Wednesday, March 25, 2015

மத்திய கிழக்கு : திரைக்குப் பின்னால்

இது மத்திய கிழக்கின் மறுபக்கத்தில் நடப்பது என்ன என்பதைப் பற்றிய புதிய ஒரு கண்ணோட்டம் :

மத்திய கிழக்கு நாடுகளின் விசித்திரமான சுய நலம் :-
( இது இன்றைய நிலை பற்றிய ஓர் ஆய்வு )

துருக்கி :- வஹாபியத்தை (இக்வானை) சகல உதவிகளும் கொடுத்து வளர்க்கும் நாடு

ஈரான் :- வஹாபியத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர சீஆ நாடு.

ஆனால் துருக்கியும் ஈரானும் நட்பு கொண்டாடுகின்றன. ஏன் தெரியுமா?

அரபு நாடுகளில் குழப்பத்தை உண்டுபண்ணி, அந்நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றி உள்நாட்டுச் சண்டையை ஏற்படுத்தி அரபு நாடுகளை சீரழிக்க சக்தி இருப்பது இக்வான் வஹாபிகளுக்கே. குறிப்பாக அரபுலகின் வல்லரசான ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடான எகிப்தை பலவீனப்படுத்தி, எகிப்தில் சீஆக் கொள்கையை வளர்த்து எகிப்தை சீஆ நாடாக மாற்றுவதே ஈரானின் திட்டம். எனவே எகிப்தைப் பலவீனப்படுத்துவதற்காகவே இக்வான் ஆதரவு நாடான துருக்கியுடன் ஈரான் கைகோர்த்துள்ளது.

எதிரியின் எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின்படி, பலஸ்தீனில் உள்ள வஹாபி ஆதரவு ஹமாஸுக்கு சீஆ ஆதரவு ஈரான் ஆயுத உதவிகள் வழங்குகின்றன. ஏன்? வஹாபி ஹமாஸைப் பலப்படுத்தி, பலஸ்தீனுக்கு அண்மையில் உள்ள எகிப்தின் பிரதேசமான சினாய் ஊடாக ஹமாஸ் வஹாபிகளை எகிப்துக்குள் அனுப்பி, எகிப்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஸுன்னி நாடான எகிப்தை பலமிழக்கச் செய்து, அதனூடாக எகிப்தில் சீஆக் கொள்கையை வளர்ப்பதே வஹாபி ஆதரவு ஹமாஸுக்கு ஈரான் உதவுவதன் உள்நோக்கம்.

ஹமாஸும் தான் வளர்வதற்காக ஈரானின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. இஸ்ரேலை எதிர்த்து போராட ஹமாஸுக்கு உதவும் நாடு ஈரான் என்றே ஹமாஸும் ஈரானும் உலகுக்கு காட்ட முனைகின்றன. உண்மை அதுவல்ல. இவ்வளவ காலமும் ஈரான் – ஹமாஸ் தொடர்பு இருந்தும் இஸ்ரேலை ஏன் முறியடிக்கவில்லை? நாளுக்க நாள் பலஸ்தீனில் இஸ்ரேலின் பிடி இறுகிக்கொண்டுதானே வருகின்றது. அவ்வப்போது இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் பெயருக்கு சில ஏவுகணைகளை ஏவும். அப்போதெல்லாம் ஈரான்தான் பலஸ்தீன் விடுதலைக்காக ஹமாஸுக்கு உதவி செய்வதாக சீஆ மற்றும் இக்வான் ஊடகங்கள் முழங்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் இஸ்ரேல் அதைவிடப் பன்மடங்கு பெரிய தாக்குதல் நடாத்தி இருந்ததைவிட பலஸ்தீனில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளும். இது தான் பலஸ்தீன் நடப்பு.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஈரான் தனது சீஆக் கொள்கையை எகிப்திலும் பலஸ்தீனிலும் இதர அரபு நாடுகளிலும் பரப்புவதற்காக பதவியாசை பிடித்த , தனது எதிரியான வஹாபிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

