Wednesday, June 22, 2016

வஹாபி ISIS ஐ ஆதரிக்கும் இஸ்ரேல் !

வஹாபி ISIS ஐ ஆதரிக்கும் இஸ்ரேல் !
முழு உலகும் அறிந்த ஒரு உண்மை தான் : "தாஇஷ்" என்ற ISIS பயங்கரவாத இயக்கம் "அவ்லியாக்களின் கப்ருகளை தகர்க்க வேண்டும்" என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டுள்ள  வழிகெட்ட வஹாபி இயக்கத்தில் இருந்தே உருவானது என்பது, அது, சாபிஈ, ஹனபி, ஹன்பலி, மாலிக்கி மத்ஹபுகளில் இருந்து உருவாக வில்லை. அது காதிரிய்யா, சாதுலிய்யா, ரிபாஇய்யா, நக்ஷபந்திய்யா தரீக்காக்களில் இருந்து உரவாக வில்லை. இதில் உலகில் யாருக்குமே இரண்டு கருத்து இல்லை. அதனால் தான் ISIS பயங்கரவாதிகள் அரபு நாடுகளில் உள்ள பல அவ்லியாக்கள், ஸஹாபாக்களின் "ஸியாரங்களை" குண்டு வைத்து தகர்த்தது. இது பற்றிய பல செய்திகளை எமது நெட்டில் முன்னர் நாம் தந்துள்ளோம்.
                இந்த பயங்கரவாத வஹாபி ISIS இயக்கத்தை ஸவூதி, கட்டார் என்பன வளர்க்கின்றன என்பதற்கான பல ஆதாரங்களையும் ஏற்னவே நாம் இப்பகுதியில் தந்துள்ளோம். வஹாபியத்தை அமெரிக்காவே பணம் கொடுத்து வளர்த்தது என்று ஹிலரி கிளிண்டன் கூறும் வீடியோவையும் சில வருடங்களக்கு முன்னர் நாம் இப்பகுதியில் தந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
                பல வருடங்களாக ஈரானின் உதவியுடன் ஸிரியாவும் இராக்கும்  வஹாபி ISIS ஐ எதிர்த்துப் போராடி, இப்போது இந்த ரமழான் மாதத்தில் இராக்கின்  கேந்திர மு;ககியத்துவம் மிக்க 'பல்லூஜா' மானிலத்தில் இருந்து ­ISIS பயங்கரவாதிகளை இராக் இராணுவம் விரட்டியடித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்செய்திகளை ஈரான் முப்படைத் தளபதி ஹஸன் பைரோஸாபாதீ கூறுவதை இங்கே நீங்கள் பார்க்கலாம் :
http://www.alalam.ir/news/1831050
                பயங்கரவாத ISIS ஐ உலக நாடுகள் அனைத்தும் இணைந்து பூண்டோடு அழிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறுவதை ஈரான் பத்திரிகை எழதியுள்ளதை கீழே பார்க்கலாம் :
http://www.alalam.ir/news/1831003
                ISIS ஐ இஸ்லாத்தின் விரோதியான இஸ்ரேல் ஆதரிப்பதை இப்போது பாருங்கள். ஈரானின் ஆதரவுடன் ISIS களை அழித்துக் கொண்டிருக்கும் ஸிரியாவின் வெற்றியை விட, ISIS முழு ஸிரியாவையும் கைப்பற்றுவதே இஸ்ரேலுக்கு பாதுகாப்பானது என்றும் , இஸ்ரேல் நேரடியாக உதவி செய்தேனும் ISIS ஐ வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவ உளவு சேவையின் தலைவரான ஹெர்ஸி ஹலவி Herzi Halevy கூறுவதை ( அரபியில் RT = Rusia Today ) பத்திரிகை கூறுவதையும்,
 அதன் ஆங்கிலச் செய்தியை Anti War.Com என்ற பத்திரிகையிலும் பாருங்கள் :
                இவற்றிலிருந்து உண்மையைத் தேடி சிந்திப்பவர்கள் அறிய வேண்டியது என்ன? வஹாபியத்தையும், அதன் பயங்கரவாத ISIS ஐயும் அமெரிக்கா, இஸ்ரேல் முதலான நாடுகள் வளர்க்கின்றன. அரபு நாடுகளை அழித்து, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வஹாபியத்தே உதவுகின்றது என்ற உண்மை அம்பலமாகின்றது அல்லவா?
                எனவே "குர்ஆன் ஹதீஸ்" என்ற போலி மாய வலையில் சிக்கி, முஸ்லிம் நாடுகளை அழித்து, இஸ்லாத்தை அழித்து, இஸ்ரேலை வளர்க்கும் அநியாயத்துக்கு முஸ்லிம் இளைஞர்கள் பலியாக வேண்டாம்.
22.6.2016

Tuesday, June 14, 2016

அமெரிக்க யூத மதகுரு அதிரடி உரை !

