Friday, November 27, 2015

ஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்ஸவூதியில் பிறந்து ஸவூதி பணத்தால் உலகெலாம் வளர்ந்த வஹாபி இயக்கங்களில் சிலதையும் சீஆ இயக்கங்கள் சிலதையும் ஸவூதி அரசாங்கம் தடை செய்துள்ளது. 

இஸ்லாத்தை அழிக்க ஸவூதி அந்த (வஹாபி) இயக்கங்களை வளர்த்தது. இப்போது அவை ஸவூதி அரசையே பிடிக்க முனையும் போது தான் அரசு விழிப்படைந்துள்ளது.


Thursday, November 26, 2015

தாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்

தாஇஷை அழிக்க உண்மையில் விரும்புவது ஈரான், லெபனான் ஹிஸ்புல்லாஹ், ஸிரியா, இராக், குர்திஷ் மட்டும் தான். மற்ற நாடுகள் எல்லாம் சுய நலம். பிரான்ஸில் தாக்கியவுடன் பிரான்ஸ் உடனடியாக தாஇசை தாக்கியது எல்லாம் அந்நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம். கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று, ஐரோப்பா தம்மைப் பாதுகாக்காது என்று கலங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவி செய்து, தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ரஷ்யா முன்வருகின்றது.

அல்கைதா, இக்வானுல் முஸ்லிமீன், தாஇஷ் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, தாஇஷை காட்டி அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதும், இஸ்ரேலை பாதுகாப்பதும், அரபு பெற்றோலை தாஇஷ் மூலமும் துருக்கி மூலமும் பெறுவதுமே அமெரிக்க பிரிட்டன், பிரான்ஸ் திட்டம்.

இத்திட்டத்தை நோக்கிய பயணத்தில் ஐரோப்பாவில் 1000 பேர் அழிவது ஒன்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு பெரிய இழப்பல்ல. முஸ்லிம் நாடுகளில் முதலாவது அணுகுண்டை கண்டுபிடித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கை படுகொலை செய்வதற்கு, அவர் சந்தேகிக்காமல் இருப்பதற்காக அவர் போகும் விமானத்தில் அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகள் சிலரையும் தந்திரமாக அனுப்பி, விமானத்தில் குண்டு வெடித்து அவர் கொல்லப்பட்டது இதற்கு இன்னொரு உதாரணம்.

ஒரு கேள்வி :
தமக்கு உதவும் ஐரோப்பாவில் தாஇஷ் ஏன் தாக்க வேண்டும்?

அரபு நாடுகளில் அரசாங்கங்களை வீழ்த்தி ஆதிக்கத்தைப் பிடிப்பது தாஇஷ் தலைவர்களின் தேவை.

அத்தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவுவது (தாஇஷ் மூடர்களுக்கல்ல) , மாறாக தாஇஷ் தலைவர்களுக்குத் தான்.

தாஇஷ் தலைவர்களுக்கும் ஐரோப்பியத் தலைவர்களுக்கும் இடையில் தான் மறைமுகமான ஒப்பந்தம்.

இது தாஇஷ் மூடர்களுக்கு தெரியாது.

தலைவர்கள் கூறும் "குர்ஆன் ஹதீஸ், தவ்ஹீத், ஜிஹாத்" என்ற வார்த்தைகள் மட்டும் தான் அந்த மூடர்களை இயக்குகின்றது.

ஐரோப்பாவை தாக்காவிட்டால், "குர்ஆன் ஹதீஸ், ஜிஹாத்" என்று "வெறியேற்றப்பட்ட" மூடர்கள் தமது தலைவர்களை சந்தேகிப்பார்கள். ஐரோப்பா தான் தாஇஷை வளர்ப்பதாக ஊடகங்கள் கூறுவதைக் கேட்டு, மூடர்கள் தமது தலைவர்களை விட்டும் பிரிந்து , புது இயக்கம் அமைக்கக் கூடும்.

இந்தப் பயத்தினால், ஐரோப்பாவில் சில தாக்குதல் நடாத்தி, தமது தலைவர்கள் உண்மையான ஜிஹாத் தான் செய்வது என்று மூட தாஇஷ்களை தலைவர்கள் நம்ப வைக்கிறார்கள்.

இந்த மாயாஜாலங்கள் எல்லாம் அரசியலில் சகஜம் என்பது ஐரோப்பியத் தலைவர்களுக்கும் தெரியும்.

