Sunday, April 19, 2015

ஈரான் - திரைக்குப் பின்னால் !


இது தான் இதுவரை நடக்கும் ஈரான் - இஸ்ரேல் உறவின் ரகசியம். இஸ்ரேலைப் பூண்டோடு அழிப்பதாகவும், இஸ்ரேலுக்கு மௌத்து என்றும் ஈரான் பல இலட்சம் தடவைகள் ஊடகங்களில் கூறி, எழுதி, கார்டூன்கள் வரைந்து இருக்கும். ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக ஒரு (தனிப்பட்ட) யுத்தமும் ஈரான் செய்ய வில்லை.

லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் போது ஈரான் லெபனானில் உள்ள சீஆ ஹிஸ்புல்லாஹ்வுக்கு தாராள உதவி செய்து இஸ்ரேலை தோற்கடித்ததை நாம் முன்பு எழுதியள்ளோம். ஆனால் அது லெபனானில் இஸ்ரேல் ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடான லெபனானை சீஆ நாடாக மாற்றவுமே அப்போது ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானுக்கு உதவியது என்பதே அதன் பின்னணி. இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்க விடாமல் ஈரான் தடுத்ததால் அதனை நாம் ஆதரித்து எழுதினோம்.

அதே மாதிரி ஸிரியாவை அமெரிக்கா தாக்கி அதனை தற்போதைய லிபியா போன்று பல துண்டுகளாக உடைத்து, உள்நாட்டுப் போர் நடக்கும் நாடாக ஸிரியாவை மாற்ற ஒபாமா முயன்ற போது, அதனை எதிர்த்து நின்று ஸிரியாவைப் பாதுகாத்தது ஈரான். அதனையும் நாம் ஆதரித்து எழுதினோம்.

எந்த ஒரு நாட்டினதும் நலவைப் பாராட்டியும் தீமையை எதிர்த்தும் பேசுவதே எமது குணம். குவைத்தில் நாம் படிக்கும் காலத்தில் 1980 களில் ஈரானை அழிக்க ஸதாம் மேற்கொண்ட எட்டு வருட யுத்தத்தில் ஒவ்வொரு நாளும் நான் ஈரானை ஆதரித்தும், ஸதாமுக்கு உதவிய குவைத்தை எதிர்த்தும் அங்கிருந்த எமது ஊர் நண்பர்களிடம் நான் (தொடர்ந்து எட்டு வருடங்களாக) பேசியதை எமது நண்பர்கள் அறிவர். நான் குவைத்தில் வசதியாக இருப்பதற்காக குவைத்தை ஆதரித்துப் பேசவில்லை. இது எமது குணம்.

ஆனால் இலங்கையில் இன்று உள்ள அனேக ஊடகங்களின் நிலை அப்படியல்ல. சிலது தரீக்காக்களின் தவறுகளை எல்லாம் மறைத்து புகழ்மாலை மட்டுமே பாடும். இன்னும் சிலது. உலக வஹாபி தலைவர்களினதும், வஹாபி நாடுகளினதும் புகழ்மாலை பாடும். தவறுகளை மறைக்கும். ஈரானின் எல்லா விடயங்களையும் எதிர்க்கும். ஆனால் "எப்போதும் உண்மையே பேச வேண்டும்" என்ற இஸ்லாமிய அறிவுரைக்கு ஏற்பவும், "எச்சொல் யார்யார் வாய்க் கேட்பினும் அச்சொல் மெயப்பொருள் காண்பது அறிவு" என்பதற்கேட்பவும், உண்மை எவரிடத்தில் இருந்தாலும் அதை ஆதரிப்பதும், தவறு யாரிடத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும் எமது பாரம்பரியமாகும்.

