Friday, June 26, 2015

குவைத் மஸ்ஜிதில் வஹாபி குண்டுத் தாக்குதல்

இன்று 26.6.2015 குவைத்தில் வஹாபிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

இடம் - அல்லாஹ்வின் மஸ்ஜித் - மஸ்ஜித் இமாம் ஸாதிக்
பலி     - 27 அப்பாவி முஸ்லிம்கள்
காயம்  - 200 அப்பாவி முஸ்லிம்களுக்கும் அதிகம்.
மாதம் - புனித ரமழான் மாதம்
பலியானோர் - நோன்பாளிகள்
பலியானோர் - ஜும்ஆ தொழ வந்தவர்கள்
பலியானோரில் - சிறுவர்களும் வயதாளிகளும் அடங்குவர்
தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது -  தாஇஷ்  IS வஹாபிகள்

வஹாபியத்து என்றால் என்ன? வஹாபி இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி எத்தகையது?

 • முதலில் அவ்லியாக்கள் இமாம்கள் உண்மையான தரமான உலமாக்களை விட்டும் தூரவாதல்
 • அடுத்து  '' அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் நபியிடமும் அவ்லியாக்களிடமும் கேட்பது சிர்க்கு '' என்ற Brain wash
 • அடுத்து  '' எல்லா பித்அத்தும் வழிகேடு '' என்ற ஆராய்ச்சி இல்லாத Brain wash
 • அடுத்து  உண்மை இஸ்லாத்தைப் பேசும் உலமாக்களைத் தாக்க வெறியூட்டல் - ஈமான் என்ற பெயரில் 
 • அடுத்து  '' நபிமாரினதும் அவ்லியாக்களினதும் - சுவர்க்கப் பூங்காவான - கப்ருகளை இடித்து நொறுக்க தலைவரின் கட்டளையை கண்மூடித்தனமாகப் பின்பற்றி நிறைவேற்ற சிந்தனா சக்தியை இழந்த ஒரு பட்டாளம்.
 • அடுத்து  வஹாபியல்லாத சகல முஸ்லிம்களையும் மிகப்பயங்கரமான முறைகளில் படுகொலை செய்தல்.
 • அடுத்து தலைவன் கட்டளையை அல்லாஹ்வின் கட்டளை என நினைத்து தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு நரகம் போகத்தயாரான ஒரு வெறிக்கூட்டம்.
 • அடுத்து முஸ்லிம் நாடுகளில் இந்த தற்கொலை வெறியாட்டம் கார்குண்டுகள் கனரக ஆயுதங்கள் மூலம் இரத்தக்களறியை ஏற்படுத்தி நாடுகளைக் கைப்பற்றும் உச்சக்கட்ட பயங்கரவாதம்
''ரஸூலுல்லாஹ்விடமும் அவ்லியாக்களிடமும் உதவி - வஸீலா தேடுவது சிர்க்கு. சிர்க்கு வைப்போர் அனைவரையும் கொலை செய்ய வேண்டும்'' என்பதே வஹாபி இயக்கங்கள் அனைத்தினதும் அடித்தளம்  Foundation.

தரீக்காவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் ஏமாளித் தனத்தாலேயே முழு உலகிலும் வஹாபியத்து பரவியது.

வஹாபி அட்டூழியங்கள் இத்துடன் நிற்காது. சகல நாடுகளிலும் பரவும் என்பதை காலம் நிரூபிக்கலாம்.

Wednesday, June 24, 2015

தாஇஷின் கொடுமை

இது தரீக்கா இஸ்லாமா வஹாபி இஸ்லாமா ?

மேலே உள்ளது ''சிர்க்கை ஒழித்தல் '' என்ற பெயரில் ஸிரியாவில் உள்ள மதத்தலம் ஒன்றை தாஇஷ் IS வஹாபிகள் குண்டு வைத்து தகர்க்கும் படம். இது ரஷ்யா டுடே என்ற இணையப் பத்திரிகையில் வெளியானது


கீழே உள்ள வீடியோவில் :
 • நான்கு பேரை காரில் ஏற்றி அடைத்து . ரொக்கட் தாக்குதல் மூலம் காரைக் கொழுத்தி அந்நான்கு பேரும் கருகிச் சாவதை ரஷித்து மகிழ்கிறார்கள் தாஇஷ் IS வஹாபிகள் .
 • ஐந்து பேரை இரும்புக் கூட்டில் அடைத்து குளத்துக்குள் இறக்கி அவர்கள் மூச்சுத் திணறி இறப்பதை ரசித்து மகிழ்கிறார்கள் தாஇஷ் ISIS வஹாபிகள் .
 • ஏழு பேரின் கழுத்துகளை வெடிபொருள்களால் செய்யப்பட்ட வயரால் பிணைத்து அதற்கு தீ வைத்து அந்த ஏழு பேரின் கழுத்துகளும் வெடித்துச் சிதருவதை பார்த்து ரசிக்கார்கள் தாஇஷ் IS வஹாபிகள்
இந்த மாபெரும் கொடுமைகளை இராக் மக்களுக்கெதிராக தாஇஷ் வஹாபிகள் செய்கிறார்கள். ''கனாத்துல் ஆலம்'' என்ற ஈரான் இணையத்தளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.


