Tuesday, July 28, 2015

Cartoon - தாஇஷ்

ஒரு நீண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள் من عندهم تخرج الفتنة وفيهم تعود ........ என்பதாக. அதாவது கடைசிகால வழிகேடு (கவாரிஜ் வஹாபியத்து) அதை உருவாக்குபவர்களை நோக்கியே மீளும் (அவர்களையே தாக்கும்) என்பதாக. (அல் பைஹக்கீ, மிஷ்காத் பக்கம் 38 )

அதே போன்று வஹாபியத்தை வளர்த்த துருக்கியை அதே வஹாபியத்து (தாஇஷ் என்ற IS வஹாபிகள்) கடந்தவாரம் தாக்கியள்ளனர். வஹாபியத்தை ஆரம் முதலே வளர்த்த ஸவூதியையும் இன்று அது தாக்க ஆரம்பித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி உர்துகான் ஒரு பக்கம் "தாஇஷுக்கு உதவுங்கள்" என்றும் மறு பக்கம் தாஇஷை அழியங்கள் என்றும் கூறும் கார்டூனையும், தன்னை வளர்த்த துருக்கி ஜனாதிபதியையே விழுங்க முனையும் தாஇஷின் கார்டூனையும் இதோ பாருங்கள்,

Thursday, July 23, 2015

மிகப் பழைய குர்ஆன் பிரதி

ஹிஜ்ரி 30 வருடத்துக்கு உட்பட்ட காலத்தில் ( ஸஹாபாக்கள் காலத்தில் ) எழுதப்பட்டது என்று கருதப்படக்கூடிய உலகின் மிகப் பழைய திரு குர்ஆன் பிரதி ஒன்று பிரித்தானியாவில் பர்மிங்ஹாம் பல்கலைக் கலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
இரசாயன பரிசோதனையின் முடிவின்படி அது 1370 வருட காலத்தைக் கடந்தது என்று தெரிய வந்துள்ளது. மிகச் சரியான வருடம் ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் உலகின் மிகப் பழைய குர்ஆன் பிரதி இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
100 வருடங்களுக்கு மேலாக இந்தக் கர்ஆன் பிரதி பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் இதன் முக்கியத்துவம் யாராலும் உணரப்படாத நிலையில் இருந்துள்ளது

மிகப் பழைய குர்ஆன் பிரதி

ஹிஜ்ரி 30 வருடத்துக்கு உட்பட்ட காலத்தில் (ஸஹாபாக்கள் காலத்தில் ) எழுதப்பட்டது என்று கருதப்படக்கூடிய உலகின் மிகப் பழைய திரு குர்ஆன் பிரதி ஒன்று பிரித்தானியாவில் பர்மிங்ஹாம் பல்கலைக் கலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இரசாயன பரிசோதனையின் முடிவின்படி அது 1370 வருட காலத்தைக் கடந்தது என்று தெரிய வந்துள்ளது. மிகச் சரியான வருடம் ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் உலகின் மிகப் பழைய குர்ஆன் பிரதி இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

100 வருடங்களுக்கு மேலாக இந்தக் கர்ஆன் பிரதி பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் இதன் முக்கியத்துவம் யாராலும் உணரப்படாத நிலையில் இருந்துள்ளது

Tuesday, July 21, 2015

நான் மட்டுமா கூறுகிறேன் !

எமது தூரதிருஷ்டிக்கு உலகளாவிய வெற்றி !

அதிகம் தலைவர்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.

அதிகம் உலமாக்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.

பெரும்பாலும் நாம் பிறக்க முன்னர், அல்லது சிறு வயதிலேயே எமது தகப்பனார் வஹாபியத்துக்கு எதிரான முக்கிய ஒரு கிதாபான 'ஷவாஹிதுல் ஹக்' என்ற கிதாபை தருவித்து படித்து வைத்திருந்தார்.

