Friday, July 22, 2016

இக்வானின் இரட்டை வேடம்

இப்படி ஸிஸி கைது செய்திருந்தால் …!!!
மருமகள் உடைத்தால் பொன் குடம். மாமி உடைத்தால் மண் குடம் !
இது இக்வான்களின் குரல் 'அல் ஜஸீரா' கூறுவது :-
6863 இராணுவத்தினர்  வேலை நீக்கம் !
900 பொலிஸார் வேலை நீக்கம் !
1500  பேர் நிதியமைச்சில் வேலை நீக்கம் !
இது ஸிரிய ஜனாதிபதி அஸாத் கூறுவது :-
2700 நீதிபதிகள் வேலை நீக்கம் !
1500 க்கும் அதிகமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலை நீக்கம் !
15,000 க்கும் அதிகமான கல்வியமைச்சு ஊழியர்கள் வெலை நீக்கம் !
இராணுவப் புரட்சிக்கும் நீதிபதிகளுக்கும் கல்வியமைச்சுக்கும் என்ன தொடர்பு ?????
இது 'ரஷ்யா டுடே' பத்திரிகை கூறுவது :-
8777 படையினர் வேலை நீக்கம் !
இது குவைத் பத்திரிகை 'அல் கபஸ்' கூறுவது :-
பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் பாஸ்போட்டுகளை துருக்கி அரசாங்கம் கென்ஸல் பண்ணியுள்ளது.
                இஇதெல்லாம் ஏன் தெரியுமா? மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்த துருக்கியை அர்துகானின் ஆரம்ப ஆட்சிக் காலத்தில் மிக நல்ல நிலைக்கு அவர் உயர்த்தினார். ஆனால் "அரபு வசந்தம்" என்ற பெயரில் உருவான "இஸ்லாத்தை அழிக்கும்" வஹாபி கவாரிஜ் புரட்சியின் பிறகு அர்தகான் ஸிரியாவை அழிப்பதற்காக ஸிரிய புரட்சியாளர்களுக்கு மிகத் திவிரமாக உதவ ஆரம்பித்தார். இதனால் ஸிரியா, எகிப்து, ஈரான், ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளின் எதிர்ப்பை அர்துகான்  சம்பாதிக்க வேண்டி யேற்பட்டது. இதனால் அர்துகான் ஏராளமான உள்நாட்டு எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்யேற்பட்டது. பொது மக்களில் ஏராளம் பேர் அவரை எதிர்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக கல்வித்துறை சார்ந்தவர்களும், நீதிபதிகளும் , பத்திரிகயயாளரும் அவரை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பை முறியடிக்க வழியில்லாமல் திணறிய அவர், இப்போது நடந்த இராணுவ சதிப் புரட்சியைப் பயன் படுத்தி, அவரின் சகல எதிரிகளையும் ஒழித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று கோடி ( 3,00,000,00 )எகிப்து மக்கள் விதியில் இறங்கி , ஒரு வருடகாலமாக எகிப்தை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற வஹாபி முர்ஸிக்கு எதிராக பல நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து, தமது போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இராணுவத்தை வற்புறுத்தியதால், எகிப்து மக்களின் பக்கம் நின்று முர்ஸியைக் கைது செய்த இராணுவத் தலைவர் ஸிஸி இப்படியாக நீதிபதிகளையும் ஆசிரியர்களையும், காவல் துறையினரையும் கைது செய்தாரா? இல்லையே !
                அப்படியிருக்க ஸிஸிக்கு எதிராக "ஹோ ஹோ" என்று எழுதித் தள்ளிய இலங்கை வஹாபி பத்திரிகைகள், அர்துகான் பல்லாயிரம் சிவில் உத்தியயோகத்தர்களையும் , குறிப்பாக ஆசிரியர்கள், நிதிபதிகளையும் கைதுசெய்ததை எதிர்த்து எழுதுமா? ( சும்மா கண் துடைப்புக்கு எழுதிப் பயன் இல்லை. ஸிஸியை எதிர்த்தது போல் எதிர்க்குமா?)
                மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் ! இது தான் வஹாபி இக்வான் சிந்தனையாளர்களின் குணம்இது தான் குர்ஆன் ஹதீஸ் பேசும் இக்வான்களின் குணம் !
                ஒன்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஸிஸி என்ற ஆள் செவ்வாய் கிரகத்தில் இருந்து எகிப்தில் 'தொப்பென்று' விழவில்லை. அவர் எகிப்து பிரஜை. அவருக்கும் ஆட்சி செய்ய உரிமையுண்டு.
                உரிமை மட்டுமல்ல! முர்ஸியை விட எகிப்தை ஆட்சி செய்ய கடமையும் உண்டு. எப்படி? எகிப்து, இஸ்ரேலின் யுத்த ஆபத்தை எப்போதும் எதிர் நோக்கியிருக்கும் நாடு. எனவே வெறும் 'சிவில், ஆள் ஒருவர்  எகிப்தை ஆட்சி செய்வதை விட இராணுவத்தில் பரிச்சயம் உள்ள ஒருவர் ஆட்சி செய்வதே பொருத்தம்.
சரி, அப்படியிருந்தும்கூட, வெறும் இராணுவ தலைவராக மட்டும் இருந்து ஸிஸி ஆட்சிக்கு வரவில்லை. உடனடியாக உலகமே போற்றிய நீதியான தேர்தல் மூலம் ஜனாதிபதியானார்.
அப்படியென்றால் எகிப்தை ஆட்சி செய்ய முர்ஸியை விட ஸிஸி தான் மிக மிகப் பொருத்தம் என்பது பட்டப்பகல் சூரியன் போல் தெளிவானதல்லவா? எகிப்தின் பலத்தையும், பாதுகாப்பையும் இலங்கை இக்வான்ஜிக்கள் விரும்புவதென்றால், முர்ஸியை விட ஸிஸியை அல்லவா இவர்கள் ஆதரித்திருக்க வேண்டும்? இரண்டு வித பெரும் தகுதிகள் இருந்தும் ஏன் ஸிஸியை இவர்கள் ஆதரிக்க வில்லை? இவர்களுக்கு தேவை எகிப்தின் பாதுகாப்பல்ல ! இவர்களுக்கு தேவை மக்கள் ஆதரவல்ல ! இவர்களின் ஒரே தேவை "எங்கட இக்வான்ஜி தலைவராக இருக்க வேண்டும்" என்பது தான் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?
"தமது தலைவர்தான் உலகம்", "தமது பத்திரிகை தான் உலக அறிவு" என்ற நிலையில் கிணற்றுத் தவளைகளாக, அறிவுக்கண் குருடாக இருப்போருக்கு இந்த யதார்த்தம் புரிவதில்லை ! கடைசி காலத்தில் வரும் வழிகெட்ட இயக்கத்தினரை   "سفهاء الأحلام"  "மூடர்கள்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏராளம் ஹதீஸ்கள் மூலம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இனம் காட்டி சொன்னதை இந்த வழிகெட்ட வஹாபிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
22.7.16