Sunday, August 21, 2016

விவாதம் நடக்குமா ?

    விவாதத்துக்கு அழைத்த முஜாஹித் மௌலவி ஓடி ஒழிப்பது ஏன் ?
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாப் M.N.M.ஜவ்ஸி அவர்கள்
கஹட்டோவிட்ட.
சில வருடங்களுக்கு முன்னர், ஜனாப் முஜாஹித் மௌலவி அவர்கள் , கஹட்டோவிட்ட.  "ஜாமிஉத் தவ்ஹீதில்"  ஜனாப் A.H.அப்துல் பாரி ஆலிம் அவர்களை விவாதத்துக்கு பகிரங்கமாக அழைத்திருந்தமை யாவரும் அறிந்ததே. எந்த நிபந்தனையும் அவர் கூறுவதில்லை என்றும், விவாத இடத்தையும், காலத்தையும் மட்டும் அறிவித்தால் போதும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
                எமக்கு சமூகப் பிரச்சினைகள் பல தடையாக இருந்ததால் நாம் அப்போது அவரின் விவாத சவாலை ஏற்க முன்வர வில்லை. இப்போது அதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
இதனடிப்படையில் , 29.7.2016 முதல், கடந்த சில தினங்களாக ஜனாப் முஜாஹித் மௌலவி அவர்களுடன் பேசுவதற்கு ஜனாப்களான G.A.M. ஸல்மான், அல் ஹாஜ் M.A.M.அர்சத் ஆகியோர், பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றும்  தொடர்பு கிடைக்காததாலும், அல்ஹாஜ் மௌலவி M.N.M.பர்தி அவர்கள் தொடர்பு கொண்ட போது, பின்னர் பேசுவதாக கூறிய அவர், இது வரை தொடர்பு கொள்ளாததாலும்,
                இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் அந்த விவாதத்தை நடாத்துவதற்கு ஏற்ற விதத்தில், இடம், காலம் என்பவற்றை நிர்ணயிப்பதற்காக , இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தாங்களுடன் நாம் பேசுவதற்கு , ஒரு தினத்தை எமக்கு அறிவிக்கும்படி பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஸுன்னத்து வல் ஜமாஅத்து வாலிபர் ஒன்றியம்
126/2 Al Madhrasathul Musthafaviyyah
Kahatowita
திகதி 8.8.2016

விவாத ஏற்பாடு !
2008 இல் அப்துல் பாரி ஆலிம் அவர்களை விவாதத்துக்கு அழைத்த மௌலவி முஜாஹித் அவர்கள், விவாத ஒப்பந்தத்தின் போது, பின்வாங்கியதால் அப்போது விவாதம் நடைபெற வில்லை.
சில வருடங்களுக்கு முன்னர், மீண்டும் அப்துல் பாரி ஆலிம் அவர்களுக்கு "இக்கட்டான சூழ்நிலையில்" விவாதத்துக்கு அழைத்திருந்தார் மௌலவி முஜாஹித் அவர்கள். ஆனால் எமக்கு இப்போது விவாதத்தை நடாத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
மௌலவி முஜாஹித் அவர்களும் தற்போது இலங்கையில் இருப்பதால், கடந்த 5.8.2016 முதல் அப்துல் பாரி ஆலிம் அவர்கள் சார்பாக மூவர், முஜாஹித் மௌலவி அவர்களுடன் விவாத ஏற்பாடு பற்றிப் பேச தொலைபேசி மூலமும் , SMS மூலமும் கொண்ட தொடர்புகள் பலனளிக்காமையினால், 9.8.2016 இல் முஜாஹித் மௌலவியின் ஆதரவாளர்  ஒருவரிடம் , விவாதத்தை அவசரமாக நடாத்துமாறு கோரி, மேலே உள்ள கடிதம்  கையளிக்கப்பட்டது.
எனவே இன்னும் ஓரிரு வாரத்திற்குள் இந்த விவாதத்தை நடாத்துவதற்கு மௌலவி அவர்கள் முன்வருவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
தொடர்புகளுக்கு:
அல் ஹாஜ் M.A.M.அர்சத் : 0773331978
ஜனாப் G.A.M.ஸல்மான் : 0777566636
                                                                                இப்படிக்கு
ஸுன்னத்து வல்ஜமாஅத்து வாலிபர் ஒன்றியம்
126/2 Almadhrasathul Musthafaviyyah
Kahatowita.
