Tuesday, July 19, 2016

வஹாபி அறிவு "பூஜ்யங்கள்"

இயக்க வெறியால் மூடர்களானோர்
நான் நேற்று எமது நெட்டில் துருக்கி அர்துகானின் தோழ்விகள் சில பற்றி எழுதியதை ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் பதிந்துள்ளனர். அதைப் பார்த்து சில உலக அரசியல் "பூஜ்யங்கள்" என்னென்னவோ உளறியிருப்பதை அவர்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
 நான் பேஸ்புக், அது இது என்று இப்போது வந்துள்ளவற்றை உபயோகிக்காத காரணமே, இப்படியான "பூஜ்யங்களின்" உளறல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எனது "தங்கத்தை விடப் பெறுமதியான" நேரம் வீணாகும் என்பதால் தான். அதனால் தான், எமது நெட்டில் மட்டும் எழுதுகிறேன், அறிவைத் தேடுபவர்கள் மட்டும் வாசித்து அறிவு பெறட்டும் என்ற நல்ல நோக்கில்.
"இயக்க வெறி பிடித்தவர்கள்" என்று எம்மை யாரோ "அறிவு பூஜ்யங்கள்" குறிப்பிட்டிருந்தன. பாவம் ! இயக்கம் என்றால் பொருள் என்ன? வெறி என்றால் பொருள் என்ன என்றே தெரியாத பேதைகள் ! எமக்கு இயக்கம் எதுவுமில்லை. "அஹ்லு பைத்துக்களையும், உண்மையான உலமாக்களையும்" பின்பற்றும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள். அதன்படி நாம் 1400 வருடங்களாக, தொடராக ,அவர்களைப் பின்பற்றுகிறோம். அவ்வளவு தான். வஹாபிகள் தான் இப்னு அப்துல் வஹாபின் பின்னர், ரஸஸூல்லாஹ் அவர்கள் கூறிய அந்த உலகளாவிய மாபெரும் "அல் ஜமாஅத்தை" விட்டும் பிரிந்து, காலத்துக்கு காலம் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு இயக்கத்தை உண்டாக்கிக் கொண்டு, அதன் தலைவருக்கு தமது மூளைகளை அடகு வைத்து, ஏமாளிகளாக இருக்கிறார்கள்.
நான் குவைத்துக்கு சென்ற 1976 முதல் மத்திய கிழக்கு அரசியலில் ஆழ்ந்த கவனம் செலுத்துபவன். ஸதாம் ஹுஸைன் ஈரானுக்கு எதிராக அமெரிக்க உதவியுடன் யுத்தம் செய்த எட்டு (8) வருடங்களிலும் தினமும் மத்திய கிழக்கு அரசியலின் உண்மை நிலையை எனது நண்பர்களுக்கு எடுத்துச் சொன்னவன். தினமும் குவைத்தில் எமது அறையில் பல நண்பர்களும் TV யில் போகும் செய்தியைக் காட்டி, ஸதாம் முன்னணியில் இருக்கிறார் என்பர். ஒருவர் Kuwait Times, Arab Times பத்திரிகைகளைக் கொண்டுவந்து காட்டி ஸதாம் வெற்றி பெற்றுள்ளார் என்பார். நானோ, இல்லை, இன்றைய யுத்தத்தில் ஸதாம் தோழ்வியடைந்தார் என்று சில ஆதாரங்களைக் கூறுவேன். இப்படி நடந்தது ஒரு நாளல்ல. எட்டு வருடங்கள். அதாவது சுமார் 2900 நாட்கள் !!!அறையில் இருப்பவர்களோ , சில பத்திரிகை, டீவி க்கு அப்பால் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்றிருக்க வில்லை. ஆனால் 8 வருட யுத்தம் முடிந்த பின்னர் தான் அவர்களுக்கு விளங்கியது அவர்கள் நம்பிய பத்திரிகைகள், TV எல்லாம் எட்டு வருடங்கள் சொன்னது எல்லாம் பொய் என்பது. அப்படிப்பட்ட இந்த பாரிக்கு தான் இங்கு கிணற்றுத் தவழைகளாக உள்ள சில "இயக்க வெறிபிடித்த"  "பூஜ்யங்கள்" உலக அரசியல் சொல்லித்தர வருகிறார்கள்
ஸதாம் குவைத்தை ஆக்கிரமிக்கும் போது நான் விடுமுறையில் வந்திருந்தேன். யுத்த நிலை பற்றி பத்திரிகைக்கு எழுத புல்ஸ்கேப் எடுக்கக்கூட கையில் பணமில்லை. நண்பர் நஜ்முதீன் ஹாஜியார் பணம் தந்து நூறு (100) பக்க கட்டுரை எழுதினேன். தினகரகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் காட்டினேன். அவர்  என்னை பரிதாபகரமாகப் பார்த்தார். "இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம்களும் ஸதாம் ஆதரவு. நீ மட்டும் என்ன ஸதாமை எதிர்த்து எழுதியிருக்கிறாயே" என்றார்.
