Saturday, December 27, 2014

தற்கொலை குண்டு

(ஆங்கிலம்- வீடியோ)

இது தான் வஹாபியின் "குர்ஆன்ஹதீஸ்" !!!

பலாத்காரமாக சிறுமியை தற்கொலை குண்டுதாரியாக்கும் நைஜிரிய "போகோஹராம்" வஹாபி கவாரிஜ்கள் !

ஆபிரிக்காவின் வளமான நாடான நைஜீரியாவில் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்காக கடந்த 5 வருடங்களாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து வரும் ஒரு வஹாபி இயக்கம் தான் "போகோஹராம்" இயக்கம். நாட்டுக்கு நாடு வித்தியாசமான பெயர்கள். தலைவருக்கு தலைவர் வித்தியாசமான பெயர்கள். ஒரு பெயர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் போது இன்னொரு பெயரில் வெளிவருவது வஹாபிகளின் தந்திரம் (எமது நாட்டு நடப்பும் இது தான்).

13 வயது சிறுமியான ஸஹ்ராவை அவளின் தந்தையே வஹாபி இயக்கத்துக்கு ஒப்படைக்கிறார். அவளுடன் இன்னும் இரண்டு இளம் யுவதிகள். உடலில் தற்கொலை குண்டுகளைக் கட்டிக்கொண்டு போய், சனநெரிசலான நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான 'கானோ' என்ற இடத்தில் உள்ள மார்கட்டில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும், அதற்கு இணங்காவிட்டால் அவர்களை உயிருடன் புதைப்பதாக வஹாபிகள் பயமுறுத்தினார்கள். மற்ற இரண்டு யுவதிகளும் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டனர். 2014 டிசம்பர் 10 இல் நடந்த அந்த தற்கொலைத் தாக்குதலில் 4 பேர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இந்த அநியாயபடுபாதகச் செயலைச் செய்ய 13 வயது ஸஹ்ரா விரும்பவில்லை. ஆனால் மற்ற யுவதிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவளுக்கும் காயமேற்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளைப் பொலிஸார் கைது செய்து, பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்த போதே அவள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளாள்.

ஆம் ! ஆரம்பத்தில் "குர்ஆன் ஹதீஸ்", "சிர்க்கு பித்அத்து" என்று சிந்தனா சக்தியற்ற அப்பாவி பாமர முஸ்லிம்களை வசப்படுத்தி, ஆள் சேர்த்து, தமது வஹாபி இயக்கம் போதியளவு வளர்ச்சிடைந்த பின்னர், அடுத்த கட்டமாக, வஹாபிகளின் வேலை முஸ்லிம்களின் பள்ளிகளை கைப்பற்றுவது, உலமாக்களைத் தாக்குவது, நபிமார்களினதும் ஸஹாபாக்கள் அவ்லியாக்களினதும் கப்ரு (ஸியாரங்களை) உடைத்து தகர்த்தல், நாடுகளைப் பிடிக்க தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தல். இவற்றையெல்லாம் அறியாததால் தான் இளைஞர்கள் வஹாபிய இயக்கங்களில் சேருகிறார்கள். தரீக்கா என்ற பெயரில் உள்ள சில போலிகளும் இலங்கையிலும் வஹாபியத்து வளர உதவி செய்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கடைசி காலத்தில் கொலைகள் அதிகரிக்கும். ஏன் கொலை செய்தோம் என்பது கொலை செய்பருக்கு தெரியாது. ஏன் கொலை செய்யப்பட்டோம் என்பது கொலை செய்யப்பட்டவருக்கு தெரியாது என்பதாக. அந்தக் காலத்தைத்தான் இப்போது தவ்ஹீது, இக்வான். ஸலபி என்ற பெயர்களுக்குள் மறைந்துகொண்டு கவாரிஜ் வஹாபிகள் உலகில் உருவாக்கியிருக்கிறார்கள்.
A 13-year-old girl has said she was made to wear a bomb belt and taken to a market in Nigeria by Boko Haram extremists but refused to detonate the device.


Preview by Yahoo

உலக வலம்

26.12.2014
விவசாயப் புரட்சி !
எமது நாட்டில் ஒரு இலை கூட விடாமல் கோவா அறுவடை செய்கிறார்கள் அல்லவா? ஐரோப்பிய நாடுகளில் ? வேகமா வீணா ?
எமது நாட்டில் ஒவ்வொரு காயாக தோடம் பழம் பறிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் எப்படித்  தெரியுமா?
கட்டாரில் கோழி முட்டை முதல் சந்தையில் கோழியிறைச்சி வரை பார்க்க நேரம் இருக்கிறதா?

Friday, December 19, 2014

America Behind ISIS

அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் ஸிரியாவிலும், ஈராக்கிலும் தினமும் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் ISIS (தாஇஷ்) என்ற அதி தீவிர கவாரிஜ் வஹாபிகளுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விமானத் தாக்குதல் நடாத்துகின்றன. ISISஐ அழிக்க அமெரிக்கா முயல்கின்றது என்றெல்லாம் பத்திரிகைகளிலும், வானொலி. டிவி யிலும் பார்க்கிறோம் அல்லவா?