எனவே தான் தாஇஷை முற்றாக அழிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்புவதில்லை.

ஆனால் மேலே கூறிய தமது தேவைகள் நிறைவேறினாலோ, அல்லது அத்தேவைகளை நிறைவேற்ற வேறு ஆள், அல்லது நாடுகள் கிடைத்தாலோ , ஐரோப்பியத் தலைவர்கள் தாமே வளர்த்த தாஇஷை முற்றாக அழிக்கவும் தயங்க மாட்டார்கள். 

இதே பாணியில் தான் தாமே வளர்த்த ஸதாமையும், பின்லாடனையும் அழித்தார்கள்.

துருக்கிக்கு தாஇஷிடமிருந்து பெற்றோல் அனுப்பிய சில வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை கீழே உள்ள செய்தி சொல்கிறது.

Thursday, November 19, 2015

தாஇஷாக உருவெடுக்கும் வஹாபியத்து


தண்ணீர் தொட்டிகளில் (எமது ஊர்ப்பாசையில்) 'பேத்தை' இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தவளை உருவில் அவை இல்லை. ஆனால் அது தான் வளர்ந்து தவளையாகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதே போன்று தான் வஹாபியத்து தான் வளர்ந்து வளர்ந்து கடைசியில் ISIS தாஇஷாக உருவெடுக்கிறது. 
  1. முதல் படித்தரம் :- குர்ஆன் ஹதீஸ் மனம் போன போக்கில் கண்டபடி பேசி, நூதனமான பித்அத்தான புதுவித தவ்ஹீத் பேசி, உலகில் உள்ள மற்ற எல்லா முஸ்லிம்களையும் காபிர், முஷ்ரிக் என்று கூறல். (அதாவது تكفير Thakfeer என்ற முஸ்லிம்களையும் அவ்லியாக்களையும் முஷ்ரிக் என்று கூறும் கொள்கை)
  2. இரண்டாம் படித்தரம் :- உலமாக்களைத் தாக்குவது, அவ்லியாக்களினதும், ஸஹாபாக்கள், நபிமாரினதும் ஸியாரங்களை உடைத்தல் இப்படியாக முடிவில்லாமல் நீண்டு செல்லும் பயங்கரவாத செயல்கள். (அதாவது إرهاب Terrorism என்ற அட்டூழியங்கள்.)
  3. மூன்றாம் கட்டம் :- ஸுன்னி முஸ்லிம்களையும் சீஆக்களையும், மற்ற மனிதர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி பயங்கரமான வெடிகுண்டுகள் வெடிக்க வைப்பது மூலம் மனித இனத்தையே கொன்று குவிப்பது. (அதாவது تفجير Bombing என்ற குண்டுத் தாக்குதல் மூலம் மனித இனத்தையே அழித்தொழிப்பது.) 
இதைத்தான் "அல்லாஹ் படைத்த மனித இனம் மிருக இனம் அனைத்திலும் இவர்களே மிகக் கெட்டவர்கள்" என்ற கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்கள் வாயிலாக 1400 வருடங்கட்கு முன்னரே எச்சரித்தார்கள். 

அரபு நாடுகளில் இவ்வளவு காலமாக வளர்ந்து வந்த தவ்ஹீத் ஜமாஅத்து, இக்வானுல் முஸ்லிமீன், ஸலபி என்ற வஹாபி இயக்கங்களில் இருந்து உருவானதே ISIS தாஇஷ். எனவே இலங்கையில் உள்ள அந்த இயக்கங்களும் அவர்களது பலம் அதிகரித்து, அரசியலிலும் அவர்களுக்கு சார்பான MP மார்கள் உருவாகும் போது, இங்கும் அவர்கள் உலக தாஇஷ், நுஸ்ரத் போன்ற உலகத் தலைவர்கள் இடும் பயங்கரவாத, படுகொலைகளை செய்யலாம். 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இப்படியான கடைசி கால பயங்கரவாதம் பற்றிய ஹதீஸ்களை பயான்களிலும், பள்ளிகளிலும், ரேடியோ டிவி களிலும் மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து, கண் முன்னே உலகில் இன்று நடக்கும் நடப்பையும் மூடி மறைத்து, தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் அரசியல் ஆதாயம் தேடவும் இன்று சில தலைவர்கள் முயலுகின்றார்கள். 

