Friday, December 18, 2015

மீலாதுந் நபி பரிசு

1437 மீலாதுந் நபி பரிசு : ஸாலிஹான கனவுகள்
ஸுன்னத்து வல்ஜமாஅத்து இஸ்லாத்துக்கும் வஹாபி மார்க்கத்துக்கும் நூற்றுக் கணக்கான வித்தியாசங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் :
வஹாபிக்கு அல்லாஹ்வுடன் இப்போது எந்த தொடர்பும் இல்லை. குர்ஆனையும் ஹதீஸையும் வைத்து தாருமாறாக அவர்களின் தலைவர்களின் இஷ்டப்படி எடுப்பதும், நிராகரிப்பதும், கருத்தை திரிப்பதும், கருத்தை திரிக்க முடியாவிட்டால் இருட்டிப்புச் செய்வதும் தான் வஹாபி மார்க்கத்தின் அடையாளங்கள்.
ஆனால் ஸுன்னத்து வல்ஜமாஅத்து இஸ்லாம் குர்ஆன் ஹதீஸை ஸஹாபாக்கள், சட்ட நிபுணர்களான இமாம்களின் கருத்தின் அடிப்படையில் பின்பற்றுகின்றது. அல்லாஹ்வுடன் இன்றும் தொடர்பு இருப்பது.
என்ன தொடர்பு தெரியுமா? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நுபுவ்வத்து முற்றுப் பெற்றாலும்கூட, நுபுவ்வத்தின் 46 பங்குகளில் ஒரு பங்கான அல்லாஹ் அறிவிக்கும் ஸாலிஹான கனவு இன்றும்உலகம் முடியும் வரை தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே ஸுன்னத்து வல்ஜமாஅத்து இஸ்லாம் இன்னமும் அல்லாஹ்வுடன் தொடர்புள்ளதாகவே இருக்கின்றது.
நாம் ஓதும் கஸீததுல் புர்தாஹ் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் கூறித்தான் இயற்றப்பட்டது. ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கைகளை எடுத்துரைக்கும் கஸீதத்துல் அவாம் என்ற கவிதைகள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் கூறித்தான் இயற்றப்பட்டது. புகாரி இமாம் புகாரி சரீபை தொகுப்பது கனவின் மூலம் முன்னறிவிப்புச் செய்யப்பட்டது. அவர்கள் வபாத்தாவதும் ரஸூலுல்லலாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகாரி இமாமின் மறு உலக வரவை எதிர்பார்த்திருப்பதும் கனவின் மூலம் அறியப்பட்டது.
இன்றளவும் இலட்சக் கணக்கான அப்படியான சம்பவங்கள் அல்லாஹ்வால் அறிவிக்கப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் "அஸ்ஸுஹ்த்(الزهد) , இமாம் இப்னு அபித்துன்யா அவர்களின் "மரணத்தின் பின்னும் வாழ்ந்தவர்கள்" (من عاش بعد الموت) , இமாம் ஸுயூத்தி அவர்களின் (شرح الصدور) , இமாம் இப்னுல் கைய்யிம் அவர்களின் (الروح)  போன்ற ஏராளம் கித்தாபுகளில் இவ்வகையான ஏராளமான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்போது அல்லாஹ்வுடன் தொடர்புள்ள இஸ்லாம் என்பதற்கான ஏராளம் ஆதாரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
1-
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ (يونس64)
(விசுவாசிகளே) அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமும் இல்லை, அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் (அல்லாஹ்வை மெய்யாகவே ) ஈமான் கொண்டு, (அவனுக்குப் பயந்தும்) நடந்து கொள்கின்றனர். இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மாராயம் உண்டு ……) (யூனுஸ் 62-64)
இந்த புனித குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டஇவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் அவர்களுக்கு நன்மாராயம் உண்டு என்பதில் "நன்மாராயம்" என்றால் என்ன என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் வினவிய போது, "அல்லாஹ்விடம் இருந்து வரும் ஸாலிஹான கனவு" என்று விளக்கம் அளித்தார்கள். எனவே முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வுக்கும் கனவு மூலம் தொடர்பு இருப்பதை குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகக் கூறுகின்றன.

2- இன்னொரு ஹதீஸில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தெளிவு படுத்தகிறார்கள் :
قال رسول الله صلى الله عليه و سلم : "لا نبوة بعدي الا المُبَشِّرَات قال قيل وما المبشرات يا رسول الله قال الرؤيا الحسنة أو قال الرؤيا الصالحة" ( مسند احمد )
("எனக்குப் பின்னர் நுபுவ்வத்து (நபிப்பட்டம்) இல்லை, ("முபஷ்ஷிராத்" என்ற) நன்மாராயத்தை தவிர." அப்போது நன்மாராயம் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட போது, "நல்ல கனவுகள்" என்று விளக்கமளித்தார்கள்.
3-
عن أبي سعيد الخدري : أنه سمع رسول الله صلى الله عليه و سلم يقول ( الرؤيا الصالحة جزء من ستة وأربعين جزءا من النبوة ) (متفق عليه)
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (ஸாலிஹான கனவு நுபுவ்வத்தின் (நபிப்பட்டத்தின்) நாற்பத்தியாறு (46) பங்குகளில் ஒரு பங்காகும் ) என்பதாக.