18.8.2016


Monday, August 15, 2016

அக்ஸாவில் ஊடுருவல்

மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் ஊடுருவல் !
                400 க்கு மேற்பட்ட யூத ஆக்கிரமிப்பாளர்கள் , இஸ்ரேல் இராணுவத்தின் உதவியுடன், இன்று 14.8.2016 மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலவந்தமாக ஊடுருவி ஆக்கிரமிப்புச் செய்தனர்.
வீடியோ :
பலஸ்தீன் அரசும், மஸ்ஜுதுல் அக்ஸா நிர்வாகமும் இது பற்றி ஆராய உடனடியாக அரபு, இஸ்லாமிய உச்சி மாநாட்டைக் கூட்டுமாறும், ஐ.நா. சபை உடனடியாக இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தலையிடுமாறும் வேண்டியுள்ளன.
எமது கருத்து :
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மடியில் உறங்கி ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள அரபுத் தலைவர்கள் மாநாடு கூடி, குளிர்பானங்கள் குடித்து, வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, தமது "கடுமையான கண்டனத்தை" தெரிவித்துவிட்டு வருவார்கள். இது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும். ஈரான் வாயளவில் இஸ்ரேலை எதிர்க்கும். அரபு நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்று, அரபு நாடுகள் மீதுள்ள எதிர்ப்பைக் கொட்டித் தீர்க்க இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்தும். அவ்வளவு தான்.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும் வரை அரபு நாடுகள் வெறும் கண் துடைப்பு நாடகம் தான் நடிக்கும்.           14.8.2016
ஸிரியாவில் ISIS விரட்டியடிப்பு !
ஸிரியாவின் வடக்கில் உள்ள மன்பஜ் நகரத்திலிருந்து ISIS (வஹாபி) பயங்கரவாதிகளை , அமெரிக்காவின் தலைமையில் போராடும் குர்திஷ் படைகள் இன்று விரட்டியடித்துள்ளன. குர்திஷ் படைகள் ஸிரிய அரச படைகளையும் எதிர்த்து, தமக்கென தனி நாடு அமைக்கும் நோக்கில் போராடுகின்றனர். எனவே ISIS பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டது நல்ல காரியம் என்றாலும்கூட, ஸிரியாவைத் துண்டாடும் அமெரிக்க திட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இதனைக் கருத முடியும்.
14.8.2016

திருந்துகிறார் அர்துகான் ?

திருந்துகிறார் அர்துகான் ?
1-  குவைத் பத்தரிகை "அல்கபஸ்" செய்தி :-
ரஷ்ய நகரமான சென்.பீட்டர்ஸ்பேர்க்கில் நேற்று துருக்கி ஜனாதிபதி அர்துகானும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் மிக முக்கிய சந்திப்பு. பல கோணங்களில் இச்சந்திப்பு மத்திய கிழக்கு அரசியலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இருக்கின்றது.
இச்சந்திப்பின் ஆரம்பமாக அர்துகானை புட்டின் வரவேற்கும் படத்தை குவைத் பத்திரிகை "அல் கபஸ்" வெளியிட்டுள்ளது.
சுமார் மூன்று மாத யுத்த நிறுத்தத்தின் பின் யெமனில் நேற்று மீண்டும் ஸவூதி தலைமையிலான அரபு நாடுகளின் தாக்குதல் ஆரம்பமானது பற்றியும் இதே பத்திரிகையில் காணலாம்.
2- ஈரான் டிவி கலந்துரையாடல் :-
அர்துகான் ஸிரிய அரசாங்கத்தை எதிர்ப்பதில் துவங்கிய பகை, சென்ற வருடம் ரஷ்யாவின் யுத்த விமானத்தை ஸிரியாவில் சுட்டு வீழ்த்தியதால் கடும் பகையாக மாறி, இப்போது அர்துகான் தனது தவறை உணர்ந்து ரஷ்யாவிடம் மன்னிப்புக் கேட்டு திருந்த ஆரம்பித்து;ளளார்.