அமெரிக்காவின் நோக்கம் ISIS என்ற வஹாபி இயக்கத்தை அழிப்பதல்ல. மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடு செய்யவும், அதன் மூலம் மத்திய கிழக்கின் சகல இராணுவங்களையும் அழிக்கவும், அங்கு நிரந்தரமாக காலூன்றி பெற்றோல் வளத்தை சூரையாடவும் வேண்டும் என்ற நோக்கில், அதற்கு ஒரு நொண்டிச்சாட்டாக மேற்கு நாடுகளே ஆயுதம் கொடுத்து, உண்மையான இஸ்லாத்தின் எதிரிகளான சில வஹாபி நாடுகள் வளர்த்த இயக்கமே இந்த ISIS என்பது அரபு நாடுகளில் பரவலாக யாரும் அறிந்த உண்மை.

இத்தனை மாதங்களாக அமெரிக்கா தாக்கியும் இன்னும் ISIS பிடித்த இடங்களை விட்டும் அவர்களை விரட்ட அமெரிக்காவால் முடியவில்லை. மாறாக ஈராக். ஸிரிய ராணுவங்களே மும்முரமாகப் போராடி ISIS பிடித்த இடங்களை மீட்டிக் கொண்டு வருகின்றன.

ISISஐ தாக்குவதாக வெளி உலகத்துக் நடித்துக் காட்டும் அமெரிக்கா, உண்மையில் ISISக்கு உதவியாகவும், ஆறுதலாகவுமே செயல்படுகின்றது என்பதையே 'அல் ஆலம்' என்ற ஈரான் பத்திரிகை இப்படிச் சித்தரித்துள்ளது.Tuesday, December 16, 2014

அல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்!!

ISIS வஹாபிகள் உருவாக ஸுன்னி உலமாக்களே காரணம்!

அல் அஸ்ஹரின் அசமந்தப் போக்கே கவாரிஜ் வஹாபி ISIS உருவாகக் காரணம் என்பதை உறுதியாக நிறுவுகிறார் எகிப்தைச் சேர்ந்த அறிஞர் அப்துல் முஹ்ஸின் ஸலாமா என்பவர். (நாசகாரிகளின் சதி இல்லாவிட்டால், இப்படியான ஏராளம் ஆக்கங்களை மொழிபெயர்க்க சில மௌலவிமார்களை நியமித்து ஏற்பாடு செய்யலாம்.)எகிப்து மதவிவகார அமைச்சும், ஸாதாத்து மார்களும், ஸூபியாக்களும் (தரீக்காக்கள்) இணைந்து வஹாபி வழிகேட்டைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரித்து விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்களாம். நாம் 1996 இல் "வஹாபி எதிர்ப்பு போராட்டம்" என்ற பெயரில் (ஸமீன்நியாஸின் சதி வரை) மூன்று வருடங்கள் செய்த வேலையை 18 வருடங்களின் பின்னர் இப்போது தான் அல் அஸ்ஹர் உலமாக்கள் செய்யப் போகிறார்கள். (இது நாம் பெருமைக்காகவோ யாரையும் இழிவு படுத்தவோ கூறுவதல்ல. மாறாக ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் விரோதிகள் எப்படிப்பட்ட அநியாயத்தை இஸ்லாத்துக்கு செய்திருக்கிறார்கள் என்பதையும், நாம் சிறு பிள்ளைத் தனமாக அந்த நாசகாரிகளை எதிர்க்கவில்லை, அவர்களுடன் கஹடோவிட முஸ்லிம்கள் சேர்ந்து தாமும் நாச வேலைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகக் கூடாது என்ற சமூகத்தின் மீதுள்ள நல்லெண்ணத்தின் காரணமாகவும், அவர்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே "துட்டனைக் கண்டால் தூர விலகு" என்ற வாக்குக்கு ஏற்ப அடிக்கடி எழுதுகிறோம்.

எகிப்து அவ்காப், அஷ்ராப், ஸூபிய்யா இப்போது தான் வஹாபி எதிர்ப்பு ஆரம்பிக்கிறார்கள் :-


(இப்படி நான் இந்தச் செய்திக்கு முன்னர் கூறினால், பள்ளத் தக்கியா சதிகாரரும், உலக அறிவு இல்லாதவர்களும் என்னுடன் பழகாதவர்களும் என்ன கூறுவார்கள் தெரியுமா ? (அதை நான் இங்கு கூற விரும்ப வில்லை. உங்களுக்கே தெரியும்).

1960 களின் இறுதிப் பகுதியில் கஹடோவிடாவில் வஹாபியத்து பரவ ஆரம்பித்த போது, புகாரித் தக்கியாவில் எமது தகப்பனாரும், பள்ளியில் கனம் அல் ஹாஜ் நஈம் ஆலிம் அவர்களும், காலியில் அப்துர் ரஹ்மான் ஆலிமும், காலி, வெலிகமையைச் சேர்ந்த இன்னும் பல உலமாக்களும் அந்த வஹாபியத்தை எதிர்த்து போராடினார்கள்.