எனக்கு தகப்பனார் அதன் முக்கியத்துவத்தைக் கூறி அதனைத் தந்தார்.

வஹாபியத்தை முறியடித்து தக்கியாவையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தையும் ஹயாத்தாக்கத் தேவையான மேற்படிப்பைத் தேட வேண்டும் என்ற இலட்சியம் வைத்தே குவைத் சென்றேன்.

வஹாபியத்து பற்றி எனக்குத் தேவையான சகல தகவல்களையும் ஆதாரங்களையும் தரக்கூடிய பேரறிஞர்கள் சிலரை கருணையுள்ள ரஹ்மான் எனக்காக குவைத்தில் தயார் படுத்தி வைத்திருந்தான். அவர்களுள் ஸெய்யித் யூஸுப் அர்ரிபாஈ, உஸ்தாது சம்சுத்தீன், உஸ்தாது அப்துல் அஸீஸ் ஹாஷிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

நாம் 1977 அளவில் குவைத் யுனிவர்ஸிட்டியில் படிக்கும் போதே, குவைத்தில் வஹாபியத்து தந்திரமாக கண்டறிந்து, அரசாங்கம் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லையே என்று கவலைப்பட்டோம். எமது அறையில் நண்பர்களிடம் தினமும் போல் இது பற்றி கதைப்பேன்.

1984 இல் எகிப்தில் வஹாபிக்கும் அல் அஸ்ஹர் உலமாக்களுக்கும் இடையில் நடந்த விவாதத்தின் வீடியோவைப் பார்த்து , இவ்வளவு தூரம் வஹாபியத்து பரவும் வரை அஸ்ஹரி உலமாக்கள் என்ன செய்தார்கள் என்று ஏங்கினேன். மொலிது, மீலாது கொண்டாடினால், பெயரளவில் சில பயானகள் பண்ணினால் வஹாபியத்தை அழிக்கலாம் இஸ்லாத்தை ஹயாத்தாக்கலாம் என்று அஸ்ஹரிகள் தப்புக்கணக்குப் போட்டிருப்பதை எண்ணி வேதனைப் பட்டேன்.

வஹாபியத்தின் அடி நுனி எல்லாம் உலமாக்கள் மூலம் படிக்க உதவி செய்து, அதனை மடக்கும் கலையையும் அல்லாஹ் எனக்குத் தந்தான். அதன்படி இது வரை சிறிய பெரிய விவாதங்கள் சுமார் 22 இல் கலந்துகொண்டு, அதிரடி முறையில் சில நிமிடங்களிலேயே வஹாபித் தலைவர்களை மடக்கியதை ஏராளம் பேர் கண்டார்கள். அது மட்டுமல்ல, இலங்கையில் :

  • ஓர் ஊரில் வஹாபி பயானை முற்றாக நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் யாருமே வஹாபியத்தில் சேரவில்லை என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் வஹாபித் தலைவர்கள் பலர் தரீக்காவில் சேர்ந்தார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் இளைஞர்கள் 24 மணித்தியாலம் வஹாபி எதிர்ப்பு போட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் சகல வீடுகளிலும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது என்றால் அது எமது 3 வருட காலமே !
  • இலங்கையின் எந்தப் பகுதியில் வஹாபி வளர்கிறது என்றாலும் அங்கு போய் ஒரு பயானிலேயே வஹாபி வளர்ச்சியை நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே !

இப்படியாக இலங்கை அல்ல உலக சாதனைகள் ஏராளம் நாம் சாதித்துகொண்டு வரும் போது தான், பள்ளத் தக்கியாவில் பின்கதவால் நுழைந்து பதவியைப் பிடித்த தப்லீக் காரன் அஸ்ஸமீன் என்ற இஸ்லாத்தின் துரோகி "ராஜசதி" மூலம் எமது பதவியைப் பறித்து, இலங்கை வரலாறு காணாத மாபெரும் வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை 1999 இல் அழித்தார். அன்று முதல் வஹாபியத்து மிக வேகமாக வளர்கிறது.

