Wednesday, December 20, 2017

அமெரிக்கா அரசியல் தோழ்வி

அல்குத்ஸ் :
உலக அரசியலில் அமெரிக்கா படு தோழ்வி
கடந்த டிசம்பர் 6ம் திகதி முஸ்லிம் உலகுக்கு கறை படிந்த ஒரு நாள். உலக சண்டாளன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு சொந்தமான அல் குத்ஸ் புனித நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என்றும், அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலில் இருந்து அல்குத்ஸுக்கு மாற்றுவதாகவும் அறிவித்த நாள்.
ஆனால் உடனடியாக முஸ்லிம் உலகம் விழித்துக் கொண்டது. அத்துடன் மேற்குலகும் அமெரிக்காவை எதிர்க்க முன்வந்தது.
இஸ்ரேலுக்கெதிராக போராட மற்ற நாடுகள் முன்வரும் பட்சத்தில் தனது படைகளை அனுப்பத் தயார் என்று மலேசியப் பிரதமர் அறிவித்தார்.
 
மொரோக்கோவில் பல அரபு நாடுகளின் பிரதி நிதிகள் கூடி, அமெரிக்க தீர்மானத்தை கண்டித்தன.
துருக்கியில் 48 நாடுகளின் பிரதிநிதிகள், அவர்களுள் 16 அரச தலைவர்கள் கூடி அமெரிக்காவை கண்டித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை இஸ்ரேலுடன் ராஜ தந்திர தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற துருக்கி ஜனாதிபதி அர்துகான், இந்த மாநாட்டில் இஸ்ரேலை "பயங்கரவாத நாடு" என்று காரசாரமாக கண்டித்தார்.
http://www.alalam.ir/news/3212431/%D8%A8%D9%87%D8%B0%D9%87-%D8%A7%D9%84%D8%B9%D8%A8%D8%A7%D8%B1%D8%A7%D8%AA--%D8%A3%D8%B1%D8%AF%D9%88%D8%BA%D8%A7%D9%86-%D9%8A%D8%B1%D8%AF-%D8%B9%D9%84%D9%89-%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AA%D8%B1%D8%A7%D9%85%D8%A8-%D8%A8%D8%B4%D8%A3%D9%86-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3--
ஈரான், லெபனான், இராக், ஸிரியா என்பனவும் ட்ரம்பை கடுமையாக எதிர்த்தன.
"அல் குத்ஸ் இஸ்ரேலின் தலைநகராவதற்கு இஸ்ரேல் என்றொரு நாடே இல்லையே" என்று மிகத் துணிச்சலாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அறிவித்ததாக கொரிய பத்திரிகைகள் அறிவித்தன :
https://arabic.rt.com/video/914357-%D9%83%D9%8A%D9%85-%D8%AC%D9%88%D9%86%D8%BA-%D8%A3%D9%88%D9%86-%D9%88%D9%82%D8%B6%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3-%D8%A7%D9%84%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9/#
"அரசியல் உலகிலிருந்து அமெரிக்காவை சகல உலக நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்" என்று எகிப்து பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது :
https://arabic.rt.com/middle_east/916191-%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D9%86%D9%88%D8%A7%D8%A8-%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%B1%D9%8A-%D9%8A%D8%AF%D8%B9%D9%88-%D9%84%D8%B9%D8%B2%D9%84%D8%A9-%D8%A7%D9%84%D9%88%D9%84%D8%A7%D9%8A%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D9%85%D8%AA%D8%AD%D8%AF%D8%A9-%D8%AF%D9%88%D9%84%D9%8A%D8%A7/
இதற்கிடையில் எகிப்து ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ராஜ தந்திரம் மிக்க ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. "அல் குத்ஸ் சம்பந்தமாக தன்னிஷ்டப்படி அமெரிக்கா மட்டும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாது. எனவே அது செல்லுபடியற்றது" என்பதே அந்த பிரேரணை. இதில் உள்ள ராஜ தந்திரம் என்னவென்றால், பாதுகாப்பு சபையில் உள்ள வல்லரசு எந்த நாடாவது, ட்ரம்ப் தன்னிஷ்டப்படி செய்த அந்த தீர்மானத்தை ஆதரித்தால், அது, தனது நாட்டின் கொரவத்தை அமெரிக்காவுக்கு காவு கொடுத்ததாகவும், தனது நாட்டுக்கு இழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே சகல வல்லரசுகளும் எகிப்தின் பிரேரணையை ஆதரிப்பது கடமையாகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தினர்களாக உள்ள பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும், தற்காலிக அங்கத்தினர்களான ஏனைய 10 நாடுகளும் எகிப்தின் பிரேரணையை ஏகமனதாக ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை உலக தீர்மானத்தை முறியடித்தது. அமெரிக்கா வீட்டோவை பாவித்து தனிப்படல் :
http://www.ahram.org.eg/News/202497/26/628374/%D8%A3%D8%AE%D8%A8%D8%A7%D8%B1-%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9-%D9%88-%D8%B9%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%A9/%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AD%D8%B5%D9%84-%D8%B9%D9%84%D9%89-%D8%AF%D8%B9%D9%85--%D8%B9%D8%B6%D9%88%D8%A7-%D8%A8%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D8%A3%D9%85%D9%86---%C2%AB%D9%81%D9%8A%D8%AA%D9%88%C2%BB-%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83.aspx
இப்படி பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மட்டும் தனிப்படுவது அபூர்வமானது. எனவே எகிப்தின் பிரேரணை உலகிலிருந்தே அமெரிக்காவை தனிமைப் படுத்தி விட்டது.
