Tuesday, November 14, 2017

அரபுலகில் நடப்பதென்ன?

அரபுலகில் அதிரடி மாற்றங்கள் (2)
( ஊடகங்களின் ஊடாக அரபுலகம் )
மத்திய கிழக்கில் இன்று நடப்பவற்றை உலகப் பத்திரிகைகள் பல கோணங்களில் ஆராய்கின்றன. அவற்றின் கண்ணோட்டத்தில் செய்திகளின் சாராம்சம் இது :
                பலஸ்தீன் மண்ணை யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியது முதல் அதுவே மத்திய கிழக்கின் பிரதான பிரச்சினையாக இருந்தது. பல யுத்தங்களை அது உருவாக்கியது.
                ஸதாம் குவைத்தை ஆக்கிரமித்தது முதல் பிரச்சினை வேறு உருவம் பெற்றது. தூர இருந்த அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் மத்திய கிழக்கில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. பலஸ்தீனரின் உரிமைப் போராட்டம் வலுவிழந்தது.
                இராக்கில் அமெரிக்கா நிரந்தர இடம் பிடித்தது முதல் இராக், ஸிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் கொள்கை பிரச்சார ரீதியாக மட்டும் இருந்த கவாரிஜ் வஹாபிகளை ISIS பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா மாற்றியது. அமெரிக்காவுக்கு உதவியாக கட்டார், துருக்கி, ஸவூதி போன்ற நாடுகள் ISIS க்கு சகல உதவிகளையும் வழங்கின. இப்படியாக ISIS வஹாபிகள் மூலம் அரபுலகை ஆக்கிரமிக்க அமெரிக்க வகுத்த திட்டம் , திடீர் என்று ஸிரியா சார்பாக ரஷ்யாவின் தலையீட்டின் காரணமாக, அமெரிக்காவும் ISIS உம் படுதோழ்வியைத் தழுவின.
                இப்போது ஸிரியாவின் போக்மால் பிரதேசத்திலும், இராக்கின் ராவா பிரதேசத்திலும் மட்டும் அமெரிக்க உதவியுடன் ISIS இரண்டு நாடுகளினதும் இராணுவங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றது. இராக்குக்கும் ஸிரியாவுக்கும் இடையில் உள்ள யூபிரட்டீஸ் நதியை அடுத்துள்ள போக்மால் பிரதேசத்தில் ISIS க்கு அமெரிக்கா பகிரங்கமாகவே உதவி வருகின்றதை ரஷ்யா அம்பலப் படுத்தியுள்ளது.  அமெரிக்கா தீவிரமாக தலையிடாவிட்டால் ஸிரியாவிலிருந்து எதிர்காலத்தில் ISIS முற்றாக அழிக்கப்படக்கூடிய சாத்தியங்களே உள்ளன.
                இப்படியாக ISIS இன் முடிவு காலம் நெருங்கி வருவதுடன், ஸவூதியின் உதவியுடன் இன்னொரு மத்திய கிழக்கு யுத்தத்தை ஆரம்பிக்க அமெரிக்கா தீவிரமாக செயல்படுகிறது.  ஸவூதிக்கும், ஏனைய ஸுன்னி நாடுகளுக்கும் சவாலாக வளர்ந்து வரும் சீஆ சக்தியான ஈரானை அழிக்க வேண்டும், லெபனானில் உள்ள ஈரான் சார்பு பலம் வாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ்வை அழிக்க வேண்டும் என்பதுவே ஸவூதி, எமிரேட்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளின் திட்டம்.
                இதன் ஆரம்ப கட்டமாகத்தான், ஈரான் சார்பு லெபனான் பிரதமர் ஸஅத் அல் ஹரீரியை திடீரென்று ஸவூதிக்கு வரவழைத்து, பலாத்காரமாக அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிக்க வைத்தது ஸவூதி அரசு. அது மட்டுமல்ல, ஈரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எதிராக ஸவூதியில் இருந்து அவரைப் பேச வைத்தது ஸவூதி.
                லெபனானைத் தாக்கி, ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்வை அழிக்கும் நோக்கில், லெபனானில் உள்ள ஸவூதி, குவைத், பஹ்ரைன், எமிரேட்ஸ், அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அந்நாடுகள் பணித்தன.
                ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்புகள் காரணமாக, இன்னும் ஓரிரு நாட்களில் ஹரீரியை லெபனானுக்கு போக அனுமதிக்கும் நிலைக்கு ஸவூதி தள்ளப்பட்டுள்ளது.
                யெமனிலிருந்து ஸவூதியில் உள்ள மன்னர் காலித் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட பாலஸ்டிக் ஏவுகணை ஈரானின் உற்பத்தியே என்பது ஸவூதியின் குற்றச்சாட்டு. இதனையடுத்தே உடனடியாக ஈரானின் இராணுவ சக்தியை அழிக்க வேண்டும் என்று ஸவூதி தீர்மானித்தது.
                ஈரானில் 500 மீட்டர் நிலத்துக்கடியில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் 1700 கி.மீ. சென்று தாக்கக்கூடிய நவீன ரக ஏவுகணைகள் இருப்பதை அண்மையில் ஈரான் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டது.
                லெபனானில் உள்ள ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்விடம் இஸ்ரேலைத் தாக்கும் ஆற்றல் மிக்க 1,40,000 க்கும் அதிகமான ஏவுகணைகள் உள்ளன. ஹிஸ்புல்லாஹ் இப்படியான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனின் ஹைபா f  பிரதேசத்தை தாக்கினால், அங்கு இஸ்ரேல் நிறுவியுள்ள அமோனியா தொழிற்சாலையில் இருந்து அணு குண்டுகள் வெடித்து பல இலட்சம் இஸ்ரேலியர்கள் பலியாகலாம் என்று அண்மையில் இஸ்ரேல் அச்சம் தெரிவித்துள்ளது.
                ஸிரியா, லெபனான், ஈராக், யெமன் முதலிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்
 நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஈரானையும் ஸிரியாவையும், ஹிஸ்புல்லாஹ்வையும் அழித்தால் தான் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அது கருதுகிறது.
                ஸவூதியிலும், இஸ்ரேலிலும் ஈரான், ஹிஸ்புல்லாஹ்வுக்கு நிகரான ஆயுத பலம் இருந்தாலும், யுத்தத்தை ஆரம்பித்தால் அது எந்த திசைக்கு திரும்புமோ என்பதே ஸவூதிக்கு உள்ள அச்சம். ஒரு வேளை துருக்கி, ரஷ்யா என்பன ஈரான் சார்பாக  நின்றால், யுத்தம் பல மாதங்கள் நீடித்து ஸவூதிக்கும் இஸ்ரேலுக்கும் பேரழிவு ஏற்படலாம் என்று இரு நாடுகளும் சிந்திக்கின்றன. எனவே இப்போது சூழ்ந்துள்ள போர் மேகங்கள் இடி முழக்கத்துடன் யுத்தமாக வெடிக்குமா அல்லது "யார் யாருடன் இணைகிறார்கள்" என்று பார்க்க சும்மா ஒரு "ஷோ" வுடன் அமைதியடையுமா என்பதை எதிர்வரும் நாட்களில் காணலாம்.
                மத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாம் என்ற குடையின் கீழ் ஒன்றுபட்டு, இஸ்ரேலை அழிக்கக்கூடிய சக்தியைப் பெற பல "தடை"களை கடக்க வேண்டியுள்ளது. ஆனால், அதில் முதலாவது தடை : ஸுன்னி நாடுகளில் சீஆக் கொள்கையை பரப்பி, அந்நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சிப்பதே என்பதே எமது கருத்து. ஈரான் தனது அந்த "கொள்கை விஸ்தீரண"  போக்கை கைவிட்டால், மற்றத் தடைகளை இலகுவில் பேசித் தீர்க்கலாம். வஹாபியத்திலிருந்து ISIS உருவாகி தமது அரசுகளுக்கே ஆபத்து வந்தது என்பதை ஸுன்னி நாடுகள் இப்போது உணர்ந்து, வஹாபியத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், ஈரானும் தனது "கொள்கை பரப்பும்" பணியை நிறுத்திக் கொண்டால் தீர்வுகளுக்கான வழிகள் திறபடலாம்.
கவாரிஜ் வஹாபியத்தும் சீஆ கொள்கையுமே மத்திய கிழக்கு நாடுகள் இந்த அளவு மோசமான வீழ்ச்சியடையக் காரணம். 1300 வருடங்கள் இருந்தது போன்று, மத்ஹபு, தரீக்கா (தஸவ்வுப்) இஸ்லாம் மட்டுமே தீர்வுக்கு வழி.
14.11.2017

No comments:

Post a Comment