Monday, March 31, 2014

மறுமை வேதனை

மறுமை வேதனையைப் பற்றி அறியாத முஸ்லிமல்லாதவர்கள்.

31.3.2014
மறுமையில் காபிர்கள் அனுபவிக்க வேண்டிய பயங்கரமான வேதனைகளைப் பற்றி அவர்கள் அறிந்தால் ஒருவேளை இஸ்லாத்தைப் பற்றிச் சிந்திக்கவும், இன்ஷா அல்லாஹ் அதன் பலனாக இஸ்லாத்தைத் தழுவவும் இடமுண்டு. ஏராளமான சட்டதிட்டங்கள் உள்ள ஒரு மார்க்கம் என்பது தான் இஸ்லாத்தைப் பற்றி அனேக காபிர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களுக்கு மறுமையில் உள்ள கடுமையான நரக வேதனைகள் பற்றி, அல்லாஹு தஆலா என்ன கூறியுள்ளான் என்பது பற்றி முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பாலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை அவர்களில் பலருடன் கதைத்த போது உணர முடிந்தது.
எனவே இங்கே குறிப்பிடப்படும் குர்ஆன் ஆதாரங்களை அவர்கள் அறியக்கூடிய ஏதாவது வழிவகைகளை யாராவது மேற்கொண்டால், இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தை அவர்களுக்கு நாம் எத்திவைத்த கடமையைச் செய்தவர்களாவோம். அதற்கான பெரும் கூலிலை அல்லாஹ் தரப் போதுமானவன்.
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டால் சுவர்க்க இன்ப வாழ்க்கை கிடைக்கும் என்று நன்மாராயம் கூறியும், அல்லாஹ்வுக்கு வழிப்படாவிட்டால் நரக வேதைனை கிடைக்கும் என்று எச்சரித்தும் மனிதர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும்படி தான் திரு குர்ஆன் ஏவுகின்றது.
எனவே இஸ்லாமிய நற்குணங்களை மட்டும் காபிர்களிடம் கூறி தஃவத்து செய்வது என்பது பூரணமான வழிமுறையல்ல. அல்லாஹ் கூறிய இரண்டு விதமான வழி முறைகளையும் நாம் பயன் படுத்த வேண்டும்.
புனித குர்ஆனில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ( نَذِيْر) எச்சரிக்கை செய்பவர், எச்சரிக்கை செய்பவராக போன்ற ஆயத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக :
( وَماَ أَرْسَلْنَاكَ إلاَّ كاَفَّةً لِلناَّسِ بَشِيْرًا وَنَذِيرًا وَلكِنَّ أكْثَرَ الناَّسِ لاَ يَعْلَمُوْنَ ) (34:28)
(நபியே) நாம் உம்மை (இவ்வலகத்தில் உள்ள) சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளவில்லை. ( அஸ்ஸபஉ 34:28)
எனவே குர்ஆனில் வந்துள்ள நரகத்தைப் பற்றிய, நரக வேதனையைப் பற்றிய, காபிர்கள் மறுமையில் கைசேதப் படுவதைப் பற்றிய ஆயத்துக்களை அவர்களுக்கு எத்தி வைப்பது எமது கடமையாகும். முடிந்தவர்கள் அதை எத்தி வைக்காமல் இருட்டடிப்புச் செய்வது குற்றமாகும்.
எனவே முடிந்தவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு, ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளிலும் உள்ள தர்ஜமாக்களின் உதவியுடன் இந்த ஆயத்துக்களைத் தொகுத்து, தஃவாப் பணியை மேற்கொண்டால், அல்லாஹ் நாடுபவர்களை, அல்லாஹ்வையும் ரஸூலுல்லாஹ்வையும் ஈமான் கொண்டு, இஸ்லாத்தை தழுவி சுவர்க்கம் செல்ல உதவிய பாக்கியத்தை இன்ஷா அல்லாஹ் நாமும் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா?

1-
( إنَّ الَّذِيْنَ كَفَرًوْا لَنْ تَغْنِيَ عنْهُمْ أمْوَالُهُمْ وَلاَ أوْلاَدُهُمْ مِنَ اللهِ شَيْئًا ، وَأولئِكَ هُمْ وَقُوْدُ الناَّرِ * كَدَأبِ آلَ فِرْعَوْنَ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ، كَذَّبُوْا بِآياَتِناَ فَأخَذَهُمُ اللهُ بِذُنُوْبِهِمْ ، وَاللهُ شَدِيْدُ الْعِقاَبِ * قُلْ لِلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ إلى جَهَنَّمَ ، فَبِئْسَ الْمِهاَدُ * ) (3:10)
(எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு, (அந்நாளில்) அவர்களுடைய பொருள்களும் அவர்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் தவிர்த்து விடாது. இவர்கள் தாம் உண்மையாகவே (நரக) நெருப்பின் எரிகட்டையாக இருக்கின்றனர்.
 (இவர்கள்) பிர்அவ்னைச் சார்ந்தவர்களையும், அவர்களுக்கு முன் இருந்தவர்களையும் போன்று இருக்கின்றனர். அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களுடைய பாபங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக்கொண்டான். அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன்.
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே) நீர் கூறும்: “அதி சீக்கிரத்தில் நீங்கள் (விசுவாசிகளால் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி மறுமையில் நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்” (ஆல இம்ரான் 3:10–12)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)