இங்கே மூன்று விடயங்களைக் கூறுவது அவசியம்

 1. இந்த மனிதப்பலிகளான அநியாயங்கள் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் பின்பற்றும் முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்கள் செய்ய வில்லை.
  வழிகெட்ட சீஆக்கள் காதியானிகள் செய்ய வில்லை.
  ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைத்தானின் கொம்பு நஜ்தில் உருவாவதாக எச்சரித்த வஹாபி இயக்கங்களில் ஆரம்பத்தில் தவ்ஹீது பேசியவர்கள் தான் படிப்படியாக தமது பகுத்தறிவை தமது தலைவர்களின் விளக்கங்களுக்கு அடகு வைத்து இப்போது தலைவர் ஏவும் அத்தனை கொடுமைகளையும் ''குர்ஆன் ஸுன்னா '' என்ற பெயரில் செய்கிறார்கள்.
 2. உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வஹாபி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றோ ஒரு நாள் தமது தலைவரின் கட்டளைக்கு அடிபணிந்து இப்படியான கொடுமைகளை செய்யத்தான் போகிறார்கள். முஸ்லிம்களை அநியாயமாக கொன்று அல் குர்ஆனின் எச்சரிக்கைப்படி மறுமையில் நிரந்தர நரகத்துக்குப் போகக் கூடியவராக தன்னை ஆளாக்கிக் கொள்ளாமல் உடனடியாக 1400 வருடங்களாக தொடராக உள்ள இஸ்லாத்துக்கு மீண்டும் வந்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 3. வஹாபி இயக்கங்களின் வேகமான வளர்ச்சியை முப்பது 30 வருடங்களுக்கு முன்னரே குவைத்தில் படிக்கும் போதே தூரதிருஷ்டியுள்ள பேரறிஞர்கள் மூலம் நாம் அறிந்து வஹாபியத்தை ஊரிலும் இலங்கையிலும் உலகிலும் கட்டுப்படுத்துவதற்கான மாபெரும் திட்டங்களுடன் நாம் வந்து எமக்கு பதவி அதிகாரம் இருந்த மூன்று வருடங்களிலும் 1996 - 97 - 98 முழு இலங்கை மட்டத்தில் வஹாபியத்தை மடக்கினோம்.

  ஆனால் பொறாமையே உருவான பள்ளத்தக்கியா நாசகார சதிகாரர்கள் ''ராஜசதி'' செய்து எமது பதவியைப் பறித்தனர். எமது மத்ரஸாவைப் பறித்தனர். அதன் விளைவாக இந்த 15 வருடங்களிலும் இலங்கையில் இலட்சக்கணக்கானவர்கள் உண்மை இஸ்லாத்தை விட்டுவிட்டு வஹாபி இயக்கங்களில் தீவிரமாக சேர்ந்து வருகிறார்கள்.

  எனவே வஹாபி வளர்ச்சிக்கும் அது முற்றி என்றோ ஒரு நாள் தாஇஷ் IS பயங்கரவாதத்துக்கும் பள்ளத் தக்கியா நாசகார சதிகாரர்களே பொறுப்பு. மறுமையில் அவர்கள் அதன் பலனைக் கண்டுகொள்வார்கள்.

Sunday, June 14, 2015

பிறைக் குழப்பம்

இஸ்லாமிய பிறைத் திகதிகள் குழப்பத்தில் இருப்பதேன்?


2014 இல் இந்தியாவில் மட்டும் 4 தினங்களில் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடி யிருக்கிறார்கள் :
October 4 இந்திய ஹிஜ்ரி கொமிட்ட
October 5 கேரளா
October 6 இந்தியாவில் அதிக பகுதிகள்
October 7 லக்‌ஷ தீவு

2005 இல் உலகில் 5 தினங்களில் நோன்பு ஆரம்பித்திருக்கிறார்கள்:
October 2 நைஜிரியாவில் சிலர்
October 3 நைஜிரியாவில் அதிகம் பேர்
October 4 ஸவூதி, எகிப்து, அதிகமாக மத்திய கிழக்கு நாடுகள்
October 5 அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா
October 6 பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மத்திய ஆசியா

ஏன் இந்த பிறைக் குழப்பம்? பாருங்கள் :-

Why are Islamic Dates in a Mess?

Where is the Hijri Calendar?


Thursday, June 11, 2015

யெமன் யுத்த படங்கள்

தலைப்பு :- ஹோஸிகள் : மலையில் இருந்து ஆட்சி வரை !

இது அரபு மொழியில் உள்ளது. தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டால் யெமன் யுத்தத்தின் பின்னணியை அறிய சிறந்த ஒரு பேட்டியும் காட்சிகளும்..

