Saturday, November 5, 2016

"புராக் மதில்" என்றால் என்ன ?

முஸ்லிம்களின் "புராக் மதில்"  உம் , யூதர்களின் பொய்யும்.
22.10.2016  சனிக்கிழமை  எமது இணையத் தளத்தில் :  "உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிப்பான செய்தி" என்ற தலைப்பில் மஸ்ஜிதுல் அக்ஸா பற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவில் யூதர்கள் உரிமை கொண்டாடுவது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான வாதம் என்பது பற்றி வரலாற்று ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு தருவதாக கூறியிருந்தோம்.
                அதனடிப்படையில் படிப்படியாக எமது இணையத் தளத்தில் முக்கிய தகவல்களைத் தருகிறோம்.
                முஸ்லிம்களின் உண்மையான வரலாற்றின்படி  حَائِطُ البُرَاق  என்று அழைக்கப்படுகின்ற மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு மேற்குப் புறமாக அதனுடன் இருக்கின்ற சுவரின் படத்தையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தின் போது, மக்காவிலிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பைத்துல் முகத்தஸுக்கு வந்த (அல் இஸ்ராஉ) பயணத்தில், தாம் வந்த புராக் வாகனத்தை கட்டி வைத்த இடம் தான் இது. இவிடத்தில் அதைக் கட்டிவிட்டு. மஸ்ஜிதில் சகல நபிமாருடனும் தொழுதுவிட்டு, பின்னர் மிஃராஜ் (விண்ணுலக) பயணத்தை ஆரம்பித்தார்கள்.
                அதனால்தான்,  حَائِطُ البُرَاق  " புராக் சுவர்" என்று இவிடம் அழைக்கப்படுகின்றது. இது வரலாற்று ரீதியாகவும், மார்க்க ரீதியாவும் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை. மேற்கு வாயிலில் இருந்து வடக்கில் உள்ள மத்ரஸாவரை 50 மீட்டர் அளவில் நீளமும், 40 மீட்டர் அளவில் உயரமும் கொண்டது அச்சுவர்.
                ஆனால் யூதர்கள் இதே சுவரை  حَائِطُ المَبْكَى  "அழும் சுவர்"  (அழும் இடம்) என்று பெயர் வைத்துக்கொண்டு. அவர்கள் அவிடத்தில் வணக்கத்தில் ஈடுபடும் போது, அந்தச் சுவரைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள். தாவூத் நபி (அலை) அவர்கள், இப்போது மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடத்தில் ஒரு மஸ்ஜிதைக் கட்ட ஆரம்பித்ததாகவும், அதனை அவர்களின் மகன் ஸுலைமான் (அலை) அவர்கள் கட்டி முடித்ததாகவும் கூறி, அதற்கு سُلَيمان هَيْكَلْ என்று பெயரும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ( هيكل என்றால் அல்லாஹ்வின் வீடு என்பது யூத மொழியில் அர்த்தம்). உலக ஸியோனிஸ அரசியல் தலைவர்கள் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தால் அவர்களும் அச்சுவரை தரிசிப்பது வழக்கம்.
                ஏன் யூதர்கள் அவிடத்தில் அழுகிறார்கள்? ஸுலைமான் நபியவர்கள் கட்டிய அந்த ஆலயம் பின்னர் சிலமன்னர்களால் இடிக்கப்பட்டதாம். அதற்கு மேல் தானாம் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் ஒரு பகுதியாக இந்த "சுவர்" மட்டும் தானாம் இப்போது எஞ்சியிருப்பது. அதனால் தானாம் அதைப் பிடித்துக்கொண்டு அழுவது. என்றோ ஒரு நாள் மஸ்ஜிதுல் அக்ஸாவை இடித்து விட்டு அவிடத்தில் யூதர்களின் ஆலயம் கட்டப்படும் வரை அழுவார்களாம். அப்படி அழுவது சகல யூதரினதும் மார்க்க கடமையாம்.
                400 வருடங்களுக்கு முன்னர் இச்சுவருக்கு யூதர்களிடம் முக்கியத்துவம் இருக்க வில்லை. பின்னர் , பலஸ்தீனை ஆக்கிரமிக்கும் உள்நோக்குடன், யூத மதத்தலைவர்கள் அதனைத் தமது மார்க்க முக்கியத்துவம் வாய்ந்த "சுவராக" பிரபல்யப் படுத்த ஆரம்பித்தனர். 1967 யுத்தத்தின் போது அதனைக் கைப்பற்றி யூத மதத்தின் பிரதான சின்னமாக மாற்றினர்.
                பலஸ்தீனையும் ஆக்கிரமித்து, மஸ்ஜிதுல் அக்ஸாவையும் கைப்பற்றி, இப்போது அதனை இடிக்கும் வேலையையும் ஆரம்பித்துள்ளனர். (அல்லாஹ் பாதுகாப்பானாக)
படம் -1
வலப்பக்கத்தில் இருப்பது  حائط البراق . யூதரும் ஸியோனிஸ தலைவர்களும் அதனை தரிசிப்பதையும் காணலாம்.
படம் -2
حائط البراق (புராக் சுவர்) மதிலின் பெரிய அளவிலான
படம் -3
 حائط البراق (புராக் சுவர்) மதிலின் பெரிய அளவிலான படமும், 1967 யுத்தத்தின் பின்னர் யூதர்களால் அழிக்கப்பட்ட மேற்கு வாயலின் பக்கம் இருந்த கட்டிடங்களும்.
4.11.2016

No comments:

Post a Comment