18.11.2014
அரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன?
இன்று உலகில் மூன்று விதமான முஸ்லிம்களின் அரசியல் சக்திகள் செயல்படுகின்றன.
முதலாவது சக்தி :-
ரஸூலுல்லாஹ்வின்
காலம் முதல் இன்று வரை 1400 வருடங்களாக தொடராகவும், குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள், ஆத்மீக உயர்வுக்கான தரீக்காக்கள் ஆகிய அத்தனையும் இஸ்னாத் என்ற நம்பிக்கைத் தொடர் வரிசையின்படி வருகின்ற இஸ்லாம். இந்த இஸ்லாம் தான் உலகின் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் மிக அதிகம் பேர் பின்பற்றும் உண்மையான ஸுன்னத்து வல் ஜமாஅத்து இஸ்லாம் ஆகும்.
இரண்டாவது சக்தி :-
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்துக்குப் பின்னர் தோன்றியதும், ஏராளமான ஸஹபாக்களை குறை கூறுபவர்களுமான வழிகெட்ட ஒரு பிரிவினரான சீஆக்களின் சக்தி. இவர்கள் ஈரானைத் தலைமையகமாகக் கொண்டு, இராக், ஸிரியா, இன்னும் பல அரபு நாடுகளிலும் செல்வாக்குடன் செயல்படுகின்றார்கள்.
மூன்றாவது சக்தி :-
ரஸூலுல்லாஹ்வையே
எதிர்த்ததும்,
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் அவர்களின் அணியை விட்டும் பிரிந்து சென்று இராக்கிலுள்ள ஹரூரா என்னுமிடத்தில் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்த்து போராடிய கவாரிஜ்கள்.
ரஸூலுல்லாஹ்வை இழிவாக மதித்தல், ஸஹாபாக்களை திட்டுதல், அவ்லியாக்களை எதிர்த்தல், குர்ஆனுக்கு சொந்தக் கருத்து கூறி குர்ஆனை திரித்தல், பல்லாயிரம் ஹதீஸுகளை நிராகரித்தல், உலக முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள், காபிர்கள் என்று கூறி முஸ்லிம்களை கொலை செய்தல் ஆகிய கொள்கைகள் இந்த கவாரிஜ்களின் ஆரம்பகாலம் முதல் உள்ள கொள்கைகளாகும்.
இந்த கவாரிஜ்கள் காலத்துக்கு காலம் தோன்றி, முஸ்லிம் சமூகத்தில் பித்னாக்களை உண்டுபண்ணுவார்கள் என்றும், இறுதி கவாரிஜ் கடைசி காலத்தில் வெளியாகும் தஜ்ஜாலுடன் இணைந்து வருவார்கள் என்றும், இந்த கவாரிஜ்களின் தொழுகை முதலிய எந்த அமலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், வில்லிலிருந்து அம்பு போகும் வேகத்தில் இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவார்கள் என்றும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவாறு, இப்னு தைமியா இந்த கவாரிஜ்களின் சில கொள்கைகளைப் பரப்ப முயன்ற போது, அக்கால இமாம்கள் இப்னு தைமியாவின் வழிகேடுகளை எதிரத்து முறியடித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்தார்கள்.
நஜ்தில் சைத்தானின் கொம்பு தோன்றும் என்று ஸவூதியில் ரியாதில் உள்ள நஜ்தைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற்கிணங்க, பின்னர் இந்த கவாரிஜ்கள் நஜ்தில் தோன்றி, முந்நூறு வருடங்களாக உலக முஸ்லிம்களை வழிகெடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப பெயர் அடிப்படையில் இவர்களை வஹாபிகள் என்றும், பிரதான வழிகேட்டின் அடிப்படையில் இவர்களை “தக்பீரிகள்” (تكفيري)
(அதாவது உலக முஸ்லிம்களை காபிர் என்று கூறுவோர்) என்றும், ஹதீஸில் வந்த அடிப்படையில் “கவாரிஜ்கள்” என்றும் உலக முஸ்லிம்கள் இவர்களை அடையாளம் காண்கிறார்கள்.