துருக்கி + ஈரான் நட்பு

ஈரான் சபாநாயகர் துருக்கி விஜயம் பற்றிய செய்தி இது :-


ஏப்ரில் மாதம் துருக்கி பிரதமர் ஈரான் வரவுள்ள செய்தி இது :-


சீஆ ஈரான் + வஹாபி ஹமாஸ் கூட்டு 

Tuesday, March 24, 2015

தாஇஷில் சிறுவர்கள்

உலக வரலாற்றில் எண்ணிலடங்காத யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் வஹாபி கவாரிஜ் தாஇஷ்கள் (ISIS) அப்பாவி சின்னஞ் சிறார்களை பயங்கரவாதத்தில் பயன்படுத்துவது போன்று உலக வரலாற்றில் வேறு எங்குமே பயன்படுத்தியதில்லை என்று கூறப்படுகின்றது.

18 வயதுக்கும் குறைந்த 400 சிறு குழந்தைகளை பலாத்காரமாக வஹாபி தாஇஷ்கள் அநியாயமாக பிறரை படுகொலை செய்யப் பயன் படுத்துகிறார்கள். இவ்வாறு குழந்தைகளால் தாஇஷ்கள் உருவாக்கிய படைக்கு "சிங்கக் குட்டிகள்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

10 வயது குழந்தைக்கு துப்பாக்கியை கொடுத்து இரண்டு பேரை சுட்டுக் கொல்லும் காட்சியை காணலாம்.

தாஇஷ்கள் கைப்பற்றும் ஊர்களில் உள்ள சிறு குழந்தைகளை யுத்த கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களை கொலை செய்கிறார்கள்.

நஜ்தில் உதிக்கும் சைத்தான்களான வஹாபிகளைக் குறித்து அவர்களால் "படுகொலைகள் அதிகமாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் வஹாபியத்தை ஆதரிப்போர், அதனைக் கண்கூடாக கண்ட பிறகாவது உடனடியாக வஹாபி இயக்கங்களை விட்டும் ஒதுங்கினால் ஈமானைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இன்ஷா அல்லாஹ்


Saturday, March 21, 2015

மஸ்ஜிதில் தற்கொலை குண்டு

இன்று வெள்ளிக்கிழமை 20.3.2015 யெமன் தலை நகர் ஸன்ஆவில் இரண்டு சீஆ மஸ்ஜுதுகளில் வஹாபி பயங்கரவாத வம்பர்கள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிஆ பத்ர் என்ற மஸ்ஜிதில் ஜும்ஆ நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு வஹாபி தற்கொலைதாரி பள்ளியில் குண்டை வெடிக்கவைத்து ஏராளம் பேரைப் படுகொலை செய்த மறுகணம், இன்னொரு வஹாபி தற்கொலைதாரி மக்களின் பதட்டத்தைப் பயன்படுத்தி மிஹ்ராப் வரை விரைந்து அவிடத்தில் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து 137 பேருக்கும் அதிகமானோரைப் படுகொலை செய்து, மேலும் 350 பேருக்கும் அதிகமானோரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இன்னொரு பள்ளியில் தற்கொலை தாரி வஹாபியை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடிக்கவே, அந்த வஹாபி குண்டை வெடிக்க வைத்து அவன் மட்டும் அழிந்துள்ளான்.

"சீஆக்கள் காபிர்கள், எனவே அவர்களைக் கொலை செய்து அழித் தொழிக்க வேண்டும்" என்று நஜ்து வஹாபி தலைவர்கள் போதித்ததை கண்மூடித்தனமாக பின்பற்றியே இவ்வாறு உலகை கொலைக்களமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிந்தனா சக்தியை இழந்த வஹாபிகள்.

கைரான மூன்று நூற்றாண்டுகள் என்று ரஸூலுல்லாஹ்வால் புகழப்பட்ட ஸஹாபாக்கள், தாபிஊன்கள், தபஉத் தாபிஈன்கள் காலத்தில் அவர்களுக்கு தெரியாத புதிய இஸ்லாத்தை இப்போது கடைசி கால வஹாபிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும், வஹாபித் தலைவர்களை கண்மூடிப் பின்பற்றும் வஹாபி இளைஞர்கள் கேட்கப் போவதில்லை.

