Tuesday, June 2, 2015

இக்வான்களின் உண்மை உருவம்

பயங்கரவாத இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம்

எகிப்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தனது பயங்கரவாத முகத்தை மூட, புன்சிரிப்பு, ஆராய்ச்சி, விசேச வகுப்புக்கள், பண உதவி இப்படி எத்தனையோ உபாயங்களைக் கையாண்டு, ஹக்கான இஸ்லாத்தின் ஹக்கான இமாம்கள் காட்டித்தந்த இஸ்லாமிய அகீதா என்னவென்று தெரியாதவர்களை மூளைச்சலவை செய்து தமது இயக்கத்தில் சேர்ப்பதில் இரவு பகலாக முயன்று வருகிறார்கள்.

உண்மையில் இக்வானுல் முஸ்லிமீன் ஹக்கான ஒரு இஸ்லாமிய அமைப்புமல்ல, ஹக்கான இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாத்தை உலகெலாம் பரப்ப கையாண்ட ஆதார பலம், ஈமான் சக்தி (ஆத்மிக சக்தி) என்ற வழியில் இயங்கும் ஒரு சாத்வீக இயக்கமும் அல்ல, மாறாக அது ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதனை உலக விவகாரங்களை (அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து) ஆராய்பவர்கள் அறிவார்கள்.

எகிப்து இக்வானுல் முஸ்லிமூன் பயங்கரவாதிகள் கடந்த 70 வருடங்களாக செய்துவரும் சில பயங்கரவாத செயல்களை உலகின் மிகப்பிரபலமான அரபு பத்திரிகையான அல் அஹ்ராம் வருடவாரியாக பட்டியல் போட்டுக் கூறுகின்றது.


இது போன்ற பல நூறு விடயங்களை தமிழில் மொழி பெயர்த்து தரத்தேவையான வாய்ப்பு வசதிகளை பள்ளத்தக்கியா சதிகாரர்கள் தடை செய்துள்ளதால், தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த மௌலவிமார்கள் மூலம் இதனை மொழிபெயர்த்து அறிந்துகொள்ளும்படி பணிவாய் வேண்டுகிறோம்.

அல்லாஹு தஆலா எமக்கு தந்துள்ளவற்றை பள்ளத்தக்கியா நிர்வாகத்துக்கு அறியக்கூடிய பகுத்தறிவு இருந்தால், அகில இலங்கை ரீதியிலான ஸுன்னத்து வல்ஜமாஅத்து பத்திரிகை நடாத்தவும், இண்டநெட் மூலம் அறிவுப் புரட்சி செய்யவும், வானொலி டீவி மூலம் சகல வீடுகளிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கை பரவவும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வருடமும் உலகப்பிரபலமான பேரறிஞர்களை ஒன்று திரட்டி விவாதங்கள் நடாத்தி வஹாபியத்தை மடக்கவும் தேவையான பல உதவியாளர்களைத் தந்து பொருளுதவி ஒத்தாசை செய்திருப்பர். என்ன செய்ய , கழுதை அறியுமா கரும்பின் ருசி !!!!!!

No comments:

Post a Comment