எனவே எதிர் காலத்தில் இந்த பயங்கரவாதம் இலங்கையைத் தாக்கினால், வெள்ளம் வருமுன் அணை போடாமல் இலங்கை முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைவர்களே அல்லாஹ்விடம் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஏராளம் எச்சரிக்கை செய்யும் ஹதீஸ்களையும், கண்கூடாக இன்று உலகில் நடக்கும் நடப்புக்கு வஹாபிளே காரணம் என்ற பகிரங்க உண்மையையும் எவருக்கும் பயந்து மறைக்க நாம் தயாரில்லை. 

வஹாபியத்தை மடக்கவென்றே விஷேடமாகப் படித்து வந்து, அத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து, எமது பதவிக்கால மூன்று வருடங்களிலும் (1996, 97, 98) உலகில் நிகரற்ற விதத்தில் எமது ஊரிலும் இலங்கையிலும் நாம் வஹாபியத்தை மடக்கிக்கொண்டு வந்த போது, எமக்கெதிராக சதி செய்து, எமது பதவியைப் பறித்து, எமக்கெதிராக உலகம் காணாத தடைச்சட்டங்களையும் அநியாயங்களையும் செய்து, வஹாபியத்தை எதிர்க்க முடியாத நிலைமையை எமக்கு ஏற்படுத்தயவர்களும் இன்று எமது ஊரிலும் இலங்கையிலும் வஹாபியத்து வேகமாக வளர்வதற்கு காரணம் என்பதையும் எதிர்காலத்தில் தாஇஷ் உருவாக இவர்களே முதற் காரணம் என்பதையும் இங்கே சுட்டிக் காட்டுவது எமது கடமையாகும். 

வஹாபியத்தால் தாஇஷ் உருவாவதை விளக்கும் கார்ட்டூனையும் பாருங்கள். 

Tuesday, November 17, 2015

தேனீரும் கொம்ப்யூட்டரும்கொம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பவர்களின் கண்களை அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் பாதிக்கிறதாம். கொம்ப்யூட்டர் முன் ஒரு தேனீர்க் கோப்பையை வைத்தால் அந்தக் கதிர்களை ஈர்த்தெடுக்கும் சக்தி தேனீருக்கு உண்டாம். இதனால் கண்ணைப் பாதிப்பது ஓரளவு தவிர்க்கப் படுகிறதாம். எனவே அந்தத் தேனீரைக் குடிக்கக் கூடாதாம் என்று ஒரு வைத்திய ஆய்வு கூறுவதாக இப்பத்திரிகை கூறுகிறது. அல்லாஹு அஃலம்.


ISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon

ISIS - தாஇஷை அரபு நாடுகட்கெதிராக வளர்க்கிறது அமெரிக்கா. ஆனால் அது அமெரிக்காவையே பார்த்து முறைக்கிறது. என்றோ ஒரு நாள் வளர்த்த கடா மார்பில் பாயலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்த கார்டூன்


Monday, November 16, 2015

வஹாபியத்தே தாஇஷ்


தரீக்காக்களைப் பின்பற்றுவோரில் இருந்தோ அல்லது மத்ஹபுகளைப் பின்பற்றுவோரில் இருந்தோ மனித இனத்தைக் கொன்று குவிக்கும் ISIS என்ற கொலைகாரக் கும்பலான தாஇஷ் உருவாகவில்லை, மாறாக தவ்ஹீது ஜமாஅத்து, ஸலபி, டீஏ , ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களை உருவாக்கிய வஹாபியத்திலிருந்தே இந்த மனித இனப்படுகொலைக் காரர்களான ISIS உருவானது என்பதை ஒரு வருடத்துக்கு முன்பே நாம் இப்பகுதியில் குறிப்பிட்டோம்.

அந்த உண்மையை இன்று முழு உலக நாடுகளும் அறிந்துள்ளன. உலகின் மிகப்பழமை வாய்ந்த (சாபிஈ இமாம் காலத்தில் உருவாக்கப்பட்ட) எகிப்தில் உள்ள அல் அஸ்ஹரி சர்வகலாசாலையும் கூட இப்போது வஹாபியத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. (1984 இல் எகிப்தில் இருந்த வஹாபி தலைவர் அப்துல்லாஹ் என்பவர் எகிப்து அரசாங்கம் காபிர் என்று பத்வா வெளியிட்டு, அவரை எதிர்த்து அல் அஸ்ஹர் உலமாக்கள் சிலர் அவருடன் விவாதம் நடாத்தியதை நாம் குவைத்தில் வீடியோவில் பார்த்த போதே, இவ்வளவு தூரம் வஹாபியத்தை எகிப்து உலமாக்கள் வளரவிட்டதை எண்ணி கவலைப்பட்டோம். இப்போதே வஹாபியத்தை வேறுடன் களையாவிட்டால் என்றோ ஒரு நாள் எகிப்தில் வஹாபி ஆட்சி வரலாம் என்று அப்போது நான் நண்பர்களிடம் கூறியது அவர்களுக்கு நினைவிருக்கலாம்.

