Saturday, October 11, 2014

நூல் ஆய்வு

நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி
இந்தப் புத்தகத்தை நடுநிலை நின்று படித்த பின்னரும் ஒருவர், தவ்ஹித் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, டீ.., ஸலபி முதலிய வஹாபி இயக்கங்களை விட்டும் வெளியேறவில்லை என்றால், அவரின் கல்பு (இதயம்) ஹக்கை (உண்மையான இஸ்லாத்தை) கிரகிக்க முடியாமல் பூட்டு போடப்பட்டுள்ளது என்பதே அர்த்தம். அவரின் சிந்தனா சக்தியை அவர் தனது வஹாபி தலைவருக்கு அடகு வைத்துள்ளார் என்பதே அர்த்தம். அவரிடம் பகுத்தறியும் ஆற்றல் இல்லை என்பதே அர்த்தம். அவர் அவரின் தலைவரின் (இயக்கத்தின்) அடிமையாக இருக்கிறார் என்பதே அர்த்தம்.
ஏனெனில், இப்புத்தகம் ஒரு சில மாத முயற்சியால் வெளிவந்தல்ல. ஒரு சில புத்தகங்களை வாசித்துவிட்டு அதனடிப்படையில் எழுதப்பட்டதுமல்ல. ஒரு நாட்டு நடப்பை பார்த்து எழுதப்பட்டதுமல்ல. மாறாக, வழிகெட்ட, நரகம் போகும் 72 கூட்டங்களும் பிரிந்தது எவ்வாறு ? நேர்வழியில் உள்ள, சுவர்க்கம் போகும் ஒரு கூட்டத்தை எல்லா மனிதர்களும் இலகுவாக இனம் காண்பது எவ்வாறு ? என்ற கேள்விகளுக்கு, குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில், பல நூறு கிதாபுகளை படித்து ஆராய்ந்தன் பலனாக எழுதப்பட்டது இந்நூல்.
இலங்கை உலமாக்கள் மட்டுமல்ல, இந்தியா, பாகிஸ்தான், குவைத், எகிப்து, யெமன், மக்கா, மதீனா, பலஸ்தீன், ஸிரியா, ஜோர்தான், பல ஆபிரிக்க நாடுகள், இந்தோனேசியா, மலேசியா இப்படி முழு உலக நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தரம்மிக்க செய்குமார்கள், கலாநிதிமார்கள், ப்ரொபஸர்மார்கள் ஆகியோருடன் கலந்துறவாடி அவர்களிடம் பெற்ற ஆய்வுகளின் சுருக்கம் இந்நூல்.
பல நூறு கிதாபுகளையும், நூற்றுக்கு மேற்பட்ட உலக அறிஞர்களுடனும், 1970 க்கு முன்பிருந்து, 2013 வரை  சுமார் நாற்பது ( 40 ) வருடகால ஆராய்ச்சியின் பலனாக எழுதப்பட்டதே இந்நூல். எனவே இந்நூலை நல்லெண்ணத்துடன், நடுநிலை நின்று படிப்பதன் மூலம், ஒருவர் சுவர்க்கம் செல்லக்கூடிய உண்மையான இஸ்லாத்தை, இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கை. இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வஹாபி இயக்கங்களில் ஊறிக்கிடந்த பலருடன் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளக்கமளித்த போது, அவர்கள் வஹாபியத்தை விட்டுவிட்டு, பழிய உண்மையான இஸ்லாத்துக்கு மீண்டு வந்தார்கள்.
