Saturday, July 2, 2016

பொய்யான வஹாபி உலக அரசியல்

பொய்யான வஹாபி உலக அரசியல்
நாம் வஹாபி வழிகேடுகளுக்கு எதிரானவர்கள்.
நாம் சீஆ வழிகேடுகளுக்கு எதிரானவர்கள்.
நாம் அத்வைத குப்ரிய்யத்துக்கு எதிரானவர்கள்.
ஆனால் மத்திய கிழக்கில் நடக்கும் "உண்மை நடப்பை" அல்லாஹ்வின் கிருபையினால், அச்சொட்டாக , தூரதிருஷ்டியாக கூறுவதில் அனுபவம் உள்ளவர்கள்.
எட்டு வருடங்கள் நடந்த ஸதாம் (இராக்) – ஈரான் யுத்தத்தில் ஸதாம் படுதோழ்வியடைவார் என்பதை எட்டுவருடங்களாக ஒவ்வொரு நாளும் குவைத்தில் கூறி வந்ததை அங்கிருந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
ஸதாம் குவைத்தை ஆக்கிரமித்த யுத்தத்தில் ஸதாம் படுதோழ்வி யடைவார் என்பதை இங்கிருந்தவர்களிடம் கூறியதை அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அது மட்டுமல்ல, அது பற்றி யுத்த ஆரம்பத்தில் நான் எழுதிய கட்டுரையை (இங்கு எல்லோரும் ஸதாம் ஆதரவு என்பதால்) பத்திரிகையில் பிரசுரிக்க மறுத்த தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்கள் , இறுதியில் எனது தூரதிருஷ்டி நிரூபிக்கப்படவே, எனது கட்டுரையை தினகரனில் பிரசுரித்து, அதே பக்கத்தில் அதே கருத்தை அவரின் ஆசிரியர் தலையங்கமாகவும் எழுதி கௌரவித்ததை படித்தவர்களிம் கேட்டுப் பாருங்கள்.
அதே போன்று பஷ்ஷாருல் அஸாதை அழித்து, ஸிரியாவை அழிக்க கடந்த ஐந்து (5) வருடங்களாக அதிகமான அரபு நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான அதிக ஐரோப்பிய நாடுகளும் பெரும் யுத்தம் நடாத்தும் போது, ஆரம்பத்தில் இருந்தே எமது நெட்டில் ஸிரியாவை ஆதரித்து நாம் பல கட்டுரைகள் எழுதி வந்ததை வாசித்தவர்கள் அறிவர்.
சரி, விசயத்துக்கு வருவோம்.
கடந்த ஐந்து வருடங்களாக ஸிரியாவை எதிர்த்து போராடிய, குரல் கொடுத்த உலகத் தலைவர்கள், வஹாபித் தலைவர்கள் பலரும் இருந்த இடம் தெரியாமல் போனதையும், ஆனால் ஸிரிய ஜனாதிபதி பஷ்ஷாருல் அஸத் சகல எதிரிகளையும் முறியடித்து , தலை நிமிர்ந்து நிற்பதையும், இம்முறை ரமழானில் இராணுவ அதிகாரிகளுடன் நோன்பு திறப்பதையும் , "அஸாத் சில நாட்களில் ஒழித்துக் கட்டப்படுவார்" என்று கூறியவர்களின் பெயர்களையும், ஈரான் பத்திரிகை 'அல் ஆலம்' பிரசுரித்த கட்டுரை தான் இது.
நாம் அறிந்த வகையில் இக்கட்டுரையில் "அப்படி" கூறிய ஒரு பத்திரிகையின் பெயர் இடம்பெறத் தவறி விட்டது. அது தான், இலங்கையில் ஒரு வஹாபி இயக்கப் பத்திரிகை, நான்கு வருடங்களுக்கு முன்னர், "அஸாதை தூக்கில் இடுவதாக" ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தது.
பாவம் "சிந்தனையாளர்கள்", "உலக நடப்புத் தெரிந்தவர்கள்" என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் அவர்களின் பின்னால் உள்ள வாசகர்களின் பரிதாப நிலையை எண்ணிக் கவலைப் படுகிறோம்.
"யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும்" என்பது "சிலருக்குதெரிந்திருந்தால், வஹாபி இயக்கங்களின் இப்படியான "கிணற்றுத் தவளை" போக்கை நாடு பூராக பலவிதமான ஊடகங்கள் மூலம் அறிவித்து, ஸுன்னத்து வல் ஜமாஅத்துக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கலாம். விதி இப்படி இருக்கிறது ! அல்ஹம்து லில்லாஹ்.
மேலே உள்ள அரபு பத்திரிகையின் முழுச் செய்தியையும் மொழிபெயர்க்க நேரம் காணாது. விரும்பியவர்கள் ஒவ்வொரு சனி பின்னேரம் ஞாயிறு இரவும் எமது அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் (புது கட்டடம்) நடக்கும் தஃலீம் மஜ்லிஸுக்கு வந்தால், பிக்ஹு, அக்கீதா, தஸவ்வுப், கடைசிகால பித்னாக்கள், உலக அரசியல் என்ற பல விடயங்களிலும் தெளிவு பெறலாம் இன்ஷா அல்லாஹ்.
(குறிப்பு: இதற்காக "அஸாத் என்றும் ஜனாதிபதியாக இருப்பார்" என்று நாம் கூற வரவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக எமது தூரதிருஷ்டி உண்மையானதையும், ஸிரியா விரோத உலகத்தினதும், "சிந்தனையாளர்கள்" என்று கூறிக்கொள்ளும் அந்த இயக்கத்தினதும்  கற்பனை போலியானது என்பதையே கூறுகிறோம்). 1.7. 2016

No comments:

Post a Comment