Wednesday, February 25, 2015

90 கிறிஸ்தவர்கள் கடத்தல்

ஸிரியாவில் 22 மில்லியன் மக்கள் தொகையில் 10% கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஸிரியாவின் வடக்கில் இருக்கின்றது. ஹஸ்கா என்ற மாகாணம். அது தாஇஷ் (ISIS) வஹாபி பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் இராக்குக்கும், ISISக்கு சகல உதவிகளும் வழங்கும் துருக்கிக்கும் இடையில் அமைந்துள்ள ஸிரியாவின் பிரதேசம். இன்று அதிகாலை ஹஸ்கா மாகானத்தில் தாக்குதல் நடாத்திய ISIS பயங்கரவாதிகள் அங்கிருந்த கிறிஸ்தவ கோயில்களில் 5 கோயில்களை எரித்து அழித்துவிட்டு, 90 க்கும் அதிகமான கிறிஸ்தவ பெண்கள், ஆண்கள், குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர்.

முதலாவது தாஇஷ் (ISIS) பாடசாலை

வடக்கு ஸிரியாவில் உள்ள ரிக்கா என்ற பகுதியில் தாஇஷ்கள் (ISIS) தமது குழந்தைகள் படிக்க முதலாவது ISIS பாடசாலையை ஆரம்பித்துள்ளனர். "சிங்கக் குட்டிகளுக்கான அல் பாரூக் பாடசாலை" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் எட்டு வயதுக்குட்பட்ட சுமார் 50 – 60 தாஇஷ் மாணவர்கள் உள்ளனர். மற்ற முஸ்லிம்களை காபிர் எனல், கைதிகளைக் கொலை செய்தல், அவர்கள் பாணியிலான ஜிஹாத் என்பன பாடத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்

தமது நோக்கம் பற்றிக் குறிப்பிட்ட ஒரு தாஇஷ் ஆசிரியர் , (இத்தாலியின் தலைநகரான) ரோம் நகரத்தைக் கைப்பற்றல், அல் அக்ஸாவை விடுதலை செய்தல் ஆகிய காரியங்களுக்காக இந்த மாணவர்கள் தயார் படுத்தப்படுவதாக கூறினார். http://www.alalam.ir/news/1679279

Saturday, February 21, 2015

மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

மத்திய கிழக்கில் 2011 முதல் நடைபெறும் வஹாபி (கவாரிஜ்) புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அதி தீவிர வஹாபி (கவாரிஜ்) "தாஇஷ்" ISIS களின் கொடூர படுகொலைகளும் உலகில் மிகப் பெரிய பயங்கரமான ஒரு மாற்றத்தின் ஆரம்பமாக கருதப்படுகின்றன. உலக முடிவு அண்மித்துக்கொண்டு வருகின்றது என்பதே இந்த கொடூர சம்பவங்கள் எடுத்துக் கூறும் செய்தியாகும்.

கடைசி காலத்தில் என்ன சம்பவங்கள், பயங்கரங்கள் நடக்க இருக்கின்றன என்பதை இஸ்லாம் கூறியுள்ள ஆதாரங்கள் மூலமாக மட்டுமே நாம் அறியலாம். இஸ்லாம் கூறியுள்ள ஆதாரங்கள் பற்றிய அறிவு இல்லாத அந்நியரின் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமோ, அந்தப் பயங்கர நிலைமையை உருவாக்கும் பித்அத்துக் காரர்களின் பத்திரிகை , ஊடகங்கள் மூலமோ அந்த சம்பவங்களின் உண்மையான தன்மையை அறிய முடியாது.

மத்திய கிழக்கில் ஐந்து வருடங்களாக நடைபெறும் பதவிமோகப் புரட்சிகள், ஈவிரக்கமற்ற படுகொலைகளின் பின்னணியில் பல நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகளின் கபடத்தனமான நிலைப்பாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்தால் தான், சமகாலப் பிரச்சினையின் உண்மையான தன்மையை இனம் காண முடியும். அந்த வகையில் பிரதான நாடுகளின் நிலைப்பாடுகள் பற்றி சிறிது பார்ப்போம்.

வஹாபிகளின் பதவிமோகப் புரட்சிகள், தூனீசியா, லிபியா, யெமன், எகிப்து, ஸிரியா, முதலிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாயின என்பது நீங்கள் அறிந்த விடயம். தூனீசிய தலைவர் நாட்டைவிட்டு ஓடித் தப்பினார். லிபியத் தலைவர் ஐரோப்பிய ஸியோனிஸ (அமெரிக்க, பிரிட்டன்) வான் தாக்குதலின் உதவியுடன் வஹாபிகளால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். யெமன் தலைவர் வஹாபிகளின் ரொக்கட் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் பதவி துறக்க வேண்டியேற்பட்டது. எகிப்து தலைவர் பதவி துறந்து சிறை செல்ல நேர்ந்தது. புதிதாக தேர்தல் மூலம் வந்த வஹாபி தலைவருக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கவே, அதனைத் தொடர்ந்து இராணுவத் தலைவர் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய தேர்தல் மூலம் மிகப்பெரும் ஆதரவுடன் புதிய தலைவரானார். ஸிரிய தலைவர் வஹாபிகளின் பிடியில் இன்று நாளை அகப்படுவார் என்ற நிலையில் இருந்து, ரஷ்யாவின் திடீர் ஆதரவு கிடைத்ததால் ஒருவாறு போராட்டத்துடன் இன்னும் பதவியில் இருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில் தான், முன்னாள் வஹாபி பயங்கரவாதி பின்லாடனின் "அல்காஇதா" இயக்கம் புது வடிவமெடுத்து, அதன் பரிணாம வளர்ச்சியாக "தாஇஷ்" என்ற ISIS இயக்கம் தோன்றியது. (இராக் ஸிரியா இஸ்லாமிய ராச்சியம் என்பது ISIS என்பதன் பொருள்)

(பயங்கரவாத வஹாபி இயக்கங்கள் உருவாகக் காரணம் யார்?
எந்த நாடுகள் அவற்றைப் போசித்து வளர்க்கின்றன?
ISIS ஐ தோற்கடிக்க முடியாதது ஏன்?
போன்ற விடயங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் )

Thursday, February 19, 2015

பூமி சுற்றுவதில்லையாம் !

ஸவூதி அறிஞரின் வாதம்!

சார்ஜாவிலிருந்து சீனா செல்லும் விமானத்தில் போய், விமானம் இடையில் ஆகாயத்தில் ஓரிடத்தில் தரித்து நின்றால், உலகம் சுற்றுவதென்றால் அவிடத்துக்கு சீனா வராமலிருக்குமா? என்பது அவரின் வாதம்.

What did he say? Saudi cleric confidently tells academic that the Earth does NOT rotate

A SAUDI cleric has been ruthlessly mocked for claiming the Earth does NOT revolve in space.




Saturday, February 14, 2015

ISIS பற்றி ISIS


தாஇஷ் என்ற ISIS பயங்கரவாதிகள் ஜிஹாத் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு முற்றும் முரணாக அப்பாவி முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தைகளையும் அநியாயமாக கொலை செய்பகிறார்கள். வீணாக தமது உயிர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்துக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பொதுச் சொத்துக்களை அநியாயமாக அழிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியாது. எனவே தான் அந்த பகயங்கரவாத இயக்கத்தை விட்டும் விலகுவதாக குறிப்பிடுகிறார் ISISஇன் இஸ்லாமிய விரோத அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் ISIS ஐ விட்டும் வெளியேறிய அப்துல்லாஹ் அல் முஹைஸினி என்பவர்.

Wednesday, February 11, 2015