Tuesday, July 21, 2015

நான் மட்டுமா கூறுகிறேன் !

எமது தூரதிருஷ்டிக்கு உலகளாவிய வெற்றி !

அதிகம் தலைவர்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.

அதிகம் உலமாக்கள் வஹாபியத்தை இனம் காணவில்லை. இது அடிக்கடி நாம் கூறுவது.

பெரும்பாலும் நாம் பிறக்க முன்னர், அல்லது சிறு வயதிலேயே எமது தகப்பனார் வஹாபியத்துக்கு எதிரான முக்கிய ஒரு கிதாபான 'ஷவாஹிதுல் ஹக்' என்ற கிதாபை தருவித்து படித்து வைத்திருந்தார்.

எனக்கு தகப்பனார் அதன் முக்கியத்துவத்தைக் கூறி அதனைத் தந்தார்.

வஹாபியத்தை முறியடித்து தக்கியாவையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தையும் ஹயாத்தாக்கத் தேவையான மேற்படிப்பைத் தேட வேண்டும் என்ற இலட்சியம் வைத்தே குவைத் சென்றேன்.

வஹாபியத்து பற்றி எனக்குத் தேவையான சகல தகவல்களையும் ஆதாரங்களையும் தரக்கூடிய பேரறிஞர்கள் சிலரை கருணையுள்ள ரஹ்மான் எனக்காக குவைத்தில் தயார் படுத்தி வைத்திருந்தான். அவர்களுள் ஸெய்யித் யூஸுப் அர்ரிபாஈ, உஸ்தாது சம்சுத்தீன், உஸ்தாது அப்துல் அஸீஸ் ஹாஷிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

நாம் 1977 அளவில் குவைத் யுனிவர்ஸிட்டியில் படிக்கும் போதே, குவைத்தில் வஹாபியத்து தந்திரமாக கண்டறிந்து, அரசாங்கம் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லையே என்று கவலைப்பட்டோம். எமது அறையில் நண்பர்களிடம் தினமும் போல் இது பற்றி கதைப்பேன்.

1984 இல் எகிப்தில் வஹாபிக்கும் அல் அஸ்ஹர் உலமாக்களுக்கும் இடையில் நடந்த விவாதத்தின் வீடியோவைப் பார்த்து , இவ்வளவு தூரம் வஹாபியத்து பரவும் வரை அஸ்ஹரி உலமாக்கள் என்ன செய்தார்கள் என்று ஏங்கினேன். மொலிது, மீலாது கொண்டாடினால், பெயரளவில் சில பயானகள் பண்ணினால் வஹாபியத்தை அழிக்கலாம் இஸ்லாத்தை ஹயாத்தாக்கலாம் என்று அஸ்ஹரிகள் தப்புக்கணக்குப் போட்டிருப்பதை எண்ணி வேதனைப் பட்டேன்.

வஹாபியத்தின் அடி நுனி எல்லாம் உலமாக்கள் மூலம் படிக்க உதவி செய்து, அதனை மடக்கும் கலையையும் அல்லாஹ் எனக்குத் தந்தான். அதன்படி இது வரை சிறிய பெரிய விவாதங்கள் சுமார் 22 இல் கலந்துகொண்டு, அதிரடி முறையில் சில நிமிடங்களிலேயே வஹாபித் தலைவர்களை மடக்கியதை ஏராளம் பேர் கண்டார்கள். அது மட்டுமல்ல, இலங்கையில் :

  • ஓர் ஊரில் வஹாபி பயானை முற்றாக நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் யாருமே வஹாபியத்தில் சேரவில்லை என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் வஹாபித் தலைவர்கள் பலர் தரீக்காவில் சேர்ந்தார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் இளைஞர்கள் 24 மணித்தியாலம் வஹாபி எதிர்ப்பு போட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அது எமது 3 வருட காலமே !
  • ஓர் ஊரில் சகல வீடுகளிலும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது என்றால் அது எமது 3 வருட காலமே !
  • இலங்கையின் எந்தப் பகுதியில் வஹாபி வளர்கிறது என்றாலும் அங்கு போய் ஒரு பயானிலேயே வஹாபி வளர்ச்சியை நிறுத்தியது என்றால் அது எமது 3 வருட காலமே !

இப்படியாக இலங்கை அல்ல உலக சாதனைகள் ஏராளம் நாம் சாதித்துகொண்டு வரும் போது தான், பள்ளத் தக்கியாவில் பின்கதவால் நுழைந்து பதவியைப் பிடித்த தப்லீக் காரன் அஸ்ஸமீன் என்ற இஸ்லாத்தின் துரோகி "ராஜசதி" மூலம் எமது பதவியைப் பறித்து, இலங்கை வரலாறு காணாத மாபெரும் வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை 1999 இல் அழித்தார். அன்று முதல் வஹாபியத்து மிக வேகமாக வளர்கிறது.

நாம் 15 வருடங்களுக்கு முன்னரே வஹாபியத்தை அழித்துக் காட்டினோம். ஆனால் எகிப்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஏராளம் அஸ்ஹரி உலமாக்களுக்கு ஜனாதிபதி ஸிஸி கொடுத்த வஹாபியத்தை அழிக்கும் பொறுப்பை உரிய முறையில் அஸ்ஹரிகள் செய்யவில்லை என்று ஜனாதிபதி ஸிஸியும் ஊடகங்களும் குற்றம் சுமத்துவதை எகிப்தின் ( அரபுலகின்) முக்கிய பத்திரிகையான அல் அஹ்ராம் குறிப்பிடுவதை இதோ பாருங்கள். (ஆம் பாருங்கள் என்று தான் கூற முடியும். பள்ளத் தக்கியா சதியால் நாம் தனிப்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக, இதனை மொழிபெயர்க்க நேரமில்லாததால், "படியுங்கள்" என்று கூற முடியாமல் இருப்பதையிட்டு வருந்துகிறோம்)

நாம் உரிய பதவி இல்லாமல், போதிய சம்பளம் இல்லாமல் 15 வருடங்களுக்கு முன் சாதித்ததை, இப்போது அஸ்ஹரி உலமாக்கள் பெரும் பதவிகள், கொழுத்த சம்பளம், பொலிஸ், இராணுவ உதவிகள் இருந்தும் செய்ய முடியாது என்று (நாம் அல்ல) அவர்களே கூறுகிறார்கள் என்றால், நாசகார அஸ்ஸமீன் சதி மூலம் அழித்த எமது " வஹாபி எதிர்ப்பு போராட்டத்தின்" பெறுமதி தான் என்ன ?

No comments:

Post a Comment