அர்துகான்புட்டின் சந்திப்பினால் உடனடியாக அர்துகான் ஸிரியாவுடன் உறவை ஏற்படுத்த மாட்டார். ஆனால் ரஷ்யாவுடனான உறவு எதிர்காலத்தில் துருக்கிஸிரிய உறவுக்கு வழி வகுக்கும் என்பதையும், உடனடி திருப்பமாக ரஷ்யாவுடனான பகைமையை நீக்கி துருக்கி நன்மையடைவதையும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஐரேர்பபிய ஆதிக்கம் குறைந்து ரஷ்ய செல்வாக்கு அதிகரிக்கும் என்பதையும், ஸிரிய பாராளுமன்ற பிரதிநிதி கலாநிதி அஷ்வக் அப்பாஸ் (பெண்), ரஷ்ய விவகார ஆய்வாளர் யாஸிர் ஆக்கில் , துருக்கி விவகார ஆய்வாளர் தானியால் அப்துல் பத்தாஹ் ஆகியோருடனான கலந்துரையாடல் தெளிவு படுத்துவதை ஈரான் டிவி கலந்துரையாடல் (விடியோ) வில் இங்கு காணலாம்.
3- பலஸ்தீன் அரசியல் ஆய்வாளர் கருத்து :-
                பலஸ்தீனைச் சேர்ந்த மத்திய கிழக்கு விவகார ஆய்வாளர் அப்துல் பாரி அத்வானி தனது பத்திரிகையில் கீழ்வரும் பல முக்கிய தகவல்களைத் தருகிறார்.
                பேச்சு வார்த்தையின் பின்னர் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய புட்ன், "ரஷ்யதுருக்கி இரு தரப்பினரினதும் குறிக்கோள்கள் ஒத்த தன்மையுடையன" என்று குறிப்பிட்டதிலிருந்தும், அதற்குப் பதிலளித்த அர்துகான் , " இரு தரப்பு ஒத்துழைப்புடன் மத்திய கிழக்கின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்" என்று குறிப்பிட்டதிலிருந்தும், படிப்படியாக அர்துகான் ஸிரியாவுடனான பகைமையை நீக்கி, ரஷ்யாவுடன் ஒத்துழைத்து, ஜநாயக ரீதியில் ஸிரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ரஷ்ய நிபப்பாட்டுக்கு அர்துகான் வருவார். இது அந்தப் பத்தரிகையின் செய்தி :
4- ஈரான் பத்தரிகை "அல் ஆலம்" கருத்து :-
                ஸிரிய யுத்தத்தில் அர்துகான் தான் மிகப் பிரதான பங்கு வகிக்கின்றார். ஸிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸதை எதிர்த்துப் போராடும் அல் காஇதா, தாஇஷ், இக்வானுல் முஸ்லிமீன் ஆகிய சகல தரப்பினருக்கும் அமெர்கா, ஐரோப்பா, ஸவூதி, மற்ற அரபு நாடுகள் எதுவென்றாலும் அவர்களின் ஆயுதம் துருக்கி ஊடாகவே ஸிரிய பயங்கரவாதிகளுக்கு வருகின்றன.
                தனக்கெதிரான இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மறைமுக ஆதரவு கொடுத்ததால், சினம் கொண்டுள்ள அர்துகானை தன் பக்கம் திருப்ப ரஷ்யா இச்சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன் படுத்துகின்றது.
                ஸிரிய அரசாங்கத்தைஎதிர்த்து போராடும் பயங்கரவாதிகளில் சுமார் 2000 பேர் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள். இவர்களால் ரஷ்யாவுக்கு எப்போதுமே ஆபத்து தான். எனவே இது வரை பயங்கரவாதிகளுக்கு தாராளமாக உதவிய அர்துகான் இனிமேல் உதவி செய்ய முடியாது. ஸிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் ரஷ்ய திட்டத்துக்கு இனி அர்துகான் உதவித்தான் ஆக வேண்டும்.
