மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் ஊடுருவல் !
400 க்கு மேற்பட்ட யூத ஆக்கிரமிப்பாளர்கள் , இஸ்ரேல் இராணுவத்தின் உதவியுடன், இன்று 14.8.2016 மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலவந்தமாக ஊடுருவி ஆக்கிரமிப்புச் செய்தனர்.
வீடியோ :
பலஸ்தீன் அரசும், மஸ்ஜுதுல் அக்ஸா நிர்வாகமும் இது பற்றி ஆராய உடனடியாக அரபு, இஸ்லாமிய உச்சி மாநாட்டைக் கூட்டுமாறும், ஐ.நா. சபை உடனடியாக இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தலையிடுமாறும் வேண்டியுள்ளன.
எமது கருத்து :
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மடியில் உறங்கி ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள அரபுத் தலைவர்கள் மாநாடு கூடி, குளிர்பானங்கள் குடித்து, வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, தமது "கடுமையான கண்டனத்தை" தெரிவித்துவிட்டு வருவார்கள். இது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும். ஈரான் வாயளவில் இஸ்ரேலை எதிர்க்கும். அரபு நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்று, அரபு நாடுகள் மீதுள்ள எதிர்ப்பைக் கொட்டித் தீர்க்க இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்தும். அவ்வளவு தான்.
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும் வரை அரபு நாடுகள் வெறும் கண் துடைப்பு நாடகம் தான் நடிக்கும். 14.8.2016
ஸிரியாவில் ISIS விரட்டியடிப்பு !
ஸிரியாவின் வடக்கில் உள்ள மன்பஜ் நகரத்திலிருந்து ISIS (வஹாபி) பயங்கரவாதிகளை , அமெரிக்காவின் தலைமையில் போராடும் குர்திஷ் படைகள் இன்று விரட்டியடித்துள்ளன. குர்திஷ் படைகள் ஸிரிய அரச படைகளையும் எதிர்த்து, தமக்கென தனி நாடு அமைக்கும் நோக்கில் போராடுகின்றனர். எனவே ISIS பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டது நல்ல காரியம் என்றாலும்கூட, ஸிரியாவைத் துண்டாடும் அமெரிக்க திட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இதனைக் கருத முடியும்.
14.8.2016
No comments:
Post a Comment