எங்களுடைய இந்த கஹடோவிடாவிலும் 1996 முதல் 1998 வரையான எமது நிர்வாக காலத்திலும் இந்த அடிப்படையில் அமைந்த எமது மாதாந்த பயான்களின் காரணமாக அல்லாஹ்வின் கிருபையினால் பலர் வஹாபி இயக்கங்களை விட்டுவிட்டு பழைய உண்மையான இஸ்லாத்துக்கு வந்திருப்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் 1999 இல் நிர்வாக ரீதியான தவறு ஏற்பட்டதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை கஹடோவிடாவில் பல நூறு பேர்களும், இலங்கையில் பல இலட்சம் பேர்களும் உண்மையான இஸ்லாத்தை விட்டுவிட்டு, வஹாபி இயக்கங்களில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற மிக வேதனையான செய்தியையும் இவிடத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இத்தனை பேர்களும் நரகவழியான வஹாபி இயக்கங்களுக்கு திரும்புவதற்கு காரணமான நிர்வாக ரிதியான தவறை 1999இல் செய்தவர்களை மறுமையில் இந்த வழிகெட்டவர்களே அல்லாஹ்விடம் குற்றம் சுமத்தி காட்டிக்கொடுக்கும் போது தான் அவர்கள் கைசேதப்படுவார்கள்.
நிர்வாக ரீதியான தவறை விளக்குவது இங்கு எமது நோக்கமல்ல. வஹாபியத்து பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கு எமது நூல் வழிகாட்டும்  விதங்கள் பற்றியும் இப்போது பார்ப்போம்.
அதிகம் பேரும் இஸ்லாத்தை எங்கிருந்து எடுக்க வேண்டும் என்ற முதல் முக்கிய அடிப்படை வேலையை மறந்து, தராவீஹ் இருபதா எட்டா? வஸீலா ஆகுமா? குனூத் ஓதலாமா? கத்தம் கொடுக்கலாமா? நெஞ்சில் தக்பீர் கட்டலாமா போன்ற இஸ்லாத்தில் உள்ளே உள்ள உபரியான சட்டப் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடைக்குப் போக முன்னர் சாமான் வாங்க முயற்சிப்பது போன்றது
     அடிப்படையை விட்டுவிட்டு. கிளைகளைப் பற்றி பேசும் இந்த ஆராய்ச்சியின் விளைவு தான் என்ன? இப்படியான புதிய பித்அத்தான கேள்விகளுக்கு இமாம்களும் உலமாக்களும் முந்நூறு வருடங்களாக பல்லாயிரம் கிதாபுகளில் மிகத் தெளிவான பதில்களை எழுதியுள்ளார்கள். ஆனால் வஹாபியத்து நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு போகிறதே யல்லாமல் அதனை விட்டு விட்டு மக்கள் திரும்பி வரவில்லை. ஏன்?
     உலமாக்கள் எழுதிய பதில்கள் பலவீனமானவையா? இல்லை. மிக உறுதியான, மிகத் தெளிவான ஏராளமான ஆதாரங்களை உலமாக்கள் எழுதியிருக்கிறார்கள். வஹாபி ஆதாரங்களை முறியடிக்கக் கூடிய பலமான ஆதாரங்களை எமது உலமாக்கள் எழுதியிருக்கிறார்கள். இக்கால உலமாக்களின் பயான்களுக்கும் குறைவில்லை.
     அப்படியானால் எங்கோ தவறு நடந்திருக்கிறது. தவறு எங்கே ?
     ஒன்று ஆதார ரீதியான தவறு.
     இரண்டாவது நிர்வாக ரீதியான தவறு
                இங்கே ஆதார ரீதியான தவறை மட்டும் பார்ப்போம்.
     ஓர் ஊரில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தும் வஹாபி இயக்கங்களும் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். ஸுன்னத்து வல்ஜமாஅத்தை சரி எனக்கண்டு சிலர் அதன் தலைவர்களை பின்பற்றுகிறார்கள். வஹாபியத்து சரி எனக்கண்டு சிலர் வஹாபித் தலைவர்களை பின்பற்றுகிறார்கள்.
