Friday, August 25, 2017

இஸ்ரேல் 25 வருடத்தில் அழியுமா?

25 வருடங்களில் இஸ்ரேல் அழியுமாம்
ஈரானின் புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அப்துர் ரஹீம் மூஸவியின்  சூளுரை இது.
(இது சம்பந்தாமாக எமது விமர்சனம் இப்போதைக்கு கூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.  ஏனெனில் இவ்விடயம் உலக முடிவு சம்பந்தப்பட்ட ஏராளமான ஹதீஸுகளுடன் சம்பந்தப்பட்டது.)
            ஈரானுடன் மோதும் எந்த நாடும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஈரான் தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றும், ஈரானின் இராணுவ பலமும் மனோபலமும் நிகரற்றது என்றும் அவர் கூறுகிறார்.
 
            பொதுவாக சக்தி மிக்க நாடுகள் தமது இராணுவ பலத்தை வெளிப்படுத்த இவ்வாறான கருத்துக்களை கூறுவது வழக்கம்.
ஆனால் கடந்த கால இரண்டு சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளினதும், பல அரபு நாடுகளினதும்  உதவியுடன் ஸதாம் ஹுஸைன் ஈரான் மீது யுத்தத்தை ஆரம்பித்த போது, அன்றைய தலைவர் குமைனி கூறினார் : ஈரானை அழிக்க ஸதாம் யுத்தத்தை ஆரம்பித்தார். ஆனால் யுத்தத்தை வெற்றியோடு முடிப்பது ஈரான்தான் என்று. ஆதே போன்று எட்டு வருட தொடரான யுத்தத்தின் பின்னர் ஸதாம் படு தோல்வியடைந்த பின்னரே ஈரான் யுத்தத்தை நிறுத்தியது.
அதே போன்று, 2006 – 2008 இல் லெபனான் ஹிஸ்புல்லாஹ் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது, ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எச்சரித்தார் : யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டாம், அதை நாம் தாம் முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதாக. அதே மாதிரி அந்த யுத்தத்தில் இஸ்ரேல் படுதோழ்வியடைந்தது. இஸ்ரேலின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் ஹிஸ்புல்லாஹ்வின் ரொக்கட்டுகள் சரமாரியான தாக்குதல்கள் நடாத்தின. அப்போது, யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வை "கெஞ்சிய" பின்னர் தான் அது யுத்தத்தை வெற்றியோடு நிறுத்திக் கொண்டது.
எனவே "சீஆ" என்பதற்காக ஈரானின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
25.8.2017