எனினும் எகிப்து உலமாக்கள் வஹாபியத்தை மடக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. எகிப்து உலமாக்களில் ஒருவரான குவைத் மஃஹதுத்தீன் அதிபர் உஸ்தாது முகம்மது சம்சுத்தீன், அப்துல் அஸீஸ் ஹாசிம் போன்றோரும்கூட, எகிப்தில் அரசாங்கத்துடன் ஒட்டியிருந்த உலமாக்களின் கவனயீனத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டனர்.

இதன் காரணமாகத்தான் நாம் 1984 களிலேயே கூறிய விதம் எகிப்தில் வஹாபி இயக்கங்கள் தீவிரமாக வளர்ந்து, வஹாபி இயக்கமான இக்வானுல் முஸ்லிமீனைச் சேர்ந்த முர்ஸி எகிப்தில் ஆட்சியைக் கைப்பற்றி அல் அஸ்ஹரையும் வஹாபி ஸ்தாபனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் அதிபர் ஸிஸி ஆட்சிப்பொறுப்பை ஏற்று வஹாபி தலைவர்களை கைது செய்தார். ஆனால் ஸிஸிக்கு எதிராக வஹாபிகளின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

எப்படியோ காலம் கடந்தாவது எகிப்து உலமாக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் இப்போது வஹாபி இயக்கங்களால் தான் தாஇஷ் உருவானது, என்பதை அறிந்து, இப்போது அதற்கெதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் எகிப்தின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான இப்ராஹீம் ஈஸா என்பவர் கூறுகிறார், தாஇஷ் பிறந்தது வஹாபியத்தில் இருந்து தான் என்பதாக.
தாஇஷின் கொலை வெறி அரபு நாடுகட்கு மட்டும் மட்டுப்பட்டதல்ல, முழு உலகையும் தாக்கக் கூடியது என்பதை 13.11.2015 வெள்ளிக்கிழமை பிரான்ஸில் அது நடாத்திய படுகொலைகள் புலப்படுத்துகின்றன.

இலங்கையில் இருந்தும் சில வஹாபிகள் ஸிரியாவில் ISIS இயக்கத்தில் சேர்ந்திருந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம்.

இலங்கையில் உள்ள வஹாபிகளும் தலைவர் என்ன கூறுகிறாரோ அது தான் குர்ஆன் ஹதீஸ் என்று நம்புகிறார்கள். உண்மையான உலமாக்களிடம் போய்க்கேட்பதில்லை, உண்மையைத் தேடிப் பார்ப்பதில்லை. தலைவர் என்ன சொன்னாலும் கண்மூடிப் பின்பற்றுகிறார்கள் என்பதை இன்று நாம் கண்கூடாக காண்கின்றோம். எனவே என்றோ ஒரு நாள் இலங்கையில் IS அட்டூழியங்கள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது.

Sunday, November 8, 2015

76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது!

அல்லாஹ்வுடைய கிருபையால் இன்று ஞாயிற்றுக் கிழமை (8.11.2015) கஹட்டோவிட்ட அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யா ஆசூரா மன்ஸிலில் 76வது வருட ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.

இக்கந்தூரிக்கு வருகை தந்தும், உழைப்பால் உதவியும், பொருளுதவி செய்தும், மௌலிதுகள் ஓதியும், சமையல் வேலைகள் செய்தும், இதற்காக பிரார்த்தித்தும், நார்சா உணவு பரிமாறியும், மின்சார வசதிகள் செய்தும், நீர் வசதிகள் வழங்கியும், கணக்குகள் எழுதியும், ஊடகத் தொடர்புகள் வழங்கியும், வெந்தேசி போட்டும், களறி முடிந்த பின்னர் சுத்தம் செய்யும் வேலைகள் செய்தும் இவ்வாறு சகல விதங்களிலும் உதவி ஒத்தாசைகள் செய்த, பிரசன்னமான, வெளிநாடுகளில் தொழில் புரியும் அத்தனை முஹிப்பீன்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் நல்ல நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி, உடல் ஆரோக்கியத்தைத் தந்து, பொருளாதாரத்தில் பரக்கத்தை தந்து, ஹிதாயத்தில் உறுதியாக வாழவைத்து, ஈமானை அதிகரித்து, தக்வாவில் உயர்ந்த பதவிகளை அவர்களுக்கும் எமக்கும் தருமாறு ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் அதிகமாக துஆக் கேட்கின்றோம். ஆமீன்.

