Sunday, April 12, 2015

யெமன் யுத்த பின்னணிகள் - 02


தொடர் - 02

ஒன்பது அரபு நாடுகள் இணைந்து யெமனில் உள்ள இரண்டே இரண்டு வீதம் ஹோஸி சீஆ பயங்கரவாதிகளை எதிர்த்து நடாத்தும் "புயல் அணி" யுத்தம் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டவில்லை என்றே கூற வேண்டும்.

ஒன்பது நாடுகளின் சரமாரியான கடும் விமானத் தாக்குதலுக்கு மத்தியிலும் சப்வா (شبوة) என்ற பெற்றோல் வளம் மிக்க பிரதேசத்தை ஹோஸிகள் இவ்வாரம் கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு காலமும் ஸுன்னி அரபு நாடுகள் உலக ஆடம்பர போதையில் மயங்கி கிடக்கும் சந்தர்ப்பத்தை சீஆ ஈரான் நன்கு பயன்படுத்தி மிக அற்ப தொகையினரான ஹோஸிகளுக்கு கொடுத்த கனரக ஆயுதங்கள், பயங்கரவாத கெரில்லா யத்தப் பயிற்சிகளின் முன்னே ஒன்பது அரபு நாடுகளின் விமானத் தாக்குதல்கள் இன்று வரை ஈடுகொடுக்க முடியவில்லை என்றே தோன்றுகின்றது. எனினும் தரை மார்க்க யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் தான் வெற்றி தோழ்வியை துல்லியமாக கணிக்க முடியும்.

ஹோஸிகளின் தற்போதைய வெற்றியையும், ஈரான் தனது யுத்தக் கப்பல்களை 'பாபுல் மன்தப்' நீரிணையை நோக்கி அனுப்பியிருக்கும் செய்திகளே எகிப்தின் அல் அஹ்ராம் பத்திரிகை இவ்வாறு தருகிறது :-(அறிவின் எதிரிகளான பள்ளத்தக்கியா நாசகார சதிகாரரின் சதி நடந்தில்லாவிட்டால், இன்று வஹாபி இயக்கங்கள் செய்வது போன்று, ஒரு ஒபீஸ், மொழிபெயர்க்க உலமாக்கள், விசேட ஆற்றல் உள்ள ஊடகத்துறை மூலம் முழு நாட்டிலும் உலகச் செய்திகளை ஸுன்னத்து வல்ஜமாஅத்து கோணத்திலும், வேறு எந்த வழிகெட்ட கொள்கையாளரின் ஊடகங்களை விடவும் விறுவிறுப்பாகவும், மக்கள் அதிகம் விரும்பி வாசிக்கும் வகையிலும் நாம் இப்படியான பல்லாயிரம் விடயங்களை மொழி பெயர்த்து வாசகர்களுக்கு தந்திருக்கலாம். என்ன செய்ய, பள்ளத் தக்கியா சதிகாரர்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து அறிவுத்துறைக்கு தடை போட்டு விட்டனர். இலங்கையிலும் உலகிலும் மார்க்கத் துறையில் மாபெரும் சாதனைகள் நிலை நாட்ட வந்து, 1996, 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் அல்லாஹ்வின் கிருபையால் இலங்கை மட்ட, உலக மட்ட சாதனைகள் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் போது, இன்னும் ஏராளம் நிலைநாட்ட இருந்த போது எமது போராட்டத்தை சதிகாரர்கள் அழித்ததால் அடிக்கடி அந்த அநியாயத்தை நாம் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இதனை விரும்பாதவர்கள், டீவியில் செய்தியை விரும்பிக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தாம் விரும்பாத விளம்பரங்கள் குறுக்கீடு செய்வதை பொறுமை செய்வது போன்று பொறுமை செய்யும்படி பணிவுடன் வேண்டுகின்றோம்.)

யெமனில் இந்த ஹோஸி இயக்கத்தை பத்ருத்தீன் ஹோஸி என்பவர் ஸ்தாபித்து, பின்னர் அவரின் மகன் ஹுஸைன் ஹோஸி என்பவர் ஈரானின் உதவியுடன் வளர்த்து, இப்போது அப்துல் மலிக் ஹோஸி என்பவர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, வம்புத்தனமாக யெமனைக் கைப்பற்றி ஈரானுக்கு கொடுக்க முனைகிறார்.

உலக ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களை வழிகெடுத்தி தம்பக்கம் ஈரத்தெடுக்க வஹ்ஹாபி தலைவர்கள் எவ்வாறு "குர்ஆன் ஹதீஸ்" என்ற கோசத்தை முழங்ககிறார்களோ, இன்னும் அதிகமானோரை தம்பக்கம் ஈர்த்தெடுக்க "இஸ்லாமிய அரசாங்கம் அமைப்போம்" என்று இக்வானுல் முஸ்லிமீன்களும் தாஇஷ் (ISIS) களும் கோசம் எழுப்பி முஸ்லிம்களை Brain wash செய்கிறார்களோ, அதே விதமாக சீஆக்களான ஈரானியரும் ஹோஸிகளும் பொதுமக்களை தம்பக்கம் திருப்ப கையாளும் கோசம் என்ன தெரியுமா ?