ஈரானின் மத்திய கிழக்கு ஆதிக்க வெறியில் உருவான சீஆ பயங்கரவாதிகளே ஹோஸிகள். பல வருடங்களாக ஈரான் ஆயுதங்கள் கொடுத்து பயிற்சியளித்து, இப்போது ஸுன்னி நாடான யெமனை சீஆ நாடாக மாற்ற எடுத்த முயற்சியை முறியடிக்க இப்போது அரபு நாடுகளின் கூட்டணி ஹோஸிகளுக்கு எதிராக யுத்தம் செய்கிறது.

1000 வருடங்களுக்கு மேலாக ஸுன்னி சார்பான ஸைதியாக்கள் என்ற சீஆக்கள் யெமனை ஆட்சி செய்தனர். அந்த ஸைதியாக்களில் இருந்து பிரிந்து ஸுன்னிகளின் பகிரங்க எதிரியாக உள்ள ஈரான் சார்பு தீவிர சீஆக் கொள்கையை பின்பற்றுவோரே ஹோஸிகள்.

மொழி புயாவிட்டாலும்கூட, யெமன் பற்றிய கலாசாரம், இடங்கள், மனிதர்கள், மஸ்ஜிதுகள் போன்ற சில விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வசதியாகவே இதனைத் தருகிறோம்.

இதில் முக்கால் பகுதிக்கு மேல் காட்சியளிப்பவர்கள் பயங்கரவாத சீஆ ஹோஸிகள். கடைசிப்பகுதியில் ஹோஸிகளுக்கு எதிரான அல்காஇதா சிலர் காணப்படுகின்றனர்.

பேட்டி காண்பவர் அரபு பி.பீ.ஸி. யைச்சேர்ந்த ஒரு பெண்.

Tuesday, June 2, 2015

இக்வான்களின் உண்மை உருவம்

பயங்கரவாத இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம்

எகிப்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தனது பயங்கரவாத முகத்தை மூட, புன்சிரிப்பு, ஆராய்ச்சி, விசேச வகுப்புக்கள், பண உதவி இப்படி எத்தனையோ உபாயங்களைக் கையாண்டு, ஹக்கான இஸ்லாத்தின் ஹக்கான இமாம்கள் காட்டித்தந்த இஸ்லாமிய அகீதா என்னவென்று தெரியாதவர்களை மூளைச்சலவை செய்து தமது இயக்கத்தில் சேர்ப்பதில் இரவு பகலாக முயன்று வருகிறார்கள்.

உண்மையில் இக்வானுல் முஸ்லிமீன் ஹக்கான ஒரு இஸ்லாமிய அமைப்புமல்ல, ஹக்கான இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாத்தை உலகெலாம் பரப்ப கையாண்ட ஆதார பலம், ஈமான் சக்தி (ஆத்மிக சக்தி) என்ற வழியில் இயங்கும் ஒரு சாத்வீக இயக்கமும் அல்ல, மாறாக அது ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதனை உலக விவகாரங்களை (அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து) ஆராய்பவர்கள் அறிவார்கள்.

எகிப்து இக்வானுல் முஸ்லிமூன் பயங்கரவாதிகள் கடந்த 70 வருடங்களாக செய்துவரும் சில பயங்கரவாத செயல்களை உலகின் மிகப்பிரபலமான அரபு பத்திரிகையான அல் அஹ்ராம் வருடவாரியாக பட்டியல் போட்டுக் கூறுகின்றது.


இது போன்ற பல நூறு விடயங்களை தமிழில் மொழி பெயர்த்து தரத்தேவையான வாய்ப்பு வசதிகளை பள்ளத்தக்கியா சதிகாரர்கள் தடை செய்துள்ளதால், தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த மௌலவிமார்கள் மூலம் இதனை மொழிபெயர்த்து அறிந்துகொள்ளும்படி பணிவாய் வேண்டுகிறோம்.

அல்லாஹு தஆலா எமக்கு தந்துள்ளவற்றை பள்ளத்தக்கியா நிர்வாகத்துக்கு அறியக்கூடிய பகுத்தறிவு இருந்தால், அகில இலங்கை ரீதியிலான ஸுன்னத்து வல்ஜமாஅத்து பத்திரிகை நடாத்தவும், இண்டநெட் மூலம் அறிவுப் புரட்சி செய்யவும், வானொலி டீவி மூலம் சகல வீடுகளிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கை பரவவும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வருடமும் உலகப்பிரபலமான பேரறிஞர்களை ஒன்று திரட்டி விவாதங்கள் நடாத்தி வஹாபியத்தை மடக்கவும் தேவையான பல உதவியாளர்களைத் தந்து பொருளுதவி ஒத்தாசை செய்திருப்பர். என்ன செய்ய , கழுதை அறியுமா கரும்பின் ருசி !!!!!!