Monday, March 12, 2018

ஸிரியாவில் கவாரிஜ் பயங்கரவாதம்

சில Points  கள்  :-
1- மத்திய கிழக்கில் நடப்பதை அளக்க முஸ்லிம் அல்லாத ஊடகவியலாளரால் முடியாது. காரணம், மத்திய கிழக்கு பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை அவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் கூறுவது குப்பையில் எறியப்பட வேண்டியவை.
2- வஹாபிகள் கவாரிஜ்கள் என்பதை , குர்ஆன் ஹதீஸ் மூலமே அறிய வேண்டும். அத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக அறிஞர்களின் நூல்களை படிப்பவர்களுக்கே அந்த விடயம் தெரிய வரும். ( காபிர்களின் மீடியா, வஹாபிகளின் மீடியா என்ற சாக்கடையில் அந்த தகவல்களை பெற முடியாது)
3- காலத்துக்கு காலம் தோன்றும் கவாரிஜ்களை அழித்தொழிக்கும்படி ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். இக்காலத்தில் தோன்றியுள்ள கவாரிஜ்களே வஹாபிகள். எனவே காபிர் மீடியாக்களையும், கவாரிஜ் மீடியாக்களையும் நம்பி , கவாரிஜ்களை அழிப்பவர்களை எதிர்ப்பது ரஸூலுல்லாஹ்வையே எதிர்ப்பதாகும்.
4- கெட்டவர்களைக் கொண்டும் அல்லாஹ் இந்த மார்க்கத்துக்கு உதவி செய்வான் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே சீஆ அஸாத் மூலமோ, சீஆ ஈரான் மூலமோ அல்லது கொம்யூனிஸ ரஷ்யா மூலமோ அல்லாஹு தஆலா கடைசி கால கொலை வெறியர்களான, அவ்லியாக்களினதும்  ஸஹாபாக்களினதும் கப்ருகளையும் தோண்டியழிக்கும் கவாரிஜ்களை அழிக்கும் போது அதை எதிர்ப்பவர்கள் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.
5- ரஸூலுல்லாஹ்வால் பல ஹதீஸ்கள் மூலம்
"நேர்வழி" என்று பாராட்டப்பட்ட நாடு ஸிரியா. ஈஸா (அலை) இறங்குகுவதும் அங்கு தான். ஸிரியாவில் மிகப் பெரும்பான்மையினர் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், அஹ்லு பைத்துகளையும் பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்து முஸ்லிம்களே. எனவே ஒரு உண்மை முஸ்லிமுடைய கடமை, அந்த ஸிரிய ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை தேடிப் பார்ப்பதே. அவர்கள் ஸிரிய அரசாங்கத்தை ஆதரிக்கிறார்களா அல்லது கவாரிஜ் வஹாபி பயங்கரவாத போராட்டக் குழுக்களையா ஆதரிக்கிறார்கள் என்பதைத் தேடிப்பார்ப்பது உண்மை முஸ்லிமுடைய கடமையாகும். அப்படியின்றி யூத நஸாரா கவாரிஜ் மீடியாக்களை "வேதம் போல்" நம்பினால் அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். " (நபியே) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்.ஏனென்றால் நிச்சயமாக காது, கண், இதயம் ஆகிய ஒவ்வொன்றுமே ( அதனதன் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். "(ஸூரத்துல் இஸ்ராஉ 17:36)
ஸிரியாவின் பிரதான முப்தியாகவும் ஸுன்னத் வல்ஜமாஅத்து உலகப் பேரறிஞராகவும் இருந்த அறிஞர் பூத்தியை அல்லாஹ்வின் பள்ளியில் பிரசங்கம் நடாத்தும் போது இன்னும் சுமார் ஐம்பது உலமாக்களையும் குண்டு வைத்து படுகொலை செய்தார்கள் இந்த கவாரிஜ் வஹாபிகள். அவருக்குப் பிறகு ஸிரியாவின் முப்தியாக இருக்கிறார் கலாநிதி ஹஸ்ஸூன் என்ற அறிஞர். அவர்களும் மற்ற ஸுன்னி முஸ்லிம்களும் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் போது, இலங்கையில் வஹாபி மீடியாக்கள் எனும் சாக்கடையில் விழுந்துகொண்டு ஸிரிய அரசாங்கத்தை எதிர்ப்பது வடிகட்டிய கண்மூடித் தனமாகும்.
12.3.2018

No comments:

Post a Comment