தாஇஷ் என்ற ISIS வஹாபி கவாரிஜ் பயங்கரவாத அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் என்ற தரத்தில் இருந்த "அபூ உமர் அஷ்ஷீஷானி" எனபவர், இராக்கில் மௌஸில் என்ற பகுதியில் அமெரிக்க வான் தாக்குதலில் 13.7.16 இல் கொல்லப்பட்டார். அல்ஹம்து லில்லாஹ்.
இவர் ஏராளமான தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், தாஇஷ் தலைவர் அபூபக்ர் பக்தாதியின் விசேச ஆலோசகரும், எப்போதும் 1000 தற்கொலைப்படையினரைத் தன்வசம் வைத்திருந்தவரும், இராக்கிலும் ஸிரியாவிலும் பெரும் பகுதிகளை தாஇஷ் கைப்பற்ற காரணமாக இருந்தவரும் ஆவார்.
இப்போது தாஇஷ் பயங்கரவாதிகள் பல இடங்களிலும் பல தோழ்விகளைச் சந்தித்து வரும் இத் தருணத்தில், இவரின் கொலை தாஇஷுக்கு மாபெரும் இக்கட்டான நிலையை உண்டாக்கியிருப்பதாக அவதானிகள் கூறுகிறார்கள்.
இதில் இன்னொரு முக்கிய விசயம் என்ன தெரியுமா?
நாம் அடிக்கடி இப்பகுதியில் கூறி வருகிறோம் IS என்ற தாஇஷ்கள் கவாரிஜ் வஹாபி இயக்கங்களின் கொள்கையில் இருந்து உரவானவர்கள் என்பதை. ரஷ்ய கத்திரிகையான ' ரஷ்யா டுடே ' என்ற இப்பத்திரிகைச் செய்தியின் நான்காம் பந்தியை கவனியுங்கள்.
وأشار هشام الهاشمي، مستشار الحكومة العراقية للشؤون الأمنية والجماعات المتشددة، إلى أن "داعش" فقد استراتيجيا من ذوي الخبرات وشخصية أساسية في تجنيد عناصر جدد في منطقة ما بعد عهد الاتحاد السوفياتي ألهمت جاذبيته على إغراء السلفيين من منطقة القوقاز للقتال في صفوف "داعش
ரஷ்யாவில் உள்ள கவ்காஸ் மாநிலத்தில் உள்ள "ஸலபிகளை" IS அமைப்பில் சேர்ப்பதற்கு இவர் தூண்டிக் கொண்டிருந்தார்
என்ற செய்தியை அவதானியுங்கள்.. எனவே IS என்பது காதிரியாவோ சாதுலிய்யாவோ ரிபாஇய்யாவோ அல்ல, சாபிஈ,, ஹனபி, மாலிக்கி, ஹன்பலி அல்ல, மாறாக வஹாபி இயக்கங்களில் இருந்தே IS பயங்கரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை உலகம் அறிந்து வைத்திருக்கின்றது. இலங்கையில் உள்ள வஹாபி இயக்கத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இதனை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
இதோ செய்தி :-
No comments:
Post a Comment