                http://www.alalam.ir/news/1848435
அர்துகான் பற்றி சில குறிப்புக்கள் :-
1- "அர்துகான் அவ்லியாக்களின் ஸியாரங்களுக்குப் போகிறார். செய்குமாரைச் சந்திக்கிறார்" என்பதால் அவரின் மாபெரும் அரசியல், இராணுவ தவறுகளை இனம் காண முடியாமல் இருக்கிறார்கள் சிலர். அர்துகான், பத்ஹல்லா கோலன் ஆகியோர் ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தான். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வு. ஆனால் "பலமான ஸிரியாவை அழிக்க வேண்டும். அதன் மூலம் இஸ்ரேல் நிம்மதியாக முன்னனேற வேண்டும். இஸ்லாமிய ஆட்சி என்றைக்குமே மத்திய கிழக்கில் தலை தூக்காமல் இஸ்ரேலை "பொலிஸ் காரனாக" அங்கு வைக்க வேண்டும். அஸாதை அழித்தால் தான் இராக்கையும், லிபியாவையும் அழித்தது போன்று ஸிரியாவையும் அழிக்க முடியும்" என்ற நீண்ட காலத்திட்டதைக் கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஸிரிய அரசாங்கத்தை அழிக்கப் போராடும் (தம்மால் உருவாக்கப்பட்ட) தாஇஷ்  ( IS ), அல் காஇதா ( ஜப்ஹதுந் நுஸ்ரத்) , இக்வானுல் முஸ்லிமீன் ஆகிய பயங்கரவாதிகளுக்கு சகலவிதமான ஆயுத, பண உதவிகளையும் வழங்க துருக்கியையே பயன் படுத்துகின்றன. துருக்கியின் ஊடாக மட்டுமே மிக வசதியாக இவ்வுதவிகளை பயங்கரவாதிகளுக்கு வழங்க முடியும். இவ்வாறாக  2011 முதல் அர்துகான் மிகப் பெரும் நான்கு தவறுகளைச் செய்து வருகிறார்.
ஒன்று : பலமான ஒரு முஸ்லிம் நாட்டை அழிக்க உதவி செய்வது.
இரண்டு : உலகப் பயங்கரவாதிகளான தீவிர வஹாபி இயக்கங்கள் ஸிரியாவிலும் அரபு நாடுகளிலும் ஆட்சிகளைக் கைப்பற்றி, இஸ்லாம் அழிந்து, வஹாபியத்து மார்க்கமாக மாறுவதற்கு அவரின் இந்த உதவிகள் காரணமாக அமைவது.
மூன்று : இதனால் மத்திய கிழக்கில் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியமும், இஸ்ரேல் ஆதிக்கமும் உருவாக அர்துகான் காரணமாக அமைவது.
நான்கு : இஸ்ரேலுக்கு எதிராக பலமான நாடாக விளங்கும் எகிப்தை பிளவு படுத்தி அழிக்கும் அமெரிக்க திட்டத்தை முறியடித்தவர் ஜனாதிபதி ஸிஸி. ( வஹாபி புரட்சி வெற்றி பெற்ற லிபியாவின் இன்றை சீரழிந்த நிலையை சிந்திக்கவும்). அந்த ஸிஸியை கடுமையாக எதிர்ப்பவர் அர்துகான் மூன்று கோடி மக்கள் விதியில் இறங்கி பல நாட்களாக வஹாபி முர்ஸியை எதிர்த்தனர். அப்போது ஸிஸி தலையிட்டு ஆட்சியைக் கைப்பற்றி இல்லாவிட்டால் இன்று எகிப்து எப்படி இருக்கும்?
வஹாபி இக்வான்கள் , ஸலபிகள், முர்ஸியை எதிர்த்து போராடிய எகிப்து மக்கள், இராணுவம், இப்படியாக பலதரப்பட்டவர்களும் பதவிப் போராட்டத்தில் இறங்கினால், பூனைகளுக்கு அப்பம் பங்கிட வந்த குரங்கு போன்று , அமெரிக்கா எகிப்துக்குள் வந்திருக்கும். ரஷ்யா இன்னொரு பக்கம் மூக்கை நுழைத்திருக்கும். ஆக மொத்தம் எகிப்து இன்னொரு லிபியாவாக சிதறியிருக்கும்.
இதையெல்லாம் தெரிந்து தான் ஸிஸி நாட்டைப் பிடித்து காப்பாற்றினார். அதனால் தான் சினம் கொண்ட அமெரிக்கா ஆரம்பத்தில் ஸிஸியை கடுமையாக எதிர்த்தது. ஸிஸி வந்தவுடனேயே ஆயுத விற்பனையை நிறுத்தியது. ஸிஸியை வீழ்த்த இரண்டு வருடங்களாக படாதபாடு பட்டது. ஈற்றில் ஸிஸி பக்கம் மக்கள் இருப்பதை உணர்ந்த அமெரிக்கா, இப்போது ஸிஸியுடன் உறவு கொண்டாட வருகின்றது.