இப்போது அரபு நாடுகளில் பித்னாக்களையும், வழிகேடுகளையும், கொடூரமான படுகொலைகளையும் செய்து, முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தி, இஸ்ரேல் வளர்வதற்கு உதவியாக இயங்கும் இந்த கவாரிஜ் இயக்கங்களில் மிக முக்கியமான கிளைகள் இரண்டாகும். ஒன்று இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம், மற்றது தாஇஷ் (ISIS) என்ற இயக்கம். இவற்றின் கிளைகளாகவும் ஏராளமான இயக்கங்கள் வெவ்வேறு தலைமைகளில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
இங்கு பிரதானமாக நாம் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால், அரபு நாடுகளில் இன்று இரத்த வெறி பிடித்து கோரத் தாண்டவமாடும் இந்த கவாரிஜ் இயக்கங்களைப் பற்றியும், உண்மையான இஸ்லாத்தைப் பாகாப்பதற்காக உண்மையாகப் போராடும் உண்மை முஸ்லிம்கள் யார் என்பதைப் பற்றியும் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வதற்கு உதவியாக எந்த ஊடகமும் இல்லை என்ற கசப்பான உண்மையாகும்.
உண்மையான ஸுன்னத்து வல்ஜமாஅத்தைப் பாதுகாப்பதற்காக போராடும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியை “ராணுவ ஆட்சி, அமெரிக்க ஆதரவு" என்றும், மேற்கு நாடுகள் உருவாக்கிய கவாரிஜ் இக்வானுல் முஸ்லிமீனையும் தாஇஷையும் (ISIS) தவ்ஹீதுக்காக
போராடும் இயக்கங்கள் என்றும் தலைகீழாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்களையே இலங்கையில் காண முடியும்.
கவாரிஜ்களைப் பற்றியும் கடைசிகால பித்னாக்கள் பற்றியும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பல நூறு ஹதீஸ்களை இந்த ஊடகங்கள் அறியவில்லையா? அல்லது, “அல்லாஹ்வும் ரஸூலும் எதுவும் கூறிவிட்டுப் போகட்டும், நாம் எமது இயக்கங்களின் தலைவர்களையே பின்பற்றுவோம்” என்ற பிடிவாதமா? அல்லாஹ் தான் நன்கு அறிந்தவன்.
தரீக்காக்களை பின்பற்றிக்கொண்டு, அகீதாவில் உறுதியான ஏராளம் ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களுடன் நாம் பேசிய போது, அவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டு அரசியலில் கவாரிஜ் வஹாபிகளாக இருப்பதையே காண முடிகின்றது.
காரணம் என்ன? ஸுன்னத்து வல்ஜமாஅத்து சமூகத்தில் உருப்படியான ஒரு ஊடகம் (பத்திரிகை) இல்லாமையே காரணம். வஹாபியத்து என்பது இஸ்லாம் அல்ல என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உறுதியான ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த ஒரேயொரு ‘வெற்றி’ மாத பத்திரிகையையும் சதிகார அநியாயக் காரர்கள் மூடிவிட்டார்கள்.
இப்போதைக்கு மத்திய கிழக்கு விவகாரங்களை ஓரளவாவது ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கோணத்தில் அறிய விரும்புபவர்கள் எமது இந்த வெப்ஸைட் மூலமாகவே அறிய முடியும். வேறும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஊடகங்கள் இருப்பின் அறிவித்தால் இன்ஷா அல்லாஹ் எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும்.
இப்போதைக்கு மத்திய கிழக்கு விவகாரங்களை ஓரளவாவது ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கோணத்தில் அறிய விரும்புபவர்கள் எமது இந்த வெப்ஸைட் மூலமாகவே அறிய முடியும். வேறும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஊடகங்கள் இருப்பின் அறிவித்தால் இன்ஷா அல்லாஹ் எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும்.
No comments:
Post a Comment