தமது கலீபாவுக்கு பைஅத்துச் செய்வது அவசியம் என்ற போர்வையில் தாஇஷ் (ISIS) தலைவருக்கு உலகில் உள்ள சகல வஹாபிகளையும் கட்டுப்பட வைத்து. முழு உலகையும் கொலைக்களமாக மாற்றும் திட்டம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

சீஆக்களை மட்டுமல்ல, ஸுன்னத்துவல் ஜமாஅத்தையும் இந்த வஹாபிகள், அழிப்பதை நீங்கள் நாளாந்தம் கேள்விப்படுகிறீர்கள். இலங்கையிலும் இந்நிலை வரலாம்.

வஹாபியத்தை மடக்கி தரீக்காக்களை உயிர்ப்பிக்க வந்து, அதனை வெற்றிகரமாக சாதித்துக் கொண்டிருந்தவர்களை சதி மூலம் ஓரம்கட்டி, 15 வருடங்களாக இலங்கையில் சகல ஊர்களிலும் மிக வேகமாக வஹாபியத்து வளர உதவி செய்துகொண்டிருக்கும் அநியாயக் காரர்களே இதற்குப் பொறுப்பு !

அல்லாஹ் தான் முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாக்க வேண்டும்.

Thursday, March 19, 2015

சூரியன் இருளாகிறதா?

சூரியனில் இரண்டு இடங்கள் கறுப்பாகி ஒளியிழந்து விட்டதை 16.3.2015 இல் நாஸா விண்வெளி நிலையம் அவதானித்துள்ளது.

இரண்டு கறுப்புக் குழிகளாலும் சூரியனில் மொத்தம் 145 பில்லியன் மைல்கள் ஒளியிழந்து இருண்டுவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


அல்லாஹு தஆலா புனித குர்ஆனில் கூறுவதை பார்ப்போம் :
إذا الشمس كُورت = யுக முடிவுக்காகச் - சூரியனின் ஒளி மங்கும் போது
وإذا النجوم انكدرت = நட்சத்திரங்கள் சுடரிழந்து உதிர்ந்து விழும் போது
وإذا الجبال سيرت = மலைகள் பெயர்த்துப் பறக்கடிக்கப்படும் போது
...... (سورة التكوير 81ம் ஸூரா)

தகுதியில்லாதவர்களுக்கு மார்க்கத்தின் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய எச்சரிக்கை ஹதீஸை நாம் எமது www.abdhulbary.info வில் முகப்பிலேயே 2009 இலேயே எழுதி வைத்திருப்பது ஏன் என்பதன் தூரதிருஷ்டியை இப்போது நினைவூட்டுவது பொருத்தம் அல்லவா?

Wednesday, March 18, 2015

யார் இந்த அபூஇஸ்ராஈல்?

"அபூ இஸ்ராஈல்"! ISIS (தாஇஷை) கதி கலங்க வைக்கிறார் இராக்கைச் சேர்ந்த அபூ இஸ்ராஈல் என்பவர். பல்கலைக்கழக பேராசிரியரான இவர், சீஆ தலைவர் ஸீஸ்தானியின் வேண்டுகோளையடுத்து, பல்கலைக் கழகத்தை விட்டுவிட்டு, ஆயுதப் படைக்கு உதவியா பொதுமக்கள் படையில் சேர்ந்து, போராடுகிறார். " (ISIS) தாஇஷை அழித்தொழிப்பேன்" என்பது இவரது சூளுரை !

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் தக்ரீட் நகரம் தாஇஷ்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது ஸதாம் ஹுஸைனின் பிறந்த ஊர். அந்த தக்ரீட் நகரத்திலிருந்து இம்மாதம் தாஇஷ்களை விரட்டியடித்த பெருமை இந்த அபூ இஸ்ராயிலுக்கு உரியது என்கிறார்கள் ஈராக் மக்கள்.

