அல் அஸ்ஹர் உயர் பதவியிலிருந்து கர்ழாவி நீக்கப்பட்டார் !
இஸ்லாமிய கலைகளுக்கான ஆய்வு மையத்திலிருந்து கர்ழாவி நீக்கப்பட்டார். சென்ற டிசம்பர் மாதம் செய்க் அல் அஸ்ஹர் அல் இமாம் கலாநிதி அஹ்மத் தீப் ஆவர்களின் தலைமையில் கூடிய மேற்படி ஆய்வு மையம், ஏகமனதாக இத்தீர்மானத்தை எடுத்ததாக பிரபல பத்திரிகையான அல் அஹ்ராம் அறிவித்தது.
கர்ழாவி எகிப்துக்கும், எகிப்து மக்களுக்கும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்துக்கும் அதன் தலைவரான செய்குல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் தீப் அவர்களுக்கும் எதிரான விதத்தில் நடந்துகொண்டதையிட்டு அல் அஸ்ஹர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment