Saturday, October 22, 2016

உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிப்பான ஒரு செய்தி !

உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிப்பான ஒரு செய்தி !
நீங்கள் எல்லோரும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு உலக அமைப்புத்தான் "யுனெஸ்கோ" என்பது. அதாவது: U(nited) N(ations) E(ducational), S(cientific, and) C(ultural) O(rganization)
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு கிளையான கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பு.
சென்ற வெள்ளிக்கிழமை அந்த Unesco அமைப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்ததும், அதே நேரம் மிகவும் துணிகரமானதும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்தைய வல்லரசுகளின் இஸ்ரேல் ஆதரவுப் போக்குக்கு பலத்த அடியாகவும் அமையக்கூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது.
அத்தீர்மானத்தை யுனெஸ்கோவில் அல்ஜீரியா, எகிப்து, லெபனான், மொரோக்கோ, ஓமான், கட்டார், சூடான் ஆகிய நாடுகள் கொண்டுவந்திருந்தன. தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன், சில மேற்கு நாடுகள் எதிர்த்தன.
அந்த துணிகரம் மிக்க தீர்மானத்தின் அம்சங்கள் இவை :-
1- மஸ்ஜிதுல் அக்ஸாவும், அதைச் சூழவுள்ள அல் குத்ஸ் வளாகமும் முஸ்லிம்களுக்கே சொந்தமானது.
2- அல் குத்ஸ் வளாகத்தின் வாயில்களும், மேற்கு வாயில் பக்கம் உள்ள சுவரும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஒரு பகுதியே.
(இந்தச் சுவர் தான் இஸ்ரேல் பிரச்சினையின் மூல வேர். இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக் கிடைத்தால் அந்தச் சுவர் பற்றிய சுவையான தகவல்களை பிறகு இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்).
3- 1967 இன் பிறகு இஸ்ரேல் அல்குத்ஸில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் அத்தனையும் சட்டரீதியற்றதும் செல்லுபடியாகாததுமாகும்.
4- அல் அக்ஸாவைச் சூழ இஸ்ரேல் தற்போது மேற்கொள்ளும் நில அகழ்வு வேலைகள் அத்தனையும் நிறுத்தப்பட வேண்டும். இது பற்றிய .நா,சபையின் சர்வதேச தீர்மானம் பேணப்பட வேண்டும்.
5- பலஸ்தீனர்கள் அல்குத்ஸில் உள்ள தமது மஸ்ஜிதுகளுக்கு செல்வதற்கு இஸ்ரேலால் விதிக்கப்படும் சகல தடைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
                இத்தீர்மானத்தால் கதிகலங்கிப் போயுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, யுனெஸ்கோவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
                வரலாற்று ரிதியாகவும், மார்க்க ரீதியாகவும் அல்குத்ஸ் தமக்கே சொந்தமானது என்று இதுவரை உலகத்தை ஏமாற்ற இஸ்ரேல் மேற்கொண்ட ஆதாரங்கள் வரலாற்று ஆய்வின்படியும் மார்க்க உரிமையின்படியும் போலியானவை, பொய்யானவை என்பதை உலக ஆய்வாளர்கள் நிரூபித்ததன் அடிப்படையில் உலக அரங்கில் முஸ்லிம்கட்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் இது அல்ஹம்து லில்லாஹ்.
(தாவுத் நபி, ஸுலைமான் நபி அலைஹிமஸ்ஸலாம் காலங்களை தொடர்பு படுத்தி இஸ்ரேல் முன்வைக்கும் உரிமை வாதங்கள் அத்தனையும் வரலாற்று, மார்க்க ரீதியாக பொய்யானவை என்பதை வாய்ப்புக் கிடைத்தால் இங்கே பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)
 
 

No comments:

Post a Comment