Monday, November 14, 2016

ஒபாமா வஹாபி எதிர்ப்பு ஞானோதயம் !

வஹாபிகளுக்கு எதிரான ஒபாமாவின் ஞானோதயம்
2011 இல் அரபு நாடுகளில் ஏற்பட்ட (ரபீஉல் அரபி என்று வஹாபிகள் கூறும்) இக்வான் வஹாபி புரட்சி காலம் முதல் இன்று வரை எமது இணையத்தளத்தில் நாம் ஸிரியாவைப் பற்றி எழுதிய சகல கட்டுரைகளிலும், வளைகுடா நாடகளினதும், அமெரிக்காவினதும் ஆதரவில் இயங்கும் , தாஇஷ் என்ற IS வஹாபிகளையும், அல் நுஸ்ரா என்ற தாலிபான், இக்வான் கலப்பு இயக்கத்தையும் எதிர்த்தே எழுதி வந்ததை வாசகர்கள் அறிவர்.
எப்படியாவது ஸிரிய ஜனாதிபதியை வீழ்த்த வேண்டும் என்று சில அரபு நாடுகளும் அமெரிக்காவும் அந்த வஹாபி இயக்கங்களுக்கு தாராளமான ஆயுத, பண உதவிகளை செய்து வந்தன. ஆனால் திடீரென ஸிரியாவில் ரஷ்யா தனது படைப்பலத்தை அதிகரித்ததுடன், IS க்கு உதவுவதை ஒபாமா மெல்ல கைவிட்டார்.
ஆனால் தொடர்ந்தும் அல் நுஸ்ரா என்ற (அல்காஇதாவும் இக்வானும் இணைந்த) வஹாபி பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா உதவி வந்தது. இக்வான் வஹாபிகளும், தாம் IS க்கு எதிரானவர்கள் என்றும், அல் நுஸ்ரா போராளிகள் "நடுநிலையாளர்கள்" என்றும், தமது ஊடகங்கள் மூலம் உலகுக்கு காட்டி, அவர்கள் மூலம் ஸிரிய ஜனாதிபதியை வீழ்த்த வேண்டும் என்று அமெரிக்காவுடன் சேர்ந்து போராடி வந்தார்கள்.
IS வஹாபிகளையும் அல் நுஸ்ரா வஹாபிகளையும் ஆரம்பத்தில் இருந்தே நாம் இங்கு எதிர்த்து எழுதினோம். இப்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நடந்து, ஒபாமாவின் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தோழ்வியடைந்து, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், நேற்று திடீரென்று ஒபாமா அதிரடி கட்டளையொன்றை பெண்டகனுக்கு வழங்கியுள்ளார்.
அது தான், ஸிரியாவில் அல் நுஸ்ரா (வஹாபி) ஆயுதக்குழுவின் தலைவர்களை தேடிக் கொலை செய்யுமாறு பெண்டகனுக்கு ஒபாமா இட்டுள்ள கட்டளை.
ட்ரம்ப் உள்நாட்டு எதிர்ப்புகளை வென்று ஜனாதிபதியாக பதவி வகித்தால் ரஷ்யாவுடன் இணைந்து IS மற்றும் அல் நுஸ்ரா வஹாபி பயங்கரவாதிகளை அழிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளதால், தான் வளர்த்த அல் நுஸ்ராவை ட்ரம்ப் அழித்ததாக இழி பெயர் வரு முன்னர், தாமே அல் நுஸ்ராவை அழித்ததாக ஒரு வரலாற்றைப் படைக்கவே ஒபாமா கடைசி கட்டத்தில் இந்த அதிரடி உத்தரவை இட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.
ட்ரம்ப் (உள்நாட்டு எதிர்ப்பலைகளால் தப்பிப் பிழைத்தால்) ஏராளமான தீமைகளைச் செய்யக் கூடியவர் தான் என்ற கருத்தும் பரவலாக இருக்கின்றது. (வஹாபிகளின் எதிர்ப்பை நாம் கூறவில்லை).
ஸிரிய ஜனாதிபதி மூலம் வழிகெட்ட சீஆக் கொள்கை ஸிரியாவில் பரவுவது ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு பாதிப்பு தான். அதில் சந்தேகம் இல்லை.