"வஹாபியத்தின் வழிகேட்டை மக்களுக்கு நவீன, தத்துவ சாஸ்திர அடிப்படையில் விளக்கி, முஸ்லிம்களின் ஈமானைப் பாதுகாக்க வேண்டும். வஹாபியத்தை விவாதத்தில் மடக்கி தோற்கடிக்க வேண்டும்" என்ற ஆவலின் வித்து அப்போதே என் மனதில் முளைவிட ஆரம்பித்தது.

பாடசாலையில் படிக்கும் போதே துருக்கிக்கு எழுதி தஹ்லான் இமாம் அவர்கள் எழுதிய الدرر السنية போன்ற கிதாபுகளை (அரபு, ஆங்கிலம்) வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஹாபிய்யத்துக்கு எதிராக மிக விரிவாக இமாம் யூஸுப் அந்நபஹானி அவர்கள் எழுதிய شواهد الحق ("சவாஹிதுல் ஹக்கு" சத்தியத்தின் அத்தாட்சிகள்) என்ற கிதாபை எவ்வளவோ காலத்துக்கு முன்னரே எமது தந்தையார் அவர்கள் வரவழைத்திருந்தார். அதனை எனக்குத் தந்து "இது வஹாபி பித்அத்துக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உள்ள கிதாபு. இதனை நாயகமாங்களிடமும் (செய்கு முகம்மது நாயகம்) கொடுத்து அவர்களின் கையால் எடுத்து பரக்கத்து பெற்றுக் கொள்ளவும்" என்று கூறினார். அவ்வாறே செய்கு முகம்மது நாயகம் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் துஆச் செய்து தந்தார்கள். 

வஹாபியத்தை மடக்கி தக்கியாவை ஹயாத்தாக்க அவசியமான மேலதிக கல்வியைப் பெற வேண்டும் என்ற பெரும் இலட்சியத்துடன் குவைத் சென்றேன். உஸ்தாத் அப்துல் அஸஸ் ஹாஷிம், ஸையித் யூஸுப் அல் ரிபாஈ, உஸ்தாத் ஷம்ஷுத்தீன் ஆகிய பேரறிஞர்கள் ஊடாக வஹாபியத்தை விவாதத்தில் மடக்கக் கூடிய அறிவை அல்லாஹு தஆலா தந்தான்.

குவைத்தில் இருந்த 20 வருட காலமும் எமது அறையில் உள்ள எமது ஊரவர்களிடம் வஹாபியத்துக்கு எதிராக நான் கதைக்காத நாளே இல்லை என்னுமளவுக்கு அத்துறையில் மூழ்யிருந்தேன். வஹாபியத்து அரபு நாடுகளில் மிக வேகமாகப் பரவுவதையும், அரபு ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் உலக சொகுசு வாழ்க்கையில் மூழ்கியிருப்பது பற்றியும், எப்போதோ ஒரு நாள் வஹாபிகள் அரபு நாடுகளைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக்களை அடிக்கடி நான் குவைத்தில் கூறியதை எம்மவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இலங்கை வஹாபித் தலைவர் மீரான் குவைத் வந்த போது அவர்களை எமது அறைக்கு வரவழைத்து, விவாதம் நடாத்திய போது அவர்கள் ஓடிவிட்டமை, பிறகு அவர்கள் இருக்கும் இடத்துக்கே நாம் தேடிப் போய் அழைத்த போது பின்வாங்கியமை போன்ற நடப்புகளை எம்மவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

1984 அளவில் எகிப்தில் இருந்த வஹாபித் தலைவர் அப்துல்லாஹ் என்பவர் " எகிப்து அரசாங்கம் காபிர். மந்திரி சபையும் காபிர்" என்று ஒர பத்வாவை வெளியிட்ட போதுதான் (ஆழ்ந்த உஙக்கத்தில் இருந்த) எகிப்து அரசாங்கத்துக்கு திடீர் என்று அதிர்ச்சி ஏற்பட்டு, அல் அஸ்ஹர் உலமாக்களைக் கொண்டு ஒரு விவாதத்தை நடாத்தியது. அதில் வஹாபித் தலைவர் விவாதிக்க தயாரில்லை என்று கூறி எழுந்து சென்றார். அதன் வீடியோவை உஸ்தாத் ஷம்ஷுத்தீன் அவர்கள் எனக்குத் தந்து, அதை நான் எமது அறையில் பல முறை போட்டுக் காட்டியதையும், ஊருக்கு கொண்டுவந்து வீட்டில் போட்டுக் காட்டியதையும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அக்காலப் பகுதியிலேயே அரபு அரச தலைவர்களும், அல் அஸ்ஹர் போன்ற அரபு பல்கலைக் கழகங்களும் வஹாபியத்தை மடக்க உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி அடிக்கடி நாம் கதைத்து விசனப் படுவோம்.