ஜனாதிபதி பிரேமதாஸாவின் ப்த்திரிகை செயலாளரிடம் (ஜனாதிபதியுடன் தொடர்புள்ள ஜனாப் அன்வர் முஹியித்தீன் அவர்களுடன்) போனேன். எனது மத்திய கிழக்கு தொடர்புகளை அவர் அவருக்கு விபரித்த பின்னர், எனது கட்டுரையை தினகரனில் பிரசுரிக்கும்படி அவர் சிவகுருநாதனுக்கு ஒரு கடிதம் தந்தார்.
கடித்தை தினகரன் ஆசிரியருக்கு காட்டினேன். அவரின் பதில் இது : " இந்தக் கடிதத்துக்காக நான் உனது கட்டுரையை தினகரனில் போட்டால், நாளை எனக்கு ரோட்டில் போக முடியாமல் முஸ்லிம்கள் அடிப்பார்கள். எனவே என்னால் பிரசுரிக்க முடியாது" கட் அண்ட் ரைட்டாக மறுத்து விட்டார்.
யுத்தம் முடிந்தது. ஸதாம் படுதோழ்வியடைந்தார். ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் இராக் – அமெரிக்க – குவைத் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. பத்திரிகையின் ஒரு பக்கத்துக்கு யுத்தத்தின் விளைவுகள் பற்றி ஒரு கட்டுரை எழதினேன். தினகரன் ஆசிரியரிடம் தலை நிமிர்ந்து போனேன். என்ன விசேசம் என்றார். "ஸேர் மன்னிக்க வேண்டும், ஒரு கேள்வி கேட்கவா?" என்றேன். "சரி கேள்" என்றார்.
"கடந்த ஒரு வருடமாக உங்கள் தினகரனில் நீங்கள் பிரசுரித்த ஸதாம் பற்றிய கட்டுரைகளை தினகரனின் தூரதிருஷ்டி என்ற வகையில் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை லைப்ரரியில் புகழுடன் வைக்க முடியுமா"? என்று கேட்டேன்.
அவர் கூறிய பதில் " நீ பொல்லாத ஆள்டா. சரி சரி இப்ப ஏதாவது இருக்கிறதா பிரசுரிக்க"? என்றார். நான் சொன்னேன், " ஆம் ஒரு கட்டுரை கொண்டுவந்துள்ளேன். ஒரு எழுத்துக்கூட கூட்டமல் குறைக்காமல் பிரசுப்பதென்றால் தருகிறேன்" என்றேன். சரி என்றார். கொடுத்தேன்.
கொடுத்து, ஒரு வாரத்தில், அல் ஹாஜ் முனவ்வர் அவர்கள் வந்து, "உங்கள் கட்டுரையொன்று தினகரனில் வந்திருக்கிறது" என்றார். உடனே போய் பத்திரிகை ஒன்று எடுத்தேன். எனது கட்டுரை எப்படி பிரசுரிக்கப்பட்டிருந்தது தெரியுமா?