தாஇஷை விரட்டியடித்துவிட்டு, துவிச்சக்கர வண்டியில் தக்ரிட் நகரத்தில் துணிவுடன் பவனி வந்தார்.

தாஇஷ் கவாரிஜ் வஹாபிகளை எதிர்த்து ஆயுதப் போராட்டம் செய்யும் போதெல்லாம் தனது தோளில் கோடாறி ஒன்றை ஏந்தியிருப்பாராம் அவர். அல்லாஹு அக்பர்.


Saturday, March 14, 2015

போகோ ஹராம் என்றால்?

தாஇஷ் (ISIS)க்கு வழிப்பட்டு நடப்பதாக போகோ ஹராம் என்ற வம்பர்கள் இயக்கத்தினர் தாஇஷ் தலைவருக்கு பைஅத்து செய்துள்ளனர்.

போகோ ஹராம் என்ற வம்பர் இயக்கம் நைஜீரியாவில் இயங்கும் (தாஇஷ் போன்ற) பயங்கரவாத இயக்கம்.

போகோ ஹராம் என்றால் என்ன அர்த்தம்? "மேல்நாட்டு கல்வி கற்பது ஹராம்" என்பது அதன் பொருள். பல நூற்றுக் கணக்கான பாடசாலை மாணவ மாணவியரை கடந்த மாதங்களில் கடத்திச் சென்றுள்ளது இந்த கவாரிஜ் வஹாபி இயக்கம்.

ஸவூதியில் நஜ்து என்ற புற்றில் இப்னு அப்தில் வஹாபு என்ற பாம்பு ஈன்ற குட்டிகளே தவ்ஹீது, இக்வானுல் முஸ்லிமூன், ஜமாஅதே இஸ்லாமி, டீஏ, ஸலபி இன்னும் ஏராளமான பெயர்களில் உள்ள பாம்புகள்.

இந்தப் பெயர்களில் இதுவரை காலமும் வளர்ந்த அந்தப் பாம்புகள், சுய சிந்தனா சக்தி இல்லாத , இஸ்லாத்தை உரிய முறைப்படி படிக்காத ஏராளம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை Brain wash செய்து மயக்கி தம் பக்கம் இழுத்துப்பிடித்து, போதியளவு பணத்தையும் சேகரித்துக்கொண்டு, இப்போது, முஸ்லிம் நாடுகளை கைப்பற்றி, 1400 வருடங்களாக இருந்த தூய இஸ்லாத்தை அழித்து, நரக வழியான கவாரிஜ் இஸ்லாத்தை முழு உலகிலும் பரப்ப பயங்கரவாதத்தை ஆயுதமாக ஏந்தி, பயங்கர பாம்புகளாக உருமாறியுள்ளன.

இப்படியாக ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள பயங்கர கவாரிஜ் வஹாபி வம்பர்கள் தான் போகோ ஹராம் என்ற இயக்கம். இப்போது அது தாஇஷ் என்ற ISIS க்கு பைஅத்து செய்து அதனுடன் இணைந்துள்ளது.

அதனையே இப்படம் சித்தரிக்கின்றது. ஆபிரிக்க போகோ ஹராமை ISIS வரவேற்கிறது.


Thursday, March 12, 2015

சூரியனில் வெடிப்பு ?

11.3.2015 இல் சூரியனில் பிரமாண்டமான ஒரு வெடிப்பு ஏற்பட்டதை SDO என்ற அமெரிக்க சூரிய ஆராய்ச்சி நிலையம் அவதானித்துள்ளது.

இது பூமியின் ஈர்ப்பு சக்தியை பாதிக்குமாயின், அமெரிக்க, ரஷ்ய செயற்கை கோள்களையும் பாதிபை ஏற்படுத்தி, அதன் காரணமாக செய்தி தொடர்பாடல் சாதனங்களையும் பாதிக்குமா என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விடியோ :- Wednesday, March 4, 2015

தாஇஷ்கள் கொலை

தாஇஷ் கண்ணிவெடி நிபுணர் கொலை !