நாம் 15 வருடங்களுக்கு முன்னரே வஹாபியத்தை அழித்துக் காட்டினோம். ஆனால் எகிப்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஏராளம் அஸ்ஹரி உலமாக்களுக்கு ஜனாதிபதி ஸிஸி கொடுத்த வஹாபியத்தை அழிக்கும் பொறுப்பை உரிய முறையில் அஸ்ஹரிகள் செய்யவில்லை என்று ஜனாதிபதி ஸிஸியும் ஊடகங்களும் குற்றம் சுமத்துவதை எகிப்தின் ( அரபுலகின்) முக்கிய பத்திரிகையான அல் அஹ்ராம் குறிப்பிடுவதை இதோ பாருங்கள். (ஆம் பாருங்கள் என்று தான் கூற முடியும். பள்ளத் தக்கியா சதியால் நாம் தனிப்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக, இதனை மொழிபெயர்க்க நேரமில்லாததால், "படியுங்கள்" என்று கூற முடியாமல் இருப்பதையிட்டு வருந்துகிறோம்)

நாம் உரிய பதவி இல்லாமல், போதிய சம்பளம் இல்லாமல் 15 வருடங்களுக்கு முன் சாதித்ததை, இப்போது அஸ்ஹரி உலமாக்கள் பெரும் பதவிகள், கொழுத்த சம்பளம், பொலிஸ், இராணுவ உதவிகள் இருந்தும் செய்ய முடியாது என்று (நாம் அல்ல) அவர்களே கூறுகிறார்கள் என்றால், நாசகார அஸ்ஸமீன் சதி மூலம் அழித்த எமது " வஹாபி எதிர்ப்பு போராட்டத்தின்" பெறுமதி தான் என்ன ?

ஜோக்

மகாராணிக்கு பூ கொடுத்த சிறுமிக்கு கிடைத்தது அடி ! ( வீடியோ )

 

تلقت طفلة عمرها 6 سنوات، صفعة بطعم الضربة من أسفل وجهها إلى أعلاه تقريبا، بعد أن اقتربت من ملكة بريطانيا، "إليزابيث الثانية"، وأهدتها باقة من الورد، وبدلا من أن تعو...

பணத்துடன் ஓடும் தாஇஷ் IS

ஒவ்வொரு நாட்டிலும் ஜிஹாத், தஃவத் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான பொது மக்கள் பணத்தைத் திரட்டிய பல தாஇஷ் தாலைவர்கள் "நாடாவது கிலாபத்தாவது" என்று கூறிவிட்டு, பணத்தைச் சுருட்டிக்கொண்டு துருக்கி முதலான நாடுகளுக்கு ஓடிவிட்டனர். பாவம் வஹாபியை நம்பி பணத்தை வாரிக் கொடுத்த பொது மக்கள் பாடு !!!


பிறருக்கு வெட்டிய குழியில்

பிறருக்கு வெட்டிய குழியில் தானே விழல்.

வளர்த்த கடா மார்பில் பாய்தல்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

அரபியில் : إنقلب السحر على الساخر ( சூனியக்காரனுக்கே சூனியம் திரும்பியது).

துருக்கி இதுவரை காலமும் பலவிதமான வஹாபி இயக்கங்களை வளர்த்தது. இப்போது வஹாபி தாஇஷ் துருக்கியில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி, 30 பேருக்கு மேல் படுகொலை. 100 பேருக்கு மேல் படுகாயம்.

வஹாபியத்தை வளர்க்க உதவுவோர் அனைவரையும் அது அழிக்கும்.

கடைசிகால பித்னாவை (கவாரிஜ் வஹாபியத்தை) வளர்ப்பவர்கள் அளவிலேயே அது மீளும் என்பதாக ஒரு நபிமொழி கூறுகிறது.