Sunday, November 1, 2015

இராக்கில் தங்க மலை! சீஆ - வஹாபி போட்டி?

ஹஸ்ரத் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூய வெண்ணிற ஆடை அணிந்து வந்து,

ரஸூலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் நேருக்கு நேர் நெருங்கி அமர்ந்து,
இஸ்லாம் என்றால் என்ன?
ஈமான் என்றால் என்ன?
இஹ்ஸான் என்றால் என்ன?
உலக முடிவு நாள் எப்போது வரும்?
என்று நான்கு கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடையளித்த விதம், ஹதீஸ் கிரந்தங்களில் ஆரம்பப் பகுதியில் பதியப்பட்டுள்ளன.
எனவே மார்க்கத்துடைய நம்பிக்கை, சட்டதிட்டங்கள் என்ற அதில் கூறப்பட்ட மூன்று அம்சங்களும் ஸஹாபாக்களின் காலத்திலேயே தெளிவாக விளக்கப்பட்டு விட்டன. இமாம்கள் அவற்றை கிதாபுகளில் எழுதிப் பாதுகாத்து தந்துள்ளார்கள்.


ஆனால் அந்த ஹதீஸில் கூறப்பட்ட உலக முடிவு சம்பந்தமான நான்காவது விடயம் சம்பந்தப்பட்ட நூற்றுக் கணக்கான அடையாளங்கள் காலத்துக்கு காலம் வெளியாகி, நடந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான ஹதீஸுகளில் முன்னறிவித்தல் செய்யப்பட்ட தீய பயங்கரமான விடயங்கள் எல்லாம் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன.

மார்க்கத்தின் இந்த நான்காவது விடயம் பற்றி பல இமாம்களும் பல கிதாபுகளில் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.


யெமனைச் சேர்ந்த அஸ்ஸய்யித் அபூபக்கர்  அல் மஷ்ஹூர் என்ற சம கால அறிஞர் கடைசிகால பித்னாக்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இம்ரான் ஹுஸைன் போன்ற இன்னும் பல அறிஞர்களும் உலக முடிவின் அடையாளங்கள் பற்றிய ஹதீஸ்களை ஆராய்ந்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாமும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நூற்றுக்கு மேற்பட்ட ஏராளமான ஹதீஸ் ஆதாரங்களை சேகரித்துள்ளோம். ஆனால் யார் ஆராய்ந்தாலும் இத்துறை ஆய்வின் உண்மைத் தன்மைகள் அந்த அடையாளங்கள் வெளியான பின்னரே நிரூபிக்கப்படக் கூடியதாக அமைந்துள்ளன.

அவற்றில் ஒன்று தான், இங்கே கூறப்படுகின்ற ஹதீஸும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்ற இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் இன்னும் பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

عن أبي هريرة أن رسول الله {صلى الله عليه وسلم} قال  :
لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل مائة تسعة ٌ وتسعون ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو ومن حديث روح بن القاسم عن سهيل كذلك بنحوه وزاد فقال إن رأيته فلا تقربنه

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
" ' புராத் ' ( இராக்கில் உள்ள யுபிரட்டீஸ் என்ற நதி ) யில் ஒரு தங்க மலை வெளியாகும் வரை உலக முடிவு ஏற்படாது. அதனை எடுப்பதற்காக மனிதர்கள் யுத்தத்தில் ஈடுபடுவார்கள். அந்த யுத்தத்தில் ஈடுபடுவோரில் ஒவ்வொரு நூறு பேரிலும் 99 பேர் கொலை செய்யப்படுவார்கள். (அந்த யுத்தத்தில் ஈடுபடுவோரில்) ஒவ்வொருவரும் "நான் தப்பிக்க மாட்டேனா"? என்றே கூறுவார்கள். நீங்கள் (அந்த யுத்தத்தைக் கண்டுகொண்டால் அதளவில் நெருங்க வேண்டாம்"

இந்த ஹதீஸில் மூன்று தரப்பினரைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
1-  அந்த தங்கத்தை எடுப்பதற்காக யுத்தம் செய்யும் ஒரு கூட்டம்
2- அதனை எடுப்பதற்காக அக்கூட்டத்தை எதிர்த்து யுத்தம் செய்யும் மற்றக் கூட்டத்தினர்.
3- நீங்கள் அந்த யுத்தத்தில் பங்குபற்ற வேண்டாம் என்று நல்லவர்களைப் பார்த்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் மூன்றாவது கூட்டம்.

