Friday, December 19, 2014

America Behind ISIS

அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் ஸிரியாவிலும், ஈராக்கிலும் தினமும் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் ISIS (தாஇஷ்) என்ற அதி தீவிர கவாரிஜ் வஹாபிகளுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விமானத் தாக்குதல் நடாத்துகின்றன. ISISஐ அழிக்க அமெரிக்கா முயல்கின்றது என்றெல்லாம் பத்திரிகைகளிலும், வானொலி. டிவி யிலும் பார்க்கிறோம் அல்லவா?

அமெரிக்காவின் நோக்கம் ISIS என்ற வஹாபி இயக்கத்தை அழிப்பதல்ல. மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடு செய்யவும், அதன் மூலம் மத்திய கிழக்கின் சகல இராணுவங்களையும் அழிக்கவும், அங்கு நிரந்தரமாக காலூன்றி பெற்றோல் வளத்தை சூரையாடவும் வேண்டும் என்ற நோக்கில், அதற்கு ஒரு நொண்டிச்சாட்டாக மேற்கு நாடுகளே ஆயுதம் கொடுத்து, உண்மையான இஸ்லாத்தின் எதிரிகளான சில வஹாபி நாடுகள் வளர்த்த இயக்கமே இந்த ISIS என்பது அரபு நாடுகளில் பரவலாக யாரும் அறிந்த உண்மை.

இத்தனை மாதங்களாக அமெரிக்கா தாக்கியும் இன்னும் ISIS பிடித்த இடங்களை விட்டும் அவர்களை விரட்ட அமெரிக்காவால் முடியவில்லை. மாறாக ஈராக். ஸிரிய ராணுவங்களே மும்முரமாகப் போராடி ISIS பிடித்த இடங்களை மீட்டிக் கொண்டு வருகின்றன.

ISISஐ தாக்குவதாக வெளி உலகத்துக் நடித்துக் காட்டும் அமெரிக்கா, உண்மையில் ISISக்கு உதவியாகவும், ஆறுதலாகவுமே செயல்படுகின்றது என்பதையே 'அல் ஆலம்' என்ற ஈரான் பத்திரிகை இப்படிச் சித்தரித்துள்ளது.



No comments:

Post a Comment