எனவே நாம் ஒரு நாட்டின் ஒரு செயலை ஆதரித்து எழுதினால் நாம் அந்நாட்டின் ஆதரவாளர் என்றோ, ஒரு நாட்டின் ஒரு தவறை எதிர்த்து எழுதினால் நாம் அந்நாட்டினை எதிர்க்கிறோம் என்பதோ அர்த்தமல்ல என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

மார்க்க விடயமாகட்டும், உலக (மத்திய கிழக்கு) அரசியல் விடயமாகட்டும், எமது வாசகர்கள் நேயர்களுக்கு ஹக்கை ஹக்காகவும், பாத்திலை பாத்திலாகவும் காட்டுவதன் மூலம் அவர்கள் சரியான பாதையில் செல்ல உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதே எமது நோக்கம்.

ஈரான் இஸ்ரேலை நேரடியாக தாக்காமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கில் இஸ்ரேல் தான் அமெரிக்கா, பிரிட்டனின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர ஸ்தானம். இஸ்ரேலை அழிக்க என்று நேரடி யுத்தம் ஈரான் செய்தால் அமெரிக்கா முழுப்பலத்தைப் பிரயோகித்து ஈரானை அழிக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். எனவே தான் தனது சீஆ மக்களை ஏமாற்றவும், உலக ஸுன்னி முஸ்லிம்களை "அடடா ! ஈரான் தான் இஸ்ரேலின் பிரதான எதிரி, இஸ்லாத்தின் பாதுகாவலன்" என்று கருத வைத்து Brain wash செய்து முஸ்லிம்களை சீஆவாக மாற்றவுமே ஈரான் "இஸ்ரேல் எதிர்ப்பு நாடகம்" ஆடுகின்றது. இந்த உண்மை பரஸ்பரம் ஈரான், இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகட்கும் தெரியும். எனவே ஈரானின் "இஸ்ரேல் எதிர்ப்பு" கோசத்துக்கு இஸ்ரேல் சற்றுமே அலட்டிக் கொள்வதில்லை. "அவங்கட தேவைக்கு சும்மா வெறும் கோசம் போடுகிறார்கள். கத்திவிட்டுப் போகட்டும்" என்று இஸ்ரேல் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.

தஜ்ஜால் வரும் போது ஈரானில் உள்ள இஸ்பஹான் என்ற மாகாணத்தில் இருந்து 70,000 யூதர்கள் புறப்பட்டு வந்து தஜ்ஜாலுடன் இணைந்துகொள்வார்கள் என்று ஒரு நபிமொழியும் இருக்கின்றது. இப்போது ஈரானின் இஸ்பஹான் மாநிலத்தில் 30 ஆயிரம் யூதர்கள் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. எனவே அத்தொகை 70,000 ஆயிரமாகும் போது தஜ்ஜால் வரும் காலம் நெருங்கிவிட்டது என்பதை ஊகிக்கலாம். தனது நாட்டில் உள்ள அந்த யூதர்களைப் பற்றி ஈரான் வெளி உலகுக்கு காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றது.

எப்படியோ, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் கோசங்கள் எல்லாம் வெறும் "முதலைக் கண்ணீர்" என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால் ஈரான் ஒரு வல்லரசாக வருவதை இஸ்ரேல் விரும்புவதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விடயம். இது வரை ஸுன்னத்து வல்ஜமாஅத்து மிஸ்ரு (எகிப்து) 1947 முதல் பல யுத்தங்களை இஸ்ரேலுக்கு எதிராக முன்நின்று நடாத்தியுள்ளது. அவற்றுள் 1973 யுத்தத்தில் இஸ்ரேலை படுதோழ்வியடையச் செய்தது.

ஒரு கேள்வி: இது வரை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக என்ன யுத்தம் செய்திருக்கிறது ? "சும்மா வெறும் கோசம் தான்"

ஈரான் சார்பு பத்திரிகைகளைப் புரட்டிப்பாருங்கள். உலக வல்லரசு அமெரிக்கா மாதிரி மத்திய கிழக்கு வல்லரசு ஈரான்தான் என்று உலகுக்கு காட்டுவதற்காக, முஸ்லிம் உலகைப் பயமுறுத்துவதற்காக, தாம் கண்டுபிடித்த நவீன ஆயுதங்களின் படங்களை அடிக்கடி போட்டுக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த ஆயுதங்களால் இஸ்ரேலை அடித்த நாள் தான் இல்லை !

No comments:

Post a Comment