Thursday, December 8, 2016

ஸிரியாவில் வஹாபி மண்கவ்வல்

ஸிரியாவில் அஸாதை அகற்றுவதிலிருந்து
அமெரிக்கா பின்வாங்கல்.
இக்வான் முதலிய கவாரிஜ் வஹாபிகள் மண்கவ்வல் !
2011 இல் ஆரம்பமான ஸிரிய யுத்தத்தில் அஸதை அகற்றிவிட்டு, ஸிரியாவை பல கூறுகளாக பிரித்து, அங்கு வஹாபி இக்வான், IS ஆட்சிகளை ஏற்படுத்த ஸவூதி, கட்டார், துருக்கி முதலான சகல வஹாபி நாடுகளும், சகல மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் அமெரிக்க தலைமையில் போராடுவதை நீங்கள் அறிவீர்கள்.
இலங்கையில்  (அகில இலங்கை ரீதியான ஒரு இஸ்லாமிய பத்திரிகையை நடாத்த
 "சகல தகுதியும்" , இருந்தும் தக்கியா சதிகாரரால் நாம் தடுக்கப்பட்டிருப்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ) முஸ்லிம் வாசகர்களை Brain wash செய்து முன்னேறிய சில வஹாபி பத்திரிகைகள், அரபு நாட்டு யுத்த நிலைமைகளை , அல் ஜஸீராவின் ஊதுகுழலாக இருந்து வஹாபியத்துக்கு சார்பாக மட்டும் செய்திகளை பிரசுரிப்பதால், அதை மட்டுமே வாசித்த எமது ஸுன்னத்து வல் ஜமாஅத்து முஸ்லிம்களும், அஸதுக்கு எதிராகவும், உலகில் துணிச்சல் மிக்க ஒரேயொரு ஸுன்னத்து வல்ஜமாஅத்து அரசியல் தலைவரான ஸிஸிக்கு எதிராகவும், அந்த வஹாபி பத்திரிகைகள் பிரசுரித்த பொய்களை தமது "பொன்னான" தலைகளில் நிரப்பிக் கொண்டனர்.
ஆனால் நாமோ, தக்கியா சதிகாரரின் தொடரான தடைகளுக்கு மத்தியில் , 2011 வஹாபி கவாரிஜ் புரட்சி காலம் முதல் இன்று வரை (எமது எளிமையான வசதிக்கு ஏற்ற வகையில்) அவ்வப்போது, "அரபு நாடுகளில் நடப்பது இது தான்" என்ற உண்மையான செய்திகளை எமது www.abdhulbary.info மூலம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதற்கொப்ப, அதிகமானவர்கள், தமது "பொன்னான" மூளைகளை வஹாபி பத்திரிகைகளுக்கு அடகு வைத்து, அரபு நாட்டு நடப்புகளை தலைகீழாக விளங்கி வரும் அதே வேளை, இலங்கையிலும் வெளி நாடுகளிலும் உள்ள "அல்லாஹ்வுக்குப் பயந்து உண்மையைத் தேடும்சிந்தனா சக்தி உள்ள சிலர், எமது ஊடகம் தான் :
முற்று முழுதான ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கையை ஆதரிப்பது என்பதையும் ,
நாம் எழுதிய தூரதிருஷ்டிகள் தான் காலத்தால் உண்மை என்று நிரூபிக்கப்பட்டன
என்பதையும் புத்தியால் உணர்ந்து, தொடர்ந்து எமது www.abdhulbary.info மூலம் உண்மை நிலைமையை அறிந்து வருகின்றனர்.
இலங்கையில் உள்ள , வஹாபி பத்திரிகைகளோ , ஏதேதோ கவர்ச்சியாக எழுதுவார்கள். வஹாபி இயக்கங்களை (குறிப்பாக இக்வான்கள்) சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, எமது "அப்பாவிஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும், காலையிலேயே அந்த பத்திரிகைகளை வாங்கி தலையில் நிரப்பிக்கொள்வார்கள்.
ஆனால் வருடங்கள் செல்லும் போது அவையெல்லாம், "குப்பையில் போட" வேண்டிய செய்திகளாகவும், வீட்டில் பத்திரப் படுத்தி வைத்த பத்திரிகைகளை குப்பைத் தொடடியில் போட வேண்டியவைகளாகவும் ஆகிவிடுகின்றன. அந்த பத்திரிகைகள் ஐந்து வருடங்களுக்கு முன் எழுதியது என்ன ? அஸத் இன்று நாளை பதவியால் நீக்கப்படுவார், கொலை செய்யப்படுவார் என்று எழுதினார்கள். ஆனால் நாமோ அதை மறுத்து , வஹாபி பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதி வந்தோம்.
வஹாபிகளிடமும், அவர்களின் பத்திரிகைகளை (அது தான் உலகச் செய்தி என்று) விரும்பி வாசிக்கும் அப்பாவி ஸுன்னிகளிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன் :
கடந்த 2011 முதல் இன்று வரை, எகிப்திலும், ஸிரியாவிலும், அந்த பத்திரிகைகள் எழுதியபடி "வஹாபிகளுக்கு வெற்றியாக" நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை எழுதிய அந்த பத்திரிகையை எமக்கு கொண்டுவந்து தருவீர்களா ?
இப்போது ஸிரியாவில், சகல வஹாபி இயக்க சார்பான பயங்கரவாதிகளும் மண்கவ்விக் கொண்டிருக்கிறார்கள்.  அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேல், பிரான்ஸ், ஜேர்மன், ஸவூதி, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் பூரண ஆதரவுடன், தமது பூரண கட்டுப்பாட்டில் பல வருடங்களாக வஹாபிகள் வைத்திருந்த, அதி முக்கிய பிரதேசமான ஹலப்  حلب  மாகாணத்தில் 80 % வீதான பகுதியை ஸிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இன்றும் நாலைந்து ஊர்கள் தான் கைப்பற்ற வேண்டியிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் "இலங்கை வஹாபி பத்திரிகைகள் 5 வருடங்களாக புகழ்ந்த" அந்த பயங்கரவாதிகளின் "சக்தி" அல்லாஹ்வின் கிருபையால், முற்றாக ஸிரியாவில் ஒழிக்கப்படும்.
இதில் இன்னொரு விசேசம் என்னவென்றால், புதிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூட, வஹாபி பயங்கரவாதிகளை மடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியான, டுல்ஸி கப்பார்ட் Tulsi Gabbard   என்பவரும் ட்ரம்பை சந்தித்து, அரபு நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்ய பயங்கரவாதிகளுக்கு உதவும் அமெரிக்க வெளிநாட்டு கொள்கையை உடனடியாக மாற்றிக்கொள்ளும்படி ட்ரம்பை வற்புறுத்தியுள்ளார்.
அது பற்றி ஸிரிய, அமெரிக்க பத்திரிகைச் செய்திகள் இதோ :
அத்துடன், பங்களாதேஷில் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழிய அநியாயங்களுக்கு எதிராகவும் அவர் பேசியுள்ளார் : https://www.youtube.com/watch?v=pwUzR8IFo-g
8.12.2016