Friday, March 16, 2018

யெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறி

யெமனில் பேரறிஞர்கள் மூவரின் வபாத்தும்
கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியும்
முதலாவது :-
17.2 2018 இல் அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அஷ்ஷாத்திரி என்ற இஸ்லாமிய உலகம் போற்றும் பேரறிஞர் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் உலகில் பல நாடுகளிலும் உள்ள ஏராளம் உலமாக்கள் மார்க்க கல்வி கற்றிருக்கிறார்கள்.
இவர் இலங்கைக்கு வந்திருந்த போது பல இடங்களில் அவரின் பேச்சை மொழி பெயர்க்கக்கூடிய பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. கஹட்டோவிட்டாவுக்கு வந்த போது தற்போதைய பாதிபிய்யா மத்ரஸாவுக்கான அடிக்கல்லையும் நட்டியவர்கள் இவர்களே. இவர்கள் கொழும்பில் தங்கியிருந்த போது இவர்களுக்கு பலவிதமான கித்மத்துகள் செய்யக்கூடிய பாக்கியமும் எனக்கும் எனது பிள்ளைகள் அப்துஸ்ஸலாம் முகம்மது ஸஈதுக்கும் M.N.M. ரிஷானுக்கும் கிட்டியது. அல்ஹம்து லில்லாஹ்.
இரண்டாவது :-            
5.3 2018 இல் வபாத்தான அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் முகம்மது பின் அலவி பின் ஷிஹாபுத்தீன் என்ற உலகம் போற்றும் பேரறிஞரையும் யெமன் நாடு இழந்தது. ரஸூலுலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மார்க்க அறிவில் பேரறிஞராக விளங்கிய அதே வேளை, கவிதைத் துறையில் பெரும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கினார்கள். நான் யெமன் போயிருந்த போது, பேரறிஞர் ஹபீப் உமர் அவர்களுடன் போய் இவரின் ஒரு வஃழு மஜ்லிஸில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இவரின் பயான் முழுதும் கருத்தாளம் மிக்க கவிதையாகவே இருந்தது.
மூன்றாவது :-                 
3.3.2018 இல் ஷஹீதாக்கப்பட்ட 87 வயதுடைய அல் ஹபீப் ஐதுரூஸ் பின் அப்தில்லாஹ் பின் ஸுமீத் அவர்களுடைய வபாத்து இக்கால கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியை முழு உலகுக்கும் காட்டிவிட்டது. கவாரிஜ்கள் (வஹாபிகள்) கொலைகாரர்கள் என்ற நபிமொழியை மீண்டும் உறுதி செய்துவிட்டது.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களும் யெமனில் மிகவும் புகழ் பெற்ற ஒரு மார்க்க அறிஞர்.
வெள்ளிக்கிழமை காலையில் இவரின் வீட்டுக்குச் சென்ற சில கவாரிஜ் வஹாபிகள், தமக்கு சுகமில்லை என்றும் ஓதிப்பார்க்கும்படியும் கூற, தான் ழுஹாத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறி தொழ ஆரம்பித்து ருக்கூஉவில் இருக்கும் போது, கவாரிஜ் வஹாபி தனது துப்பாக்கியால் இவரைச் சுட்டு படுகொலை செய்தான். இக்கோரச் சம்பவம் கேட்ட உலக முஸ்லிம்கள் (கவாரிஜ் வஹாபிகள் அல்ல) பேரதிர்ச்சி யடைந்து துக்கக் கடலில் மூழ்கினார்கள்.
இவர்கள் 87 வயதுடைய ஒரு முதியவர்.
இவர்கள் ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஒரு பெரிய மார்க்க அறிஞர்.
இவர்கள் தொழுகையில் அல்லாஹ்வுடன் இருக்கும் போது கொலை செய்தான் வஹாபி
இவர்களை வஹாபி படுகொலை செய்தது முஸ்லிம்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை
(( وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا)) (4:93 النساء)
அல்லாஹு தஆலா புனித திரு குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கிறான் இப்படி : -
"யார் ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ, அவனுக்குரிய கூலி நரகம் தான். அவன் அதில் நிரந்தரமாகவே தங்கிவிடுவான். அவன் மீது அல்லாஹ் கோபமடைந்து, அவனை லஃனத்தும் செய்து, அவனுக்கு வலுப்பமான வேதனையையும் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறான்" .
                        தரீக்கா, மத்ஹபுகள் என்ற உண்மையான இஸ்லாத்தை விட்டும் நீங்கி, கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் சேர்ந்துள்ளவர்களுக்கு ஈமானுக்குப் பகரமாக கவாரிஜ் தலைவர்கள் கொடுப்பது கொலை வெறியைத்தான். எனவே அவர்கள் இறுதியில் அடையும் இடத்தைப் பற்றி அல்லாஹு தஆலாவின் இந்த எச்சரிக்கையை கேட்டாவது, உடனடியாக வஹாபி கவாரிஜ் இயக்கங்களை விட்டும் நீங்கி, அவர்களின் பெற்றோர்கள், பாட்டன் பூட்டன்மார்கள் இருந்ததும், ரஸூலுல்லாஹ் வரை தொடராக இருப்பதுமான உண்மை இஸ்லாத்துக்கு வாருங்கள். ஈமானைப் பாதுகாத்து ஸுவர்க்கம் செல்ல முயற்சியுங்கள்.
15.3.2018

No comments:

Post a Comment