     இவ்வளவு தானே பிரச்சினை? ஆம் இது தான் பிரச்சினை. இது தான் ஊர்கள் பிளவுபட காரணம். இது தான் சண்டைகளுக்கு காரணம். எப்படியோ ஒவ்வொருவரும்தலைவர்களைபின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இரு சாராருக்கும் அடிப்படை ஆதாரம் தெரியாது. ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர் தாம் பரம்பரையாக இருப்பதால் அதில் இருக்கிறார்கள். அதில் தமக்கு கிடைக்கும் ஆதாரங்களை விட பலமான ஆதாரம் வஹாபியத்தில் கிடைப்பதாக நினைத்து, சிலர் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை விட்டுவிட்டு வஹாபியத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
     இவ்வருடம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் இருப்பவர்கள் சிலர் அடுத்த வருடம் ஒரு வஹாபி இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை குறை கூறிய சில ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர்கள் வேறொரு வஹாபி இயக்கத்தினருடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஒரு வஹாபி இயக்கத்தில் இருந்த சிலர் அடுத்த வருடம் வேறொரு வஹாபி இயக்கத்துக்கு மாறியிருக்கிறார்கள். காரணம் இந்த வஹாபி இயக்கத்தை விட அந்த வஹாபி இயக்கம் கூறும் ஆதாரங்கள் பலமானவையாம் !
     எனவே ஸுன்னத்து வல்ஜமாஅத்து தரீக்காக்களிலோ, அல்லது வஹாபி இயக்கங்களிலோ இருக்கக்கூடிய எவருமே உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றைப் பின்பற்றவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது அல்லவா? அவரவர்களுக்கு அவ்வப்போதுசரிஎனப்படும் தலைவர்களைப் பின்பற்றிக்கொண்டு, தாம் உண்மையான இஸ்லாத்தில் இருப்பதாக கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
     வஹாபிகள் வந்த பின்னர் ஏற்பட்டுள்ள பல்லாயிரம் ஆதாரப் பிரச்சினைகளில், தராவீஹ் இருபதா எட்டா என்ற ஒரேயொரு பிரச்சினைக்கே வஹாபி மௌலவிமாராலும், பொதுமக்களாலும் இறுதி ஆதாரம் கூற முடியாமல் காலத்துக்கு காலம் முரண்பட்ட தீர்ப்பு கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அரபு நாட்டில் யாரோ கூறியதை சும்மா போடோகொப்பியாக மற்றவர்கள் கொப்பியடித்து கூறுகிறார்களே யன்றி, அது சம்பந்தமாக எத்தனை ஹதீஸுகள் வந்துள்ளன, ஒவ்வொரு ஹதீஸின் தரமும் என்ன, அந்த தரத்தை நிர்ணயிப்பதற்காக துணை நிற்கும் ஆதாரங்கள் என்ன, அந்த ஹதீஸ்கள் பற்றி ஸஹாபாக்கள் பலரினதும் பலதரப்பட்ட கருத்துக்கள் என்ன, அந்த ஆதாரங்கள் பற்றி உலகம் போற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களும், சட்ட மாமேதைகளான இமாம்களும் கூறுவதென்ன, ஹதீஸ்களின் தர அடிப்படையில் உள்ள கருத்து முரண்பாடுகளுக்கு உலகம் ஏற்றுக் கொண்ட இமாம்களின் இறுதி தீர்வு என்ன, என்ற ஏராளமான விடயங்களுக்கே தீர்வு கூற முடியாத மௌலவிமாரும், பொது மக்களும் பல்லாயிரக்கணக்கான வஹாபிப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும்?
ஆனால் ஆதாரம் தெரியாவிட்டாலும் பன்னெடுங்காலமாக தொடராக வருகின்ற வழி என்ற அடிப்படையிலும், தாம் புதிதாக ஒன்றை பித்அத்தாக பின்பற்றவில்லை என்ற மனத் திருப்தியிலும் , பிறப்பிலேயே ஸுன்னத்து வல்ஜமாஅத்து தரீக்காக்களில் உள்ளவர்கள் அல்லாஹ்விடத்தில் ஜெயம் பெறக்கூடிய வாய்ப்பினைப் பெறுகிறார்கள். ஆனால் இருக்க வேண்டிய அடிப்படை அறிவு இல்லாததால் இவர்களிலும் பலர் ஒவ்வொரு வருடமும் வஹாபியத்தில் சேர்ந்த வண்ணம் இருப்பதை காண்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.
