25 வருடங்களில் இஸ்ரேல் அழியுமாம்
ஈரானின் புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அப்துர் ரஹீம் மூஸவியின் சூளுரை இது.
(இது சம்பந்தாமாக எமது விமர்சனம் இப்போதைக்கு கூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் இவ்விடயம் உலக முடிவு சம்பந்தப்பட்ட ஏராளமான ஹதீஸுகளுடன் சம்பந்தப்பட்டது.)
ஈரானுடன் மோதும் எந்த நாடும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஈரான் தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றும், ஈரானின் இராணுவ பலமும் மனோபலமும் நிகரற்றது என்றும் அவர் கூறுகிறார்.
பொதுவாக சக்தி மிக்க நாடுகள் தமது இராணுவ பலத்தை வெளிப்படுத்த இவ்வாறான கருத்துக்களை கூறுவது வழக்கம்.
ஆனால் கடந்த கால இரண்டு சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளினதும், பல அரபு நாடுகளினதும் உதவியுடன் ஸதாம் ஹுஸைன் ஈரான் மீது யுத்தத்தை ஆரம்பித்த போது, அன்றைய தலைவர் குமைனி கூறினார் : ஈரானை அழிக்க ஸதாம் யுத்தத்தை ஆரம்பித்தார். ஆனால் யுத்தத்தை வெற்றியோடு முடிப்பது ஈரான்தான் என்று. ஆதே போன்று எட்டு வருட தொடரான யுத்தத்தின் பின்னர் ஸதாம் படு தோல்வியடைந்த பின்னரே ஈரான் யுத்தத்தை நிறுத்தியது.
அதே போன்று, 2006 – 2008 இல் லெபனான் ஹிஸ்புல்லாஹ் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது, ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எச்சரித்தார் : யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டாம், அதை நாம் தாம் முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதாக. அதே மாதிரி அந்த யுத்தத்தில் இஸ்ரேல் படுதோழ்வியடைந்தது. இஸ்ரேலின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் ஹிஸ்புல்லாஹ்வின் ரொக்கட்டுகள் சரமாரியான தாக்குதல்கள் நடாத்தின. அப்போது, யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஹிஸ்புல்லாஹ்வை "கெஞ்சிய" பின்னர் தான் அது யுத்தத்தை வெற்றியோடு நிறுத்திக் கொண்டது.
எனவே "சீஆ" என்பதற்காக ஈரானின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
25.8.2017
No comments:
Post a Comment