ஸிரிய ஜனாதிபதி தனது எதிரிகளான வஹாபி IS, மற்றும் அல் நுஸ்ராவை எதிர்த்து நடாத்தும் இராணுவ யுத்தத்தில் ஏராளமான பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை உலக ஸுன்னத்து வல்ஜமாஅத்து அறிஞர்களுடன் சேர்ந்து நாமும் எதிர்க்கின்றோம். இது அஸாதின் மாபெரும் தவறும் அநியாயமும் என்பதில் ஸுன்னிகள் மத்தியில் இரண்டு கருத்து இல்லை.
ஆனால், இரண்டு முக்கிய விடயங்களை தெரிந்திருப்பது அவசியம்.
முதலாவது : அஸாதின் தகப்பன் ஹாபிழ் அல் அஸத் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இருந்தே இக்வான் வஹாபிகள் ஸுன்னத் வல்ஜமாஅத்து ஸிரியாவில் வஹாபி கவாரிஜ் கொள்கைகளை வளர்த்தது. இஸ்ரேலுக்கு எதிரான பலமான ஸிரிய ஆட்சியை கவிழ்த்து வஹாபி இக்வான் ஆட்சியை அங்கு நிறுவ வேண்டும் என்று வெளிப்படையாகவும் மக்கர் தனமாகவும் இயங்குபவர்களே இக்வான் வஹாபிகள். எனவே பலமான ஒரு ஆட்சியை அழிக்க முனையும் போது, அந்த ஆட்சித் தலைவர் தன்னாலியன்ற சகல சக்திகளையும் பயன்படுத்தி எதிரிகளை மடக்கவும் அழிக்கவும் போராடுவது அரசியல் வாதிகளின் இயற்கை. எனவே ஸிரியாவில் இன்று நடக்கும் கொலைகள், அநியாயங்களின் ஆரம்பக் காரணம் இக்வான் வஹாபிகளே என்பதை அஸதின் காலம் முதல் ஸிரிய விவகாரங்களை அறிந்தால் விளங்கலாம்.
இரண்டாவது : உலகில் இன்று "இஸ்லாத்தை அழிப்பதில்" , வஹாபியத்தைப் போன்று வெற்றி பெற்ற எந்த நாடும், எந்த இயக்கமும், இல்லை என்பதை அறிய வேண்டும். வஹாபியத்து நுழைந்து முஸ்லிம்களின் ஈமானை பஸாதாக்காத எந்த நாடும், எந்த ஊரும் இன்று உலகில் இல்லை. மற்ற மதங்களாலோ, சீஆ, காதியானி போன்ற மற்ற இயக்கங்களாலோ, யூதர்களால் நேரடியாகவோ செய்ய முடியாத, "இஸ்லாத்தை அழித்து முஸ்லிம்களின் ஈமானைப் பறிக்கும்" பயங்கர வேலையை யூதரின் திட்டத்தின் உதவியுடன் இந்த வஹாபி இயக்கங்களே வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றன. இது எனது கருத்து மட்டும் அல்ல. வஹாபியத்தின் ஆபத்தை அறிந்து அதை முறியடிக்க போராடும் உலகில் உள்ள அத்தனை அறிஞர்களின் கருத்தும் இது தான். "தரீக்கா இருந்தால் அதில் இருப்போம். வஹாபி ஆதிக்கம் வந்தால் அதில் சேருவோம்" என்று வாழும் "துன்யாதாரி" பொது மக்களுக்கு இது விளங்காது.
எனவே ஸிரியாவின் அஸதின் தீமைகளை விடவும், ட்ரம்ப் வந்தால் செய்யக்கூடிய தீமைகளை விடவும், "இஸ்லாத்தையே திரித்து அழித்து உலக முஸ்லிம்களின் ஈமானை அழிக்கக்கூடிய" வஹாபியத்தையே உண்மை முஸ்லிம்கள் முதலாவது எதிர்க்க வேண்டும். அதுவே ஈமானின் அடையாளம்.
அல் நுஸ்ரா (வஹாபி) பயங்கரவாத தலைவர்களை கோலை செய்து ஒழித்துக் கட்டும்படி ஒபாமா பெண்டகனுக்கு இட்டுள்ள கட்டளை :
ஸிரிய Dam press பத்திரிகை :
அமெரிக்க Washington Post :
ரஷ்ய ஜனாதிபதி ஸிரியாவில் ஒபாமாவுக்கு படிப்பித்த பாடம்.
Washington Post :
13.11.2016

No comments:

Post a Comment