Friday, February 12, 2016

வழிகேடுகளின் ஆரம்பம் 17.10.1999

1-இலங்கையில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாள் 17.10. 1999.
2-வஹாபியத்தின் வேகமான வளர்ச்சிக்கு அடிக்கல் வைக்கப்பட்ட நாள் நாள் 17.10. 1999.
3-தகுதியில்லாதவர்களைக் கொண்டு BMICH இல் பகிரங்க விவாதம் நடாத்தி, அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் படுதோழ்வி யடைந்து, இலங்கை வஹாபிகளுக்கு புத்துயிர் கிடைத்து, இந்தியாவில் இருந்த PJ இலங்கை வந்து ஊரூராக  பேயாட்டம் ஆட அடிக்கல் வைக்கப்பட்ட நாள் 17.10. 1999.
4-ஏற்கனவே இருந்த சாதாரண வஹாபி பிரச்சாரத்தால் "தரீக்கா சரியா , வஹாபியத்து சரியா"? என்று கலங்கிய நிலையில் மதில் மேல் பூனை மாதிரி இருந்த ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் , "விவாதத்தில் வெற்றி பெறுகின்ற பக்கம் நாம் சேருவோம்" என்று நடுநிலையில் இருந்து , BMICH விவாதத்தில் ஸுன்னி மௌலவிமார்கள் படு தோழ்வி யடைந்ததும் , உடடினடியாக இரவோடிரவாக அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டுவிட்டு வஹாபியத்தில் சேர காரணமாக அமைந்த நாள் 17.10. 1999
5- BMICH  விவாதம் முடிந்து சில வாரங்களில் , கஹடோவிடாவிலிருந்து ஏழேட்டுப் பேர் மள்வானை போய், ஒரு முக்கியஸ்தர் வீட்டில் கதைக்கும் போது, கஹடோவிடாவிலிருந்து சென்ற (சதி விவாதத்துக்கு ஆதரவான) ஒருவர் " ஸேர், விவாதத்தில் எங்கட ஆட்களை ஓடோட விரட்டினாங்க " என்று கூறிய மறுகணமே , அந்த முக்கியஸ்தர்  கூறினார் , "இல்லையில்லை, எங்கடவங்களை காமரைக்குள்ள போட்டு பூட்டி வெச்சிக்கொண்டு அடிச்ச" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரே பார்க்கலாம் !!! அரபு பழமொழியொன்று கூறுகிறது  : إنقلب السحر على الساحر  ( சூனியம் செய்தவருக்கே சூனியம் திரும்பியதாம்). நாம் சவால் விட்ட விவாதத்தக்கு வராமல் 3 வருடங்களாக ஓடி ஒழித்துக் கொண்டிருந்த வஹாபித் தலைவர்கள், தக்கியாவில் எமது பதவியைப் பறித்து ஓரங்கட்டிவிட்டு, பவாஹிர் மௌலவியைக் கொண்டுவந்து பள்ளியில் விவாத சவால் விட்ட உடனேயே வஹாபிகள் பள்ளிக்குள் வந்து விவாத சவாலை ஏற்றனர். எவரைக் கொண்டாவது விவாதம் நடாத்தி வஹாபிகளை முறியடித்து விட்டால், எம்மை முற்றாக ஓரங்கட்டலாம் என்ற தற்பெருமையில் அஸ்ஸமீனின் தலைமையில் போலி "தரீக்கா கவுன்ஸில்" அமைத்து விவாதம் நடாத்தினார்கள். விவாதம் சதிகாரருக்கு படு தோழ்வியில் முடிந்தது. அன்றிலிருந்து இலங்கையில் மின்னல் வேகத்தில் வஹாபி வழிகேடு பரவிக்கொண்டு வருவதை அனைவரும் அறிவர். எனவே இலங்கையில் இஸ்லாத்தை அழித்த சாபம் கஹடோவிட  புகாரித் தக்கியா சதிகாரரையே சாரும் என்பது வரலாற்றில் பதிவாகி விட்டது.  لا حول ولا قوة الا بالله
6-அதே போன்று, இப்போது சீஆ வழிகேட்டில் முஸ்லிம்கள் ஏராளம் பேர் சேர்வதற்கு காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.
7-உலமா சபையில் அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களுக்கு இடமில்லாமல் வஹாபிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.
8-கூடிய சீக்கிரம் சீஆக்களும் உலமா சபையில் உள்வாங்கப் படவோ (அல்லது) சீஆக்கள் தனி உலமா சபை அமைக்கவோ காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.
9-ஸுன்னத்து வல்ஜமாஅத்து இமாம்களால் "குப்ரிய்யத்து, ஸந்தக்கத்து" ( மதமாற்றம்) என்று தீர்ப்பளிக்கப்பட்டதும் , "ஈஸா நபியவர்கள் அல்லாஹ்வின் பிள்ளை" என்று கூறும் கிறிஸ்தவ மதம் போன்று, "எல்லாம் அல்லாஹ்விலிருந்தே பிரிந்து வந்தன" , என்றும், "மீண்டும் அல்லாஹ்வுடனேயே அவை சங்கமமாகின்றன" ( "إتحاد"  ) என்றும் கூறும் குப்ரிய்யத்தான "அத்துவித" வழிகேடு இப்போது பலர் பத்தியில் பரவ காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.