ஒரு பக்கத்தில் கட்டுரையைப் பிரசுரித்து, அதே பக்கத்தில் அவரின் 'ஆசிரியர் தலையங்கத்தையும்' எனது கட்டுரையை ஆதரித்து பிரசுரித்திருந்தார்.
அது மட்டுமல்ல, நான் நிபந்தனை போட்டேன் அல்லவா, "ஒரு எழுத்துக்கூட கூட்டாமல் குறற்ககாமல் ……" என்று, இஸ்ரேலின் 1947 முதல் வளர்ச்சியைக் காட்டும் ஒரு படத்தையும் கையால் வரைந்து அதனுள் எனது கையெத்தால் விளக்கமும் எழுதியிருந்தேன். அந்த எனது கையெழுத்தையும் கூட அப்படியே (அச்செழுத்தில் போடாமல்) பிரசுரித்திருந்தார். அன்று நான் எழுதியது தான் இன்றும் இராக்கில் நடப்பது.
அப்படிப்பட்ட இந்த பாரிக்கு தான் , இயக்க வெறியால் அறிவுக்கண் குருடான உலக அரசியல் கிணற்றுத்தவழைகளான சில பூஜ்யங்கள் அரசியல் படிப்பிக்க வருகிறார்கள். நபிமொழியொன்று நினைவுக்கு வருகின்றது. " உனக்கு வெட்கம் இல்லை என்றால் நீ நினைத்ததை செய்" என்பது தான் அது.
அது மட்டுமா? "அரபு வசந்தம்" என்ற போர்வையில் பல அரபு நாடுகளிலும் ஒரே சமயத்தில் எழுந்த "இஸ்லாத்தை அழிக்கும் கவாரிஜ் வஹாபி புரட்சி" ஆரும்பித்தது முதல் , இந்த ஐந்து வருடங்களாக எமது நெட்டில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளேன். உண்மையைத் தேடுவோர் அதனை வாசித்து எவ்வளவோ யதார்த்தங்களை அறிந்து கொண்டனர். தனது "மூளைகளை" இயக்கங்களுக்கு "ஈடு வைத்துள்ளவர்கள்" தான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
சில கேள்விகள் கேட்கிறேன் :
நான் எழுதிய கட்டுரைகள் காலத்தால் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதா இல்லையா?
வஹாபி பத்திரைககளில் வந்தவைகள் காலத்தால் பொய் என்று நிரூபிக்கப்பட்டதா இல்லையா?
துருக்கி வஹாபி அர்தூகான் , ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஸிஸியை எதிர்ப்பதை எதிர்த்து பல கட்டுரைகள் கடந்த ஐந்து வருடங்களிலும் எழுதினேனா இல்லையா? இன்று அதே வஹாபி அர்துகான் ஸிஸியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்து;ளளாரா இல்லையா? (இதை ஜோக்காக இப்படியும் கூறலாமல்லவா?) : ஐந்து வருடங்களுக்குப் பிறகு துருக்கி வஹாபி அர்துகான் எனது கட்டுரைகளைப் பார்த்துவிட்டு, "நான் நான்கு முறை துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானாலும்கூட, மத்திய கிழக்கில் யாருடன் கூட்டுச் சேர வேண்டும் என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. இலங்கையில் பாரி கூறும் அரசியல் தான் சரி என்று இப்போது படுகிறது. நான் அமைப் பின்பற்றி இப்போது ஸிஸியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறேன்" என்றால் பிழையா?
ஸிரிய ஜனாதிபதி அஸாதை கடந்த ஐந்து வருடங்களாக "உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று வஹாபி அர்துகான் அடம் பிடித்தாரா இல்லையா? அஸாதின் எதிரிகளான  IS க்கு அர்துகான் ஆயுதம் வழங்கினாரா இல்லையா? ஐரோப்பிய IS வஹாபிகள் துரு;ககியூடாக ஸிரியாவுக்குள் நுழைய அர்துகான் இடம் கொடுததாரா இல்லையா? இப்போது, யாரைப் பின்பற்றி, அர்துகான் அஸாதுடன் உறவாடப் போகிறார்.
