Thursday, May 21, 2015

எதிரியின் எதிரி கூட்டாளி

எதிரியின் எதிரி கூட்டாளி கொள்கையில் முஸ்லிம் நாடுகள் நாடுகள் :-

1- 
ஈஸா நபியை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்.
ஈஸா நபியை யூதர்கள் வெறுக்கிறார்கள்.
ஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கு, ஈஸா நபியை வெறுக்கும் இஸ்ரேலுக்கு உதவுகின்றன, ஈஸா நபியை பின்பற்றும் (?) அமெரிக்காவும் பிரிட்டனும். எப்படி இருக்கிறது இந்த அரசியல் ?

இதே தத்துவம் தான் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும்.

இதே தத்துவம் தான் ஈரான் ஹமாஸ் கூட்டும்

2- 
ஈரான் சீஆ நாடு. வஹாபியத்தை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது.

எகிப்து ஸுன்னி நாடு.

மத்திய கிழக்கில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிப்பது ஈரானின் திட்டம்.

இதற்காக, தனது பகைமை இயக்கமான இக்வான், ஹமாஸ் ஆகியவற்றுக்கு ஈரான் பூரண ஆதரவளிக்கிறது எப்படியாவது ஸுன்னி எகிப்தை அழிப்பதற்கு.

3- 
ஈரான் சீஆ நாடு.

ஸிரியா (இப்போது) சீஆ ஆதிக்க நாடு. இரு நாடுகளும் நட்பு நாடுகள்.

ஆனால், ஸிரியாவில் சீஆ ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஹமாஸுடன் (ஸிரியாவுக்கு வெளியில்) ஈரான் நட்பு கொண்டாடுகின்றது.

4- 
துருக்கி வஹாபி இக்வான் சார்பு நாடு.

யெமன் ஸுன்னி நாடு.

ஆனால் யெமனை அழிக்கும் இக்வானுடன் துருக்கி (வெளியில்) நட்பு. (இது யெமன் யத்தத்துக்கு முந்தைய நிலை)

5- 
சீஆ சார்பு ஸிரியாவை அழிக்க ISISக்கு (தாஇஷுக்கு) ஸவூதி உதவி செய்கிறது.

எகிப்தை அழிக்கும் அதே தாஇஷை அழிக்க, ஸிஸிக்கு (எகிப்துக்கு) ஸவூதி உதவி செய்கிறது. காரணம் தாஇஷின் ஆபத்து ஸவூதிக்கு வரும் போது, எகிப்தின் உதவியைக் கோரி, தமது மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நோக்கம்.

"அல்லாஹ்வுக்காக" என்ற இக்லாஸ் இப்போது மருந்துக்கும் இல்லை !

No comments:

Post a Comment