ஜோர்தானில் மன்னர் அப்துல்லாஹ்வும் பிரான்ஸ் ஜனாதிபதியும் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து பேசும் வீடியோ :
கவலை என்னவென்றால், ஸவூதி, குவைத், எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற சில நாடுகளின் எதிர்ப்பு அரச தலைவர்கள் மட்டத்தில் பலமாக இருக்கவில்லை என்பது தான்.
உலக நாடுகளின் இந்த அமெரிக்க எதிர்ப்பு தொடருமானால் இன்ஷா அல்லாஹ் பலஸ்தீனுக்கு நல்ல காலம் பிறக்கலாம். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
(மேலே உள்ள எகிப்து அல் அஹ்ராம் பத்திரிகையில் விமர்சன பகுதியில் உள்ள ஒரு செய்தி மிக முக்கியமானது என்பதால் இங்கே தருகின்றோம் :
முஸ்லிம்களுக்கு முன் யூதர்கள் பலஸ்தீனில் இருந்தார்கள் என்பதற்காக அது இஸ்ரேலுக்குரியது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின், அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்த செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்கர்கள் வெளியேறிவிட வேண்டும். இவ்வாதத்தின்படி ஆரம்ப குடியினருக்குத்தான் ஒரு நாடு சொந்தம் என்றால், யபூஸிய்யா என்ற கன்ஆன் வர்க்கத்தைச் சேர்ந்த அரபு இனத்தவர்கள் தான் அல்குத்ஸில் 2000 வருடங்கள் முதலாவதாக வசித்தார்கள்
பின்னர் யூதர்கள் 414 வருடங்களும்,
பாரசீகர்கள் 254 வருடங்களும்,
இக்ரீக்கீன்கள் 270 வருடங்களும்,
ரோமர்கள் 700 வருடங்களும்,
அரபு முஸ்லிம்கள் 1400 வருடங்களும்
அல் குத்ஸில் வசிக்கிறார்கள். அப்படியாயின், பழமை என்ற வகையிலும் அல் குத்ஸ் அரபிகளுக்கே சொந்தம்.
அதிக காலம் வசித்தவர்கள் என்ற வகையிலும் ( 2000 + 1400 = 3400 ) அரபிகளுக்கே அல் குத்ஸ் சொந்தமாகின்றது !!! எனவே குத்ஸின் வரலாற்றைத் திரிக்கும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் முயற்சிகள் பொய்யானவையே. உலகம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாது).
19.12.2017

Wednesday, December 13, 2017

யமன் விவகாரம் மிகச் சுருக்கமாக

யமன் விவகாரம் மிகச் சுருக்கமாக
யெமன் மத்ஹபு தரீக்களை பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர் அதிகமாக வாழும் ஒரு நாடு. பல ஹதீஸ்கள் மூலம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அர்களால் பாராட்டப்பட்ட நாடு.
                அல்லாஹ்வைப் பற்றிய அக்கீதாவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டறிந்த பிரபலமான ஸஹாபியான அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களின் நாடு. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிராத்தனையின் பொருட்டால், அந்த ஸஹாபியின் வழித் தோன்றலில் பிறந்தவர்களே நாம் பின்பற்றும் அக்கீதாவை தொகுத்து தந்த  அஷ்அரி இமாம் அவர்கள்.
