Saturday, January 24, 2015

மன்னரின் மரணத்திலும் மாற்றமா ?

காலஞ்சென்ற ஸவூதி மன்னர் அப்துல்லாஹ் வஹாபியத்தை விட்டும் வெளியேறி, ஸுன்னத்து வல்ஜமாஅத்து சார்பான மூன்று விடயங்களைப் பின்பற்றியதைப் பற்றி Telegram இல் சற்று முன் எழுதினேன்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அவரின் கப்ரு Flat ஆக்கப்படாமல், இங்குள்ள வஹாபிகளின் கொள்கைக்கு மாறாக, மண் குவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது !

ஸவூதியில் வஹாபியத்து படிப்படியாகச் சாகிறதா? ஸவூதி போய் வந்து புதிய மார்க்க சட்டம் பேசும் ஆட்கள் இனி எங்கிருந்து இஸ்லாம் எடுப்பார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.


பாருங்கள் மன்னரின் கப்ரு :-


Thursday, January 8, 2015

நவவி இமாமின் ஸியாரம் தகர்ப்பு

இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஸியாரம் வஹாபிகளால் தகர்ப்பு !

கி.பி. 1233 இல் ஸிரியாவில் உள்ள நவா என்ற ஊரில் பிறந்து, 1277ம் வருடம் வபாத்தானார்கள் நவவி இமாம் அவர்கள். 44 வருடங்களே வாழ்ந்த அவர்கள் அக்காலத்தில் உலகின் மாபெரும் இமாமாகத் திகழ்ந்தார்கள். ஹதீஸ் கலை விற்பன்னர். ஸஹீஹ் முஸ்லிமுக்கு ஏராளம் பாகங்களைக் கொண்ட மாபெரும் விளக்கவுரை எழுதினார்கள். இஸ்லாமிய சட்டக் கலையில் சாபிஈ மத்ஹபின் தூனாக அன்றும் இன்றும் விளங்குகிறார்கள். அவர்களின் அடக்கஸ்தலம் (ஸியாரம்) சிரியாவில் நவா என்ற ஊரில் அமைந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் தினமும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவர்களின் ஸியாரத்துக்கு வருகை தருவார்கள்.

அப்படிப்பட்ட மாபெரும் இமாமின் ஸியாரத்தை "அந்நுஸ்ரா" என்ற கவாரிஜ் வஹாபிகள் (ISIS போன்ற பயங்கரவாத வஹாபி அமைப்பு) நேற்று குண்டு வைத்து தகர்த்துவிட்டனர். لا حول ولا قوة إلا بالله العلي العظيم கப்ருகளில் சிறுநீர் கழிக்கக் கூடாது, செருப்பு அணிந்து கப்ருகளை மிதிக்க கூடாது, கப்ருக்கு மேல் நடக்கக் கூடாது, கப்ருகளை மிதிப்பதை விட உங்கள் உடுமானங்களுக்கு தீ வைத்துக் கொள்வது நல்லது என்றெல்லாம் போதித்த ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளுடன் இந்த "தவ்ஹீது" வாதம் பேசும் வஹாபிகளின் இந்தச் செயலை ஒப்பிட்டுப் பாருங்கள். இஸ்லாத்துக்கும் வஹாபிகளுக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே கடந்த நான்கு வருட அரபுலக வஹாபி புரட்சிகளின் போது ஏராளம் அவ்லியாக்களின் ஸியாரங்களையும், ஏராளம் மஸ்ஜிதுகளையும், பல ஸஹாபாக்களின் ஸியாரங்களையும், இராக்கில் உள்ள நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஸியாரத்தையும் குண்டு வைத்து தகர்த்துவிட்டனர் வஹாபி பயங்கரவாதிகள்.

உலகம் அநியாயத்தால் நிரம்பி வழியும் போது தான் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருவார்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்படி அநியாயத்தால் உலகை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் வஹாபிகள். அப்படிப்பட்ட வஹாபிகள் கஹடோவிடாவிலும் சகல ஊர்களிலும் உலகிலும் உருவாக உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் "தரீக்கா" என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நாசகார நிர்வாகிகள்.

வஹாபிகள் ஸிரியாவில் குண்டு வைத்து தகர்த்த இமாம் நவவி அவர்களின் ஸியாரம் ( விடியோ) :-


வஹாபிகள் ஸிரியாவில் குண்டு வைத்து தகர்த்த 1886 இல் கட்டப்பட்ட தக்கியா. (படங்கள்) :-( வஹாபி பயங்கரவாதம் பற்றிய அடுத்த கட்டுரையை எதிர்பாருங்கள் )

Sunday, January 4, 2015

கர்ழாவி பல்டி !

கர்ழாவி : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் !!!

தான் பிறந்து படித்து வளர்ந்த எகிப்துக்கு டடா கூறிவிட்டு கட்டாருக்கு வந்து ராஜபோக வாழ்க்கை வாழந்த இக்வானுல் முஸ்லிமீன்களின் இணையற்ற செய்கு கர்ழாவி, இவ்வளவு காலமும் கட்டாரில் இருந்த ஐரோப்பிய கலாச்சாரங்களை எதிர்க்க வில்லை! கட்டாரில் மிகக் கோலாகலமாக நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எதிர்க்கவில்லை. முழு மத்திய கிழக்குக்கும் இருந்த ஒரே அமெரிக்க யூத இராணுவ Base ­எதிக்கவில்லை! இப்போது எல்லா அரபு நாடுகளையும் பின்பற்றி கட்டாரும் அரபுலக அரசியல் தலைவர் எகிப்து ஜனாதிபதி ஸிஸிக்கு பூரண ஆதரவு தெரிவித்த பின்னர், இப்போது தான் கர்ழாவிக்கு தென்படுகிறது, கட்டாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது! இப்போது தான் காராசாரமாக அதை எதிர்க்கிறார்! பாய்ந்து பாய்ந்து பார்த்து எட்டாததால் கடைசியாக, சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று தந்திர நரி கூறியதை நாம் சிறு வயதில் படித்தது நினைவு வருகிறது .

பாருங்கள் வீடியோ :