தாஇஷ் (ISIS) வஹாபி கவாரிஜ் இயக்கத்தின் கண்ணி வெடி தயாரிப்பு நிபுணரான அபூ ஹம்ஸா என்பவரும் அவரின் நான்கு உதவியாளர்களும் இராக் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இராக்கின் பலூஜா மாகாணத்தில் தாஇஷ்கள் அமைத்திருந்த கண்ணிவெடி உற்பத்தி சாலை ஒன்றின் மீது இராக் படைகள் சரமாரியான விமானத்தாக்குதல் நடாத்திய போதே அது முற்றாக அழிக்கப்பட்டு, தாஇஷ் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். الحمد للهTuesday, March 3, 2015

இஸ்லாத்தின் எதிரிகள்

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக பலம் வாய்ந்த நிலையில் இருந்த முஸ்லிம் நாடுகளான இராக், லிபியா, ஸிரியாவை அமெரிக்க யூத ஏகாதிபத்தியம் சின்னாபின்னப்படுத்திவிட்டது.

இன்று மிகப் பெரிய இஸ்லாமிய சக்திகளாக எஞ்சி இருப்பது, ஸுன்னத்து வல்ஜமாஅத்து எகிப்தும், சீஆ ஈரானும்தான்.

ஆனால் எகிப்தையும் ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும், வஹாபி நாடுகளான கட்டாரையும் துருக்கியையும் பயன்படுத்துகின்றன. இவ்விரு நாடுகளின் பண உதவி, ஆயுத உதவியால் உருவான தாஇஷ் (ISIS) மூலம் பயங்கரவாதத்தின் ஊடாக எகிப்தையும் ஈரானையும் அழிக்க அமெரிக்கா முனைகிறது.

ஆக இன்று முஸ்லிம்களின் எதிரியாக இன்று மத்திய கிழக்கில் இயங்குவது கட்டாரும், துருக்கியும், இஸ்ரேலும், தாஇஷும் என்பதை சுட்டிக்காட்டும் படமே இது.

Sunday, March 1, 2015

மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

தொடர் 02

வஹாபியத்தின் பரிணாம வளர்ச்சி :-

முதல் கட்டம் :- ஸுன்னத்து வல்ஜமாஅத்து அவ்லியாக்கள், இமாம்களுக்கு அல்லாஹு தஆலா கொடுத்திருந்த ஆத்ம சக்தி, அபார அறிவுத்திறனைக் கண்டும், ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆட்சியதிகாரம் ஆகியவற்றைக் கண்டும், அவர்கள் மீது வஹாபி தலைவர்களுக்கு பொறாமை கொள்ளவைத்தான் சைத்தான். நல்லோர்கள் மீது பொறாமை கொண்டதாலேயே வழிகேடுகள் தோன்றியதாக புனித அல் குர்ஆன் கூறுவதை 2:213 இல் பாருங்கள். ஆதம் நபிக்கு அல்லாஹு தஆலா கொடுத்த அந்தஸ்தின் காரணமாக சைத்தான் பொறாமை கொண்டதால் தான் அவன் அவர்களுக்கு ஸுஜூது செய்யவில்லை. ஆகவே இமாம்கள், அவ்லியாக்கள் மீது பொறாமை கொண்டதாலேயே வஹாபித் தலைவர்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை எதிர்த்து புது இயக்கங்களை உண்டாக்குகின்றார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா?

இரண்டாம் கட்டம் :- மார்க்க நிபுணர்களான இமாம்கள் மீது பொறாமை காரணமாக, வழி கெட்ட தலைவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு இமாம்களின் விளக்கங்களைப் பாராமல், குர்ஆனுக்கு தம் இஷ்டப்படி (மனோ இச்சைப்படி) பொருள் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடுவது சிர்க்கு என்றும் கூறும் புதிய தவ்ஹீது (புதிய மார்க்கம்) பிறந்தது. இஸ்லாத்தை எதிர்க்கும் முஷ்ரிக்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்ற குர்ஆனின் ஆயத்துகளை வஹாபிகள் தமது மனோ இச்சைப்படியான பொருளால் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி கேட்கும் முஸ்லிம்கள் மீது திருப்பினர். இப்னு அப்தில் வஹாபு, ஸெய்யித் குதுப் போன்ற பிரதான வஹாபித் தலைவர்களால் இந்த நச்சுக் கருத்துக்கள் தமது புத்தகங்களில் எழுதப்பட்டது.