எனவே, தக்கியாவில் நான் நியமிக்கப்பட்ட பின்னர், முதலில் ஊரில் வஹாபி வழிகேட்டை முறியடித்து, பின்னர் இலங்கையில் முறியடித்து, பின்னர் உலகில் எனக்குத் தெரிந்த, வஹாபி எதிர்ப்பில் ஆர்வம் உள்ள அறிஞர்கள் மூலம் அரபு அரசியல் தலைவர்களை அணுகி , வஹாபியத்து வேகமாக பரவுவதையும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அது அழிப்பதுடன் நில்லாது அரபு அரசியல் தலைவர்களையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற உண்மைகளை (தூரதிருஷ்டிகளை) அவர்களுக்க கூறி, அவர்களின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் உலகப் பெரும் வஹாபித் தலைவர்களை அழைத்து விவாதம் நடாத்தி, அதன் வீடியோக்களை முஸ்லிம்கள் பேசும் எல்லா மொழிகளிலும் தயாரித்து முழு உலகிலும் விநியோகிக்க வேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் பிரதான எதிரியான வஹாபியத்தை மடக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாக இருந்தது என்பதற்கு அல்லாஹ்வும், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களும் சாக்கி.

உலகில் எந்த நாட்டில், எந்த அரபு அறிஞர் வஹாபியத்தை எதிர்ப்பதில் திறமைசாலி, வல்லவர் என்ற தகவல்களை யெல்லாம் நான் திரட்டி வைத்திருந்தேன். அவர்கள் அனைவரையும் இந்த மாபெரும் இஸ்லாமிய சேவையில் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது.

எமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களில் (1996, 97, 98) ஊரில் முற்றாகவே வஹாபியத்தை மடக்கினோம். இலங்கையில் சகல வஹாபி இயக்கங்களையும் ஆட்டங்காணச் செய்து, எந்த வஹாபி இயக்கமும் எமக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யிருந்தோம். இஸ்லாத்தின் அந்தப் பொற்காலத்தைப் பற்றி தெரியாதவர்கள், எம்முடன் நெருக்கமாக அப்போது செயற்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

ஆக, அரபுலக ஆட்சியாளரு;களுக்கும், அல் அஸ்ஹர் (அதிகமான) உலமாக்களும் இன்று தாஇஷ் என்ற ISIS இன் கோரத் தாண்டவத்தைக் கண்ட பின் பதட்டமடைய 35 வருடங்களுக்க முன்னரே நானும் சில அரபு அறிஞர்களும் இந்த பேராபத்தை அறிந்திருந்தோம். அதனைத் தடுக்கும் ஆற்றல், திட்டம் எல்லாம் அல்லாஹ் கிருபையால் எம்மிடம் இருந்தன.

ஆனால் என்ன செய்ய !!!!!!! எம்மை நேரடியாக மடக்க முடியாத வஹாபிகள், தமது கையாட்களாக பள்ளத் தக்கியாவிலிருந்தே சதிகார பொறாமைக்கார, நாசகாரிகளான அஸ்ஸமீன்நியாஸ் ஆகிய கோடாறிக் கம்புகளைத் தெரிவு செய்து, அவர்கள் மூலம், என்னை 5% (ஐந்து வீதம்) கூட அறிய முடியாதவர்களைப் பயன்படுத்தி எமது பதவியைப் பறித்து, எமது "வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை" நாசமாக்கினார்கள்.

அஸ்ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் அந்த சதிநாச வேலையை 1999 இல் செய்தில்லாவிட்டால், நாம் எமது உலகளாவிய விவாத திட்டத்தை செயல்படுத்தி, 72 நரக வழிகளில் எல்லாம் மிகப் பெரிய நரக வழியான வஹாபியத்தை உலகில் மடக்கியிருக்கலாம். அரபு நாடுகளில் ISIS என்ற கவாரிஜ் வஹாபி இயக்கமே உருவாகியிருக்காது. அரபு நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் பேரழிவும் ஏற்பட்டிருக்காது. எத்தனையோ நபிமார்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் தகர்த்து நொறுக்கப்பட்டிருக்காது.

ஆம், மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்ற அல்லாஹ்வின் நாட்டம் வரும்போது அதற்கு உதவியாக நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், உலமாக்கள், அவர்களின் காதிம்கள் (خادم) போன்றோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை, உதவியாளர்களை கொடுக்கிறான். மக்கள் வழிகெட்டு பித்அத்து, குப்ரிய்யத்தில் விழுவதற்கான அல்லாஹ்வின் நாட்டம் செயல்படும் போது, வழிகெட்டவர்களை, திமிர் பிடித்தவர்களை, பொறாமைக் காரர்களை, ஜாஹில்களை, அல்லாஹ் பதவிகளில் அமர்த்துகிறான். நல்ல காலம் என்றால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும், வழிகெட்டவர்களின் காலம் என்றால் வழிகேடுகளில் சிக்காமல் ஹக்கிலேயே ஸப்ர் ஆக இருப்பதுமே நாம் செய்ய வேண்டியது.

Sunday, December 14, 2014

இக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை !

இக்வானுல் முஸ்லிமூன் என்ற பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி இயக்கத்தின் உயிர் நாடியாக இதுவரை காலமும் விளங்கியது கட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ஆப்கானிஸ்தான், லிபியா, ஸிரியா, இராக் ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போரால் குட்டிச் சுவராகிக் கொண்டிருப்பது போன்று, அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கவாரிஜ்களின் கோசமாக இருந்த "குர்ஆன் ஹதீஸ்" என்ற முகமூடி அணிந்து இஸ்லாமிய உலகின் முதுகெலும்பாக உள்ள எகிப்தை அழிப்பதற்கும், அதன் மூலம், இஸ்ரேலை மத்திய கிழக்கின் "ராஜா" வாக்குவதற்கும், எகிப்தில் உள்நாட்டுப் போரை ஆரம்பித்த கவாரிஜ் இக்வான் முர்ஸிக்கு கோடானு கோடி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இக்வானுல் முஸ்லிமீனுக்கு ஆதரவாக 'அல் ஜஸீரா" என்ற (பொய்ப் பொட்டியான) பத்திரிகை, இணையத்தளத்தையும் தனது நாட்டிலிருந்தே உலகளாவிய ரீதியில் நடாத்திக் கொண்டிருந்தது கட்டார் என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

புதிய விசயம் என்ன தெரியுமா? பாத்தில் கீழே போய் ஹக்கு மேலே வந்து விட்டது. தனது நாடு இனிமேல் எகிப்துக்கும், அதன் தலைவர் ஸீஸிக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாட்டில், கட்டார் மன்னர் அறிவித்துள்ளார். அரபு நாடுகள் எல்லாம் அரபுலகின் நிகரற்ற தலைவர், அமெரிக்காவையும் மேற்குலகையும் அடிபணிய வைத்த தலைவர் ஸிஸிக்கு ஆதரவளிக்கும் போது, தான் மட்டும் தனித்திருந்தால் தனது முகவரியே இல்லாமல் போகும் என்பதை இப்போது கட்டார் மன்னர் புரிந்து கொண்டுள்ளார்.

இதோ அது சம்பந்தமான ஆங்கில, அரபு பத்திரிகைச் செய்திகள் :-

கர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்!


14.12.2014

அமைதியாக இருந்த அரபு நாடுகளில் வஹாபி பயங்கரவாதத்தை தூண்டிய கர்ழாவி...
இஸ்லாமிய உலக பேரறிஞர் பூத்தி, லிபியாவை பலம் மிக்க நாடாக கட்டியெழுப்பிய கடாபி போன்றோரைப் படுகொலை செய்யும்படி பகிரங்கமாக கட்டளையிட்ட கர்ழாவி...

இஸ்ரேக் கெதிராக பலம் மிக்க நாடாக விளங்கும் ஸிரியாவை ஆக்கிரமித்து, அதன் இராணுவத்தையும், தலைவரையும் அழிக்கும்படி அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த கர்ழாவி...

அல் அஸ்ஹரில் படித்து அதே அல் அஸ்ஹரிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால், எகிப்தில் இருக்க முடியாமல் கட்டாரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கர்ழாவி...

"அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்" எனறோ, "ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்" என்றோ "ஸஹாபாக்கள் சொன்னார்கள்" என்றோ, எத்தனை பேர் கூறினாலும், உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமீன் இயக்கவாதிகள் ஏற்க மாட்டார்கள். "கர்ழாவி சொன்னார்" என்று சொன்னால், உடனே அதை வேத வாக்காக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட கர்ழாவி... (இலங்கையிலும் கஹடோவிடாவிலும் இதே நிலைமை தான். ஆனால் இதை ஊர் மக்களுக்கு எடுத்து விளக்கி ஊர் மக்களின் ஈமானைப் பாதகாக்க விடாமல் பள்ளத் தக்கியா சதிகாரர்கள் தடையாக இருக்கிறார்கள். இப்படியாக பள்ளத் தக்கியா வஹாபியத்தை வளர்க்கிறது)

காபிர்கள் நரகத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப் படுவார்கள் என்று நூற்றுக் கணக்கான குர்ஆன் ஆயத்துக்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, "காபிர்கள் சில காலம் நரகில் வேதனை செய்யப்பட்ட பின்னர் நரகம் அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு காபிர்களுக்கு வேதனை இல்லை" என்று பகிரங்கமாகக் கூறி, அமெரிக்க, இஸ்ரேல் யூதர்களையும் முஷ்ரிக்குகளையும் "சந்தோசப் படுத்திய" கர்ழாவி... (கர்ழாவி கூறுவதை – வீடியோ - எமது நெட்டில் பாருங்கள்.)

இன்று அரபுலகத் தலைவர் ஸிஸிக்கு எதிராக தினமும் விசமப் பிரச்சாரம் செய்கின்ற கர்ழாவி...