     எனவே ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் வேகமாக வஹாபி இயக்கங்களில் சேர்ந்து வழிகெட்டுப் போகும் இக்காலத்தில், நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய அடிப்படையான அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமான கடமை அல்லவா?
ஆரம்பத்தில் கூறப்பட்ட இஸ்லாத்தின் உள்ளே உள்ள விடயங்களின் ஆதாரங்களை பாமர மக்களும் சாதாரண மௌலவிமாரும் ஆராய்வதால் என்றுமே உண்மையான இஸ்லாத்தை அவர்களால் அறிய முடியாது. அதற்குத் தேவையான பல்துறை அறிவு பொதுமக்களிடம் அறவேயில்லை. அப்படி இஸ்லாத்தின் ஒவ்வொரு விடயங்களையும் பொதுமக்கள் ஆராயும்படி குர்ஆனிலோ ஸுன்னாவிலோ எங்குமே கூறப்படவுமில்லை. பெரும் மேதைகளின் அறிவு பொது மக்களுக்கும் உண்டு என்று உலக வரலாற்றில் இதுவரை யாருமே கூற வில்லை.
வைத்திய நிபுணர்களின் அறிவை பொது மக்களாலோ சாதாரண வைத்தியராலோ விளங்க முடியுமா? முடியாது. மாபெரும் சட்ட மேதைகள் கூறுவதன் ஆதாரங்களை பாமர மக்களால் விளங்க முடியுமா? கொம்ப்யூட்டர் நிபுணர்களின் செயல்களை சாதாரணமாக கொம்ப்யூட்டர் உபயோகிப்பவரால் ( User ) விளங்க முடியுமா? மின்சாரத் துறை விஞ்ஞானியின் செயல்களை சாதாரணமாக வயரிங் வேலை செய்யக்கூடியவர் விளங்க முடியுமா? வங்கி மனேஜருக்கு விளங்குவதை Gate keeper க்கு விளங்க முடியுமா? முடியாது. ஒவ்வொரு விடயத்துக்கும் அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற தலைவர்களை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பதே நடைமுறை உண்மை. இந்த நடைமுறைக்கு மாறாக எந்த ஒரு மனிதனையும் உலகில் காண முடியாது.
இந்த வகையில் சாதாரண மௌலவிமாரும் பொதுமக்களும் தமது புத்திக்கு ( பகுத்தறிவுக்கு) எட்டக்கூடிய விதத்தில், உண்மையான இஸ்லாத்தை தீர்மானிப்பதற்கு திரு குர்ஆனும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸுகளும் யாராவது தலைவர்களை இனம் காட்டித் தந்துள்ளனவா?
எல்லாவிதமான சட்டங்களையும் குர்ஆனும் ஸுன்னாஹ்வும் கூறியள்ளன என்று அனைவரும் கூறுகிறார்கள். எல்லோரம் அப்படியே தான் நம்பியிருக்கிறோம். அப்படியாயின் ஒரு கேள்வி ! எல்லா விடயங்களையும் கூறும் குர்ஆனும் ஹதீஸும் நேர்வழியை அறிய யாரைப் பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றை மட்டும் கூறாமல் விட்டு விட்டனவா? ஏன் அந்தக் கேள்விக்கு யாரும் விடை தேடுவதில்லை? ஆம் அந்தக் கேள்விக்கான  விடையைத் தான் எமது புத்தகம் விரிவாகத் தருகின்றது !
குர்ஆனும் ஹதீஸும் பொது மக்களுக்கு நேர்வழியறிய, வழிகாட்ட வில்லை என்று யாராவது கூறினால், அது அல்லாஹ்வையும் ரஸூலுல்லாஹ்வையும் குறை கூறியதாகவும், இஸ்லாத்தை விட்டே வெளியேற்றக்கூடிய குப்ரிய்யத்தாகவும் ஆகிவிடும்.