((...... وسعى على جاره بالسيف ورماه بالشرك، قال قلت يا نبي الله أيهما أولى بالشرك المرمي أم الرامي قال بل الرامي )) ( مسند أحمد ) 


கடைசி காலத்தில் வரும் ஒரு கூட்டம் முஸ்லிம்களை "முஷ்ரிக்கு" என்று கூறுவதாகவும், அப்படிக் கூறுபவர்களே சிர்க்குக்கு பாத்திரமானவர்கள் என்பதாகவும், அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வதாகவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். ( முஸ்னத் அஹ்மத்)

மூன்றாம் கட்டம் :- அரபு நாட்டு பெற்றோல் பணத்துக்கு அடிமையான இப்னுபாஸ், அல்பானி, உஸைமீன் இன்னும் ஏராளமான அண்மைக்கால வஹாபித் தலைவர்களால் நூற்றுக் கணக்கான வஹாபி இயக்கங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்டு, பெற்றோல் பணத்தின் உதவியால், சகல நாடுகளிலும் வஹாபி மௌலவிகள் விலைக்கு வாங்கப்பட்டு, வீடு விடாக வஹாபி பிரச்சாரம் நுழைந்தது. ஒரு வஹாபி இயக்கத்தின் வேகத்தில் திருப்தியடையாத வஹாபிகள் சிலர் சேர்ந்து வேறொரு தீவிரமான இயக்கத்தை உண்டாக்குவர். பெற்றோல் பணம் இவர்களிடம் தங்கு தடையின்றி தாராளமாக வேலை செய்தது. கல்வி நிலையங்கள், சமூக சேவை நிலையங்கள், பிரச்சார ஊடகங்கள் என்று எல்லாமே வஹாபி மயமாயின. "காலையில் முஸ்லிமாக எழுபவர் மாலையாகும் போது காபிராக மாறி விடுவார்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தது போன்று ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் வேகமாக வஹாபிகளாக மாற்றப்பட்டனர். (பார்க்க ஹதீஸ் : எமது புத்தகம் : நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி, பக்கம் 26). முஸ்லிமைக் காபிர் என்று கூறுபவர் அவரே காபிராக மாறுவது, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று நம்புவது போன்ற வழிகேட்ட கொள்கைகளால் அவர்கள் காபிர்களாக மாறுகிறார்கள்.

"இஸ்லாம் அநாதரவாக ஆரம்பித்தது. அதே போன்று ஆநாதரவான நிலை ஏற்படும்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த விதமாக, வஹாபிகள் வேகமாக அதிகரிப்பதும், வஹாபிகளுடன் தொடர்புகளை வைத்துக்கொள்பவர்களுக்கு பல வகையான வசதிகள் கிடைப்பதும், ஸுன்னத் வல்ஜமாஅத்திலேயே ஸப்ர் ஆக இருப்பவர்கள் நாளுக்கு நாள் குறைந்தும், ஏராளமான சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும், ஆளாகியும் வருவதை இன்று சகல ஊர்களிலம் நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா ? ( பார்க்க ஹதீஸ் : மேற்படி புத்தகம் பக்கம் 77 )