10-இப்படி வழிகேடும் குப்ரிய்யத்தும் முஸ்லிம்களிடம் வேகமாகப் பரவி, இஸ்லாம் படிப்படியாக அழிக்கப்படுவதால் அல்லாஹ்வின் கடும் கோபம் ஏற்பட அத்திவாரம் இடப்பட்ட நாள் 17.10. 1999.
11-உண்மையான இஸ்லாம் அழிக்கப்பட்டு, பித்அத்துகள் வளர "இடம் கொடுக்கப்பட்டுள்ளதால்" அல்லாஹ்வின் கோபம் காரணமாக, துவேசக் காபிர்கள் முஸ்லிம்களுக் கெதிராக கிழம்புவதற்கு அத்திவாரம் இடப்பட்ட நாள் 17.10. 1999.
அப்படி அந்த நாளில் என்னதான் பெரிய மாற்றம், தோசம், கேடு நடந்தது என்று கேட்கிறீர்களா ?
நானே விடை கூறினால், நான் மட்டும் தான் கூறுவதாக , 16 வருடங்களுக்கு முன் கஹடோவிடாவில் நடந்த "ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலம், அதை அழித்தொழித்த மாபெரும் சதி" வரலாறு தெரியாதவர்கள் நினைப்பீர்கள். கஹடோவிடாவுக்கு வாருங்கள். ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் உள்ள படித்த, சிந்தனா சக்தியுள்ள அனைவரிடமும் கேட்டுப் பாருங்கள். நான் இங்கே கூறியவை மட்டுமல்ல, இதைவிட அதிகமாக அவர்கள் உங்களுக்கு சொல்லிக் காட்டுவார்கள். لا حول ولا قوة إلا بالله . حسبنا الله ونعم الوكيل .
இந்தச் செய்திகள் எல்லாம் ,"தகுதியில்லாமல் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஆட்களுக்கு" ஜீரணிக்காத செய்திகள் ! அவர்கள் எமக்கெதிராக "அது , இது , அவன், இவன், வழிப்பாடில்லை , அடிக்க வேண்டும் , கொல்ல வேண்டும் " என்றெல்லாம் உளறக்கூடும் . ஒன்று மட்டும் 100 % நிச்சயம் . இது பற்றி பகிரங்க மேடையில் ஆதார பூர்வமாக விவாதிக்க அவர்கள் வரமாட்டார்கள் !! ஆம் , வரவே மாட்டார்கள் !!!      எமக்கு முந்திய காலத்திலும், எமது நிர்வாக மூன்று வருட (1996, 97, 98) காலத்திலும் புகாரித் தக்கியாவின் பெருமையும், மதிப்பும், கௌரவமும் "பலமான மார்க்க ஆதாரம்" என்பதில் தான் தங்கியிருந்தது. இலங்கையில் இருந்த அத்தனை அரபு மத்ரஸாக்களின் தகுதி வாய்ந்த உஸ்தாது மார்களும்கூட, புகாரித் தக்கியாவின் உலமாக்கள் கூறும் "மிகப் பலமான மார்க்க ஆதராத்தின்" முன் சரண் அடைந்தனர். இதனால் செய்குமாரின் புகழ் ஓங்கியது.
இப்போது புகாரித் தக்கியா சதிகாரர்கள் பாவிக்கும் ஓரே ஆயுதம் : "அடி தடி, கொல்லு" என்பது மட்டுமே ! தவறை ஆதார ரிதியாக விமர்சிக்கும்  எவரையும் அடக்கி யொடுக்குவதற்காக, "ரவுடிக் கூட்டம்" ஒன்று சுதந்திரமாக வெளியில் உலாவ விடப்பட்டுள்ளது.
அல்லாஹ் மீது ஷாஹிதாக கூறுகிறேன் : மேலே கூறிய வழிகேடுகள் மட்டுமல்ல, அத்துடன், உண்மையான இஸ்லாத்துக்கு, விரோதமான உலகில் உள்ள எந்தக் கொள்கை என்றாலும், அதனை "தர்க்க ரீதியாக" முறியடிக்கும் ஆற்றலை ரஹ்மானாகிய அல்லாஹ் எமக்குத் தந்துள்ளான்.
இதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் 1996 முதல் 1998 வரையான தக்கியாவில் எமது நிர்வாக காலத்தில், எம்மால் செய்யப்பட்ட எந்த பயானுக்கும் எதிராக எவரும் வாய் திறக்க வில்லை. வஹாபி தலைவர்கள் எல்லாம் எமது விவாத சவாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடி யொழித்தார்கள். என்று எமது பதவி பறிக்கப்பட்டதோ அந்த 17.10.1999 முதல் வஹாபி தலைவர்கள் தக்கியாவை கடுமையாக எதிர்க்கிறார்கள். வஹாபி தலைவர்களின் வாயடக்க எவரும் இல்லை.
தக்கியாவுக்கு வெளியில் இருந்தாவது வஹாபியத்தை மடக்கலாமா என்று நாம் முயன்று பார்த்தோம். வஹாபிகளை விட தக்கியா சதிகாரரே எமக்கு எதிரியாக இருக்கிறார்கள். எமது பயான்களில் பங்குபற்ற விடாமல் தக்கியா இக்வான்களை சதிகாரர்கள் தடுக்கிறார்கள். அது மட்டுமா ? "வஹாபிய்யத்தை எதிர்த்து மடக்க முடியாது" என்று , எமது வஹாபி எதிர்ப்பு பயானையே கிண்டல் பண்ணி, இக்வான்கள் எமக்கு ஆதரவு தருவதை தடுக்கும் நோக்கில், எமக் கெதிராக தக்கியாவிலேயே உளறினான் வேர்விலையில் இருந்து வந்த ஸரூக் என்பவன்.
 
