Monday, July 18, 2016

துருக்கி-புரட்சி-இனி நடக்க வேண்டியது.

துருக்கி இராணுவப் புரட்சியின் பின்னர் . . . . . .
துருக்கியில் கடந்த வெள்ளியன்று நடந்த இராணுவப் புரட்சி தோழ்வியில் முடிந்துள்ளது. அர்துகான் 6000 பேரை கைது செய்துள்ளார். புரட்சி செய்தவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது இன்னும் தெளிவில்லை.
                வளர்ச்சியடைந்த ,மக்கள் ஆதரவுள்ள அரசாங்கமொன்றை இராணுவம் புரட்சி மூலம் கைப்பற்றுவது என்பது ஜனநாயகத்தின் அழிவுக்கே வழி கோலும். அந்த வகையில் புரட்சி தோற்கடிக்கப்பட்டது வரவேற்கத் தக்கது.
                எனினும் கடந்த ஐந்து வருட காலமாக அர்துகானின் அரசாங்கம் ஏராளமான தவறுகளைச் செய்தததால் அவர் கடந்த சில மாதங்களாக துருக்கியை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்ததை உலகம் நன்கு அறியும். (இங்கு இருட்டடிப்புச் செய்யப்பட்ட பத்திரிகைகளை வாசிப்பதால் இருட்டில் வாழும் வஹாபி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு  அது ஒன்றும் தெரியாதிருக்கலாம்).
அர்துகானின் தவறுகளில் சில:
துருக்கியில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழித்து வஹாபி இக்வான் வழிகேட்டை வளர்த்தமை.
அரசியல் சாணக்கியம் இல்லாமல் எகிப்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுகொண்டிருந்த வஹாபி இக்வான் முர்ஸிக்கு எதிராக பல நாட்களாக எகிப்து மக்கள் வீதியில் இறங்கி புரட்சி செய்யும் போது, எகிப்து மக்களின் பக்கம் இராணுவம் நின்று முர்ஸியைக் கைது செய்து, ஆட்சிக்கு வந்த ஸுன்னத்து வல்ஜமாஅத்து இராணுவ ஆட்சியாளர் ஸிஸி அவர்கள் அதி சீக்கிரத்தில் உலகமே போற்றும் (ஸிஸியின் எதிரிகளான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் ஏற்றுக்கொண்ட) ஜனநாயக தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த எகிப்து அரசாங்கத்தை கவிழ்க்க கடந்த மாதம் வரை அர்துகான் போராடியமை. ( இக்வான் பயங்கரவாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை இருந்ததாக இங்குள்ள இக்வான்ஜீக்கள் கூறுவது அவர்களின் அரசியல் சூனியத் தன்மையின் அடையாளமே. ஏனெனில், இவர்கள் கூறுவது போன்று எகிப்தில் அதிகமானவர்கள் இக்வான்ஜீக்கள் என்றால், தேர்தலில் முல்ஸிக்கு எதிராக வாக்களித்து அவர் பதவிக்கு வராமல் தடுத்திருக்க முடியுமே ! யாருக்கும் வாக்களிக்க தடை இருக்க வில்லையே. தேர்தலில் ஊழல் நடந்ததாக எந்த ஒரு நாடும் கூற வில்லையே.)
ஸிரியாவின் இஸ்ரேலுக்கு எதிரான பலமான அரசாங்கத்தை அழித்து, லிபியா, இராக் போன்று அதனை குட்டிச் சுவராக்க கடந்த ஐந்து வருடங்களாக அர்துகான் தீவிர முயற்சி செய்தமை.
ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தி ரஷ்யாவின் கடும் பகையைத் தேடிக்கொண்டமை.
IS பயங்கரவாதிகளுக்கு சகல விதமான ஆயுத பண உதவிகளும் வழங்கி ஸிரியாலும், இராக்கிலும் IS ஐ வளர்த்தமை. வினை விதத்ததவன் வினை அறுப்பது போல அவரே வளர்த்த IS துருக்கியில் பல இடங்களைத் தாக்கியதால் துருக்கியில் அமைதி வாழ்க்க சீரழிய வழி வகுத்தமை.
இ;பபடியாக ஏராளம் அரசியல், இராணுவ, மார்க்க தவறுகளைச் செய்து துருக்கியை அழிவை நோக்கி இட்டுச் சென்றமை.
ஆனால் கடந்த மாதம் அர்துகானுக்கு புதிய நல்ல ஞானோதயம் பிறக்க ஆரம்பித்தது. விமானத்தை சுட்டு வீழ்த்திய தவறை ஏற்றுக்கொண்டு, ரஷ்யாவுடன் கூட்டுச் சேர முன்வந்தார்.
ஸிரிய அஸாத் உடனடியாக பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கொள்கையை வாபஸ் பெற்று, ஸிரியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்தார்.
எகிப்துடனான பகைமையை நிறுத்தி எகிப்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்தார். ஆனால் துருக்கியில் உள்ள இக்வான்ஜிக்களின் எகிப்து விரோதப் போக்கை கட்டுப் படுத்தினால் மட்டுமே எகிப்து அர்துகானுடன் இணக்கத்துக்கு வரும் என்ற செய்தியை எகிப்து இராஜ தந்திரிகள் ஊடாக ஸிஸி வழங்கியுள்ளார்.
எனவே அர்துகான் இந்தப் புதிய பாதையில் சென்றால் இஸ்லாத்துக்கும் நல்லது. துருக்கிக்கும் நல்லது.
அவர் ரஷ்யா, ஸிரியாவுடன் "புதிய உறவுக்கு" தயாராவதால், சினம் கொண்ட அமெரிக்கா தான் இந்த இராணுவப் புரட்சியின் பின்னால் இயங்கியதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் அது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.
எப்படியோ அர்துகான் ஐந்து வருடங்களாக இருந்த தீய பாதையை விட்டும் விலகி திருந்தி நல்வழிக்கு வந்தால் அனைவருக்கும் நல்லதுதான். இங்குள்ள இக்வான்ஜீக்களுக்கு அர்துகானின் புதிய பாதை "ஜீரணிக்க" முடியாததாக இருக்கலாம் !
18.7.2016

No comments:

Post a Comment