இதே நிலை தான் இன்று ஸவூதிக்கும் ஏற்பட்டுள்ளது.

Thursday, July 16, 2015

வெள்ளி ஈதுல் பித்ர்

நாளை 17.7.2015 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் எடுக்கும் நாடுகள் :-
கட்டார், குவைத், ஓமான், எமிரேட்ஸ், ஜோர்தான், மலேசியா, இந்தோனேசியா, துருக்கி, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, அல்கரம், உக்ரேய்ன், ஸவூதி என்று 'அர்ரியாழ்' என்ற ஸவூதி பத்திரிகை அறிவித்துள்ளது.

Sunday, July 12, 2015

வஹாபியத்தை மடக்காவிட்டால் !

இராக்கில் அப்பாவி முஸ்லிம்களை நாய் கொல்வது போன்று கூட்டம் கூட்டமாக கொன்று தீர்க்கிறார்கள் கவாரிஜ் வஹாபிகள். வீடியோ

அந்த வஹாபிகள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தவர்களா ? இல்லை, வேறு கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்களா ? இல்லவேயில்லை.

ஸுன்னத்து வல்ஜமாஅத்து மத்ஹபு தரீக்காக்களில் இருந்தவர்கள் தான். அரபு நாட்டு அதிகமான தலைவர்களினதும், உலமாக்களினதும் கவனயீனத்தாலும், வஹாபியத்தின் பயங்கரத்தை ஹதீஸ்கள்கள் மூலம் அறியாமலும், வஹாபிய்தை மடக்க ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்காமலும் இருந்ததால் தான் வஹாபித்தலைவர்களின் கவர்ச்சிப் பிர்சசாரங்களால் கவரப்பட்டு வஹாபியாக மாறி, இன்று மனித இனத்தையே படுகொலை செய்யும் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்.

வஹாபியத்தை இப்போதே மடக்காவிட்டால் இதே நிலைதான் இலங்கையிலும் எதிர்காலத்தில் நடக்கும். வஹாபிய்தைப் பற்றி 30 - 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, வஹாபியத்தை விவாதம் மூலமும் பலவிதமான செயற்திட்டங்கள் மூலமும் மடக்கி இந்நாட்டில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் கையோங்கச் செய்ய வந்தவர்களை பதவியாசை பொறாமை காரணமாக சதிகாரர்கள் ஓரம் கட்டியதாலும், அந்த சதிகாரர்களை சுயநலமிகள் ஆதரிப்பதாலும் இலங்கையிலும் நாளுக்கு நாள் வஹாபியத்து வேகமாக வளர்கின்றதை எவராலும் மறுக்க முடியாது.

இப்படியாக வளறும் வஹாபிகள் அவர்களின் அரபு நாட்டு எஜமானர்களின் கட்டளை வரும் போது பயங்கரவாதிகளாக (அவர்களின் பார்வையில் முஜாஹிதீன்களாக) மாறி, இலங்கை முஸ்லிம்களை கொன்று குவிக்கும் காலம் ஒன்று வந்தால், இன்று தரீக்கா என்ற பெயரில் இருந்துகொண்டு வஹாபியத்து வளர மறைமுகமாக காரணமாக இருப்பவர்களே அதற்கு பொறுப்பு. வஹாபியத்தை மடக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு ஆதரவு தராமல், அவர்களை எதிர்க்கும் (பள்ளத்தக்கியா) சதிகார்களை ஆதரிப்பவர்களும், வஹாபியத்தை மடக்கும் கலை தெரியாமல் வெறும் கவர்ச்சியாக பயான் பண்ணி தமது பொக்கட்டை நிரப்பிக்கொண்டு போகும் சில மௌலவிமாரை ஆதரிப்பவர்களுமே இலங்கையில் அப்படியொரு பயங்கர யுகம் ஏற்படுவதற்கு பொறுப்பு.