الله اكبر الموت لأميركا الموت لإسرائيل اللعنة على اليهود النصر للإسلام
அல்லாஹு அக்பர்! அமெரிக்காவுக்கு அழிவு! இஸ்ரேலுக்கு அழிவு! யூதர்களுக்கு சாபம்! இஸ்லாத்துக்கு வெற்றி!

ஆம், இந்த வீராவேசக் கோசங்களே ஈரானையும், லெபனான் ஹிஸ்புல்லாஹ்வையும், யெமன் ஹோஸிகளையும் நோக்கி அதிகமான மக்கள் விரைந்து செல்லக் காரணம். உண்மையில் அமெரிக்கா ஈரானை எதிர்ப்பதில்லை. ஈரான் அமெரிக்காவை எதிர்ப்பதுமில்லை. எல்லாம் வெளி வேசம்தான். ஈரான் அணுசக்தி செறிவூட்டலுக்க அமெரிக்கா தலைமையிலான ஸியோனிஸ நாடுகள் அனுமதி வழங்கியது இதற்கு போதிய சான்றாகும். பார்க்க (அரபு) :

"அமெரிக்காவுக்கு அழிவு" என்று கோசமிடும் ஹோஸிகள் யெமனில் முஸ்லிம்களைத்தான் அழித்தார்கள்.

சீஆக்களைப் பற்றி கூறும் போது "தக்யா" (تقية) என்ற ஒரு கொள்கையை முஸ்லிம்கள் மட்டுமல்ல மற்ற நாடுகளும் அறிந்திருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசல், (அல்லது) சீஆக் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக எந்தப் பொய்யையும் கூறலாம் என்பதே இந்த "தக்யா" என்ற கொள்கையின் அர்த்தம். இது சீஆ மத்ஹபில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பின்பற்றும் ஒரு கொள்கை. சீஆக்களின் இந்த வலையில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பெரிய வல்லரசுகளும் சிக்கித்தான் இருக்கின்றன. பார்க்க (அரபு) :-


யெமனைச் சேர்ந்த உலகப் பிரசித்தி பெற்ற ஸுன்னத்து வல்ஜமாஅத்து அழைப்பாளர் அலி ஜிப்ரி அவர்கள். அவர் இலங்கைக்கு பல தடவைகள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து பிரச்சாரத்தில் வந்துள்ளார். அப்போது அவரின் சில பேச்சுக்களை மொழி பெயர்க்கும் பாக்கியமும் இந்த அடியேனுக்கு கிடைத்தது. வஹாபியத்து என்பது வழிகெட்ட பித்அத்து என்பதை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக எடுத்து விளக்குபவர். அவர் யெமன் பிரச்சினையின் அடித்தளம் பற்றி விளக்குகிறார்

யெமனில் உள்ள 25 % ஆன் ஸைதியாக் கொள்கையைப் பின்பற்றும் சீஆக்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மிகப் பெரும்பான்மையான ( 65 % ) சாபிஈ மத்ஹபினருடன் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனுமே வாழ்ந்து வந்தனர். ஆனால் ஈரானில் குமைனியின் புரட்சி வெற்றி பெற்றபின்னர், ஸுன்னி அரபு நாடுகள் அனைத்திலும் சீஆக் கொள்கையைப் பரப்பும் குமைனியின் திட்டத்தின் அடிப்படையில் யெமனிலும் தீவிர சீஆக் கொள்கை பரப்பப்பட்டு, இப்போது, ஹோஸிகள் என்ற வம்பர்களான பயங்கரவாதிகளை ஈரான் ஆயுத பலத்தால் உருவாக்கி, யெமனை சீஆ நாடாகவும், ஈரானின் காலணித்துவ நாடாகவும் மாற்றி, "பாபுல் மன்தப்" என்ற பொருளாதார, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கடல் நீரிணையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஈரான் செய்யும் முயற்சியின் விளைவே தற்போதைய யுத்தம் என்பதை அறிஞர் ஹபீப் அலி அல் ஜிப்ரி அவர்கள் வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றார். பார்க்க வீடியோ (அரபு)ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாமான யெமனில் கடும்போக்கு சீஆ நாடான ஈரான் தலையிட்டதாலேயே சமகால சகல பிரச்சினைகளும் தற்போதைய யுத்தமும் ஏற்பட்டுள்ளது என்பதை முழு உலகும் அறிந்திருக்கும் போது, அந்த ஊடுருவலை மூடி மறைக்க "அரபு நாடுகளின் யுத்தம் யெமனின் இறைமையை மீறுகின்றது" என்று ஈரான் தனது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. (யானையை விரலால் மறைக்கப் பார்க்கிறது). இவ்வாறு யெமனின் உள் விவகாரங்களில் ஈரான் தனது மூக்கை நுழைத்துக் கொண்டு அரபு நாடுகளைக் குற்றம் சுமத்தவதையே இந்தக் கார்ட்டூன் சித்தரிக்கின்றது :இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:

Post a Comment