சுமார் 1980 களில் நான் இந்த ஹதீஸை கேள்விப்பட்ட காலத்திலிருந்தே, இந்த யுத்தத்தில் பங்குபற்றும் இரண்டு பெரிய சக்திகளும் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். குவைத்தில் பல அறிஞர்களிடம் விசாரித்தேன்.
அமெரிக்காவும் ரஷ்யாவுமா? அமெரிக்காவும் சீனாவுமா? அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுமா? ஐரோப்பாவும் சீனா அல்லது ரஷ்யாவுமா? வஹாபிகளும் சீஆவுமா? இப்படி பல சந்தேகங்கள் எழுந்தன.
அதில் பங்குபற்ற வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது நேர்வழியில் உள்ளவர்களைக் குறித்தே என்பது எவருக்கும் விளங்கக் கூடியதே.
2011 இல் அரபு நாடுகளில் "அரபு வசந்தம்" என்ற பெயரில் , வஹாபி ஆயுதப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை நடைபெறும் சம்பவங்களை உற்று நோக்கினால்,

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த அந்த தங்கமலை யுத்தம் வஹாபிகளுக்கும் சீஆக்களுக்கும் இடையில்தான் நடைபெறப் போகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது. والله أعلم    அல்லாஹ் மிக அறிந்தவன். இப்போதைய மத்திய கிழக்கு களநிலவரம் இப்படிச் சிந்திக்க வைக்கின்றது. இப்போதைய நிலை என்ன ?

ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடுகளான லெபனான், இராக், ஸிரியா என்ற நாடுகளை சீஆ சக்தியான ஈரான் தனது ஆளுகைக்குள் கொண்டவந்து விட்டன. யெமனையும் கைப்பற்ற போர் நடக்கின்றது.
கவாரிஜ் வஹாபி இயக்கங்கள் பெரும்பாலும் சகல அரபு நாடுகளிலும், குறிப்பாக லிபியா, ஸிரியா, இராக், யெமன், நைஜஜிரியா போன்ற நாடுகளில், இக்வான், ISIS, போகொஹராம், நுஸ்ரத் என்ற பல பெயர்களில் அரபு நாடுகளை வஹாபி ஆதிக்கத்துள் கொண்டுவருவதற்காக, உலக வரலாறே கண்டிராத கொடூரமான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமே அரபு நாடுகளில் பெரும் செல்வாக்க செலுத்தி வந்தன. ஆனால் இப்போது, மேற்கத்தைய நாடுகள் எல்லாம் வஹாபிகளுக்கு சார்பாகவும், ரஷ்யாவும் (மறைமகமாக சீனாவும்) சீஆ ஈரானுக்கு சார்பாகவும் யுத்தத்தில் குதித்துள்ளன.

ISIS ஐ எதிர்க்கும் போர்வையில் சில வருடங்களாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ISIS க்கு ஆயுத மற்றும் பண உதவிகள் செய்து அதனை வளர்ப்பதை இதுவரை அவதானித்த சீஆக்களும் ரஷ்யாவும், நிலைமை இப்படிப் போனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவும் வஹாபிகளும் மேலோங்கி விடுவர் என்பதை உணர்ந்து, இப்போது ஸிரியாவில் சீஆ சார்பு அரசாங்கத்துக்கு உதவியாக ரஷ்யா நேரடியாக யுத்தத்தில் இறங்கியுள்ளது.

