Wednesday, October 4, 2017

ஆசூராக் கந்தூரி, ஓர் அறிமுகம்

ஆசூராக் கந்தூரி – ஓர் அறிமுகம்.
கஷ்டோவிட்டி அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் (ஆண்கள் பாடசாலைக்கு அண்மையில்) நாளை 05.10.2017 வியாழக்கிழமை 78 ம் வருட ஆசூராக் கந்தூரி நடைபெறுகின்றது. காலை 10.00 மணிக்கு மௌலிது ஓதும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து, அதன் பரக்கத்தினை பெற்றுக் கொள்வீர்களாக.
                சுமார் 78 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல ஊர்களில் வைசூரி என்றழைக்கப் படுகின்ற பெரியம்மை நோய் தீவிரமாகப் பரவி, அதனால் பலர் மரணத்தை தழுவினார்கள். அப்போது எமது தகப்பனார் அப்துல் ஹபீழ் ஆலிம் அவர்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்களின் மகத்துவங்களை (அவர்களுக்கு அல்லாஹு தஆலா கொடுத்த சிறப்புக்களை) எடுத்து விளக்கும் மௌலிது மஜ்லிஸை அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் ஆரம்பித்து, அவர்களின் பொருட்டால் இப்படியான பயங்கர ஆட்கொல்லி நோய்கள் இங்கு வராமல் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அல்லாஹ்வின் கிருபையால் அதன் பின்னர் இப்பகுதியில் அப்படியான பயங்கர தொற்று நோய்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                துல் ஹஜ் மாதம் கடைசிப் பகுதியில் ஆரம்பித்து, வெள்ளிக் கிழமை நீங்கலாக 11 நாட்கள் மத்ரஸாவில் சுமார் 20 மௌலிதுகள் ஓதப்பட்டு , முஹர்ரம் மாதத்தில் பெரிய கந்தூரி நடைபெறும். 11 நாட்கள் ஓதப்படும் மௌலிகளில், ஆரம்பமாக, இமாம் தைபஈ    (ديبعي) (ரஹ்) அவர்கள் திரட்டிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவங்களை விபரிக்கும் மௌலிதும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகத்துவங்களை விபரிக்கும் அவர்களின் மௌலிதும் , யாஸீனும் ஓதப்படுகின்றன. அஹ்லு பைத்துகள் (ரழி) மௌலிது, பத்ரு , உஹ்து ஸஹாபாக்கள் (ரழி) மௌலிது, சாபிஈ இமாம் (ரஹ்) மௌலிது, புகாரி இமாம் (ரஹ்) மௌலிது, குத்பு நாயகம் (ரழி), சாதுலி நாயகம் (ரழி), ரிபாஈ நாயகம் (ரழி), இன்னும் பல அவ்லியாக்களின் மௌலிதுகளும் அல்லாஹ் கிருபையால் ஓதப்படுகின்றன. சில வருடங்களாக பெண்களின் தலைப்பாத்திஹா ஓதும் வைபவமும் ஒரு நாள் நடைபெறுகின்றது.
ஆசூரா நோன்பிரவன்று பத்ரு ஸஹாபாக்களின் மௌலிதும், பெரிய கந்தூரி அன்று தலைப்பாத்திஹாவும் ஓதப்பட்டு, நார்சா விநியோகிக்கப்படும். இக்கந்தூரிக்கான சகல செலவினங்களும் இவ்வூரையும் வெளியூர்களையும் சேர்ந்த நல்ல உள்ளம் படைத்த பரோபகாரிகளால் நடைபெறுகின்றன.
இங்கு ஓதப்படும் மௌலிதுகளுக்கு உரிய நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்களின் பொருட்டால் ரஹ்மானாகிய அல்லாஹ் இவ்வூராரையும் மற்றவர்களையும் பயங்கர தொற்று நோய்களை விட்டும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.
அப்துல் பாரி அப்துல் ஹபீழ் ஆலிம்
04.10.2014

Sunday, October 1, 2017

ஆட்கொல்லி 'ஸெண்ட்'

3 நாட்களில் கொல்லும் 'ஸெண்ட்'
எகிப்து, இராக், குவைத், பஹ்ரைன், லெபனான், சூடான் முதலிய நாடுகளில் நஞ்சு கலந்த ஒரு வித அத்தர் (ஸெண்ட்) மார்கட்டுகளை ஆக்கிரமித்துள்ளதாம். 'ரிலக்ஸ்' என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸெண்ட் அதனை உடம்பில் பூசியவரை 3 அல்லது 4 நாட்களில் கொன்று விடுமாம். அவற்றை கண்டு பிடித்து உடனடியாக சந்தையிலிருந்து அகற்றி விடும்படி அந்நாடுகளின் அரசாங்கங்கள் வர்த்தக அமைச்சுகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாம்.
                இஸ்லாம் அறிமுகப் படுத்திய, ஸுன்னத்தாக்கிய ஹலாலான அத்தர்களை விட்டுவிட்டு,
'நவீனம்' என்ற இருட்டில் மூழ்கி தத்தளிக்கும் 'அறிவு கெட்ட' இளைஞர்களே யஹூதி நஸாராக்களின் உற்பத்தியாகிய இந்த 'ஆட்கொல்லி' ஸெண்டுகளினால் பலியாகிறார்கள். இளைஞர்களே விழிப்படையுங்கள். ஹலாலான அத்தர் வகைகளை உபயோகியுங்கள். பல வித பிரயோசனங்களும் பெற்று அல்லாஹ்விடத்தில் ஸவாபும் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
1.10.2017