எனவே நபிப்பட்டத்தின் சகல அம்சங்களும் முற்றுப் பெற்றுவிடவில்லை. ஸாலிஹான கனவுகள் மூலம் அல்லாஹு தஆலா தான் நாடிய அளவு இன்னமும் தெளிவுகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றான் என்பது புகாரி, முஸ்லிம் ஆகியவற்றில் பதிவாகியுள்ள ஹதீஸ் மூலமும் உறுதியாகின்றது.

4-
عن أَنَسِ بْنُ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ قَالَ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ قَالَ قَالَ وَلَكِنْ الْمُبَشِّرَاتُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ (مُسْنَد أحمد)
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: (நிச்சயமாக ரஸூல் பட்டமும் நபிப்பட்டமும் அறுந்து (நின்று) விட்டன. எனக்குப் பிறகு ரஸூலோ நபியோ இல்லை) என்பதாக. அந்தப் பேச்சு ஸஹாபாக்களுக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தி விட்டது. அப்போது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (எனினும் முபஷ்ஷிராத்து இருக்கின்றது) என்றார்கள். அப்போது ஸஹாபாக்கள், யா ரஸூலுல்லாஹ் , "முபஷ்ஷிராத்" என்றால் என்ன ? என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் விளக்கமளித்தார்கள் : (முஸ்லிம் காணும் கனவு, அது நபிப்பட்டத்தின் பங்குகளில் ஒரு பங்காகும் ).

எனவே ஸுன்னத்து வல்ஜமாஅத்து இஸ்லாத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு இருக்கின்றது. நபிப் பட்டத்தின் 46 பங்கில் ஒரு பங்கு மூலம் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வஹாபி மார்க்கத்தில் அல்லாஹ்வுடன் இப்படியான தொடர்பு இல்லை. புர்தாஹ் சரீப் கனவு மூலம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று கூறினால், "கனவு சமாச்சாரங்கள் எமக்கு ஆதாரமல்ல" என்கிறார்கள். தலைவர்கள் இப்படிச் சொல்லத் தாமதம், உடனே வஹாபி பொது மக்கள் அதனை தமது மார்க்கமாக ஏற்கிறார்கள் !

ஆம்! வஹாபித் தலைவர்களுக்கு ஒரே ஆதாரம், குர்ஆன் ஹதீஸை அவர்களின் தலைவர்கள் விளங்கிய பித்அத்தான புதிய விதமாக விளங்குவது தான். அதன் மூலம் தலைவர்கள் தமது இயக்கத்தையும் தலைமை பதவியையும் பாதுகாத்துக் கொள்வதும், அரபு நாட்டு பொது மக்களின் இலட்சக் கணக்கான பணத்தை அதன் மூலம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதும் தான் தலைவர்களின் நோக்கம் !

வஹாபி பொது மக்களின் ஆதாரம் என்ன தெரியுமா?
{ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ }(التوبة 31)
"யூதர்களும் கிறிஸ்தவர்களும் தமது அறிவாளிகளையும், துறவிகளையும் அல்லாஹ்வுக்குப் பகரமாக தமது ரப்பாக எடுத்துக் கொண்டார்கள்" என்று அல் குர்ஆன் கூறுவது போன்று, வஹாபி பொது மக்களும், "இப்போது எம் முன் இருக்கும் தலைவர்களே , நீங்கள் எந்த ஆயத்துக்கு என்ன பொருள் கூறுகிறீர்களோ அதையே நாம் குர்ஆன் என நம்புவோம். 1400 வருடங்களாக பின்பற்றப்பட்ட எந்த ஹதீஸை நீங்கள் இட்டுக்கட்டு என்கிறீர்களோ, நாமும் கண்ணை மூடிக் கொண்டு அவற்றை இட்டுக்கட்டு என்போம். 1400 வருடங்களாக பலவீனமாக இருந்த எந்த ஹதீஸை நீங்கள் ஸஹீஹான ஹதீஸ் என்கிறீர்களோ, நாமும் கண்ணை மூடிக் கொண்டு அதனை ஸஹீஹ் என்போம். எந்த ஸஹாபியின், எந்த இமாமின் சட்டத்தை நீங்கள் நிராகரிக்கிறீர்களோ அதை நாமும் கண்ணை மூடிக் கொண்டு நிராகரிப்போம்" என்று தமது இக்கால தலைவர்களை ரப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் வஹாபி பொது மக்களின் ஆதாரம்.

எனவே 1400 வருடமாக உள்ள தூய, தொடரான இஸ்லாத்தை பின்பற்றக் கூடிய ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள், அல்லாஹ்வும், ரஸூலுல்லாஹ்வும், ஸஹாபாக்களும், இமாம்களும், அவ்லியாக்களும் காட்டித் தந்த, தொடரான இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்ந்து, அல்லாஹ்விடமிருந்து "முபஷ்ஷிராத்" என்ற, அல்லாஹ்விடமிருந்து நன்மாராயமாக கிடைக்கக் கூடிய விளக்கங்களையும் பாக்கியங்களையும் பெற்று சீதேவிகளாக ஆகுவதற்கு இந்த 1437ம் வருடத்து மீலாதுந் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விழாவில் அல்லாஹ்விடம் துஆ கேட்போம்.
18.12.2015

No comments:

Post a Comment