Monday, October 3, 2016

நபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
ஹிஜ்ரத்துக்கு உடன் காரணமான நஜ்து சைத்தான்.
ஸவூதியில் , ரியாதில் உள்ள நஜ்தில்தான் சைத்தானின் கொம்பு உதயமாகும் என்பதைநிரூபிக்கும் குர்ஆன் தப்ஸீர் ஆதாரங்கள்.
(இரண்டாம் பகுதி)
உலமாக்கள் இப்பகுதியை இந்த ஹிஜ்ரி புது வருட பயானாக வைத்துக் கொண்டால் கவாரிஜ், தக்பீfரி, வஹாபி வழிகேட்டை விட்டும் முஸ்லிம்களைப் பாதுகாக்க பெரிதும் பயன்படுவதோடு,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத்து செல்வதற்கு உடனடி முக்கிய காரணமாக அமைந்தது நஜ்து சைத்தானின் சதி தான் என்பதையும், எனவே ரஸூலுல்லாஹ் அவர்கள் எச்சரித்த "நஜ்து" இருப்பது "ஸவூதி" யிலேயே  என்பதையும் முஸ்லிம் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு உதவியாக அமையும்.
                இங்கே கூறப்படும் தப்ஸீர் ஆதாரங்கள் அத்தனையையும் இங்கு மொழி பெயர்ப்பதற்கு "தேவையான  சமூக அமைப்பு எமக்கு தடுக்கப் பட்டிருப்பதனால்" , முழுதும் மொழி பெயர்க்க நேரம் கிடைக்க வில்லை. எனினும் எமது இப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களின் நன்மை கருதி மிகமிகச் சுருக்கமாக இப்போதைக்கு இங்கே தருகிறோம்.
 
(وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ) (الأنفال 8:30)
(நபியே) உம்மைச் சிறைப் படுத்தவோ , அல்லது உம்மைக் கொலை செய்யவோ , அல்லது உம்மை (ஊரை விட்டு) வெளியேற்றி விடவோ உமக்கு விரோதமாக  , காபிர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (ரேத்தை) நினைத்துப் பாரும். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் சூழ்ச்சி செய்வோரி லெல்லாம் , அல்லாஹ் மிக்க மேலானவன். ( அல் அன்பாfல் 8:30)
 
