Sunday, December 14, 2014

கர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்!


14.12.2014

அமைதியாக இருந்த அரபு நாடுகளில் வஹாபி பயங்கரவாதத்தை தூண்டிய கர்ழாவி...
இஸ்லாமிய உலக பேரறிஞர் பூத்தி, லிபியாவை பலம் மிக்க நாடாக கட்டியெழுப்பிய கடாபி போன்றோரைப் படுகொலை செய்யும்படி பகிரங்கமாக கட்டளையிட்ட கர்ழாவி...

இஸ்ரேக் கெதிராக பலம் மிக்க நாடாக விளங்கும் ஸிரியாவை ஆக்கிரமித்து, அதன் இராணுவத்தையும், தலைவரையும் அழிக்கும்படி அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த கர்ழாவி...

அல் அஸ்ஹரில் படித்து அதே அல் அஸ்ஹரிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால், எகிப்தில் இருக்க முடியாமல் கட்டாரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கர்ழாவி...

"அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்" எனறோ, "ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்" என்றோ "ஸஹாபாக்கள் சொன்னார்கள்" என்றோ, எத்தனை பேர் கூறினாலும், உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமீன் இயக்கவாதிகள் ஏற்க மாட்டார்கள். "கர்ழாவி சொன்னார்" என்று சொன்னால், உடனே அதை வேத வாக்காக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட கர்ழாவி... (இலங்கையிலும் கஹடோவிடாவிலும் இதே நிலைமை தான். ஆனால் இதை ஊர் மக்களுக்கு எடுத்து விளக்கி ஊர் மக்களின் ஈமானைப் பாதகாக்க விடாமல் பள்ளத் தக்கியா சதிகாரர்கள் தடையாக இருக்கிறார்கள். இப்படியாக பள்ளத் தக்கியா வஹாபியத்தை வளர்க்கிறது)

காபிர்கள் நரகத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப் படுவார்கள் என்று நூற்றுக் கணக்கான குர்ஆன் ஆயத்துக்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, "காபிர்கள் சில காலம் நரகில் வேதனை செய்யப்பட்ட பின்னர் நரகம் அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு காபிர்களுக்கு வேதனை இல்லை" என்று பகிரங்கமாகக் கூறி, அமெரிக்க, இஸ்ரேல் யூதர்களையும் முஷ்ரிக்குகளையும் "சந்தோசப் படுத்திய" கர்ழாவி... (கர்ழாவி கூறுவதை – வீடியோ - எமது நெட்டில் பாருங்கள்.)

இன்று அரபுலகத் தலைவர் ஸிஸிக்கு எதிராக தினமும் விசமப் பிரச்சாரம் செய்கின்ற கர்ழாவி...

இப்படியான முஸ்லிம்களின் எதிரியான அந்தக் கர்ழாவியை விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, எகிப்து இரண்டு வருடங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு சர்வதேசப் பொலிஸ் என்ற இண்டர் போல் (International Criminal Police Organization, or INTERPOL) இப்போது உதவ முன் வந்துள்ளது. கர்ழாவிய உரிய தருணத்தில் பிடித்துக் கொடுக்க அது கொள்கையளவில் உடன்பட்டுள்ளது. இன்னொரு இக்வான் வஹாபி தலைவரான குனைம் என்பவரையும் கைது செய்ய இண்டர் போல் இணக்கம் தெரிவுத்துள்ளது.

(எப்படியாவது ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டன மேற்கு நாடுகள், ஸிஸி வந்தவுடன் எகிப்துக்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதே போன்று ஸிஸிக்கு எதிராக மேற்கு ஊடகம் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. எகிப்துக்கு எதிராக வெளியில் இருந்து இயங்கும் இக்வான் தலைவர்களைப் பிடிக்க உதவுமாறு இரண்டு வருடங்களாக எகிப்து கோரியும்கூட, அதை மறுத்து வந்த இண்டர்போல், இப்போது வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த வாரம் (2014 டிசம்பர்) பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் எகிப்தில் உள்ள தமது தூதரகங்களை எந்த வித முன்னறிவித்தலுமின்றி, எந்த வித உருப்படியான ஆதாரமும் காட்டாமல், பாதுகாப்பில்லை என்று நொண்டிச்சாட்டுக் கூறி மூடிவிட்டன. ஆம் உலகம் உள்ளவரை ஹக்குக்கு எதிராக பாத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும். சைத்தான் உறங்க மாட்டான். அல்லாஹ் நாடுகின்ற போது ஹக்குக்கு வெற்றி கிடைக்கும்.)
No comments:

Post a Comment