நான்காம் கட்டம் :- இது காலவரை வஹாபியத்து என்பது ஏதோ ஆதாரங்களைக் காட்டி முஸ்லிம்களைத் திருப்பும் தஃவா இயக்கம் என்றே பொதுமக்கள் நம்பியிருந்தார்கள். இவ்வாறு பெற்றோல் பணத்தின் உதவியால் உலகின் எல்லா நாடுகளிலும் வஹாபியத்து வேகமாகப் பரவி, வஹாபிக் கொள்கையை வலுப்படுத்திக்கொண்ட பின்னர், இப்போது அதன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது. "உங்களில் ஒரு கூட்டம் தோன்றும். குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு கீழ் (இதயத்துக்கு) இறங்கமாட்டாது. அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள் . . . . . ." ( அஹ்மது ) என்ற ஹதீஸில் எச்சரிக்கப்பட்டதற்கிணங்க, இப்போது வஹாபியத்து அதன் அடுத்த நான்காம் கட்ட பரிணாம வளர்ச்சியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அமெரிக்காவால் ஆயுதம் கொடுத்து உருவாக்கப்பட்ட பின்லாடனின் அல்காஇதா இயக்கத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக, தோன்றியுள்ள தாஇஷ் (ISIS) இயக்கம் ரஸூலுல்லாஹ்விடம் உதவி தேடும் அத்தனை பேரும் முஷ்ரிக்குகள் என்று கூறி, அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும், அப்படி உதவி தேடுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய நபிமார்கள், அவ்லியாக்களின் கப்ருகளை உடைத்து நொறுக்க வேண்டும் என்றும், ரஸூலுல்லாஹ்வின் கப்ரு சரீபை மஸ்ஜிதுந் நபவியைவிட்டும் வேறாக்கி, ரஸூலுல்லாஹ்விடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கொலை செய்வதிலும், இப்போது தாஇஷ் (ISIS) என்ற அதி தீவிர வஹாபி கவாரிஜ் இயக்கம் ஈடுபட்டுள்ளது.

அடுத்த கட்டம் :- الله أعلم அல்லாஹ்வே மிக அறிந்தவன். இன்னும் எத்தனை நாடுகளில் தாஇஷ் ஆதிக்கம் விரிவடையும், எவ்வளவு காலத்துக்கு அது அட்டூழியம் புரியும் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன். கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் இன்னும் ஏராளமான சம்பவங்கள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

(குறிப்பு : கடைசி காலத்தில் என்னென்ன மார்க்க பித்னாக்கள் தோன்றும், உலக முடிவு நடைபெறுவது எவ்வாறு என்பது பற்றி, அல்லாஹ்வின் கிருபையால் நான் நூற்றுக்கும் அதிகமான கிதாபுகள் ஊடாக ஆராய்ச்சி செய்யத் துவங்கி சுமார் நாட்பது வருடங்களாகின்றன. புகாரித் தக்கியாவில் எமது நிர்வாகம் இருந்த 1996, 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் ஏராளமான பயான்களில் அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் ஏராளமான குர்அன் ஹதீஸ் ஆதாரங்களை தொடரான மாதாந்த பயான்கள் மூலம் நாம் பொதுமக்கள் முன் வைத்தோம். அதன்பின்னர் பள்ளத் தக்கியா சதிகாரரால் எமது பதவி பறிக்கப்பட்டதால் அப்படியான விசேடமான ( இலங்கையில் எங்கும் இதுவரை கேட்க முடியாத) அவ்வகை பயான்களுக்கு தடை போடப்பட்டது. 2002 இல் நான் யெமன் போய் வந்த போது, உலக முடிவு பற்றி விசேடமான சம்பவங்கள் நிறைந்த ஒரு பயான் பள்ளிக்கூடத்தில் நடாத்துவதற்கு தயாராகி பயானுக்கு சில நாட்களே இருக்கும் போது. எனக்கெதிரான இன்னொரு பெரிய சதிவலை பின்னப்பட்டது. எனது பயானை பள்ளத் தக்கியாவின் அறிவு வாசனையே அற்ற சதிகார ஜாஹில்கள் அங்கீகரித்த பின்னரே நான் பயான் பண்ண வேண்டும் என்று வற்புருத்தப்பட்டேன். இதன் காரணமாக அந்த பயானை ஒத்தி வைத்தோம். இன்ஷா அல்லாஹ் அறிவுத்தாகம் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்தால் எதிர்காலத்தில் அப்படியான விசேட பயான்களைத் தொடர நினைத்துள்ளோம்.)

பயங்கரவாத வஹாபி இயக்கங்கள் உருவாகக் காரணம் யார்?
இன்ஷா அல்லாஹ் அடுத்து பார்ப்போம்.