வஹாபியத்தை பூண்டோடு அழிக்கும்படி பல ஹதீஸ்கள் கட்டளையிட்டுக்கொண்டிருக்கும் போது, எமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களிலும் ( 1996, 97, 98 ) நாம் மிகச்சிறப்பான முறையில் வஹாபியத்தை மடக்கி காட்டியிருக்கும் போது, சதிகார்களுக்கு வெற்றி கொடுத்து எமது பதவி பறிக்கப்பட்ட பின்னர்தான் கஹடோவிடாவிலும் மற்ற இடங்களிலும் வஹாபியத்து வேகமாக பரவி வரவதை அனைவரும் அறிவர். حسبنا الله ونعم الوكيل

Saturday, July 11, 2015

குவைத்தின் முன்மாதிரி

26.6.2015 வெள்ளிக்கிழமை குவைத்தில் சீஆக்களின் மஸ்ஜித் ஆகிய இமாம் ஜஃபர் ஸாதிக் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் நோன்பு வைத்த நிலையில் புனிதமான ஜிம்ஆவுக்கு வந்திருந்த போது இக்காலகவாரிஜ்களான IS வஹாபிகள் நடாத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் பற்றி நீங்கள் பல ஊடகங்களிலும் இந்த நெட்டிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

ஆனால் அந்த வஹாபி தற்கொலைத் தாக்குதல் அரபுலகில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும் சீஆக்கள் ஸுன்னிகளை எதிர்ப்பதும், ஸுன்னிகள் சீஆக்களை எதிர்ப்பதுமாகவே அரபுலக அரசியல் இருந்தது. அரபு நாடுகளில் ஈரான் தலையீடு செய்வதும், ஈரானின் ஆதிக்கத்தை அரபு நாடுகள் எதிர்ப்பதும் வழக்கம். ஆனால் குவைத்தில் வஹாபியின் 

தற்கொலைத்தாக்குதலுக்குப் பிறகு குவைத்தில் உள்ள சகல ஸுன்னிகளும் சீஆக்களும் ஒற்றுமையாக ஒரே பள்ளயில் தொழுவதும் பழைய குரோதங்களை மறந்து நெருங்கிப்பழகுவதும் குவைத் அரபுலகுக்கு காட்டியுள்ள மிக முக்கியமான முன்மாதிரியாகும். இதுவரை குவைத்தின் அரசியலை பலமாக சாடி வந்த லெபனான் சீஆ தலைவர் ஹிஸ்புல்லாஹ் இயக்கத் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் குவைத்தின் இந்த அழகான முணிகரமான முன்மாதிரியை வாயார வாழ்த்தி, இப்படியான ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படியான ஸுன்னி சீஆ ஒற்றுமை சகல அரபு நாடுகளிலும் ஏற்பட்டால்  முஸ்லிம் உலகிலிருந்தே முழு மனித இனத்தின் எதிரியான வஹாபியத்தை அழிக்க முடியும். இன்ஷா அல்லாஹ். சீஆத் தலைவர் குவைத்தின் முன்மாதிரியை வெகுவாகப் பாராட்டும் வீடியோ அரபியில் இதோ!

சென்றவாரம் குவைத் மஸ்ஜித் கபீரில் மன்னர் அமைச்சர்கள் உட்பட ஸுன்னி சீஆக்கள் ஒற்றுமையாக ஜும்ஆ தொழல் :-

(பள்ளத் தக்கியா சதி நடந்தில்லாவிட்டால் இப்படியான ஏராளம் அரபு, ஆங்கில உலக முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை எமது வளங்களைப் பயன்படுத்தி நாம் தமிழ் உலகுக்குத் தந்திருக்க முடியும் அல்லவா? புகாரித் தக்கியாவின் மனித வளங்கள் பதவி மோகம், சுயநலம், மூட பக்தி காரணமாக வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றன. حسبنا الله ونعم الوكيل )