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அர்துகான். அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புட்டின் வற்புறுத்தினார். "நானா
"விமானத்தை வீழ்த்தியதுக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கடுமையாக மறுத்தாரா இல்லையா? இப்போது யாரைப் பின்பற்றி அர்துகான் தனது தவறை ஏற்றுக் கொண்டு, ரஷ்யாவுடன் உறவாட முன்வந்திருக்கிறார்?
எனது மத்திய கிழக்கு கண்ணோட்டம் பற்றி ஒரு முக்கிய குறிப்பை இங்கு தருவது பொருத்தம் என நினைக்கிறேன்.
முதலாவது :-
நான் அர்துகானை எதிர்க்கிறேன். சீஆ அஸாதை எதிர்ப்பதில்லை ஏன் என்று சிலர் கேட்கிறார்களாம். அறிவு தேவையானவர்கள் அது உ;ள்ளவரை எதிர்க்க மாட்டார்கள் இருக்கும் இடத்துக்கு வந்து பெற்றுக் கொள்வார்கள். இது தான் உலக நடை முறை. இந்த வஹாபி கவாரிஜ் மூடர்கள் வந்த பின்னர் தான், "தேட மாட்டோம். முதலில் எதிர்ப்போம்" என்ற சைத்தான் தத்துவம் தோன்றியது.
அஸாத் பின்பற்றும் மார்க்க கொள்கையை நான் என்றாவது ஆதரித்திருந்தால் காட்டட்டும். அஸாத் வழிகெட்ட சீஆ தான். நாம் சீஆ கொள்கைக்கு முரண் ஆனவர்கள் என்பதை கடந்த இருவாரத்திற்குள்ளும் எழுதியிருக்கிறேன். அறிவுக் கண் குருடானவர்களுக்கு தென்படாவிட்டால் நாம் பழியில்லை !
"நிச்சயமாக அல்லாஹ் கெட்ட மனிதனைக் கொண்டும் இந்த மார்க்கத்துக்கு உதவி செய்வான்" என்ற ஹதீஸ் புகாரியில் வருகிறது. அதன்படி அஸாத் இஸ்ரேலுடன் எந்த ஒப்பந்தமும் தொடர்பும் செய்து கொள்ளாத ஒரே ஒரு அரபு அரசியல் தலைவர்.
இன்றும் இஸ்ரேலுக்கு எதிராக பலம் பொருந்திய இராணுவத்தை வைத்திருக்கும் ஒரு அரபு அசைியல் தலைவர்.
ஸிரியாவில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து உலமாக்கள் அஸாதின் ஆட்சியில் (வேறு எந்த வஹாபி ஆட்சி நடக்கும் நாடுகளை விட) ஓரளவு பாதுகாப்பாக, கௌரவமாக இருக்கிறார்கள்.
வஹாபி முர்ஸியும், வஹாபி அர்துகானும், வஹாபி வளைகுடா நாடுகளும் ஸிரியாவுக்கெதிராக "வஹாபி புரட்சி" மேற்கொள்ள முன்னர், ஸிரியாவை வளம் கொலிக்கும் நாடாக வைத்திருந்தவர் அஸாத்.
துருக்கி, கட்டார், ஸவூதி போன்ற வஹாபி நாடுகளின் ஆதரவுடன், அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் அஸாத் வைத்திருந்த "பேரழிவு தரும்" ஆயுதங்களை அழித்தில்லா விட்டால், இன்றும் இஸ்ரேல் ஸிரியாவுக்கு பய்நது நடுங்கிக் கொண்டிருக்கும் அல்லவா? இஸ்ரேல் ஒரு முஸ்லிம் நாட்டுக்கு பயந்திருப்பதை இங்குள்ள வஹாபி "அறிவு பூஜ்யங்கள்" விரும்புவதில்லையா? அவ்வாயுதங்கைளை வஹாபி நாடுகளின் உதவியுடன் அமெரி;ககா அழித்து, இப்போது இஸ்ரேல் ஓரளவு நிம்மதி பெருச்சு விடுவதையா இங்குள்ள வஹாபிகள் சந்தோசப் படுகிறார்கள்.
