகளையும் ஒன்றிணைத்து ஸதாமை குவைத்தால் விரட்டி, ஈராக்கை கைப்பற்ற வேண்டும் என்பது புஷ்ஷின் பயங்கர திட்டம்.
உலக யுத்தமாக மாறக்கூடாது என்பதற்காகவும், செலவுகள்  தன் கையை மட்டும் கடிக்கக்கூடாது என்பதற்காகவும், எல்லா நாடுகளையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் புஷ். யுத்தத்தில் பங்கு பற்ற விரும்பாத நாடுகளை (உதாரணமாக ரஷ்யா) அமைதியாக இருக்க வைத்தார். வெளிநாட்டு யுத்தத்தில் இராணுவம் அனுப்பி பங்குபற்ற தனது அரசியல் சட்டம் இடம் கொடுப்பதில்லை என்று ஜப்பான் கூற, அப்படியானால் ஆயிரம் கோடி டொலர் யுத்த செலவாக தரும்படி வற்புறுத்தி எடுத்தார் ஜப்பானிடம். ஆக மொத்தம் முழு உலகையும் தன்வசப்படுத்தி, ஸதாமை குவைத்தால் விரட்டி, அத்துடன் நிற்காமல் , "அரபு நாடுகளை ஆக்கிரமிக்கும் தனது ஸியொனிஸ திட்டத்தை" அமுல் நடாத்தும் முதல் டியாக இராக்கை ஆக்கிரமித்தார் புஷ். அன்று ஆரம்பித்த சிலுவை + யூத (ஸியோனிஸ) யுத்தம் தான் இன்று கட்டார், துருக்கி, ஸவூதி மூலமாக அமெரிக்காவால் , இன்று ட்ரம்பால் முன்னெடுக்கப்படுகிறது.
(இரண்டாம் பகுதியை எதிர்பாருங்கள்)
4.7.2017