இராக்கில் வஹாபி தாஇஷ்கள் ஓட்டம் !
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர்.
இராக்கில் "அம்பார்", "ரமாதீ" , "மௌஸில்" ஆகிய மாகாணங்களை வஹாபி தாஇஷ்கள் ( ISIS ) சில வருடங்களாக கைப்பற்றி, பல்லாயிரக் கணக்கான மனித இனப் படுகொலைகளையும் பல கோடி டொலர்கள் பெறுமதியான பொதுச் சொத்துகளுக்கு சேதமும் விளைவித்துக் கொண்டிருந்தனர். தலைநகரம் பக்தாதைக் கைப்பற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் கிருபையால் ரஷ்யா, ஈரானின் உதவியுடன் போராடிய இராக் படைகள், தற்போது அம்பார் , ரமாதீ ஆகிய ராணுவ கேந்திர நகரங்களை வஹாபி தாஇஷ் ( ISIS ) களிடமிருந்து கைப்பற்றி, நேற்று ரமாதீ அரசாங்க நிர்வாக மத்திய கட்டடத்தின் மீது ஈராக் கொடியைப் பறக்க விட்டனர். அல்லாஹு அக்பர்.
இப்போது வஹாபி தாஇஷ்( ISIS ) களின் பிடியில் இருக்கும் இறுதி மாகாணமான "மௌஸில்" ஐ கைப்பற்றும் இறிதி யுத்தத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
மறுபுறம், ஸிரியாவிலும் வஹாபி தாஇஷ் ( ISIS ) களுக்கு எதிராக ஸிரியா, ரஷ்ய, ஈரான் படைகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இராக்கின் ரமாதி மாகாணத்தில் வஹாபி ( ISIS ) களை விரட்டிவிட்டு, இராக் கொடி ஏற்றப்படும் வீடியோக் காட்சி இது. அல்ஹம்து லில்லாஹ்.
29.12.2015
No comments:
Post a Comment