உலக முடிவின் ஆரம்பமாக பிரமாண்டமான ஒரு நெருப்பு யமனில் உள்ள அதன்   (عدن)  என்ற இடத்தில் வெளியாகி, பின்னர் உலகில் எல்லா நாடுகளிலும் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் சாம் தேசத்தை நோக்கி ஓடச்செய்யும். அது தான் மஹ்ஷர் மைதானம் என்று அழைக்கப்படுகின்றது.
யெமனில் யஹ்யா பின் ஹுஸைன் என்ற தளபதி சீஆ ஸைதிய்யா ஆட்சியை ஸதாபித்தார். (இறப்பு : 298 ஹிஜ்ரி). பின்னர் பலவிதமான ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டாலும் பொதுவாக சுமார் ஆயிரம் (1000) வருடங்கள் யெமனை சீஆ ஸைதிய்யாக்கள் ஆட்சி செய்தனர். ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கைக்கு மிக அண்மையில் உள்ள சீஆக்களே ஸைதிய்யாக்கள். சகல ஸஹாபாக்களையும் மதிப்பர். ஆனால் அலி (ரழி) அவர்களை அதிகம் மதிப்பர்.
ஸைதியாக்களின் ஆட்சியின் இறுதிப் பகுதியில் கோத்திரச் சண்டைகள் , ஏராளமான யுத்தங்கள் ஏற்பட்டு இறுதியில் நாடு பிளவுபட்டது.
1968 இல் ஓரே யெமன் அமைக்கும் முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 1978 வரை ஏராளமான ஒற்றுமை முயற்சிகளும், இடையில் பிளவுபடுவதுமாக இருந்து, 1978 ஜூன் 13 இல் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் வட யெமனில் ஆட்சிப் பொறுப்பேற்றார். தென் யெமனை அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆட்சி செய்தார்.
28.3.1979 குவைத்தின் முயற்சியால் இரண்டு யெமனையும் ஒன்றிணைக்கும் பிரகடனம் வெளியிடப்பட்டது. எனினும் இடையிடையே பல தடவைகள் பிளவு பட்டன. 22.5.1990 இல் அலி ஸாலிஹின் தலைமையில் ஒரே யமன் அமைக்கப்பட்டது.
ஈரானில் குமைனியின் தலைமையில் தீவிரவாத சீஆ ஆட்சி ஏற்பட்ட பின்னர், அதிகமான மிதவாத ஸைதிய்யா சீஆக்கள் ஈரானில் இலவசமாக கல்வி புகட்டப்பட்டு, தீவிரவாத சீஆக்களாக மாற்றப்பட்டனர்.
அலி ஸாலிஹின் அரசாங்கம் வஹாபிகளின் எழுச்சியை கட்டுப்படுத்தவில்லை, என்றும், இதனால் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) குடும்பத்தவர்களுக்கு வஹாபிகளால் பெரும் அச்சுருத்தல் என்றும் அடிக்கடி குற்றம் சுமத்தி வந்த தீவிரவாத சீஆக்கள், இறுதியில் வட யெமனில் " அன்ஸாருல்லாஹ்" என்ற பெயரில் போராட்ட குழுவை 1992 இல் ஸ்தாபித்தனர். அதன் தலைவரான பத்ருத்தீன் ஹோஸியின் பெயரால் அவ்வியக்கம் " ஹோஸி " என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இப்போது அவரின் மகன் அப்துல் மலிக் ஹோஸி தலைமை தாங்குகிறார். ஈரான் சகல விதமான பொருளாதார, ஆயுத உதவிகளையும் வழங்குகின்றது.
மற்ற அரபு தலைவர்களைப் போலவே ,ஜனாதிபதி அலி ஸாலிஹும் ,வஹாபியத்தை அழிக்காமல் பராமுகமாக இருந்தார் என்பதற்கு எனது ஒரு சம்பவத்தை கூறுவது பொருத்தம் என நினைக்கிறேன். 2002 இல் நான் யெமன் போயிருந்த போது, வரும் வழியில் தலைநகர் ஸன்ஆவில் உள்ள ஜாமிஅத்துல் ஈமான் என்ற வஹாபி சார்பு பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஒருவரைச் சந்திக்கப் போனேன். ஒரு பொலிஸ் காரரிடம் , ஜாமிஅத்துல் ஈமான் எங்கே எனக் கேட்டேன். அவர் திடுக்கிட்டவர் போல் " பின் லாதன் ?" என்று ஆச்சரியமாகக் கேட்டார். எனக்கும் பயம் ஏற்பட்டு விட்டது. (அப்போது தான் பின்லாடன் அமெரிக்காவைத் தாக்கி சில மாதங்கள் ஆகிவிட்டன. அவரை அமெரிக்கா தேடும் காலம் அது ). நான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, எனது குவைத் பல்கலைக்கழக தஸ்தாவேஜுகளைக் காட்டவே, எனக்கு அவர் வழியைக் காட்டினார். பின்லாடன் ஆரம்பத்தில் இருந்தது யமனில் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் கவனயீனத்தினால் தான், யெமனில் வஹாபி பல்கலைக்கழகம் உருவானது, கவாரிஜ் வஹாபிகள் அவரையே தாக்கும் அளவுக்கு முன்னேறினார்கள்.
