இன்று தோன்றிய வஹாபி ISIS பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு !
(குறிப்பு:- உலக முஸ்லிம்களை "முஷ்ரிக்கு, காபிர்" என்று கூறுவதும், அப்படியான முஷ்ரிக்குகளை (?) கொலை செய்ய வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுவதாக கூறுவதும், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்த்து அழிக்க வேண்டும் என்பதும் வஹாபிகளினதும் ISIS இனதும் கொள்கை என்பதை நீங்கள் அறிவீர்கள், முழு உலகும் அறியும்!)
ஸிரியாவிலும் இராக்கிலும் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், நபிமார்கள் ஸஹாபாக்கள். அவ்லியாக்களின் கப்ருகளையும், மஸ்ஜிதுகளையும் குண்டு வைத்து தகர்த்துக் கொண்டும் இருக்கும் தாஇஷ் (داعش) ISIS மற்றும் 'ஜப்ஹதுந் நுஸ்ரா' (جبهة النصرة) என்ற அதி பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி (அதாவது உலக முஸ்லிம்களை காபிர் என்றும், சிர்க்கு வைப்போர் என்றும் கூறும்) இயக்கங்கள் யாரும் எதிர்பாராத விதமாக திடுதிப்பென்று தோன்ற வில்லை. 1400 வருடங்களுக்கு முன்னரே, நான்காவது கலீபா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வஹாபிகளைப் பற்றி கூறி வைத்தார்கள். இதோ அவர்கள் கூறுவது:-
عن علي قال : إذا رأيتم الرايات السود فالزموا الارض ولا تحركوا أيديكم ولا أرجلكم ! ثم يظهر قوم ضعفاء لا يوبه لهم ، قلوبهم كزبر الحديد ، هم أصحاب الدولة ، لا يفون بعهد ولا ميثاق ، يدعون إلى الحق وليسوا من أهله ، أسماؤهم الكنى ونسبتهم القرى ، وشعورهم مرخاة كشعور النساء حتى يختلفوا فيها بينهم ثم يؤتي الله الحق من يشاء (31530)
கறுப்புக் கொடியுடையவர்களை நீங்கள் கண்டால், உங்களுடைய கைகளையோ கால்களையோ அசைக்காமல் நிலத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (அதாவது அவர்களுடன் சேராமல் வீட்டினுள் இருங்கள்). அப்படி வெளியாகும் (அறிவிலும் ஈமானிலும்) பலவீனமான அவர்களை (உலகில் உள்ள நல்லவர்கள்) யாருமே கணக்கெடுக்க (மதிக்க) மாட்டார்கள். அவர்களின் இதயங்கள் இரும்புத் துண்டு போன்று கல்நெஞ்சராக இருப்பார்கள். அவர்கள் 'தவ்லத்' என்ற வாதத்தை முன்வைப்பவர்கள். (அதாவது அரபியில் தாஇஷ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கள் 'தவ்லதுல் இஸ்லாம்' என்று வரும். இஸ்லாமிய ராச்சியம் என்பது அதன்பொருள்). (அவர்களுடன் பிறர் செய்துகொள்ளும்) எந்தவிதமான உடன்படிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பார்கள். ஆனால் அவர்கள் அ(ந்த சத்தியமார்க்கத்)தை சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் குடும்ப பெயர்களாக (surname) இருக்கும். (isis தலைவனின் பெயர் அபூபக்கர் என்ற குடும்ப பெயர் என்பதை அவதானிக்கவும்). அவர்களின் (பெயருடன் வரும் அடை மொழி = attribution ) ஊர்களின் பெயராக இருக்கும். (உதாரணமாக: isis தலைவனின் பெயர் அபூ பக்கர் பக்தாதீ என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கத்தில் உள்ள சகல தலைவர்களின் பெயர்களும் பக்தாதி, மிஸ்ரி, சாமி என்று ஊர்ப் பெயர்களுடன் இணைந்திருப்பதை அவதானிக்கவும்). அவர்களின் தலை முடி பெண்களின் தலைமுடி போன்று (நீண்டு) அதிக எண்ணெய் தோய்ந்ததாக இருக்கும். அவர்களுக்கிடையில் முரண்பட்டு (பிளவு படுவார்கள்). (கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஸிரியாவில் isis உம் ஜப்ஹதுந் நுஸ்ராவும் சண்டையிட்டு அவர்களிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்). பின்னர் அல்லாஹ் நாடுகிறவர்களுக்கு சத்தியத்தை (அதிகாரத்தை) அல்லாஹ் கொடுப்பான்.
No comments:
Post a Comment