அமெரிக்க யூத மதகுரு அதிரடி உரை !
http://www.alalam.ir/news/1827542
அமெரிக்க யூத மதகுரு மைக்கல் லெர்னர் சென்ற வெள்ளிக்கிழமை உலக அதிபார குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியின் இறுதிக் கிரியைகளின் போது , இதுவரை எவரும் பேசாத விதத்தில் அமெரிக்காவைத் தாக்கியும், முகம்மது அலியின் அரசியல் துணிவைப் போற்றியும், இஸ்ரேல் அரசாங்கத்தை தாக்கியும் ஒரே மேடையில் பேசி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரின் பேச்சின் சாரம் இது :-
1- முகம்மது அலியின் மரணத்தின் பின்பும் கூட உலகத் தலைவர்கள் அவரின் முன்னைய பேச்சைக் கேட்டு அதனைச் செயல்படுத்துவது அவசியம். அவர் அநியாயமான வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். அதே போன்று இன்றும் அமெரிக்கா "பயங்கரவாதத்தை அழிப்பது" என்ற போர்வையில் ஆளில்லா யுத்த விமானங்கள் மூலம் அப்பாவிப் பொது மக்களைக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும்.
2- சுதந்திரமான பலஸ்தீன் நாடு உரவாக்கப்பட வேண்டும்.
3- இன்றும் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு அநாதரவாக துன்புருத்தப்படும் நிலை மாற வேண்டும்.
4- முகம்மது அலியின் வாழ்க்கையில் குத்துச்சண்டை வீரர் என்ற பிரபலமான பட்டத்துக்கு அப்பால் மாபெரும் அரசியல் போராட்டம் ஒன்றும் இருந்தது. அநியாயமாக அமெரக்கா நடாத்திய வியட்நாம் யுத்தத்துக்கு அவரை அனுப்ப முயன்ற போது , துணிவுடன் " இல்லை ! நான் போக மாட்டேன்" என்று விரக் குரல் கொடுத்தார்.
5- அந்த வீர முகம்மது அலியாக நாம் இன்று இருந்து செயல்படுவதே அவரை நாம் இன்று மதிக்க வேண்டிய முறையாகும். உலகத் தலைவர்களே அவரைப் போன்று குரல் கொடுங்கள். அநீதிக்கு வழிப்படுவதை எதிர்த்து நில்லுங்கள்.
6- ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் பயங்கரவாதத்துக்காக எல்லா முஸ்லிம்களையும் குறை சொல்லும் எந்தத் தலைவரையும் நாம் மன்னிக்க மாட்டோம்.
7- இந்நாட்டின் 80 % ஆன பொருளாதார வளத்தை தம்மிடம் வைத்துள்ளவர்கள் அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ( இது அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிட முன்வந்துள்ள இஸ்லாமிய விரோதியான ட்ராம்ப் போன்றவர்களைக் குறியாக வைத்து பேசப்பட்டதாகும் )
8- பயங்கரவாதத்தை தாமே உபயோகித்துக்கொண்டு, அப்பாவியான பொதுமக்களைப்பார்த்து "பயங்கரவாதம் வேண்டாம்" என்று கூச்சலிடும் அரசியல் தலைவர்களுக்கு கூறுங்கள் :
விமானத் தாக்குதல் மூலமும், மற்ற எல்லாவிதமான யுத்தங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்களுடைய இராணுவத் தலங்களை மூடி விடுங்கள். அவற்றில் உள்ள ராணுவ வீரர்களை அவர்களின் வீடுகளுக்கு (சுதந்திரமாக) அனுப்பி விடுங்கள்.
9- துருக்கி ஆட்சியாளருக்க கூறுங்கள் : அங்குள்ள குர்திஷ் மக்களைக் கொலை செய்வதை நிறுத்துங்கள்.
10- இஸ்ரேல் பிரதமருக்கு கூறுங்கள் : பலஸ்தீன் மேற்குக் கரைப்பகுதியை ஆக்கிரமித்திருப்பதை விட்டும் இஸ்ரேல் வாபஸ் வாங்கிக் கொள்வதும், சுதந்திரமான பலஸ்தீன் நாடு உருவாக உதவி செய்வதன் மூலம் மட்டுமே இஸ்ரேலின் பாதுகாப்பு நிலைநாட்டப்பட முடியும்.
11- அமெரிக்காவின் பாதுகாப்பு தங்கியிருப்பது "உலகின் சக்திமிக்க நாடு" என்ற பெயரில் அல்ல. மாறாக, "மனிதாபிமானமுள்ள, தாராளமாக மற்ற நாடுகளுக்கு உதவும் நாடு" என்ற பெயர் எடுப்பதில்தான் அமெரிக்காவின் பாதுகாப்பு தங்கியுள்ளது.
12- வறுமையையும், தங்குமிடம் இல்லாமையையும், பட்டினியையும், பாரபட்சத்தையும் அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் ஒரே நேரத்தில் நிரந்தரமாக ஒழிப்பதற்காக, உள்நாட்டிலும் உலக மட்டத்திலும் ஒரு தீர்வுத் திட்டத்தை நாம் ஆரம்பிப்பது அவசியமாகும்.
                இவ்வாறு அமெரிக்க யூதர்களின் பிரதான தலைவர்களில் ஒருவரான மைக்கல் லெர்னர் , முகம்மது அலியின் இரங்கல் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
குறிப்பு : வருட இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் விரோதியான டொனால்ட் ட்ரம்ப் ஐ எதிர்த்து, முஸ்லிம்களின் வாக்குகளை ஹிலரி கிளிண்டன் பெறவும், முஸ்லிம்களை எதிர்ப்பதன் எதிரொலியாக அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாறினால் அமெரிக்கர்களுக்கு பெரும் ஆபத்து என்பதை உணர்த்தி அமெரிக்க வெள்ளையின மக்களின் ஆதரவையும் திரட்டும் நோக்குகள் இருந்தாலும்கூட, இவரின் இந்தப் பேச்சால் அமெரிக்க முஸ்லிம்கள் ஓரளவு ஆறுதலடைய முடியும் என்பதுடன், முகம்மது அலியின் புகழை உலகெங்கும் மேலும் இது உயர்த்தும் என்பதையும் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ் . )
13.6.2016