இப்படியாக எகிப்தை பேரழிவிலிருந்து காப்பாற்றிய ஸிஸியை அர்துகான் எதிர்க்கிறாரே ??? இந்த அர்துகானை ஆதரிப்பவர் எப்படி அரசியல் தெரிந்தவாராக இருக்க முடியும்?
                அர்துகான் முன்னர் போன்று ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் மட்டும் இருந்திருந்தால், (ஏற்கனவே பல கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டது போன்று, துருக்கியை முன்னேற்றியதற்காக அவரை ஆதரிக்கத்தான் வேண்டும்). ஆனால், அமெரிக்க உறவைப் பேண வேண்டும், நேட்டோ அங்கத்துவ உறவைப் பேண வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் விசாலமான பொருளாதார உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அர்துகானின் தேவையை மேற்கு நாடுகள் தமக்கு சாதகமாகப் பயன் படுத்தி, அவரைக் கொண்டே ஸிரியாவை அழித்து, வஹாபி பயங்கரவாதிகளை வலுப்படுத்தும் வேலையை மேற்கு நாடுகள் செய்தன. இவ்வாறு மேற்கு நாடுகளுக்கு அவர் விலை போனதால், இக்வானுல் முஸ்லிம் பயங்கரவாதிகள் ஸிரியாவில் தமது கொள்கைப் பிரச்சார ஆதிக்கம் செலுத்த மிகவும் வசதியாக அமைந்து விட்டது. ஸுன்னத்து வல்ஜமாஅத்து துருக்கி வேகமாக வஹாபி துருக்கியாக மாற ஆரம்பித்தது. இப்படியான காரணங்களால் தான் தஸவ்வுப் வழியில் உள்ள பத்ஹல்லா கோலன் தனது முன்னாள் ஆப்த நண்பரான அர்துகானை விட்டும் விலகினார்.
                இராக்கை பலமான நாடாக கட்டி எழுப்பியவர் ஸதாம் ஹுஸைன். இராக்கிலிருந்து ஏவிய ஏவுகணை இஸ்ரேலைத் தாக்கியது என்றால் இராக்கின் பலம் எவ்வாறு இருந்தது என்பதைப் பாருங்கள். அதே ஸதாம் ஹுஸைன் சின்னஞ்சிறு குவைத்தை ஆக்கிரமித்ததால் தானே அமெரிக்கா இராக்கை அழிப்பதற்கு வழியமைத்தார் ? இப்படியாக இராக்கை அவர் அழித்ததால் தானே இன்று இராக் குட்டிச் சுவராகி, போதாக் குறைக்கு சிஆ ஆதிக்கம் உள்ள நாடாகவும் மாறி விட்டது? இவ்வளவு பெரிய அழிவைச் செய்த ஸதாம் ஹுஸைனை "அவர் ஸுன்னத்து வல்ஜமாஅத்து. ஸியாரங்களுக்குப் போகிறார்" என்று கூறி யாராவது ஆதரிக்க முற்பட்டால், எவ்வளவு பெரிய அரசியல் முட்டாள் தனம் !
                இதே போன்று மேற்கூறிய நான்கு மாபெரும் அழிவு வேலைகளைச் செய்த காரணத்தினால் தான் அர்துகானை , அரசியல் தெரிந்த, உண்மையான ஸுன்னத்து வல்ஜமாஅத்து உலகம் எதிர்க்கிறது.
                அர்துகான் ஸியாரத்துக்கு போவதும், செய்குமாரைச் சந்திக்கிறார் என்பதும் அவரின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது. பிரிட்டிஷ் ,அமெரிக்க , பிரான்ஸ் ஜனாதிபதிகள் கிறிஸ்தவர்களாக இருப்பது, கிறிஸ்தவ கோயில்களுக்குப் போவது அவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதே நேரம், அவர்களின் நம்பிக்கைப்படி , அவர்களின் "நபியைக் கொலை செய்த" , தமது மார்க்கத்தின் பிரதான எதிரியான இஸ்ரேல் யூதர்களை அவர்கள் ஆதரிக்கிறார்களே ?
                இதைப் புரிந்துகொள்ள முடியும் என்றால், அர்துகானின் தவறையும் புரிந்துகொள்ள முடியும். இங்குள்ள அர்துகான் ஆதரவாளர்கள் அவரைப் பின்பற்றி திருந்துவார்களா?
10.8.2016