மஹ்தி (அலை) பற்றி மேற்கு நாடுகளின் மாநாடு
உலகில் எந்த நாட்டிலும் நடக்கும் போராட்டங்களையும் அப்பிராந்திய சூழலுடன் தொடர்பு படுத்தி எவரும் ஆராயலாம், தீர்மானங்கள் எடுக்கலாம். ஆனால் மத்திய கிழக்கில் நடக்கும் போராட்டங்களை அவ்வாறு எவரும் சுயமாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்க முடியாது.
காரணம், இரண்டு.
முதலாவது : உலகின் பிரதான மார்க்கங்கள் எல்லாம் தோன்றியதும், உலகின் முதலாவதும் இறுதி வரையும் மார்க்க மத்திய தலங்களாகவும் திகழும் மஸ்ஜிதுகளான, கஃபதுல்லாஹ் , மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் மக்திஸ் ஆகிய புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதும் மத்திய கிழக்கில்தான்.
இரண்டாவது : இதன் பிறகும் உலகம் முடியும் வரையும் நிகழவிருக்கும் பிரதான சம்பவங்கள் நிகழப் போவதும் மத்திய கிழக்கில் தான். அந்த சம்பவங்களைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதும் குர்ஆனிலும் ஹதீஸிலும் தான். எனவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள கடைசி கால அடையாளங்களையும், சம்பவங்களையும் அறியாமல், உலகில் உள்ள எந்தப் பெரிய அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயங்களைக் கூறினாலும் அவை ஏட்டுச் சுரைக்காயாக இருக்குமே தவிர, யதார்த்தமான உண்மையாக இருக்கமாட்டாது.
எனவே தான், உலக அரசியலில் பெரும் பட்டங்கள் பெற்று, வல்லரசு நாடுகளின் அரசியலில் மூழ்கியுள்ள ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் இருப்பதால், இஸ்லாத்தில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம் என்று வல்லரசு நாடுகளின் அரசியல் அவதானிகள் இப்போது தமது கவனத்தை குர்ஆன் ஹதீஸின் பக்கம் திருப்பியுள்ளார்கள்.
இதனால் தான் 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டிய யூதர்கள், குர்ஆன் ஹதீஸில் அது பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என்று துருவித் துருவி ஆராய்ந்தார்கள். நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும் என்ற பிரபலமான ஹதீஸ் அவர்களின் கண்களில் பட்டது.
சைத்தானின் கொம்பு என்றால், இஸ்லாத்துக்கு எதிரான சக்தி என்பதை உணர்ந்த அவர்கள், நஜ்து பிரதேசத்தின் வரலாற்றை ஆராய்ந்தார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவராக இருக்கும் போது, கஃபதுல்லாஹ் புணருஸ்தாபனம் செய்யப்பட்ட பின்னர், ஹஜருல் அஸ்வத் கல்லை அவர்களின் தலைமையில் குறைசிகள் வைக்கும் போது, நஜ்து தேச கிழவரின் உருவில் சைத்தான் வந்து, "இவ்வளவு பெரிய தலைவர்கள் இருக்கும் போது, ஒரு யத்தீம் பிள்ளை மூலமா வைக்க வேண்டும்" என்று இழிவாக கூறினான் சைத்தான். நஜ்து தமக்கு தேவையான ஊர் தான் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிடித்து அடைக்க அல்லது நாடு கடத்த அல்லது கொலை செய்ய திட்டம் தீட்ட குறைசித் தலைவர்கள் ரகசியக் கூட்டம் கூடிய போதும், நஜ்து கிழவரின் உருவத்தில் வந்த சைத்தான் தான், கொலைத்திட்டத்தை ஆமோதித்தான். இது திரு குர்ஆனில் கூறப்பட்டுள்ள சம்பவம். இதன் மூலமும், நஜ்து தான் தமக்கு தேவையான இடம் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து செல்லும் போதும், அவர்களது வீட்டைச் சுற்றி வாள்களுடன் முற்றுகையிட்டிருந்த குறைசி வாலிபர்களைப் பார்த்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் தலையில் மண்ணைப் போட்டுவிட்டு தப்பி போய்விட்டார்கள்" என்று கூறியதும் நஜ்து தேச கிழவனின் உருவில் வந்த சைத்தான் தான். இதன் மூலமும் நஜ்து தமக்கு தேவையான இடம் தான் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, "நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும்" என்று ரஸூலுல்லாஹ் அவர்கள் எதிர்வு கூறியிருப்பதைக் கண்ணுற்ற யூதர்கள், நுணுக்கு காட்டி கண்ணாடியை நஜ்தின் மேல் வைத்து இரவு பகலாக அந்த இஸ்லாத்தின் விரோதியாக வரப் போகும் சைத்தானின் கொம்பை தேடிக்கொண்டிருந்தார்கள்.
ஆம், நஜ்தில் வெளியாகி விட்டான் இப்னு அப்தில் வஹாப் என்ற கவாரிஜ் வஹாபி சைத்தானின் கொம்பு. "எல்லா முஸ்லிம்களும் பித்அத்து வாதிகள். முஷ்ரிக்குகள். தனது புதிய மார்க்கமே தவ்ஹீது" என்று பறை சாற்றினான். "ஆஹா இதோ வந்துவிட்டான் நாம் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்த்து தேடிய ஆசாமி" என்று அக்கால உலக வல்லரசாக இருந்த பிரிட்டிஷ் யூதர்கள் உஷாரானார்கள். தமது உளவாளிகளை அனுப்பி நஜ்து சைத்தானுக்கு தேவையான பொருள், ஆயுத, ஆட்பல சகல உதவிகளையும் செய்தார்கள். அந்த நஜ்து சைத்தான் மூலம் இஸ்லாமிய கிலாபத்து ஆட்சியை ஒழித்துக் கட்டினார்கள் பிரிட்டிஷ் யூதர்கள். பிறகு ISIS வரை பல்லாயிரம் சம்பவங்கள் !
அடுத்து நடக்கப் போவது என்ன என்று குர்ஆன் ஹதீஸில் தேடினார்கள் யூதர்கள். மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்ற இஸ்லாமிய தலைவர் வரப் போகிறார்கள். உலகில் ஏழு வருடங்கள் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மஹ்தி அலைஹிஸ்ஸலாமுக்கு உதவியாக வருவார்கள். அவர்கள் யூதர்களின் தலைவனான தஜ்ஜாலை வெட்டுவார்கள். யூதர்கள் பூண்டோடு அழிக்கப் படுவார்கள் என்ற செய்திகளையெல்லாம் அறிந்து கொண்டார்கள் மேல் நாட்டினர்கள். இது பற்றி அவர்கள் பெரும் மாநாடுகள் நடாத்தி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதோ மேல் நாட்டினர்கள் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகை பற்றி ஆராய்வதற்காக கூடிய மாநாடு. ஆங்கிலத்தில் உரையாற்றப்படுகிறது, அரபு மொழி பெயர்ப்பும் இருக்கின்றது. எனவே தமிழில் தர வேண்டியதில்லை தானே ?
குறிப்பு : எமது மத்ரஸாவில் (ஆண்கள் பாடசாலைக்கு அண்மையில்) அவ்வப்போது நடைபெறும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டால் இன்ஷா அல்லாஹ் கூடுதல் விளக்கங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
3.3.2018
No comments:
Post a Comment