Friday, May 8, 2015

இஸ்லாம் விரோத வஹாபி அரசியல்

வஹாபி இயக்கங்களின் மார்க்க அக்கீதா (கொள்கை) இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதை முஸ்லிம்கள் அறிவார்கள். அதே போன்று இபாதத்துகள் சிலதும் இஸ்லாத்தில் இல்லாதவை என்பதை அறீவார்கள்.

ஆனால் மத்திய கிழக்கு அரசியலில் வஹாபியத்தின் முனாபிக்கு தனமான இரட்டை வேடத்தையும், இஸ்லாத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது என்பதையும் (நாம் அறிந்த வரையில்) இலங்கையில் எமது இந்த Net ஐ தொடராக வாசிப்பவர்கள் மட்டும் தான் அறிந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இதனை விளக்கக் கூடிய பல கட்டுரைகளையும், உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளின் ஆக்கங்களையும், வஹாபி தலைவர்களின் வீடியோக்களையும் கடந்த சில வருடங்களாக நாம் இங்கு பிரசுரித்து வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இப்போது உங்களுக்கு மத்திய கிழக்கு அரசியல் சம்பந்தமாக ஒரு தரவு தருகின்றோம். அதிலிருந்தும், வஹாபியத்து என்பது அரசியலிலும் இஸ்லாத்தின் எதிரியே என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கேள்விகளுக்கு நீங்களே விடை கூறுங்கள் :-
  1. ஈரான் ஒரு தீவிர சீஆ நாடா ?
    (ஆம்)
  2. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த லெபனானில் இப்போது ஈரான் ஆதிக்கமா?
    (ஆம்)
  3. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த ஸிரியா இப்போது ஈரானின் ஆதிக்கத்திலா?
    (ஆம்)
  4. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த இராக்கில் இப்போது ஈரான் சீஆ ஆதிக்கமா?
    (ஆம்)
  5. ஈரானின் திவிர சீஆக் கொள்கையைப் பின்பற்றும் ஹோஸிகள் என்ற சீஆக்கள் வெறும் இரண்டே வீதம் (2%) உள்ள முற்று முழுதாக ஸுன்னி முஸ்லிம் நாடான யெமனைக் கைப்பற்ற இப்போது ஈரான் சகல உதவிகளும் செய்து, 10 அரபு நாடுகளால் சுமார் ஒரு மாத விமானத்தாக்குதலாலும் முறியடிக்க முடியாத அளவு ஹோஸி சீஆக்களை ஆயுத தாரிகளாக்கியுள்ளதா ஈரான் ?
    (ஆம்)
  6. முற்று முழுதாக அரபு நாடுகளுக்குச் சொந்தமான 'பாப் அல் மந்தப் ' என்ற கடல் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட அத்து மீறி போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதா ஈரான் ?
    (ஆம்)
  7. ஆக இப்படியெல்லாம் ஈரான் ஸுன்னி அரபு நாடுகளை ஆக்கிரமித்து தனது சீஆ ஆதிக்கத்தை அரபுலகில் பரப்ப பகீரதப் பிரயத்தனம் எடுக்கும் ஈரான்,
    எகிப்தில் ஸிஸியின் ஆட்சிக்கு எதிராகவும் (மக்கள் புரட்சியாலும், இராணுவ உதவியாலும்) பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் எகிப்து ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக செயல் படுகின்றது என்பதையும், எகிப்தின் சினாயப்பகுதியில் ஸிஸியின் அரசாங்கத்தை கவிழக்கப் போராடும் இக்வானுல் முஸ்லிமீன் சார்பு ஹமாஸ் திவிரவாதிகளுக்கு ஈரான் சகல உதவிகளும் செய்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்களா? (எமது Net ஐ தொடர்ந்து வாசிப்பவர்களும், உலகப்பிரசித்தமான பத்திரிகைகளை வாசிப்பவர்களும் கூறும் விடை :
    (ஆம்)
  8. ஆயின், அரபுலகில் பல பிரதான நாடுகளை விழுங்கி ஏப்பம் விட்டதும், யெமனையும் விழுங்க போராடும் ஈரானுக்கு நனறாகத் தெரியும் : எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன்களுக்கு உதவி செய்தால் தான், அங்கு ஸுன்னி இஸ்லாத்தை அழிக்க முடியும், தனது சீஆக் கொள்கையை பரப்ப முடியும் என்பது தெளிவாகிறது அல்லவா?

    எனவே இக்வானுல் முஸ்லிமீனின் "இஸ்லாமிய அரசாங்கம்" , "இஸ்லாமிய ஆராய்ச்சி" என்பதெல்லாம் போலி வேசம் என்பதும்,

    ஈரானுக்கு எகிப்தை தாரைவார்த்துக் கொடுத்தாவது தனது கட்சி ஆடசியில் அமர வேண்டும் என்பதே இக்வான் வஹாபி தலைவர்களின் அரசியல் நாடகம் என்பதும் புரிகிறதா?
    (ஆம்) என்று கூறுவதும், (இல்லை) என்று கூறுவதும் உங்கள் சிந்தனா சக்தியைப் பொறுத்த விடயம் !

No comments:

Post a Comment