Sunday, March 1, 2015

மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

தொடர் 02

வஹாபியத்தின் பரிணாம வளர்ச்சி :-

முதல் கட்டம் :- ஸுன்னத்து வல்ஜமாஅத்து அவ்லியாக்கள், இமாம்களுக்கு அல்லாஹு தஆலா கொடுத்திருந்த ஆத்ம சக்தி, அபார அறிவுத்திறனைக் கண்டும், ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆட்சியதிகாரம் ஆகியவற்றைக் கண்டும், அவர்கள் மீது வஹாபி தலைவர்களுக்கு பொறாமை கொள்ளவைத்தான் சைத்தான். நல்லோர்கள் மீது பொறாமை கொண்டதாலேயே வழிகேடுகள் தோன்றியதாக புனித அல் குர்ஆன் கூறுவதை 2:213 இல் பாருங்கள். ஆதம் நபிக்கு அல்லாஹு தஆலா கொடுத்த அந்தஸ்தின் காரணமாக சைத்தான் பொறாமை கொண்டதால் தான் அவன் அவர்களுக்கு ஸுஜூது செய்யவில்லை. ஆகவே இமாம்கள், அவ்லியாக்கள் மீது பொறாமை கொண்டதாலேயே வஹாபித் தலைவர்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை எதிர்த்து புது இயக்கங்களை உண்டாக்குகின்றார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா?

இரண்டாம் கட்டம் :- மார்க்க நிபுணர்களான இமாம்கள் மீது பொறாமை காரணமாக, வழி கெட்ட தலைவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு இமாம்களின் விளக்கங்களைப் பாராமல், குர்ஆனுக்கு தம் இஷ்டப்படி (மனோ இச்சைப்படி) பொருள் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடுவது சிர்க்கு என்றும் கூறும் புதிய தவ்ஹீது (புதிய மார்க்கம்) பிறந்தது. இஸ்லாத்தை எதிர்க்கும் முஷ்ரிக்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்ற குர்ஆனின் ஆயத்துகளை வஹாபிகள் தமது மனோ இச்சைப்படியான பொருளால் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி கேட்கும் முஸ்லிம்கள் மீது திருப்பினர். இப்னு அப்தில் வஹாபு, ஸெய்யித் குதுப் போன்ற பிரதான வஹாபித் தலைவர்களால் இந்த நச்சுக் கருத்துக்கள் தமது புத்தகங்களில் எழுதப்பட்டது.


((...... وسعى على جاره بالسيف ورماه بالشرك، قال قلت يا نبي الله أيهما أولى بالشرك المرمي أم الرامي قال بل الرامي )) ( مسند أحمد ) 


கடைசி காலத்தில் வரும் ஒரு கூட்டம் முஸ்லிம்களை "முஷ்ரிக்கு" என்று கூறுவதாகவும், அப்படிக் கூறுபவர்களே சிர்க்குக்கு பாத்திரமானவர்கள் என்பதாகவும், அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வதாகவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். ( முஸ்னத் அஹ்மத்)

மூன்றாம் கட்டம் :- அரபு நாட்டு பெற்றோல் பணத்துக்கு அடிமையான இப்னுபாஸ், அல்பானி, உஸைமீன் இன்னும் ஏராளமான அண்மைக்கால வஹாபித் தலைவர்களால் நூற்றுக் கணக்கான வஹாபி இயக்கங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்டு, பெற்றோல் பணத்தின் உதவியால், சகல நாடுகளிலும் வஹாபி மௌலவிகள் விலைக்கு வாங்கப்பட்டு, வீடு விடாக வஹாபி பிரச்சாரம் நுழைந்தது. ஒரு வஹாபி இயக்கத்தின் வேகத்தில் திருப்தியடையாத வஹாபிகள் சிலர் சேர்ந்து வேறொரு தீவிரமான இயக்கத்தை உண்டாக்குவர். பெற்றோல் பணம் இவர்களிடம் தங்கு தடையின்றி தாராளமாக வேலை செய்தது. கல்வி நிலையங்கள், சமூக சேவை நிலையங்கள், பிரச்சார ஊடகங்கள் என்று எல்லாமே வஹாபி மயமாயின. "காலையில் முஸ்லிமாக எழுபவர் மாலையாகும் போது காபிராக மாறி விடுவார்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தது போன்று ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் வேகமாக வஹாபிகளாக மாற்றப்பட்டனர். (பார்க்க ஹதீஸ் : எமது புத்தகம் : நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி, பக்கம் 26). முஸ்லிமைக் காபிர் என்று கூறுபவர் அவரே காபிராக மாறுவது, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று நம்புவது போன்ற வழிகேட்ட கொள்கைகளால் அவர்கள் காபிர்களாக மாறுகிறார்கள்.

