Tuesday, August 15, 2017

ஸிரியா வெற்றி

ஸிரியா , வெற்றிக்கு மேல் வெற்றி
எமது தூரதிருஷ்டிக்கு மாபெரும் வெற்றி
அரபு நாடுகளில், குறிப்பாக ஸிரியாவில் இக்வான் கவாரிஜ் வஹாபிகளின் "அரபு வசந்தம்" என்ற பொய் மூகமூடியணிந்த "அரபு நாசம்" பயங்கரவாத யுத்தம் 2011 இல் ஆரம்பமானது முதல் இதுவரை குறைந்தது ஒவ்வொரு மாதமும் நாம் இங்கே எழுதி வந்தோம் : இலங்கை வஹாபி தமிழ் பத்திரிகைகள் , ஸிரியா வீழ்ச்சி, அஸாத் வீழ்ச்சி என்றெல்லாம் புழுகித் தள்ளுவதெல்லாம் பொய், அஸாதும் ஸிரிய இராணுவமும் வெற்றிப் பாதையில் இருக்கிறது என்ற செய்திகளை நாம் எழுதி வருவது வாசகர்கள் அறிவீர்கள்.
ஸிரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ஸிரிய இராணுவத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஐந்தாறு வருடங்களாக கங்கணங்கட்டிக் கொண்டிருந்த ஜோர்தான் மன்னர் இப்போது ஸிரியாவுடன் இணங்கிப்  போக முன்வந்துள்ளார்.
அது மட்டுமல்ல, ஸிரிய – ஜோர்தான் மூடப்பட்டிருந்த எல்லையில் இருந்த ஜோர்தான் படைகளை வாபஸ் பெற்று எல்லைப் பொறுப்பை ஸிரிய படைகளின் வசம் ஒப்படைத்துள்ளார் ஜோர்தான் மன்னர்.
அது மட்டுமல்ல கூடிய சீக்கிரம் ஜோர்தான் – ஸிரிய இராஜ தந்திர உறவுகளும் ஏற்படலாம் என்று கட்டியம் கூறுகிறது இந்தக் கட்டுரை.
ஒரு கேள்வி :
யுத்தத்தில் ஸிரியா தான் வெற்றி பெறும் என்று எவ்வளவோ காலமாக ஜோர்தானை ஆளும் மன்னருக்கு ஐந்தாறு வருடங்களாக தெரியாத ' தூரதிருஷ்டி' , ஊரில் எந்தப் பதவியும் இல்லாமல் வீட்டுடன் இருக்கும் இந்த பாரிக்கு எப்படித்  தெரியும் ?
மத்திய கிழக்கில் ஒபாமாவின் வஹாபி ஆதரவு கொள்கை தோழ்வியடையும் என்று ஐந்தாறு வருடங்களாக கூறி, இன்று அது நிறைவேறியள்ளது. உலகத்தை ஆள வந்த ஒபாமாவுக்கு இல்லாத அரசியல் ஞானம் (நிர்வாக ஞானம்) , ஊரில் எதிலுமே நிர்வாகம் தரப்படாமல் சதிகாரரால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பாரிக்கு எப்படித் தெரியும்?
ஸிரியாவிலும், இராக்கிலும், லிபியாவிலும் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்த பல ஆயிரம் பில்லியன் டொலர்களை செலவிட்டு ஐந்தாறு வருடங்களாக போராடிய ஸவூதி மன்னரும், கட்டாரும் தோழ்வியடைவர் என்று ஐந்தாறு வருடங்களாக பல தடவை இங்கு எழுதி, அந்த மன்னர்களுக்கு இல்லாத இராஜ தந்திரம் இந்த பாரிக்கு எப்படித் தெரியும்?
ஆம், சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினை உண்டு !
"நிர்வாகம்" என்ற சொல்லின் ஆரம்ப எழுத்தான "நி" என்ற எழுத்தை ஆயிரத்துக்கு பிரித்து, அதில் ஒரு பங்குகூட நிர்வாகம் பற்றிய அறிவில்லாத வடிகட்டிய சதிகார மூடர்கள் இந்த பாரியை ஆள நினைப்பதால் தான் , இந்த ஊரிலும் இந்த நாட்டிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து வேகமாக அழிந்து, தவ், டீ.ஏ, ஜமாஅதே இஸ்லாமிய முதலான சகலவிதமான வஹாபி கவாரிஜ் கொள்கைகளும் வேகமாக வளர்கின்றன என்ற உண்மையை " சம்பந்தப்பட்டவர்கள்" எப்போது உணர்வார்களோ அன்று தான், (எமது 1996, 97, 98) போன்ற "ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலம்" மீண்டும் ஆரம்பமாகும் என்பதே ,  மேலே கூறிய எமது உலக அரசியல், நிர்வாக தூரதிருஷ்டிகளின் வெற்றிகள் மூலம் சதிகாரர்கள் படிக்க வேண்டிய பாடம் !
இது பெருமைக்காக எழுத வில்லை.
இந்த கஹடோவிடாவிலும் இலங்கையிலும் வழிகெட்ட கவாரிஜ் வஹாபி இயக்கங்கள் வளரும் வேகத்தை சகிக்க முடியாமல் வேதனையில் எழுதுவது !
சகல ஊர்களிலும் படித்த இளைஞர்கள் தரீக்காக்களை விட்டுவிட்டு, "நரக வழியான" கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஈமானை இழப்பதை சகிக்க முடியாத வேதனையில் எழுதுவது !
ஸிரிய – ஜோர்தான் உறவு பற்றிய செய்தி:
14.8.2017

No comments:

Post a Comment