இப்படியான நலவுகளுக்காகவே தான் நாம் அஸாதை ஆதரிக்கிறோமே அன்றி அவரின் சீஆக் கொள்கையை ஆதரிக்க வில்லை.
இரண்டாவது :-
அரசியல் என்பது, வஹாபிகளைப் போல், "அவரையே நாம் விரும்புகிறோம். அவர் தோற்றாலும் வெற்றி பெற்றார் என்றே நாம் கூறுவோம்" என்பதல்ல. ஒருவர் மஹிந்தவுக்கு வாக்களித்துவிட்டு. மஹிந்த தோழ்வியடைந்த பின்னரும் "இல்லை மஹிந்த தான் வென்றார். அவர் தான் இப்போதும் ஜனாதிபதி" என்றால் ஏற்பீர்களா? இப்படியான ஏமாளித் தனமானது தான் வஹாபி அரசியல் நோக்குகள் !
                எமது அரசியல் நோக்கு அப்படியல்ல. சுய நலம் கிடையாது. எமக்கு ஈரானுடன் எந்த தொடர்பும் இருக்க வில்லை. ஸதாம் மார்க்க கொள்கையில் ஈரான் சீஆவை விட நல்லவர். ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஸதாம் ஈரானை எதிர்த்தது அமெரிக்க நலனைக் காப்பாற்றுவதற்காக. எனவே எதிர்த்தோம். ஸதாம் குவைத்தை ஆக்கிரமித்ததன் மூலம், "குட்டி" நாடான குவைத் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்து , அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா முதலான சகல ஐரோப்பிய இஸ்லாமிய விரோத ஸியோனிஸ நாடுகளும் மத்திய கிழக்கை ஆ;ககிரமிக்க ஸதாம் வழியமைத்துக் கொடுத்தார் என்பதற்காகவே தான்.
யுத்ததில் ஈரான் வென்றால் "ஈரான் வென்றது" என்போம். அது சீஆ வழி கேடு என்பதற்காக, வெற்றியை மறைத்து "ஈரான் தோழ்வியடைந்தது" என்பது எமது குணமல்ல !
                எனவே வஹாபிகளைப் போல் "தனிமனித வழிபாடு" எம்மிடம் இல்லை. உள்ளதை உள்ளவாறு கூறுவோம். ஸிஸியை ஆதரிக்கிறோம். ஏன்? அவர் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஓரே அரபு அரசியல் தலைவர் என்பது எமது விருப்பக்குரியது என்பதால் மட்டுமல்ல. அவர் எகிப்தை வீறு நடையில் முன்னேற்றிக் கொண்டு போகிறார் என்பதற்குமாகத்தான்.
ஆனால் எகிப்தில் இன்னும் அவர் செய்யாத செய்ய வேண்டிய திருத்தங்கள் ஏராளம் உள்ளன. (அது பற்றிக் கூறுவதற்கு இது இடமல்ல.)
                மூன்றாவது:-
வஹாபிகளைப் போல் அவர்களுக்கு சார்பான பத்திரிககளை மட்டும் படித்து அதன் கருத்துக்களை  மட்டும் தலையில் கட்டிக் கொள்பவனல்ல நான். உலகப் பத்தரிகைகள் சுமார் இருபத்தைந்து (25) தேவையைப் பொறுத்து அடிக்கடி வாசிப்பவன். ஒன்றுக் கொன்று முரணான நோக்கங்களையுடைய சுமார்  பத்து (10) உலகப் பத்திரிகைகளை தினமும் வாசிப்பவன்.
எனவே " உனக்கு வெட்கம் இல்லை என்றால் நீ நினைத்ததை செய்" என்ற ஹதீஸை வஹாபிகளுக்கு நினைவூட்டுகிறேன்.
19.7.2016

No comments:

Post a Comment