Tuesday, August 15, 2017

ஸிரியா வெற்றி

ஸிரியா , வெற்றிக்கு மேல் வெற்றி
எமது தூரதிருஷ்டிக்கு மாபெரும் வெற்றி
அரபு நாடுகளில், குறிப்பாக ஸிரியாவில் இக்வான் கவாரிஜ் வஹாபிகளின் "அரபு வசந்தம்" என்ற பொய் மூகமூடியணிந்த "அரபு நாசம்" பயங்கரவாத யுத்தம் 2011 இல் ஆரம்பமானது முதல் இதுவரை குறைந்தது ஒவ்வொரு மாதமும் நாம் இங்கே எழுதி வந்தோம் : இலங்கை வஹாபி தமிழ் பத்திரிகைகள் , ஸிரியா வீழ்ச்சி, அஸாத் வீழ்ச்சி என்றெல்லாம் புழுகித் தள்ளுவதெல்லாம் பொய், அஸாதும் ஸிரிய இராணுவமும் வெற்றிப் பாதையில் இருக்கிறது என்ற செய்திகளை நாம் எழுதி வருவது வாசகர்கள் அறிவீர்கள்.
ஸிரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ஸிரிய இராணுவத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஐந்தாறு வருடங்களாக கங்கணங்கட்டிக் கொண்டிருந்த ஜோர்தான் மன்னர் இப்போது ஸிரியாவுடன் இணங்கிப்  போக முன்வந்துள்ளார்.
அது மட்டுமல்ல, ஸிரிய – ஜோர்தான் மூடப்பட்டிருந்த எல்லையில் இருந்த ஜோர்தான் படைகளை வாபஸ் பெற்று எல்லைப் பொறுப்பை ஸிரிய படைகளின் வசம் ஒப்படைத்துள்ளார் ஜோர்தான் மன்னர்.
அது மட்டுமல்ல கூடிய சீக்கிரம் ஜோர்தான் – ஸிரிய இராஜ தந்திர உறவுகளும் ஏற்படலாம் என்று கட்டியம் கூறுகிறது இந்தக் கட்டுரை.
ஒரு கேள்வி :
யுத்தத்தில் ஸிரியா தான் வெற்றி பெறும் என்று எவ்வளவோ காலமாக ஜோர்தானை ஆளும் மன்னருக்கு ஐந்தாறு வருடங்களாக தெரியாத ' தூரதிருஷ்டி' , ஊரில் எந்தப் பதவியும் இல்லாமல் வீட்டுடன் இருக்கும் இந்த பாரிக்கு எப்படித்  தெரியும் ?
மத்திய கிழக்கில் ஒபாமாவின் வஹாபி ஆதரவு கொள்கை தோழ்வியடையும் என்று ஐந்தாறு வருடங்களாக கூறி, இன்று அது நிறைவேறியள்ளது. உலகத்தை ஆள வந்த ஒபாமாவுக்கு இல்லாத அரசியல் ஞானம் (நிர்வாக ஞானம்) , ஊரில் எதிலுமே நிர்வாகம் தரப்படாமல் சதிகாரரால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பாரிக்கு எப்படித் தெரியும்?
ஸிரியாவிலும், இராக்கிலும், லிபியாவிலும் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்த பல ஆயிரம் பில்லியன் டொலர்களை செலவிட்டு ஐந்தாறு வருடங்களாக போராடிய ஸவூதி மன்னரும், கட்டாரும் தோழ்வியடைவர் என்று ஐந்தாறு வருடங்களாக பல தடவை இங்கு எழுதி, அந்த மன்னர்களுக்கு இல்லாத இராஜ தந்திரம் இந்த பாரிக்கு எப்படித் தெரியும்?
ஆம், சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினை உண்டு !
"நிர்வாகம்" என்ற சொல்லின் ஆரம்ப எழுத்தான "நி" என்ற எழுத்தை ஆயிரத்துக்கு பிரித்து, அதில் ஒரு பங்குகூட நிர்வாகம் பற்றிய அறிவில்லாத வடிகட்டிய சதிகார மூடர்கள் இந்த பாரியை ஆள நினைப்பதால் தான் , இந்த ஊரிலும் இந்த நாட்டிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து வேகமாக அழிந்து, தவ், டீ.ஏ, ஜமாஅதே இஸ்லாமிய முதலான சகலவிதமான வஹாபி கவாரிஜ் கொள்கைகளும் வேகமாக வளர்கின்றன என்ற உண்மையை " சம்பந்தப்பட்டவர்கள்" எப்போது உணர்வார்களோ அன்று தான், (எமது 1996, 97, 98) போன்ற "ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலம்" மீண்டும் ஆரம்பமாகும் என்பதே ,  மேலே கூறிய எமது உலக அரசியல், நிர்வாக தூரதிருஷ்டிகளின் வெற்றிகள் மூலம் சதிகாரர்கள் படிக்க வேண்டிய பாடம் !
இது பெருமைக்காக எழுத வில்லை.
இந்த கஹடோவிடாவிலும் இலங்கையிலும் வழிகெட்ட கவாரிஜ் வஹாபி இயக்கங்கள் வளரும் வேகத்தை சகிக்க முடியாமல் வேதனையில் எழுதுவது !
சகல ஊர்களிலும் படித்த இளைஞர்கள் தரீக்காக்களை விட்டுவிட்டு, "நரக வழியான" கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஈமானை இழப்பதை சகிக்க முடியாத வேதனையில் எழுதுவது !
ஸிரிய – ஜோர்தான் உறவு பற்றிய செய்தி:
14.8.2017

Thursday, August 10, 2017

ஸிஸியின் அபார இராஜதந்திரம்

ஸிஸியின் இராஜதந்திரத்தை புகழும் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பயங்கரவாத இக்வான் அரசியல் தலைவர் முர்ஸியின் வாலைப் பிடித்ததால், மத்திய கிழக்கில் அமெரிக்கா படுதோழ்வி அடைந்தது. ஸவூதி, எகிப்து, எமிரேட்ஸ் லிபியா போன்ற பல நாடுகளின் நட்பை இழந்தது உலகறிந்த விடயம்.
ஒபாமாவை விட பயங்கரமான "முஸ்லிம் எதிர்ப்பு" கொள்கையுடன் அரசியலில் பிரவேசித்தார் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப். இதுவும் அனைவரும் அறிந்த விடயம்.
                ஆனால் பல தடவைகள் எகிப்து ஜனாதிபதி ஸிஸியுடன் தொடர்பு கொண்ட ட்ரம்ப், ஸிஸியின் கருத்துக்களாலும் நிகரற்ற சாதனைகளாலும் கவரப்பட்டு, பல விடயங்களில் ஸிஸியினால் ஆளப்படுகிறார்.
ஸிஸி அசைக்க முடியாத வீரர், எகிப்தின் பலமே மத்திய கிழக்கின் பலம், ஸிஸி விரும்பும் பயங்கரவாத ஒழிப்புக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு எதிர்காலம் உண்டு, கட்டார் பயங்கரவாதத்தின் ஆணிவேர் என்று ஸிஸி கூறுவது உண்மையே போன்ற கருத்தக்களை ஸிஸியிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளார் ட்ரம்ப். இதனை அமெரிக்க பிரபல பத்திரிகையான NEWSWEEK இல் அரசியல் ஆய்வாளர்கள் பகிரங்கப் படுத்தியுள்ளனர்.
அரபியிலும் ஆங்கிலத்திலும் உள்ள இச்செய்திகளை படித்தாவது, இது வரை காலமும் "ஸிஸி நிகரற்ற அரபு தலைவர்" என்று நாம் அடிக்கடி எமது ஊடகங்கள் மூலம் சொல்வதன் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். எமது கருத்துகளுக்கு மாற்றமாக இலங்கையில் உள்ள இக்வான் சார்பு தமிழ் வஹாபி பத்திரிகைகளும், சில இக்வான் பேச்சாளர்களும் பரப்பும் ஸிஸி விரோத கருத்துக்கள் உலக அரசியல் மேடையில் எடுபடாத போலியானவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
மத்திய கிழக்கு அரசியலில் நடப்பது என்ன என்பதை 2011 முதல் நாம் எழுதும் கருத்துக்களே அடிக்கடி காலத்தால் நிரூபிக்கப்படுகின்றன என்பதையும் வஹாபி இக்வான் பத்திரிகைகள் எழுதும் கருத்துக்கள் காலத்தால் பொய்ப்பிக்கப்படுகின்றன என்பதையும் அடிக்கடி நாம் இங்கு அனுபவ ஆதாரங்கள் மூலம் எடுத்துக் காட்டுவது ஏனென்றால், படித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இக்வான் வஹாபிகளின் போலியான "கவர்ச்சியான" கருத்துக்களில் மயங்கி , மத்திய கிழக்கு விவகாரத்தில் மட்டுமல்ல, மார்க்க விடயங்களிலும் தமது ஈமானை இழக்கக்கூடாது என்ற நல்ல நோக்கம் தான். அதுவல்லாமல் இதனால் நாம் அடையும் நன்மை ஒன்றுமில்லை. எமக்கு யாரும் தொழில் தரவுமில்லை, பணம் தரவுமில்லை, பதவி தரவுமில்லை என்பதை கஹடோவிடா மக்கள் யாவரும் அறிவர்.
அல் அஹ்ராம் அரபு பத்திரிகை :
NEWSWEEK அமெரிக்க பத்திரிகை :
NEWSWEEK அமெரிக்க பத்திரிகை :
10.8.2017