                2011 இல் அரபுலகில் ஏற்பட்ட கவாரிஜ் வஹாபிகளின் பயங்கரவாத ஆயுதப் போராட்டத்தில் ஜனாதிபதி அலி ஸாலிஹின் மஸ்ஜித் கவாரிஜ் வஹாபிகளால் தாக்கப்பட்டு, அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஸவூதிக்கு தப்பிச் சென்று சிகிச்சை பெற்றார் , பின்னர்  25.2.2012 அப்து ரப்பு மன்ஸூர் தேர்தல் மூலம் ஜனாதிபதியனானார்.
                ஹோஸி (சீஆக்)களின் சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கவே, முன்னாள் ஜனாதிபதி ஹோஸிகளுடன் கூட்டுச் சேர்ந்தார். (இதை வைத்து இலங்கையில் சில வஹாபிகள் அவர் சீஆ ஆதரவு என்று கூறுவது தவறானது. அரசியலுக்காகவே கூட்டுச் சேர்ந்தார்)
                இப்படியாக இரு பிரதான கட்சியினரும் ஒன்று சேர்ந்ததால்,  லெபனான், ஸிரியா, இராக் முதலிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் ஏற்பட்டது போன்று யெமனிலும் ஈரான் ஆதிக்கம் வந்தால் , அது வளை குடா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு பேராபத்து எனக் கருதிய 17 அரபு நாடுகள், ஸவூதியின் தலைமையில் ஹோஸிகளை எதிர்த்து 25.3.2015 முதல்  عاصفة الحزم  ( பலமான புயல் ) என்ற பெயரில் கொடூரமான விமானத்தாக்குதல் நடாத்தி வருகின்றன. பல இலட்சம் பொதுமக்களும் சிறுவர்களும் பலியாகியும், பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
                அலி ஸாலிஹ் ஹோஸிகளுடன் கூட்டுச் சேர்ந்தாலும்கூட, அவர்களோ , அல்லது தாக்குதல் நடாத்தும் அரபு நாடுகளோ யுத்தத்தை வெல்ல முடிய வில்லை. அவரை எப்படியாவது தம் பக்கம் திருப்பினால், அவரின் படைகளுடன் சேர்ந்து ஹோஸிகளை அழிக்கலாம் என்று ஸவூதி எமிரேட்ஸ் என்பன திட்டமிட்டு, காய் நகர்த்தின. இதன் பலனாக அலி ஸாலிஹ் ஹோஸிகளுடனான தனது மூன்று வருட உறவை முறித்துக்கொண்டு, திடீர் என்று 1.12.2017 இல் (மூன்று வருடங்களாக தம்மைத் தாக்கும்) அரபு நாடுகளின் பக்கம் சேந்தார்.
                திடீர் என்று அலி ஸாலிஹ் ஹோஸிகளை எதிர்த்து பேசுவது (வீடியோ) :
https://www.youtube.com/watch?v=tI2GuJagal0
                இந்த நிலைமை பயங்கரமானது, அரபு நாடுகளும் அலி ஸாலிஹின் படைகளும் சேர்ந்து தாக்கினால் தாம் அழிவது உறுதி எனப்பயந்த ஹோஸிகள் , அவர் கட்சி மாறி மூன்றே நாட்களில் அவரைப் படுகொலை செய்தனர்.
                அவர் ஸன்ஆ தலைநகரிலிருந்து தப்பிப் போகும் போதே படுகொலை செய்யப்பட்டதாக ஆரம்ப செய்திகள் கூறினாலும், அவரின் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
                அவரின் மறைவுடன் அரபு நாட்டுப் படைகள் ஹோஸிகளைப் பலமாகத் தாக்கி வருகின்றன. முடிவு அல்லாஹு அஃலம். ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று பிராத்திப்போம்.
13.12.2017