இப்படியான முஸ்லிம்களின் எதிரியான அந்தக் கர்ழாவியை விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, எகிப்து இரண்டு வருடங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு சர்வதேசப் பொலிஸ் என்ற இண்டர் போல் (International Criminal Police Organization, or INTERPOL) இப்போது உதவ முன் வந்துள்ளது. கர்ழாவிய உரிய தருணத்தில் பிடித்துக் கொடுக்க அது கொள்கையளவில் உடன்பட்டுள்ளது. இன்னொரு இக்வான் வஹாபி தலைவரான குனைம் என்பவரையும் கைது செய்ய இண்டர் போல் இணக்கம் தெரிவுத்துள்ளது.

(எப்படியாவது ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டன மேற்கு நாடுகள், ஸிஸி வந்தவுடன் எகிப்துக்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதே போன்று ஸிஸிக்கு எதிராக மேற்கு ஊடகம் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. எகிப்துக்கு எதிராக வெளியில் இருந்து இயங்கும் இக்வான் தலைவர்களைப் பிடிக்க உதவுமாறு இரண்டு வருடங்களாக எகிப்து கோரியும்கூட, அதை மறுத்து வந்த இண்டர்போல், இப்போது வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த வாரம் (2014 டிசம்பர்) பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் எகிப்தில் உள்ள தமது தூதரகங்களை எந்த வித முன்னறிவித்தலுமின்றி, எந்த வித உருப்படியான ஆதாரமும் காட்டாமல், பாதுகாப்பில்லை என்று நொண்டிச்சாட்டுக் கூறி மூடிவிட்டன. ஆம் உலகம் உள்ளவரை ஹக்குக்கு எதிராக பாத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும். சைத்தான் உறங்க மாட்டான். அல்லாஹ் நாடுகின்ற போது ஹக்குக்கு வெற்றி கிடைக்கும்.)
Wednesday, November 26, 2014

மௌலவிமார்களுக்கு :

ஹிஸ்புந் நூர் (حزب النور) என்பது எகிப்தில் உள்ள வஹாபி அரசியல் கட்சிகளில் ஒன்று. ஆரம்பத்தில் வஹாபி இக்வான் முர்ஸிக்கு அதரவளித்த இக்கட்சி, இப்போது இக்வானுல் முஸ்லிமீன் மிகப்பயங்கரமாக நாட்டை அழிக்கும் இயக்கம் என்பது தெளிவான பின்னர் அக்கட்சிக்கு எதிராக மற்ற வஹாபிக் கட்சிகளே பேச ஆரம்பித்துள்ளன. அந்த வகையைச் சேர்ந்த இக்கட்டுரையை அரபு தெரிந்த இக்வானுல் முஸ்லிமீன் தலைவர்கள் படித்து திருந்தவதற்காக இங்கே தருகிறோம். மறுமையில் கேள்விக்கு அஞ்சினால் திருந்தலாம். பெற்றோர்கள் பின்பற்றிய பழைய இஸ்லாத்துக்கு வலாம்.


(மொழி பெயர்க்க நேர அவகாசம் இன்மைக்கு வருந்துகிறோம்) ISIS பற்றி ரஸூலுல்லாஹ்

இன்று தோன்றிய வஹாபி ISIS பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு !

(குறிப்பு:- உலக முஸ்லிம்களை "முஷ்ரிக்கு, காபிர்" என்று கூறுவதும்அப்படியான முஷ்ரிக்குகளை (?) கொலை செய்ய வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுவதாக கூறுவதும், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்த்து அழிக்க வேண்டும் என்பதும் வஹாபிகளினதும் ISIS இனதும் கொள்கை என்பதை நீங்கள் அறிவீர்கள், முழு உலகும் அறியும்!)

ஸிரியாவிலும் இராக்கிலும் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், நபிமார்கள் ஸஹாபாக்கள். அவ்லியாக்களின் கப்ருகளையும், மஸ்ஜிதுகளையும் குண்டு வைத்து தகர்த்துக் கொண்டும் இருக்கும் தாஇஷ் (داعش) ISIS மற்றும் 'ஜப்ஹதுந் நுஸ்ரா' (جبهة النصرة) என்ற அதி பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி (அதாவது உலக முஸ்லிம்களை காபிர் என்றும், சிர்க்கு வைப்போர் என்றும் கூறும்) இயக்கங்கள் யாரும் எதிர்பாராத விதமாக திடுதிப்பென்று தோன்ற வில்லை. 1400 வருடங்களுக்கு முன்னரே, நான்காவது கலீபா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வஹாபிகளைப் பற்றி கூறி வைத்தார்கள். இதோ அவர்கள் கூறுவது:-

 عن علي قال : إذا رأيتم الرايات السود فالزموا الارض ولا تحركوا أيديكم ولا أرجلكم ! ثم يظهر قوم ضعفاء لا يوبه لهم ، قلوبهم كزبر الحديد ، هم أصحاب الدولة ، لا يفون بعهد ولا ميثاق ، يدعون إلى الحق وليسوا من أهله ، أسماؤهم الكنى ونسبتهم القرى ، وشعورهم مرخاة كشعور النساء حتى يختلفوا فيها بينهم ثم يؤتي الله الحق من يشاء (31530)