                உலகப் புகழ் பெற்ற தப்ஸீர்களான, தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீர் அத்தபரி ஆகியவற்றில்  இந்த ஆயத்தின் விரிவுரையில் இமாம் இப்னு கஸீர் அவர்களும், இமாம் அத்தபரி அவர்களும்  குறிப்பிடுவதன் சுருக்கம் இது :
                இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சகல குரைசி குடும்பங்களைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் "தாருந் நத்வா" என்ற இடத்தில் ஒன்று கூடிப் பேசத் தயாராகும் போது, சைத்தான் ,ஒரு செய்கின் உருவத்தில் வந்தான். குரைசி தலைவர்கள் அவனிடம் கேட்டனர்: நீர் யார் ? அந்த மனிதன் கூறினான் : "நான் நஜ்தைச் சேர்ந்த ஒரு செய்கு. நீங்கள் இங்கு கூடிப் பேசப் போவதாக கேள்விப்பட்டு வந்தேன். என்னுடைய உபதேம் உங்களுக்கு இன்றியமையாதததாக இருக்கும்". என்றான்.
                அவர்கள் அவனை உள்ளே அனுமதித்தார்கள். அவன் சொன்னான் : (ரஸூலுல்லாஹ்வின் விடயத்தைக் குறிப்பிட்டு) " இந்த மனிதருடைய நடவடிக்கைகளை கவனியுங்கள். இப்படியே விட்டு வைத்தால் கூடிய சீக்கிரம் அவர் உங்களை மிகைத்து விடுவார் ".
                அப்போது ஒருவர் கூறினார்: "அவரை ஒரு வீட்டில் கட்டி தடுத்து ,இறக்கும் வரை வைத்திருப்போம்." என்றார்.
                அப்போது அல்லாஹ்வுடைய எதிரியான நஜ்து செய்கு கூறினான் : " இந்த யோசனை சரிவராது. அவருடைய ஆட்கள் வந்து அவரை மீட்டுப் போகலாம். பின்னர் எல்லோரும் வந்து உங்களை இந்நாட்டை விட்டே விரட்டிவிடுவார்கள். எனவே வேறொரு யோசனை கூறுங்கள்". என்றான்.
                அப்போது இன்னொருவர் கூறினார்: "அவரை இவ்வூரைவிட்டு நாடு கடத்துவோம். அப்போது நாம் நிம்மதியாக இரு;ககலாம்". என்றார்.
                அதற்கு நஜ்து செய்கு கூறினான் :" இந்த யோசனையும் உருப்படியானதல்ல. அவர் அந்த ஊர் மக்களை அவரின் இனிமையான பேச்சாற்றலால் வசியப்படத்தி, அங்கு ஆட்களைத் திரட்டி இங்கு வந்து உங்களை இவ்வூரை விட்டே வரிட்டிவிடுவார். உங்கள் தலைவர்களை யெல்லாம் கொன்று விடுவார். எனவே வேறொரு யோசனை சொல்லுங்கள்". என்றான்.
                அதற்கவர்கள், "உண்மை தான். வேறொரு யோசனை பார்ப்போம்" என்றனர். அப்போது, அபூ ஜஹ்ல் (அல்லாஹ்வின் லஃனத்து அவனுக்கு உண்டாகட்டும்),  அவன் கூறினான்: " ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒவ்வொரு வீர இளைஞரை எடுப்போம். ஒவ்வொருவரின் கையிலும் ஒவ்வொரு வாளைக் கொடுத்து அனுப்புவோம். முகம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வீட்டுக்கு வெளியே வரும் போது, எல்லா இளைஞர்களும் ஒரேயடியாகப் பாய்ந்து அவரைக் கொலை செய்வோம். அப்போது யார் கொலை செய்தார் என்று பனூ ஹாசிம் குடும்பத்தாரால் கண்டு பிடி;கக முடியாமலிருக்கும். எல்லாக் குரைசிக் குடும்பங்களையும் எதிர்த்து யுத்தம் செய்ய அவர்கள் நக்தி பெறவும் மாட்டார்கள். இப்படிச் செய்தால் அவரின் பிரச்சாரங்களை விட்டும் நாம் நிம்மதி பெறலாம்". என்றான்.
                உடனே மிகவும் சந்தோசப்பட்டவனாக நஜ்து செய்கு கூறினான் : "இது தான் சரியான யோசனை. இதை உடனடியாக அமுல் நடாத்துங்கள்" என்றான்.
                அதன்படி குறைசி இளைஞர்கள் இரவு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலையில் வெளிவருவதை எதிர்பார்த்து, வீட்டைச் சூழ வாள்களுடன் நின்றார்கள்.
                ஆனால் அல்லாஹு தஆலா, உடனே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி, இரவு வீட்டில் உறங்க வேண்டாம் என்றும், இரவோடிரவாக வெளியேறி விடுமாறு (ஹிஜ்ரத்து புறப்படுமாறு) ஏவினான்.
                அவ்விதமே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலி ரழியல்லாஹு அன்ஹுவை தமது படுக்கையில் உறங்கும்படி கூறி, மண் ஒரு பிடி எடுத்து , யாஸீன் ஸூராவில்  "فهم لا يبصرون" என்ற 9ம் ஆயத்து வரை ஓதி அந்தக் காபிர் இளைஞர்களின் தலைகளில் எறியவே அவர்கள் அனைவரும் கண்கள் குருடாகினர். பின்பு வெளியேறிப் போய், அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹுவுடன் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்து சென்றார்கள்.
                (இது ஹிஜ்ரத்து சம்பவத்தின் மிகச் சுருக்கம். இதிலிருந்து, ரஸூலுல்லாஹ் அவர்கள் எச்சரித்த "சைத்தானின் கொம்பு வெளிப்படுவது ஸவூதியில் உள்ள நஜ்து" தான் என்பது மிகத் தெளிவாக திரு குர்ஆனின் ஆதாரப்படியே உறுதியாகிறது. மக்காவில் அவர்கள் இருக்கும் போது இராக்கிலோ வெளியில் எங்கும் இஸ்லாம் பரவ வில்லை. எனவே இளைஞர்களே ! சைத்தானின் கொம்பான ஸவூதி நஜ்தில் வெளியான சைத்தானின் "தவ்ஹீது" என்ற குப்ரிய்யத்தான வழிகேட்டை விட்டும் வெளியே வாருங்கள். ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஸுவர்க்கம் செல்ல அதுவே வழி !)
(இன்ஷா அல்லாஹ் தப்ஸீரில் உள்ள அரபு விளக்கம்: எதிர்பாருங்கள்)
 

No comments:

Post a Comment