ஆம், ஒவ்வொரு சட்டப் பிரச்சினைக்கும் தீர்வு தேடி காலத்தை வீணாக்காமல், மொத்தமாக நேர்வழியை அறிய குர்ஆனும் ஹதீஸும் காட்டிய அந்த வழி தான் என்ன? முழு உலகையும் ஆட்டிப் படைக்கும் வஹாபிப் பிரச்சினைக்கு தீர்வான அந்த மாபெரும் வழிகாட்டல் தான் என்ன?
அது தான் : யாரிடமிருந்து இஸ்லாத்தை எடுக்க வேண்டும் என்று திரு குர்ஆனும் ஹதீஸும் காட்டித் தந்த அடிப்படை விதி.
யாரிடம் இருந்து இஸ்லாத்தை எடுக்கும்படி அல்லாஹ்வும் ரஸூலுல்லாஹ்வும் ஏவினார்களோ அவர்களிடம் இருந்து சகலரும் (மௌலவிமாரும், பொது மக்களும்) இஸ்லாத்தை எடுத்தால், வேறென்ன பிரச்சினை இருக்கப் போகிறது? குர்ஆனும் ஹதீஸும் எந்தத் தலைவர்களிடமிருந்து இஸ்லாத்தை எடுக்கும்படி ஏவியிருக்கின்றனவோ அந்தத் தலைவர்களை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலம் இலகுவாக இனம் காண முடியும்.
சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ள ஒருவருக்கு ஓரிரு மாதங்களில், யாரிடம் இருந்து இஸ்லாத்தை எடுக்க வேண்டும் என்று திரு குர்ஆனும் ஸுன்னாஹ்வும் கூறுகின்றன என்ற ஆதாரங்களை அறிந்து கொள்ளக்கூடிய மிகவும் இலகுவான வழிகளை இஸ்லாம் காட்டியுள்ளது.
யாருடைய கடையில் சாமான் வாங்க வேண்டும் என்பதை முதலில் அறிந்து சாமான் வாங்குவது தானே புத்திசாலித்தனம்?
     சில கடைகளில் போலி சாமான்களையும் கலந்து விற்கலாம்.
சில கடைகளில் விலை அதிகமாக இருக்கலாம்.
சில கடைகளில் போலி பணத்தையும் தலையில் கட்டலாம்.
எனவே சகல கடைகளைப் பற்றியும் தெரியாத ஒருவர், இவை எல்லாவற்றையும் பல வருடங்கள் அனுபவத்தில் அறிய முயற்சி செய்வதை விட, யாருடைய கடை நல்ல கடை என்பதை மட்டும் நம்பிக்கையானவர்கள் மூலம் அறிந்துகொண்டால் பிரச்சினையே இல்லை அல்லவா? அதன் பின் துணிவுடன் சாமான்களை வாங்கலாம் அல்லவா?
     இதே போன்று தான் யாரிடம் கல்வியைக் கற்க வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே அறிய வேண்டும்.
     சில ஆசிரியர்கள் ஆழமான அறிவு இல்லாதிருக்கலாம்.
     சில ஆசிரியர்கள் பணத்திலேயே குறியாக இருக்கலாம்
     சில ஆசிரியர்கள் கற்பிப்பதில் நேர்மை அற்றவர்களாக இருக்கலாம்.
     எனவே இப்படியான எல்லா ஆசிரியர்களிடமும் பல வருடங்கள் படித்து, யார் நல்லவர் என்று பல வருடங்களின் பின் நஷ்டமடைவதை விட, நம்பிக்கையுள்ள அனுபவ சாலியிடம் கேட்டு எந்த ஆசிரியரிடம் படிக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அவரிடம் படித்தால், தோழ்விகளில் சிக்காமல், படித்து முன்னேறலாம் அல்லவா?