அரபுக் கவிதை யொன்று கூறுகிறது :
وعادة السيف أن يزهو بجوهره   -  ولا يعمل إلا في يد بطل
வாள் இயற்கையிலேயே மின்னிப் பிரகாசிக்கக் கூடியது தான். ஆனால் ஒரு வீரனின் கையிலேயே அன்றி அது வீர வாளாக செயற்பட மாட்டாது.
(எனவே தக்கியா எவ்வளவு தான் சிறந்த ஸ்தாபனம் என்றாலும்கூட, சதிகாரரின் ஆதிக்கத்தில் அது வெற்றிவாகை சூட மாட்டாது.)
இன்னொரு அரபுக் கவிதை கூறுகிறது :
لا يصلح الناس فوضى لا سراة لهم  -  ولا سراة إذا جهالهم سادوا
சமூகத்துக்கு மடையர்கள் தலைமை தாங்கினால், சீர் திருத்தமோ (முன்னேற்றமோ) புகழோ கிடைக்காது.
(எனவே 17.10.1999 முதல் தலைமை தாங்கும் சதிகாரரின் தலைமையில் நிச்சயமாக தக்கியா முன்னேற மாட்டாது. வேண்டுமென்றால், சிங்களவர்களும், கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் கட்டுவது போன்று கட்டிடங்களை விசாலமாக்கலாம். அவர்கள் கொடுப்பது போன்று சாப்பாட்டை ஸஹன் நிறையக் கொடுக்கலாம். அவ்வளவ தான் !!!  எமது மூன்று வருட நிர்வாக காலத்தில் ஏராளம் பேர் தக்கியாவை நோக்கி வந்தார்கள். வஹாபியத்தில் ஊறிய பலரும் வந்தார்கள். இன்று நிலைமை என்ன ? பரம்பரையாக தக்கியாவில் இருந்தவர்களின் பிள்ளைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஸஹன் நிறைய ஆட்டுக்கறி, அப்பிள், தோடங்காவுக்காக மட்டும் ஒரு கூட்டம் வருகிறது. சதிகார மடயர்கள் கோட்டும் தொப்பியும் போட்டு, நல்லவர்கள் போல் நாடகம் நடிக்கிறார்கள்.
சவால் விடுகிறேன் ! "ஒரு வருடத்திற்கு தக்கியாவில் சாப்பாடு இல்லை, வணக்கமும் பயானும் மட்டும் தான்" என்று செய்து காட்டட்டும். இப்போது கட்டும் பில்டிங் அல்ல, ஏற்கனவே இருக்கும் பில்டிங்கில் முக்கால் பகுதி இடம் காலியாகி வீடும். சவாலை ஏற்பார்களா? இல்லை, பல ஊர்களிலும் உள்ள "ரவுடிகளை" ஏவி விடுவார்களா? ) حسبنا الله ونعم الوكيل

No comments:

Post a Comment