Tuesday, August 1, 2017

அல் அக்ஸா ஆபத்தில் !

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் 27.7.2017 அன்று மகிழ்ச்சியான செய்தியை பலஸ்தீனிலிருந்து படித்தோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் அஸ்ர் தொழுகைக்காக அணியணியாகச் சென்றதே அந்தச் செய்தி.
இன்று அதற்கு நேரெதிரான கவலைமிக்க பயங்கரமான செய்தி கிடைத்துள்ளது. இன்று 1.8.2017 அதிகாலை முதல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சகல முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டு, இஸ்ரேல் இராணுவத்தின் துணையுடன் பலநூற்றுக் கணக்கான யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முற்றாக கைப்பற்றியுள்ளனர். யூதர்களின் வணக்கங்களையும் அதனுள் புரிந்துள்ளனர்.
(வீடியோ)
என்ன நடக்கப் போகின்றதோ அல்லாஹு அஃலம்.
ட்ரம்ப் திரைமறைவில் யூத ஆக்கிரமிப்புக்கு பூரண ஆதரவு.
பலஸ்தீன் – யூத "மார்க்க யுத்தமொன்று" வெடிக்குமா?
அகமான அரபு அரசியல் தலைவர்கள் வேறு விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓரிரு அரபுத் தலைவர்கள் வாயளவில் "கடும் கண்டனம்" தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதட்ட நிலை தொடருமா தற்காலிகமாக நீங்குமா என்பது தெரியாது. எனினும், அல் அக்ஸாவில் யஹூதிகளின் ஆதிக்கம் மேலோங்குவதும், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வரும் போது அவர்களை யஹூதிகள் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் பல நாட்கள் முற்றுகையிடுவதும், அப்போது தஜ்ஜால் வருவதும், யூதர்கள் தஜ்ஜாலின் தலைமையில் போராடுவதும், கவாரிஜ்கள் (இப்போது பயங்கரவாத வஹாபிகளாக இருப்பவர்கள்) தஜ்ஜாலுடன் இணைந்து பலஸ்தீன் முஸ்லிம்களை எதிர்ப்பதும், அப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து தஜ்ஜாலை கொலை செய்வதும், அத்துடன் சகல யூதர்களையும் முஸ்லிம்கள் கொலை செய்வதும், பெரும் கற்களுக்கும் மரங்களுக்கும் யூதர்கள் மறைந்துகொள்ளும் போது, "எனக்குப் பின்னால் யூதன் இருக்கின்றான் அவனைக் கொலை செய்யவும்" என்று அந்த கற்களும் மரங்களும் முஸ்லிம்களைப் பார்த்து பேசும் என்பதும், கர்கத்  غرقد என்ற மரம் மட்டும் யூதர்களுக்கு பாதுகாப்பளிக்கும் (அதனால் முஸ்லிம்கள் அம்மரங்களில் ஒளித்திருக்கும் யூதர்களை கொலை செய்ய இலகுவாக இருக்கும்) என்ற எதிர்காலத் தகவல்கள் அனைத்தும் ஹதீஸ்களில் ஏற்கனவே கூறப்பட்டுத்தான் இருக்கின்றன.
1.8.2017