     அதே போன்று தான், பொதுமக்கள், தராவீஹுக்கு எத்தனை ரக்அத்துகள் என்று ஆதாரம் தேடாமல், வஸீலா ஆகுமா என்று ஆதாரம் தேடாமல், கந்தூரி கொடுக்கலாமா என்று ஆதாரம் தேடாமல், யாரிடமிருந்து இஸ்லாத்தை எடுக்கும்படி குர்ஆனும் ஹதீஸும் கூறுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதன் பிறகு அந்த உலகத் தலைவர்கள் கூட்டாகக் கூறுவதை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றியதாகவும் ஆகிறது, பல நூறு விடயங்களில் தகுதியில்லாமல், முடிவில்லாத ஆராய்ச்சி செய்து வயதை வீணாக்கி நஷ்டமடையாமல் பிரயோசனமான காரியங்களில் வாழ்வைப் பயன்படுத்தவும் முடிகிறது அல்லவா? அறிவில்லாமல் பேசி மற்றவர்களை வழிகெடுத்திய பாவத்திலிருந்தும் நீங்கள் அல்லாஹ்விடம் தப்பவும் முடியும் அல்லவா?
     உண்மையான இஸ்லாத்தை பொது மக்களும் அறிந்துகொள்வதற்கு குர்ஆனும் ஹதீஸும் கூறும் வழிவகைகள் என்ன என்பதை சுமார் நாட்பது வருடங்கள் ஏராளமான உள்நாட்டு, வெளிநாடுகளின் அறிஞர்களிடம் படித்து, ஆராய்ந்து, அதன் பலனாக நான் அறிந்த உண்மைகளில் சிலதையாவது சமூகமும் அறிந்து நேர்வழியை இலகுவாக அறிய வேண்டும் என்ற ஆவலில், அல்லாஹ்வின் உதவியினால்,  யாரிடமிருந்து இஸ்லாத்தை எடுக்க வேண்டும் என்ற விடயத்தை தொகுத்து, நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி என்ற மகுடத்தில் எழுதப்பட்டதே இந்த நூல்.
     பொதுவாக வஹாபிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால் தான் அதிகம் பேரும் வஹாபி இயக்கங்களில் சேருகிறார்கள். எனவே வஹாபிகள் கேட்கும் கேள்விகளுக்கு விவாத கோணத்தில் பதிலளித்து அவர்களை மடக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற விதத்தில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வஹாபிகள் உங்களிடம், இதற்கு என்ன ஆதாரம்?” என்று எதைக் கேட்டாலும், அதற்கு நீங்கள் நேரடியாக ஆதாரம் கூறாமல், வஹாபிகள் வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதைக் கூறி அவர்களை முறியடிக்கும் பாணியில் இது எழுதப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியதும், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியதுமான முக்கியமான ஒரு நூல் இது. அல்லாஹ் இச்சிறு முயற்சியை ஏற்று அங்கீகரிப்பானாக.
உங்கள் குடும்பத்தினர் யாராவது, அல்லது உங்கள் நண்பர்கள் யாராவது மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் வழிகேடு என்று கூறி, குர்ஆன் ஹதீஸு என்று அவர்கள் கூறும் பொய்யான வஹாபி மாயையில் சிக்கிவிடாமல் அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அவரைப் பாதுகாக்க நீங்கள் விரும்பினால் நீங்கள் அவருக்கு கட்டாயம் வாசிக்க கொடுக்க வேண்டிய புத்தகமே இது. உண்மை இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தேடலில் இப்புத்தகத்தை படிக்கும் எவரும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்த கடைசிகால கவாரிஜ் இயக்கமான வஹாபியத்தில் ஏமாந்து சிக்கமாட்டார்கள் என்பது எமது நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ்.
விலை : 100 ரூபா
கிடைக்குமிடம் :
Sun Rich Communication, Kahatowita, Tel. 0775774577

Faizan e Madhina, No. 10, Messenger St. Col. 12, Tel. 0112394748

The Blender World , B/G 16, NHS Flats, Maligawatta, Colombo. 10. Tel. 0112388826

Raza Book Shop, No. 25, Dematagoda Rd, Colombo.

Dewatagaha Jumua Masjidh, Colombo

No comments:

Post a Comment