இத்தனை வருடங்களாக அமெரிக்கா ISIS ஐ தாக்குவதாக பாசாங்கு பண்ணி, அதற்கு விமான மூலம் ஏராளமான ஆயுத உதவிகள் வழங்கி அது வளர்ந்தது. ஆனால் ISIS மற்றும் வஹாபி பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக ரஷ்யா ஸிரியாவில் யுத்தத்தில் இறங்கி ஒரு மாதத்துகுள்ளேயே ஸிரியாவில் பல மாநிலங்களிலிருந்து வஹாபி பயங்கரவாதிகளை அது விரட்டியுள்ளது. எனவே மற்ற அரபு நாடுகளும் வஹாபி தீவிரவாதத்திலிருந்து தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ரஷ்யாவையே நம்ப முன்வந்துள்ளன. எகிப்து ஏற்கனவே ரஷ்யா சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்தியுள்ளன. ஸவூதி அதிகாரிகளும் ரஷ்யாவுக்கு சென்று வந்தனர். இவ்வார அளவில் குவைத் மன்னரும் ரஷ்யா செல்லவிருப்பதாக செய்தி.

இப்போது சீஆ ஆதிக்கத்தில் உள்ள இராக்கும் ரஷ்யா தனது நாட்டில் நேரடியாகத் தலையிட்டு, வஹ்ஹாபி மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்கும்படி கோரியுள்ளது.
இவற்றிலிருந்து விளங்குவது என்ன? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த இராக் தங்கமலை யுத்தம் நெருங்கிக் கொண்டு வருகின்றது. வஹாபிகளும் சீஆக்களும் தான் அமெரிக்க ரஷ்ய உதவியுடன் யுத்தத்தில் மோதப் போகின்றன  والله أعلم
ஸஹாபாக்களை இழிவு பண்ணும் சீஆக்களும் , அல்லாஹ்வுக்கு உருவ வழிபாடு செய்து, ரஸூலுல்லாஹ்வையும் அவ்லியாக்களையும் (அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. அவர்கள் வெறும் மையித்து தான், பார்க்க, பேச, கேட்க முடியாதவர்கள் தான் என்று) அவர்களை இழிவு பண்ணும் வஹ்ஹாபிகளும் துன்யாவுக்காக யுத்தம் செய்ய தயாராகிறார்கள். ஆங்காங்கே அவர்களுக்கிடையில் யுத்தம் சிறிது சிறிதாக ஆரம்பித்தும் விட்டது.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெரியளவிலான யுத்தம் ஏற்படும் சாத்தியங்கள் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டாலும்கூட, இஸ்லாமிய உலகில் மிகப் பெரிய அளவில் இரண்டு துருவங்களாக நீறு பூத்த நெருப்பாக வெடிக்க காத்திருக்கும் எரிமலைகளாக சீஆக்களும் வஹாபிகளும் இருந்து வருகின்றனர். எனவே என்றோ ஒரு நாள் முஸ்லிம்களில் இரண்டு பெரிய சக்திகள் மாபெரும் யுத்தமொன்றில் ஈடுபடுவதென்றால் அது சீஆக்களும் வஹாபிகளும் தான் என்பதை சமகால முறுகல் நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆயின் "நீங்கள் அந்த யுத்தத்தில் பங்கு பற்ற வேண்டாம்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்புக்கட்டளையிட்ட கூட்டம் , ரஸூலுல்லாஹ்வின் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றும் அந்த நேர்வழி பெற்ற கூட்டம், ரஸூலுல்லாஹ் அவர்கள் விரும்பும் மூன்றவது ஒரு கூட்டம் இருக்க வேண்டமல்லவா? அவர்கள் யார்?

ஆம், சீஆக்களையும் வஹாபி இயக்கங்களையும் விட்டால் உலகில் எஞ்சி நிற்கும் ஒரே இஸ்லாமிய கூட்டம் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கூட்டம் மட்டுமே என்பதில் எமக்கோ அந்த இரண்டு கூட்டத்தார்களுக்கோ மத்தியில் எந்தக் கருத்து வேறு பாடும் இல்லை.

ஆம், அவர்கள் தான் தரீக்கா, மத்ஹபுகளைப் பின்பற்றி, 1400 வருடங்களாக தொடராக ஒரே இஸ்லாத்தில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து கூட்டம். அதனால் தான் இன்றைய மத்திய கிழக்கு யுத்ததில் வஹாபி பக்கமும் சேராமல் , சீஆப் பக்கமும் சேராமல் தன் பாட்டுக்கு இஸ்லாத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாடு பிடிக்கும் ஆசை , தங்கமலை ஆசை இல்லாமல் இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அப்படியான தரீக்கா மாத்ஹபு தூய இஸ்லாத்தில் எம்மை பாதுகாத்த ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்,  அல்ஹம்துலில்லாஹ்.