Saturday, February 21, 2015

மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

மத்திய கிழக்கில் 2011 முதல் நடைபெறும் வஹாபி (கவாரிஜ்) புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அதி தீவிர வஹாபி (கவாரிஜ்) "தாஇஷ்" ISIS களின் கொடூர படுகொலைகளும் உலகில் மிகப் பெரிய பயங்கரமான ஒரு மாற்றத்தின் ஆரம்பமாக கருதப்படுகின்றன. உலக முடிவு அண்மித்துக்கொண்டு வருகின்றது என்பதே இந்த கொடூர சம்பவங்கள் எடுத்துக் கூறும் செய்தியாகும்.

கடைசி காலத்தில் என்ன சம்பவங்கள், பயங்கரங்கள் நடக்க இருக்கின்றன என்பதை இஸ்லாம் கூறியுள்ள ஆதாரங்கள் மூலமாக மட்டுமே நாம் அறியலாம். இஸ்லாம் கூறியுள்ள ஆதாரங்கள் பற்றிய அறிவு இல்லாத அந்நியரின் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமோ, அந்தப் பயங்கர நிலைமையை உருவாக்கும் பித்அத்துக் காரர்களின் பத்திரிகை , ஊடகங்கள் மூலமோ அந்த சம்பவங்களின் உண்மையான தன்மையை அறிய முடியாது.

மத்திய கிழக்கில் ஐந்து வருடங்களாக நடைபெறும் பதவிமோகப் புரட்சிகள், ஈவிரக்கமற்ற படுகொலைகளின் பின்னணியில் பல நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகளின் கபடத்தனமான நிலைப்பாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்தால் தான், சமகாலப் பிரச்சினையின் உண்மையான தன்மையை இனம் காண முடியும். அந்த வகையில் பிரதான நாடுகளின் நிலைப்பாடுகள் பற்றி சிறிது பார்ப்போம்.

வஹாபிகளின் பதவிமோகப் புரட்சிகள், தூனீசியா, லிபியா, யெமன், எகிப்து, ஸிரியா, முதலிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாயின என்பது நீங்கள் அறிந்த விடயம். தூனீசிய தலைவர் நாட்டைவிட்டு ஓடித் தப்பினார். லிபியத் தலைவர் ஐரோப்பிய ஸியோனிஸ (அமெரிக்க, பிரிட்டன்) வான் தாக்குதலின் உதவியுடன் வஹாபிகளால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். யெமன் தலைவர் வஹாபிகளின் ரொக்கட் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் பதவி துறக்க வேண்டியேற்பட்டது. எகிப்து தலைவர் பதவி துறந்து சிறை செல்ல நேர்ந்தது. புதிதாக தேர்தல் மூலம் வந்த வஹாபி தலைவருக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கவே, அதனைத் தொடர்ந்து இராணுவத் தலைவர் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய தேர்தல் மூலம் மிகப்பெரும் ஆதரவுடன் புதிய தலைவரானார். ஸிரிய தலைவர் வஹாபிகளின் பிடியில் இன்று நாளை அகப்படுவார் என்ற நிலையில் இருந்து, ரஷ்யாவின் திடீர் ஆதரவு கிடைத்ததால் ஒருவாறு போராட்டத்துடன் இன்னும் பதவியில் இருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில் தான், முன்னாள் வஹாபி பயங்கரவாதி பின்லாடனின் "அல்காஇதா" இயக்கம் புது வடிவமெடுத்து, அதன் பரிணாம வளர்ச்சியாக "தாஇஷ்" என்ற ISIS இயக்கம் தோன்றியது. (இராக் ஸிரியா இஸ்லாமிய ராச்சியம் என்பது ISIS என்பதன் பொருள்)

(பயங்கரவாத வஹாபி இயக்கங்கள் உருவாகக் காரணம் யார்?
எந்த நாடுகள் அவற்றைப் போசித்து வளர்க்கின்றன?
ISIS ஐ தோற்கடிக்க முடியாதது ஏன்?
போன்ற விடயங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் )

No comments:

Post a Comment