"இஸ்லாம் அநாதரவாக ஆரம்பித்தது. அதே போன்று ஆநாதரவான நிலை ஏற்படும்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த விதமாக, வஹாபிகள் வேகமாக அதிகரிப்பதும், வஹாபிகளுடன் தொடர்புகளை வைத்துக்கொள்பவர்களுக்கு பல வகையான வசதிகள் கிடைப்பதும், ஸுன்னத் வல்ஜமாஅத்திலேயே ஸப்ர் ஆக இருப்பவர்கள் நாளுக்கு நாள் குறைந்தும், ஏராளமான சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும், ஆளாகியும் வருவதை இன்று சகல ஊர்களிலம் நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா ? ( பார்க்க ஹதீஸ் : மேற்படி புத்தகம் பக்கம் 77 )


நான்காம் கட்டம் :- இது காலவரை வஹாபியத்து என்பது ஏதோ ஆதாரங்களைக் காட்டி முஸ்லிம்களைத் திருப்பும் தஃவா இயக்கம் என்றே பொதுமக்கள் நம்பியிருந்தார்கள். இவ்வாறு பெற்றோல் பணத்தின் உதவியால் உலகின் எல்லா நாடுகளிலும் வஹாபியத்து வேகமாகப் பரவி, வஹாபிக் கொள்கையை வலுப்படுத்திக்கொண்ட பின்னர், இப்போது அதன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது. "உங்களில் ஒரு கூட்டம் தோன்றும். குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு கீழ் (இதயத்துக்கு) இறங்கமாட்டாது. அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள் . . . . . ." ( அஹ்மது ) என்ற ஹதீஸில் எச்சரிக்கப்பட்டதற்கிணங்க, இப்போது வஹாபியத்து அதன் அடுத்த நான்காம் கட்ட பரிணாம வளர்ச்சியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அமெரிக்காவால் ஆயுதம் கொடுத்து உருவாக்கப்பட்ட பின்லாடனின் அல்காஇதா இயக்கத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக, தோன்றியுள்ள தாஇஷ் (ISIS) இயக்கம் ரஸூலுல்லாஹ்விடம் உதவி தேடும் அத்தனை பேரும் முஷ்ரிக்குகள் என்று கூறி, அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும், அப்படி உதவி தேடுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய நபிமார்கள், அவ்லியாக்களின் கப்ருகளை உடைத்து நொறுக்க வேண்டும் என்றும், ரஸூலுல்லாஹ்வின் கப்ரு சரீபை மஸ்ஜிதுந் நபவியைவிட்டும் வேறாக்கி, ரஸூலுல்லாஹ்விடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கொலை செய்வதிலும், இப்போது தாஇஷ் (ISIS) என்ற அதி தீவிர வஹாபி கவாரிஜ் இயக்கம் ஈடுபட்டுள்ளது.

அடுத்த கட்டம் :- الله أعلم அல்லாஹ்வே மிக அறிந்தவன். இன்னும் எத்தனை நாடுகளில் தாஇஷ் ஆதிக்கம் விரிவடையும், எவ்வளவு காலத்துக்கு அது அட்டூழியம் புரியும் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன். கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் இன்னும் ஏராளமான சம்பவங்கள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

(குறிப்பு : கடைசி காலத்தில் என்னென்ன மார்க்க பித்னாக்கள் தோன்றும், உலக முடிவு நடைபெறுவது எவ்வாறு என்பது பற்றி, அல்லாஹ்வின் கிருபையால் நான் நூற்றுக்கும் அதிகமான கிதாபுகள் ஊடாக ஆராய்ச்சி செய்யத் துவங்கி சுமார் நாட்பது வருடங்களாகின்றன. புகாரித் தக்கியாவில் எமது நிர்வாகம் இருந்த 1996, 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் ஏராளமான பயான்களில் அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் ஏராளமான குர்அன் ஹதீஸ் ஆதாரங்களை தொடரான மாதாந்த பயான்கள் மூலம் நாம் பொதுமக்கள் முன் வைத்தோம். அதன்பின்னர் பள்ளத் தக்கியா சதிகாரரால் எமது பதவி பறிக்கப்பட்டதால் அப்படியான விசேடமான ( இலங்கையில் எங்கும் இதுவரை கேட்க முடியாத) அவ்வகை பயான்களுக்கு தடை போடப்பட்டது. 2002 இல் நான் யெமன் போய் வந்த போது, உலக முடிவு பற்றி விசேடமான சம்பவங்கள் நிறைந்த ஒரு பயான் பள்ளிக்கூடத்தில் நடாத்துவதற்கு தயாராகி பயானுக்கு சில நாட்களே இருக்கும் போது. எனக்கெதிரான இன்னொரு பெரிய சதிவலை பின்னப்பட்டது. எனது பயானை பள்ளத் தக்கியாவின் அறிவு வாசனையே அற்ற சதிகார ஜாஹில்கள் அங்கீகரித்த பின்னரே நான் பயான் பண்ண வேண்டும் என்று வற்புருத்தப்பட்டேன். இதன் காரணமாக அந்த பயானை ஒத்தி வைத்தோம். இன்ஷா அல்லாஹ் அறிவுத்தாகம் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்தால் எதிர்காலத்தில் அப்படியான விசேட பயான்களைத் தொடர நினைத்துள்ளோம்.)

பயங்கரவாத வஹாபி இயக்கங்கள் உருவாகக் காரணம் யார்?
இன்ஷா அல்லாஹ் அடுத்து பார்ப்போம். 

No comments:

Post a Comment