கறுப்புக் கொடியுடையவர்களை நீங்கள் கண்டால், உங்களுடைய கைகளையோ கால்களையோ அசைக்காமல் நிலத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (அதாவது அவர்களுடன் சேராமல் வீட்டினுள் இருங்கள்). அப்படி வெளியாகும் (அறிவிலும் ஈமானிலும்) பலவீனமான அவர்களை (உலகில் உள்ள நல்லவர்கள்) யாருமே கணக்கெடுக்க (மதிக்க) மாட்டார்கள். அவர்களின் இதயங்கள் இரும்புத் துண்டு போன்று கல்நெஞ்சராக இருப்பார்கள். அவர்கள் 'தவ்லத்' என்ற வாதத்தை முன்வைப்பவர்கள். (அதாவது அரபியில் தாஇஷ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கள் 'தவ்லதுல் இஸ்லாம்' என்று வரும். இஸ்லாமிய ராச்சியம் என்பது அதன்பொருள்). (அவர்களுடன் பிறர் செய்துகொள்ளும்) எந்தவிதமான உடன்படிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பார்கள். ஆனால் அவர்கள் அ(ந்த சத்தியமார்க்கத்)தை சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் குடும்ப பெயர்களாக (surname) இருக்கும். (isis தலைவனின் பெயர் அபூபக்கர் என்ற குடும்ப பெயர் என்பதை அவதானிக்கவும்). அவர்களின் (பெயருடன் வரும் அடை மொழி = attribution ) ஊர்களின் பெயராக இருக்கும். (உதாரணமாக: isis தலைவனின் பெயர் அபூ பக்கர் பக்தாதீ என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கத்தில் உள்ள சகல தலைவர்களின் பெயர்களும் பக்தாதி, மிஸ்ரி, சாமி என்று ஊர்ப் பெயர்களுடன் இணைந்திருப்பதை அவதானிக்கவும்). அவர்களின் தலை முடி பெண்களின் தலைமுடி போன்று (நீண்டு) அதிக எண்ணெய் தோய்ந்ததாக இருக்கும். அவர்களுக்கிடையில் முரண்பட்டு (பிளவு படுவார்கள்). (கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஸிரியாவில் isis உம் ஜப்ஹதுந் நுஸ்ராவும் சண்டையிட்டு அவர்களிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்). பின்ன
ர் அல்லாஹ் நாடுகிறவர்களுக்கு சத்தியத்தை (அதிகாரத்தை) அல்லாஹ் கொடுப்பான்.
(நுஐம் இப்னு ஹம்மாத் அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கிறார்கள். நூல் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் இலக்கம் 31 530) 27.9.2014

Tuesday, November 18, 2014

அரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன?


18.11.2014
அரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன?
இன்று உலகில் மூன்று விதமான முஸ்லிம்களின் அரசியல் சக்திகள் செயல்படுகின்றன.
முதலாவது சக்தி :- ரஸூலுல்லாஹ்வின் காலம் முதல் இன்று வரை 1400 வருடங்களாக தொடராகவும், குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள், ஆத்மீக உயர்வுக்கான தரீக்காக்கள் ஆகிய அத்தனையும் இஸ்னாத் என்ற நம்பிக்கைத் தொடர் வரிசையின்படி வருகின்ற இஸ்லாம். இந்த இஸ்லாம் தான் உலகின் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் மிக அதிகம் பேர் பின்பற்றும் உண்மையான ஸுன்னத்து வல் ஜமாஅத்து இஸ்லாம் ஆகும்.
இரண்டாவது சக்தி :- அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்துக்குப் பின்னர் தோன்றியதும், ஏராளமான ஸஹபாக்களை குறை கூறுபவர்களுமான வழிகெட்ட ஒரு பிரிவினரான சீஆக்களின் சக்தி. இவர்கள் ஈரானைத் தலைமையகமாகக் கொண்டு, இராக், ஸிரியா, இன்னும் பல அரபு நாடுகளிலும் செல்வாக்குடன் செயல்படுகின்றார்கள்.
மூன்றாவது சக்தி :- ரஸூலுல்லாஹ்வையே எதிர்த்ததும், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் அவர்களின் அணியை விட்டும் பிரிந்து சென்று இராக்கிலுள்ள ஹரூரா என்னுமிடத்தில் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்த்து போராடிய கவாரிஜ்கள்.
     ரஸூலுல்லாஹ்வை இழிவாக மதித்தல், ஸஹாபாக்களை திட்டுதல், அவ்லியாக்களை எதிர்த்தல், குர்ஆனுக்கு சொந்தக் கருத்து கூறி குர்ஆனை திரித்தல், பல்லாயிரம் ஹதீஸுகளை நிராகரித்தல், உலக முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள், காபிர்கள் என்று கூறி முஸ்லிம்களை கொலை செய்தல் ஆகிய கொள்கைகள் இந்த கவாரிஜ்களின் ஆரம்பகாலம் முதல் உள்ள கொள்கைகளாகும்.
இந்த கவாரிஜ்கள் காலத்துக்கு காலம் தோன்றி, முஸ்லிம் சமூகத்தில் பித்னாக்களை உண்டுபண்ணுவார்கள் என்றும், இறுதி கவாரிஜ் கடைசி காலத்தில் வெளியாகும் தஜ்ஜாலுடன் இணைந்து வருவார்கள் என்றும், இந்த கவாரிஜ்களின் தொழுகை முதலிய எந்த அமலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், வில்லிலிருந்து அம்பு போகும் வேகத்தில் இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவார்கள் என்றும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவாறு, இப்னு தைமியா இந்த கவாரிஜ்களின் சில கொள்கைகளைப் பரப்ப முயன்ற போது, அக்கால இமாம்கள் இப்னு தைமியாவின் வழிகேடுகளை எதிரத்து முறியடித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்தார்கள்.
நஜ்தில் சைத்தானின் கொம்பு தோன்றும் என்று ஸவூதியில் ரியாதில் உள்ள நஜ்தைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற்கிணங்க, பின்னர் இந்த கவாரிஜ்கள் நஜ்தில் தோன்றி, முந்நூறு வருடங்களாக உலக முஸ்லிம்களை வழிகெடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப பெயர் அடிப்படையில் இவர்களை வஹாபிகள் என்றும், பிரதான வழிகேட்டின் அடிப்படையில் இவர்களைதக்பீரிகள்  (تكفيري) (அதாவது உலக முஸ்லிம்களை காபிர் என்று கூறுவோர்) என்றும், ஹதீஸில் வந்த அடிப்படையில்கவாரிஜ்கள்என்றும் உலக முஸ்லிம்கள் இவர்களை அடையாளம் காண்கிறார்கள்.
இப்போது அரபு நாடுகளில் பித்னாக்களையும், வழிகேடுகளையும், கொடூரமான படுகொலைகளையும் செய்து, முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தி, இஸ்ரேல் வளர்வதற்கு உதவியாக இயங்கும் இந்த கவாரிஜ் இயக்கங்களில் மிக முக்கியமான கிளைகள் இரண்டாகும். ஒன்று இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம், மற்றது தாஇஷ் (ISIS) என்ற இயக்கம். இவற்றின் கிளைகளாகவும் ஏராளமான இயக்கங்கள் வெவ்வேறு தலைமைகளில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
     இங்கு பிரதானமாக நாம் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால், அரபு நாடுகளில் இன்று இரத்த வெறி பிடித்து கோரத் தாண்டவமாடும் இந்த கவாரிஜ் இயக்கங்களைப் பற்றியும், உண்மையான இஸ்லாத்தைப் பாகாப்பதற்காக உண்மையாகப் போராடும் உண்மை முஸ்லிம்கள் யார் என்பதைப் பற்றியும் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வதற்கு உதவியாக எந்த ஊடகமும் இல்லை என்ற கசப்பான உண்மையாகும்.
   உண்மையான ஸுன்னத்து வல்ஜமாஅத்தைப் பாதுகாப்பதற்காக போராடும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியைராணுவ ஆட்சி, அமெரிக்க ஆதரவு" என்றும், மேற்கு நாடுகள் உருவாக்கிய கவாரிஜ் இக்வானுல் முஸ்லிமீனையும் தாஇஷையும் (ISIS) தவ்ஹீதுக்காக போராடும் இயக்கங்கள் என்றும் தலைகீழாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்களையே இலங்கையில் காண முடியும்.
  கவாரிஜ்களைப் பற்றியும் கடைசிகால பித்னாக்கள் பற்றியும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பல நூறு ஹதீஸ்களை இந்த ஊடகங்கள் அறியவில்லையா? அல்லது, “அல்லாஹ்வும் ரஸூலும் எதுவும் கூறிவிட்டுப் போகட்டும், நாம் எமது இயக்கங்களின் தலைவர்களையே பின்பற்றுவோம்” என்ற பிடிவாதமா? அல்லாஹ் தான் நன்கு அறிந்தவன்.
     தரீக்காக்களை பின்பற்றிக்கொண்டு, அகீதாவில் உறுதியான ஏராளம் ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களுடன் நாம் பேசிய போது, அவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டு அரசியலில் கவாரிஜ் வஹாபிகளாக இருப்பதையே காண முடிகின்றது.
   காரணம் என்ன? ஸுன்னத்து வல்ஜமாஅத்து சமூகத்தில் உருப்படியான ஒரு ஊடகம் (பத்திரிகை) இல்லாமையே காரணம். வஹாபியத்து என்பது இஸ்லாம் அல்ல என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உறுதியான ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த ஒரேயொரு ‘வெற்றி’ மாத பத்திரிகையையும் சதிகார அநியாயக் காரர்கள் மூடிவிட்டார்கள்.

  இப்போதைக்கு மத்திய கிழக்கு விவகாரங்களை ஓரளவாவது ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கோணத்தில் அறிய விரும்புபவர்கள் எமது இந்த வெப்ஸைட் மூலமாகவே அறிய முடியும். வேறும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஊடகங்கள் இருப்பின் அறிவித்தால் இன்ஷா அல்லாஹ் எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும்.